(82) மெல்லிசை மன்னர் கேட்ட கேள்வி!
"ஆறுபுஷ்பங்கள்'’படத்திற்காக "மாட்டுவண்டி ஓட்டிக்கிட்டுப் போற ஹீரோ பாடுற சிச்சுவேஷனுக்கு பாட்டும், இசையும் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும்...' என வாயால் ஒலி எழுப்பியபடி பாடிக் காண்பித்தேன். “""நீங்க சொன்ன மாதிரியே இந்த பாட்டுக்கான ட்யூனை முயற்சிக்கிறேன்'' என்றார் "மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.
மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் நான் எம்.எஸ்.வி.யைப் பார்த்துக்கொண் டிருக்க... "பாலச்சந்தர் சார் ஆபீஸ்லருந்து உங்களை அழைச்சிட்டு வரச் சொல்லி யிருக்காங்க' என ஒருவர் வந்து சொல்ல... மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார்.
கே.பாலச்சந்தர் நிறுவனப் படங்களுக்கு வி.குமார் இசையமைத்து வந்தார். முதன்முறை யாக எம்.எஸ்.வி.க்கு வாய்ப்புத் தேடிவந்தது. வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. நாங்கள் வாஹினி ஸ்டுடியோ தியேட்டரில் சுமார் இருபது வாத்தியக் கலைஞர்களுடன் காத்திருந்தோம். நேரம் ஆக... ஆக தியேட்டர் வாடகை அதிகரிக்கும். அதனால் நான் டென் ஷனாக இருந்தேன். ‘"இன்னிக்கி எந்த வேலை யும் செய்யாம தியேட்டர் வாடகையை கட்டிட்டு போகவேண்டியதுதான்'’என நான் முடிவு செய்தபோது... ""ஸாரி... ஒரு புது கம்பெனி கிடைச்சது'' என சொல்லிக்கொண்டே எம்.எஸ்.வி. ஆர்மோனியப் பெட்டி முன் உட்கார்ந் தார். கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு மெட்டுப் போட்டார்.
அந்தப் பாட்டுதான்... "ஏண்டி முத்தம்மா... ஏது புன்னகை'’பாட்டு.
நான் வாயால் ஒலித்துக் காட்டிய மணிகள் ஓசையை பாட்டில் சேர்த்தார் பாருங்கள்... என் பிறவிக்கே விமோ சனம் கிடைத்ததாக எண்ணி ஆனந்தத்தில் அழுதுவிட் டேன். நான் கதை எழுதி, தயாரித்த... "நடிகர் திலகம்' சிவாஜி நடித்த "மிருதங்க சக்கரவர்த்தி'’ படத்திற்கு எம்.எஸ்.வி. பாடல் ட்யூன் போட்டபோது நடந்த சம்பவம் இது...
வாஹினி ஸ்டுடியோ ரெக்கார்டிங் தியேட்டரில்... எம்.எஸ்.வி., கவிஞர் வாலி, கவிஞர் புலமைப்பித்தன், டைரக்டர் கே.சங்கர் ஆகியோருடன் நானும் இருந்தேன். கதைப்படி பிரபுவுக்கும் சுலக்ஷனாவுக்கு மான டூயட். எம்.எஸ்.வி. ஒரு ட்யூனைப் போட... "ஆஹா அருமை' எனப் பாராட்டிவிட்டார் சங்கர். அவருக்கு குழந்தை உள்ளம். அதனால் ரசிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் எனக்கு அந்த ட்யூன் பிடிக்கவில்லை.
""என்ன சார் இது? மெட்டு இவ்வளவு ஸ்பீடா... துரித தாளத்தில் இருக்கு. இந்த இடத்துக்கு இது சரியா வருமா?'' என்று கேட்டுவிட்டேன் சங்கரிடம். எம்.ஜி.ஆரை வைத்து பல வெற்றிப்படங்களைத் தந்த டைரக்டர் என்பதையெல்லாம் மறந்து... உணர்ச்சிவசப்பட்டு என் முட்டாள்தனத்தைக் காட்டிவிட்டேன்.
சங்கர் கோபமாகிவிட்டார்.
""யோவ்... நான் டைரக்டர்... ட்யூனை ரசிச்சது தவறா?''
""சார்... நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.. இனிமே படம் சம்பந்த மான எல்லா விஷயங்களையும் உங்களோட முடிவுக்கே விட்டுடுறேன்... தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க''
இப்படிச் சொல்லிவிட்டு... ரெக்கார்டிங் அறையி லிருந்து வெளியேறிவிட்டேன். வாலியும், புலமைப் பித்தனும் என்னைப் பின்தொடர்ந்து வந்தார்கள்.
""வாங்க கலைஞானம், டைரக்டர் மனசு சங்க டப்படுறாரு. ‘"நான் டைரக்டரா இருந்து கோவப் பட்டுட்டேன். கலைஞானம் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் மட்டுமில்ல... அவர்தானே இந்தப் படத்தோட கதை-வசனகர்த்தா. அவர் கிட்ட நான் இப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது'னு வருத்தப்படுறார்'' என்று கவிஞர்கள் சொன்னதும்...
ஓடிவந்து, சங்கரின் கைகளைப் பிடித்து முத்தமிட்டு... மீண்டும் மன்னிப்புக் கேட்டேன்.
எம்.எஸ்.வி. சிரித்துக்கொண்டே... ""கலை ஞானம்... இந்த ட்யூன் பிடிச்சிருக்கானு சொல் லுங்க'' என்றபடி வாசித்தார்.
நிஜமாகவே எனக்குப் பிடித்திருந்தது.
புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த அந்தப் பாட்டு...
அபிநய சுந்தரி ஆடுகிறாள் -என்
ஆசைக் கனலை ஊதுகிறாள்’
பாட்டு பிரமாதமாக அமைந்ததால்... உற்சாகம் தொத்திக்கொண்டது எல்லோருக்கும்.
அடுத்த மெட்டுக்கு வாலி பாட்டெழுதினார்.
இந்தச் சமயத்தில்... என் மகள் மகாலட்சுமி திருமணம் மதுரையில் நடந்தது. எம்.எஸ்.வி., (சங்கர்)கணேஷ், புலமைப்பித்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புலமைப்பித்தன் மணமக்களை வாழ்த்தி எழுதிக்கொண்டேயிருக்கிறார். எம்.எஸ்.வி., உடனுக்குடன் மெட்டமைத்து பாடிக்கொண்டேயிருக் கிறார். திருமணத்திற்கு வந்திருந்த அனை வரும் கைதட்டி வரவேற்றது கண்கொள் ளாக் காட்சியாக இருந்தது. இது என் குடும்பத்திற்கும், நான் பிறந்த கிராமத்து மக்களுக்கும் மிகப்பெரிய பெருமையைத் தந்துவிட்டது. எம்.எஸ்.வி.யை மகிழ்விப்ப தற்காக... திருமண விழாவில் எங்கள் ஊரின் ஒயிலாட்டக் கலைஞர்கள் பிரமாத மாக ஆடினார்கள்.
""என்ன ஒரு ஆட்டம். இப்படிப் பட்ட ஒயிலாட்டக் கலைஞர்களை இனி யும் பார்க்க முடி யாது. நான் அவங்க ளோட போட்டோ எடுத்துக்கிறேன்'' எனச் சொல்லி போட்டோ பிடித்துக்கொண்டது அவரின் பெருந்தன்மையைக் காட்டியது.
எம்.எஸ்.வி. அவர்களின் மகன் திருமணம் குருவாயூரில் நடந்தது. நானும் கலந்துகொண்டேன்.
அங்கே சிலுக்கு சுமிதா வந்தார். எம்.எஸ்.வி. யைப் பார்த்து கும்பிடு போட்டவர், ""சார்... உங்க மகன் தயாரிச்ச படத்துல எனக்கு சேலையைக் கட்டிவிட்டுட்டார். அதனாலதான் படம் சரியா போகல'' என்றார். கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்த எம்.எஸ்.வி., சிலுக்கு சொன்னதை சரியாக காதில் வாங்கவில்லை. ""நீ என்னம்மா சொல்றே?'' எனக் கேட்டார்.
""உங்க மகன் எடுத்த படத்துல எனக்கு சேலையைக் கட்டிவிட்டுட்டார். எனக்கு சேலை கட்டினா... படம் எப்படி சார் ஓடும்?'' என சிலுக்கு கேட்க... எம்.எஸ்.வி. மென்மையாகச் சிரித்தார். ஆனால் அருகில் இருந்த நாங்களெல்லாம் குபீர் சிரிப்பு சிரித்துவிட்டோம்.
சிலுக்குவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய தொழில் தர்மப்படி "கவர்ச்சிதான் தனது படங்களுக்கு வெற்றி' என நினைக்கிறார்.
ஆனால்... எல்லோரும் சிரிப்பதைப் பார்த்த... சிலுக்குவிற்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் கடந்ததும், சிலுக்குவும் புரிந்துகொண்டு சிரித்துக் கொண்டே இருந்தார்.
"மிருதங்க சக்கரவர்த்தி'’படத்தின் பெரும் வெற்றிக்கு எம்.எஸ்.வி.யின் இசையும் ஒரு காரணம். ஒவ்வொரு பாட்டும் கதைக்குத் தக்கவாறு அமைத்ததோடு... பின்னணி இசையையும் பிரமாதமாக அமைத்திருந்தார்.
"நடிகர் திலகம்' சிவாஜி, "மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி., டைரக்டர் கே.சங்கர், நான்... இந்த "மிருதங்க சக்கரவர்த்தி'’பட கூட்டணியை மீண்டும் அமைக்க விரும்பினேன்.
அண்ணன் சிவாஜியை சந்தித்து ஒப்புதல் பெற்று... ஷூட்டிங் தொடங்க விருந்த நேரம்...
யாரோ ஒருவர்... சிவாஜியின் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்.
""அண்ணே... இந்தப் படத்துக்கு இளையராஜா மியூஸிக் பண்ணினா சிறப்பா இருக்கும்'' என்று சொல்ல...
""அப்படியே செஞ்சிடலாம்'' என சிவாஜி சொல்ல... நானும் ஒப்புக்கொண்டேன்.
"நடிகர் திலகம்' சிவாஜி நடிக்கும் "ராஜரிஷி'’-இளையராஜா இசை என பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தேன்.
பலரும் போன் செய்து படம் பற்றி வாழ்த்தியும், "ஷூட்டிங் எங்கே எப்போது?' என்றும் விசாரித்தார்கள் என்னிடம்.
அடுத்தொரு போன் வந்தது....
ஆயிரம் சூட்டுக்கோலால் என்னைச் சுட்டது போன்றிருந்தது அந்தக் கேள்வி...
""கலைஞானண்ணே... நான் உங்க படத்துல இல்லையா?'' எனக் கேட்டார் எம்.எஸ்.வி.
கனத்த மௌனத்தைத்தான் பதிலாக என்னால் சொல்ல முடிந்தது.
"எம்.எஸ்.வி. போன் செய்து சான்ஸ் கேட்டார்'னு சொன்னா... நான் மட்டுமல்ல... சினிமா உலகில் யாருமே நம்பமாட்டார்கள்.
""தெய்வமே... இதென்ன கொடுமை''’என புலம்பிக்கொண்டே இருந்தேன்.
மறுநாள்... எம்.எஸ்.வி.யிடம் வேலை பார்க்கும் ஒருவரிடம் விசாரித்தபோது...
""அவரும், அவங்க மகனும் சொந்தப் படங்கள் தயாரிச்சதுல பெரிய நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சல்ல இருக்காங்க. சதா வீட்டுல சண்டை யும், சச்சரவுமாத்தாண்ணே இருக்கு'' என்றார்.
இப்படியொரு சூழ்நிலையில் எம்.எஸ்.வி. இருக்கிறார் என்பதை அறிந்து வேதனைப் பட்டேன். பெரிய கலைஞர்களெல்லாம் இப்படி சொந்தப் படம் எடுத்து சாகாமல் செத்துதானே வாழ்கிறார்கள்.
இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும்... பதட்டத்துடன் என் வீட்டுக்கு வந்தார் எம்.எஸ்.வி