(91) வரட்டுமா... கிளம்பட்டுமா... போகவா...!

"கோகிலவாணி'’கன்னடப் பதிப்பில் நடித்த சரோஜாதேவிக்கு 1001 ரூபாய் சம்பளம் பேசி 101 ரூபாய் மட்டும் கொடுத்திருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ‘"மந்திரிகுமாரி'’ படப்புகழ் எஸ்.ஏ.நடராஜன். படம் தோல்வி. நடராஜனுக்கு நஷ்டம். இருப்பினும் தங்களின் சிரமத்திற்கு உதவுமாறு பாக்கி சம்பளத்தில் 100 ரூபாய் கேட்டுவந்த சரோஜாதேவியையும், அவரின் தாயாரையும் அலட்சியப்படுத்திப் பேசினார் நடராஜன். அதனால்... ‘"இனிமே நீங்க படமே எடுக்க முடியாது'’என சாபம் விடுவதுபோல சொல்லிவிட்டுச் சென்றார் சரோஜாதேவியின் தாயார்.

இப்படியான சூழலில்...

daas

Advertisment

"சும்மாவே இருந்தால் திரையுலகம் நம்மை மறந்துவிடும்'’என எண்ணிய நடராஜன், ஈரோடு பாலகுரு எழுதிய "உயிர் காப்பாள் உத்தமி'’என்ற கதையை 1957-ஆம் ஆண்டுவாக்கில் வாங்கி படமெடுக்க ஆரம்பித்தார். கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்கும் பொறுப்பையும் நடராஜனே செய்தார். நடராஜன் வீட்டுக்கு கார் டிரைவராக இருந்த நான் படத்தின் புரொடக்ஷன் வேலைகளையும் செய்தேன். "ஃபிலிம் சென்டர்' என்கிற ஸ்டுடியோவில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பிறகு ஷூட்டிங் நடத்த பணம் இல்லை. வீட்டி லிருந்த நகைகளையெல்லாம் விற்றுவிட்டார். நண்பர்களிடம் கைமாற்று வாங்கி... காலம் கடத்தினார். நடராஜனின் மனைவியான அபரஞ்சி அக்காவின் சகோதரர்களும் பண உதவி செய்ததாக கேள்விப்பட்டேன்.’சினிமா உலகம் தன்னை மறந்துவிடக்கூடாது’ என்று அவசரப்பட்டு படம் எடுத்து... உள்ளதும் போய்விட்டது. கஷ்டம் இருந்தாலும் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்தார் நடராஜன்.

இது இப்படியிருக்க... இவர்களே கஷ்டத்தில் இருக்கும்போது, இவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது’ என்று, நான் வேறொரு சினிமா கம்பெனிக்கும் வேலைக்குப் போய் விட்டேன். இந்தச் சமயத்தில் என் அக்காள் மகள் புஷ்பவல்லியை எனக்கு திருமணம் செய்துவைத்தார் என் அண்ணன். சம்பாத்யம் சரிவர இல்லாததால் பல கஷ்டங்களுக்கு ஆளானபோதும்... என் அண்ணன் தன்னால் முடிந்த உதவிகளை எனக்குச் செய்துவந்தார்.

1965-ஆம் ஆண்டு... சிட்டாடல் ஸ்டுடியோ வில் "காதல் படுத்தும்பாடு'’என்கிற கதையை விற்றேன். எனது சிபாரிசில் வாணிஸ்ரீ, சுருளிராஜன், எஸ்.எஸ்.சந்திரன் இந்தப் படம் மூலம் அறிமுக மானார்கள். ஜெய்சங்கர் ஹீரோ. ஜோஸப் தளியத் இயக்கத்தில் வந்த இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தபோதும்... எனக்கு அடுத்த பட வாய்ப்பு கள் இரண்டாண்டுகளாக அமையவில்லை. அந்தச் சமயம்... சினிமா ஆசையில் இருந்த ராஜன் என்ற நண்பர், "ரெக்ரியேஷன் கிளப்'’ஒன்றை ஆரம்பித்து, "கிளப்பிற்கு நீங்கதான் தலைவர்' என்றார்.

Advertisment

""கிளப் நடத்துறது சம்பந்தமா எனக்கு எதுவும் தெரியாதே'' என்றேன்.

""அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்... சீட்டாட வருவாங்க. அவங்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள்லாம் சட்டப்படி இருக்கும். மேற்பார்வை பார்த்துக்கிட்டா போதும்'' என்றார்.

நண்பர் சொன்னதை தட்டமுடியாமல் சம்மதித்தேன். கிளப்பிற்காக வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தபோது... ""பாலகிருஷ்ணா...'' என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மெலிந்து, நலிந்து, தலையில் சிகை குறைந்து, உள்வாங்கிய கண்களுடன்... எஸ்.ஏ.நடராஜன் வந்து நின்றார்.

(பாலகிருஷ்ணனாகிய நான் "காதல் படுத்தும்பாடு'’ படத்தில் கதாசிரியராக ’கலை ஞானம்’ என்ற பெயருக்கு மாறிவிட்டேன்)

""அண்ணே நீங்களா?... வாங்கண்ணே உட்காருங்க'' எனச் சொல்லி உட்கார வைத்தேன். காபி கொண்டுவரச் சொல்லி... கொடுத்தேன். அவர் குடித்து முடிக்கும்வரை பக்கத்தில் நின்றிருந்தேன்.

""பாலகிருஷ்ணா... நீ கதை எழுதிய ‘"காதல் படுத்தும்பாடு'’ படம் பார்த்தேன். நல்லாத்தான் இருந்துச்சு. அதுக்கப்புறம் நீ படத்துக்கு கதை எதுவும் எழுதலையா?'' என்றார்.

""நடிகை தேவிகா தயாரிக்கிற படத்துக்காக "வெகுளிப் பெண்'ங்கிற கதையை எழுதியிருக்கேன். ஃபைனான்ஸியர் சிங்கப்பூர்க்காரர். அவர் மெட்ராஸ் வந்ததும்தான் ஷூட்டிங் தொடங்கும்''

""நல்லா வருவே... நீ ரெக்ரியேஷன் கிளப் ஆரம்பிக்கிறதா கேள்விப்பட்டேன். உனக்கு உதவியா இருக்கலாமேன்னுதான் வந்தேன்''

""நானும், என் நண்பர் ராஜனும் சேர்ந்துதான் ஆரம்பிக்கிறோம். நாளை மறுநாள்... ஞாயித்துக் கிழமைதான் கிளப் ஓபனாகுது. அன்னிக்கி நீங்க வந்து, சும்மா உட்கார்ந்து... மேல் நிர்வாகம் செஞ்சா போதும்ணே'' என்றேன்.

இருக்கையிலிருந்து எழுந்த நடராஜன்... ""அப்போ நான் வரட்டுமா?'' என்றார்.

""சரிண்ணே...''

""அப்ப நான் கிளம்பட்டுமா?'' என மீண்டும் கேட்டார்.

நான் தலையசைத்தேன்.

மிக மெதுவான குரலில்... ""நான் போகவா?'' என்றார் பரிதாபமாக.

அப்போதுதான் எனக்கு புரிந்தது... "கைல காசில்லாமத்தான்... வரட்டுமா? போகட்டுமா?னு இங்கயே நிற்கிறாரோ? தி.நகர்லருந்து, கோடம் பாக்கம் போக பஸ்ஸுக்கு பத்துப் பைசாவாவது வேணுமே...'’என 50 ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்தேன்.

daee

ஒரு சிறு புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

ஒரு சமயத்தில் அவர் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பது வேறுவிஷயம். ஆனால்... பசியாற சோறு போட்டதை மறந்தால் நான் மனுஷன் இல்லையே...

அடுத்தடுத்து... நடராஜன் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன்.

காலப்போக்கில் எனக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்துகொண்டேயிருந்தது. படங்களும் தயாரித்துக்கொண்டிருந்த நேரம்... அபரஞ்சி அக்கா என் வீட்டிற்கு வந்து, என் மனைவியிடம்...’""வீட்டுச் செலவுக்கு பணம் இல்லேன்னாக்கூட பரவால்ல... என் மூத்தமகன் தாம்பரத்துல டாக்டருக்கு படிக்கிறான். அங்க போய்வர பஸ்ஸுக்குக்கூட காசில்ல... கொஞ்சம் கைமாத்தா பணம் கொடு...'' என இளகிய மனதோடு கேட்க... உடனே என் மனைவி, அபரஞ்சி அக்காவுக்கு டிபன் கொடுத்து உபசரித்து, கையில் கொஞ்சம் பணமும் கொடுக்க... அதைப் பெற்றுக்கொண்டு... ""பாலகிருஷ்ணா... புஷ்பா... நான் வர்றேன்''’ எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அவர் போன பிறகு... நான் என் மனைவி யிடம், “""அபரஞ்சி அக்கா எப்ப வந்தாலும் இல்லைங்காம, உன்கிட்ட இருக்கிற பணத்துல கொடுத்து உதவு. ஏன்னா... அது எனக்கு அன்ன மிட்ட கை. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைல எஸ்.ஏ.நடராஜன் வாழ்ந்து வர்றது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு'' என்றேன்.

அதன்படி, அபரஞ்சி அக்கா என் வீட்டிற்கு வந்தால்... என் மனைவி முடிந்தமட்டும் பணம் கொடுத்து அனுப்புவாள்.

எஸ்.ஏ.நடராஜன், யாருக்குமே துரோகம் செய்தவரல்ல. சகஜமாக பழகும் நல்லவர் என்பதில் சந்தேகமே இல்லை. அவருக்கு ஒருநேரம் தாங்கவே முடியாத கஷ்டம் வந்தபோது... செல்வச் சிறப்போடு வாழ்ந்துவந்த... சின்னப்ப தேவரை பார்க்கலாம் என்ற நினைவு வந்தது. ஆனால்... ரொம்ப வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்... தேவரை சந்திக்கச் செல்லவிடாமல் நடராஜனின் தன்மானம் தடை போட்டது.

அப்படி என்ன நடந்தது?

"மந்திரிகுமாரி'யில் வில்லனாக நடித்து பெரும் புகழ் அடைந்திருந்த நடராஜன்... அந்தச் சமயத்தில், "நாமே ஒரு படம் தயாரிக்கலாம்... ஹீரோவாக நடிக்கலாம்... டைரக்ஷனும் பண்ண லாம்'’என முடிவுசெய்து, தன் நண்பரான பிரபல கேமராமேன் ஜே.ஜி.விஜயனையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு... ஏ.பி.நாகராஜன் அவர்களிடம் "நல்ல தங்கை'’படத்திற்கான கதை வசனத்தை எழுதி வாங்கினார். எஸ்.ஏ.நடராஜன், எம்.என்.நம்பியார்... ஆகிய இரண்டு ஹீரோக்கள், கதாநாயகிகளாக ராஜசுலோச்சனாவும், மாதுரிதேவியும் நடித்தார்கள். படம் வெளியாகி, வெற்றி பெற்றது.

முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பில் சின்னப்ப தேவரையும் ஒரு பார்ட்னராக சேர்த் திருந்தார் நடராஜன். கம்பெனியை நடராஜனே நிர்வகித்தார்.

ஒருநாள் நள்ளிரவில்... துணை நடிகை ஒருவரை கம்பெனி காரில் ஏற்றி வந்து... நீண்ட நேரத்திற்குப் பிறகு, துணை நடிகையை அவரின் உறவினர் வீட்டில் விட்டுவிட்டுவர... கம்பெனி காரை அனுப்பிவைத்ததை அறிந்த தேவர்... நடராஜனை கண்டித் தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே... ஒரு சேரை எடுத்து தேவரை தாக்கிவிட்டார். இன்னொரு சேரை எடுத்து நட ராஜனை தேவர் தாக்க... இதனால் அலுவலகமே போர்க்களம் போல ஆகிவிட்டது. இப்படி... நடக்கக் கூடாதது... நடந்துவிட்டதை அறிந்த ஏ.பி.நாகராஜன், அலுவலகத்திற்கு வந்து நடராஜனைக் கண்டித்தார்.

""நீ எதற்கெடுத்தாலும் கை நீட்டுவதை விட்டுவிடு. முன் கோபத்தை மூட்டை கட்டிப்போடு... அப்போதுதான் நீ எடுக்குற படத்தை முடிக்க முடியும்'' என புத்தி சொல்லியதுடன்... ""நீங்க இனிமே சேர்ந்து படம் எடுக்க வேண்டாம்'' எனச் சொல்லி, தேவரை ஃபார்ட்னர்ஷிப்பிலிருந்து விலக்கிய ஏ.பி.நாகராஜன், சின்னப்ப தேவருக்கு "தேவர் ஃபிலிம்ஸ்'’என்கிற கம்பெனியையும் ஆரம்பித்து வைத்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து "தாய்க்குப்பின் தாரம்' படத்தை முதன்முதலாக தயாரித்து... தொடர்ந்து பல படங்கள் தயாரித்து, வெற்றிக் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தார் தேவர்.

தேவரிடம் உதவியோ... படத்தில் நடிக்கும் வாய்ப்போ கேட்க, நடராஜன் தயங்கியதற்கு... இந்தச் சண்டைதான் காரணமாக இருந்தது.

கணவருக்கு பட வாய்ப்பு கேட்டு தேவரை சந்திக்க வந்தார் அபரஞ்சி அக்கா. சந்திக்க மறுத்த தேவர்...