கேரக்டர்! -கலைஞானம் (9)

srividya

(9) நடிகை தனியா இருந்தால்...?

"ஆறு புஷ்பங்கள்'’படத்தின் கதையை ஸ்ரீவித்யாவிடம் நான் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

""உன் பெற்றோருக்கு மூத்த மகளான உன்னையும் சேர்த்து ஆறு பெண்பிள்ளைகள். இதனால் ஒரு விசேஷ வீட்டில் ஒருவர், உன் அப்பாவைப் பார்த்து பரிதாபப்பட... உடனே நீ கோபமாகி... "ஏ... புத்திகெட்ட மனுஷா... ஆறு பொண்ணுங்கனு சொன்னதும், அடப்பாவினு சொல்றீயே... நீயெல்லாம் ஒரு மனுஷனா? ஏன்யா... உன்னப் பெத்துக்கிற ஒரு தாய் வேணும்... உன் சுகத்துக்கு ஒரு மனைவி வேணும்.. ஆனா பொண்ண பெத்தவங்களப் பார்த்து "அடப்பாவி'னு சொல்றீயே? பொண்ணா பொறக்குறது ஒரு பாவமா? என்னய்யா உங்க பாழாப்போன நீதி நியாயம்?'னு நீ ஆவேசமா கேட்குற...''’எனச் சொல்லி... நான் உணர்ச்சிவசப்பட்டு கதையின் அந்தக் கட்டத்தைச் சொன்னதும்...

ஸ்ரீவித்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. முந்தானையால் துடைத்துக்கொண்டே இருந்தார். கண்ணீரோ நிற்கவில்லை.

நான் கதை சொல்வதை நிறுத்தினேன்.

சில நிமிடங்களில் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு... ""கலைஞானம் சார்... என்னோட அம்மாவுக்கும் கணவர் சரியா அமையல... எனக்கும்...''’என்று சொல்லும்போதே... துக்கத்தில் தொண்டை அடைத்துக்கொள்ள... எழுந்து, கண்ணீரைத் துடைத்தபடியே அறைக்குள் ஓடினார்.

ஐந்தாறு நிமிடங்களுக்குப் பின்... முகத்தை அலம்பித் துடைத்துவிட்டு சிரித்த முகத்துடன் வந்து, என் எதிரே அமர்ந்தார். அந்தச் சிரிப்பால் அவரின் சோகத்தை மறைக்க முடியவில்லை.

"பொண்ணா பொறக்குறது பாவமா?'’என்கிற கதையின் கேள்வியோடு, தன் சொந்த வாழ்க்கையைப் பொருத்திப் பார்த்து சோகத்தில் ஆழ்ந்துவிட்ட ஸ்ரீவித்யாவை அதற்குமேல் கதை சொல்லி கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

""ரெஸ்ட் எடுத்துக்கம்மா... நாளைக்கு வந்த

""ரெஸ்ட் எடுத்துக்கம்மா... நாளைக்கு வந்து படத்தோட மீதி கதையைச் சொல்றேன்...''’என்றேன்.

சிரித்தபடி... சம்மதமாக தலையசைத்தார்.

நான் வெளியே வந்தேன். ஆனால் ஸ்ரீவித்யாவின் சோக முகம் என் கண்ணையும், நெஞ்சையும் விட்டு அகலவில்லை.

"ஒவ்வொருவரிடமும் சொல்லமுடியாத வேதனைகளும், ரகசியங்களும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் வாழ்க்கைச் சூழலை ஒட்டிய ஒரு சம்பவத்தைச் சொல்லும்போது.. அவர்களையும் அறியாமல் கண்ணீர் கசிந்துவிடுகிறது. பாவம்... ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை ஏனோதானோ என்றுதான் போய்க்கொண்டிருக்கும் போலிருக்கிறது...'’என நினைத்துக்கொண்டேன். என்னையும் அறியாமல் எனது கண்கள் கசிந்தன.

மறுநாள் ஸ்ரீவித்யாவின் வீட்டிற்குச் சென்றேன். "ஆறு புஷ்பங்கள்'’படத்துக்கான மீதிக் கதையை சிரிப்புமூட்டும் ஸீன்களாகவே சொல்லி... அவரை அழ வைக்காமல், தப்பித்து வந்துவிட்டேன்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது.

ஸ்ரீவித்யா படப்பிடிப்பில் கலந்துகொள்கிற நாட்களிலெல்லாம்... “""கலைஞானம் சார் எங்கே?''’என கேட்பார். நானும் அவரிடம் சென்று... எடுக்கப்போகும் காட்சிகளை விரிவாக விளக்குவேன்.

நான் எம்.ஜி.ஆர். அவர்களையும், சிவாஜி அவர்களையும் "அண்ணே'’என்றுதான் அழைப்பது வழக்கம். கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் "அண்ணே'’என்றுதான் அழைப்பேன்.

நான் கதை எழுதிய பெரும்பாலான படங்களுக்கு கண்ணதாசன்தான் பாட்டெழுதியிருக்கிறார். "ஆறு புஷ்பங்கள்'’படத்திற்கும் பாட்டெழுத அவரை அழைத்து வந்தேன்.

""அண்ணே... குலதெய்வத்தை கும்பிட சகஸ்ரநாமம் தன்னோட குடும்பத்தோட மாட்டு வண்டிகள்ல போறார். ஒரு மாட்டுவண்டியை ஓட்டுவது ஸ்ரீவித்யாவின் காதலன் விஜயகுமார். இன்னொரு மாட்டுவண்டியை ரஜினிகாந்த் ஓட்டுறார். காட்டு வழியில் போகையில்... மாடு மேய்க்கிறவன் பாடுற மாதிரி பாடல் சிச்சுவேஷன். ஆனா... ஸ்ரீவித்யாவின் அங்க அழகை வர்ணித்து விஜயகுமாரின் மனசு பாடுற மாதிரி இத மேட்ச் பண்றோம். பாடல் வரிகளின் அர்த்தத்திற்கு ஸ்ரீவித்யாவின் பாவனைகள் மட்டுமே ரியாக்ஷன்...''’எனச் சொன்னேன்.

போதாதா?

அண்ணன் வர்ணித்து, வாரி வழங்கிவிட்டார் வரிகளை.

"மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் தனது இசையில் பின்னாளில் இசையமைப்பாளராக இருந்த சந்திரபோஸை பாடகராக அறிமுகப்படுத்தி பிரமாதமாக பாடலை உருவாக்கினார்.

(சந்திரபோஸ் குறித்தும், அவர் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும் ‘"சினிமா சீக்ரெட்'’தொடரில் நான் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்)

கவிஞரண்ணனின் கைவண்ணம் இதோ...

srividya

பல்லவி:

ஏண்டி முத்தம்மா... ஏது புன்னகை...

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ...

வெட்கத்தினாலதை மறைத்தாயோ...

சரணம்:

தென்னமரங் காயைத் தந்து மூடுதடி கீத்தைவிட்டு

தென்றலை தூதுவிடச் சொல்லலாமா?

திருப்பள்ளி மேடையிட்டுக் கொள்ளலாமா?

கட்டுச் சிட்டு மொட்டு விட்டு

துள்ளும் வெள்ளம் பட்டுப்பட்டு

கண்களில் மை கரைந்து போகலாமா?

கருவிழி செம்பவளம் ஆகலாமா?

-இப்படியாக பாட்டு வரிகளும் ஸ்ரீவித்யாவின் வெட்கம் கலந்த ரியாக்ஷனும் காமனையே கிறங்கடித்துவிடும்.

"ஆறு புஷ்பங்கள்'’படம் ஸ்ரீவித்யாவுக்கென்றே எடுத்ததுபோல அமைந்துவிட்டது. படம் வெற்றி பெற்றது.

அன்று முதல் ஸ்ரீவித்யா என்னை எங்கே பார்த்தாலும், ""கலைஞானம் சார்...''’என குரல் கொடுப்பதும், முல்லைச் சிரிப்பை முழுமையாக சிரிப்பதும், நான் சற்று அடக்கத்தோடு சிரித்து... அவரின் அருகில் சென்று நிற்பதும் வழக்கம்.

டைரக்டர் பி.வாசு அவர்களின் படம் ஒன்றின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தது. நான் வாசுவைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன்.

""கலைஞானம் சார்''’என குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஸ்ரீவித்யா.

""வாங்க... இப்படி உட்காருங்க...''’என தனது இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் உட்காரச் சொன்னார்.

""கொஞ்சநாளாவே நான் உங்களை நினைச்சுக்கிட்டிருக்கேன்''’என்றார்.

""என்னம்மா... டாடி பாசமா?''’என்று நான் கேட்டதும்... வெடிச்சிரிப்பு சிரித்தார். ஸ்பாட்டில் இருந்தவர்களுக்கு... அந்த ஃபிளாஷ்-பேக்... அதாவது... ஸ்ரீவித்யாவின் தாயாருக்கு என்னை மாப்பிள்ளையாக்குவதாக கல்யாண புரோக்கர் சொன்ன அந்த சம்பவம் தெரியாதே. இருந்தாலும்... ஸ்ரீவித்யாவின் மனம்விட்ட சிரிப்பைப் பார்த்து அவர்களும் சிரித்தார்கள்.

நான் சிரிப்பை மட்டுப்படுத்திக்கொண்டு... ""என்னம்மா?''’என்று கேட்டதும்... அவரின் முகம் மாறியது.

""சார்... என்னோட வாழ்க்கைய சினிமாவா எடுக்கணும். அந்தப் படம் மூலமா பெண்களுக்கு ஒரு நல்ல அட்வைஸ் கிடைக்கணும். எந்த ஒரு பெண்ணும் என்னைப்போல அவசரப்பட்டு, கல்யாணம் செய்யவே கூடாது. அவசரமா கல்யாணம் செஞ்சுக்கிட்டதால நான் அனுபவிச்ச கொடுமைகள் நிறைய...''’எனச் சொல்லிவிட்டு... தலையைக் கவிழ்ந்தார். சிறிது நேரத்திற்கு தலையை உயர்த்தவேயில்லை. ஸ்ரீவித்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டுவதைப் பார்த்தேன்.

அவருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதனால் மௌனமாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கண்ணீரை துடைத்துக்கொண்டு தலை நிமிர்ந்தவர்... ""நாளைக்கு எனக்கு ஷூட்டிங் இல்லை. வீட்டுக்கு வரமுடியுமா?''’என்று கேட்டார்.

""நிச்சயமா வர்றேம்மா''’என்றேன்.

srividya

"ஷாட் ரெடி'’என குரல் வந்ததும் ‘சட்’டென எழுந்து எனக்கு டாட்டா காட்டிவிட்டு... கேமராமுன் அந்தப் படத்தில், தான் ஏற்ற கேரக்டராக மாறி நின்றார்.

றுநாள் ஸ்ரீவித்யாவின் வீட்டிற்குச் சென்றேன்...

என்னை எதிர்பார்த்திருந்த அவரும்... வரவேற்று அமர வைத்தார். பணிப்பெண் டீ கொண்டுவந்தார். இருவரும் சாப்பிட்டோம்.

""கலைஞானம் சார்... நான் ரொம்ப நம்பிக்கையோட கல்யாணம் செய்துக்கிட்ட நபர்... என்னை மோசம் செஞ்சுட்டார். நானும் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணியிருக்கக்கூடாது. நான் அவசரப்பட்டதுக்கு காரணமும் இருக்கு. நான் ஒருவரை மனதார விரும்பினேன். அவரும் விரும்பித்தான் என்கூட பழகினார். என்னோட விருப்பத்தில் உண்மை இருந்தது. ஆனா... அவரோட விருப்பத்தில் உண்மை இல்லைங்கிறத நான் ரொம்ப லேட்டாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அந்த காதல் தோல்வியால துவண்டுபோயிடக் கூடாதுனு நினைச்சேன். அதையே நினைச்சு தனிமரமா இருந்தாலும் தொல்லைதான். அதுவும் நடிகை தனியா இருந்தா....? உங்களுக்குத் தெரியாதா என்ன?''’என்றார்.

தன் வாழ்க்கையின் ஏமாற்றங்கள்... இழப்புகள்... மோசடிகள்... என பலவற்றையும் சொன்னார்.

""என் கதையை சீக்கிரமே படமாக எடுக்கணும். நாம அப்பப்போ சந்திச்சுப் பேசுவோம். நான் சொல்லச் சொல்ல... நீங்கள் அதை கதையா எழுதிக் கொடுத்தா போதும்''’என்றார்.

""சரிம்மா''’என்றேன்.

""நாளைக்கு நான் கேரளா போறேன். ரொம்ப முக்கியமான விஷயம். போய்ட்டு வந்ததும்... உங்களுக்கு போன் செய்றேன்''’எனச்சொல்லி என் வீட்டு தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார்.

""சார் இந்த விஷயம்... இப்போதைக்கி சீக்ரெட்டாவே இருக்கட்டும். நான் உங்களுக்குச் செய்யவேண்டிய மரியாதையை (கதை எழுதுவதற்கான சம்பளம்) கேரளா போய்ட்டு வந்து செய்றேன்''’என்றார்.

நானும் விடைபெற்று கிளம்பினேன்.

கமல்ஹாசனும், ஸ்ரீவித்யாவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முன்பு பரவலாக பேசப்பட்ட ஒரு கிசுகிசு என் நினைவுக்கு வந்தது.

படம் உதவி: ஞானம்

nkn281118
இதையும் படியுங்கள்
Subscribe