(72) நண்பனா? கடமையா?
இங்கிலாந்தில் நடந்த உண்மைச் சம்பவம் "தாமஸ் பெக்கெட்' என்ற பெயரில் படமாக வந்தது. அந்தக் கதையைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்ததன் தொடர்ச்சி இது...
இளவரசன் தன் எல்லையற்ற சிற்றின்ப வாழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிஷப்பை பதவி நீக்கம் செய்ய வைத்துவிட்டு ஆன்றோர் சபை மூலம் தன் நண்பனான ஏழை இளைஞன் தாமஸ் பெக்கெட்டை பிஷப் ஆக்கினார். பிஷப் என்கிற பதவியின் பொறுப்பை உணர்ந்த தாமஸ் பெக்கெட்... தன் நண்பனான இளவரசரை அழைத்து கண்டித்தான்.
""என்னை அனுசரித்துப் போகத்தானே உன்னை பிஷப் ஆக்கினேன். என்னையே கண்டிக்கிறாயா? நீ ஒரு நம்பிக்கைத் துரோகி'' என்றான் இளவரசன்.
""உன் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல் இருக்கவேண்டுமென்றால்.. அதற்கு ஒரேவழி... ‘"பிஷப்'’என்று நான் ஏற்றிருக்கும் இந்த புனித இருக்கையை தூக்கி எறிந்துவிட்டு வா... என்று சொல். உடனே உன் நண்பனாகவே வந்து விடுகிறேன்.''
""அதற்காகவா உன்னை இத்தனை பாடுபட்டு பிஷப் ஆக்கினேன். அன்றைக்கு நான் சொன்னதையெல்லாம் கேட்ட உனக்கு... இன்று என்ன வந்தது? பதவி வெறியா? கர்வமா?''
""அன்றைக்கு உன் ஒருவனுக்கு மட்டும்தானே நண்பனாக இருந்தேன். இன்று... மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவன். மீண்டும் கேட்கிறேன்... உன் நண்பனாக மட்டுமே மீண்டும் உன்னுடன் வரவா? இல்லை... பிஷப்பாகவே இருக்கவா?''
""எதிர்வாதம் செய்யாதே. நாளை காலைவரை உனக்கு நேரம் தருகிறேன். ஒரு நல்ல முடிவை எடுத்துவிட்டு... கடற்கரைக்கு வா'' எனச் சொல்லிவிட்டு கோபத்துடன் சென்றான் இளவரசன்.
காலையில்... கடற்கரையில்... எதிர் எதிர் திசையிலிருந்து இருவரும் குதிரையில் வருகிறார் கள். ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள்.
""டேய் நன்றிகெட்ட நண்பனே... நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய்? நான் சொல்வதைக் கேட்டு வாழப்போகிறாயா?''
""இப்போதும் சொல்கிறேன். உன் ஒருவனுக்காக... நான் மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன். அதேநேரம் உன் மன சாட்சியைத் தொட்டுச் சொல். என்னை நம்பி மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய பிஷப் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வரவா? உன் ஒருவனுக்காக, உன் சுகபோகத்திற்காக... நீ சொல்வதையெல்லாம் கேட்டுவாழ மறுபடியும் உன் நண்பனாக வந்துவிடவா? பிஷப் பதவியை ஏற்பதற்கு முன் நீ சொன்னதையெல்லாம் நான் ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால் பிஷப் நாற்காலியில் உட்கார்ந்த பிறகுதான் அதன் அருமையும், பெருமையும் தெரிய வருகிறது. இறைவன்... மக்களின் ரூபத்தில் வந்து கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்பு எவ்வளவு தூய்மையானது என்பதையும் உணர முடிகிறது. அதனால் இளவரசே... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்... நீங்கள் திருந்தத்தான் வேண்டும். இதுவரை நாம் செய்த பாவத்திற்காக இறைவனை வேண்டுகிறேன். நம் நாட்டையும், மக்களையும் நல்வழிப்படுத்தி... நாம் வாழவைப்போம்''
தாமஸ் பெக்கெட் சொன்னதைக் கேட்ட இளவரசன்... ’"உனக்கு அழிவுகாலம் வந்துவிட்டது'’ என்கிற பாவனையில் முறைத்துவிட்டுச் சென்றான்.
அரண்மனையில்....
பைத்தியம் பிடித்தவனைப்போல... குடித்தபடியே அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தான் இளவரசன். அவனைச்சுற்றி தளபதியும், படைவீரர்களும் சூழ்ந்திருக்க....
""எனக்கு இதுவரை எந்த மனஉளைச்சலும் வந்ததே இல்லை. புதிய பிஷப்பாக வந்திருப்பவனால் என் தலை சுற்றுகிறது. இதற்கு ஏதாவது முடிவு கட்டுங்கள். என் தலைவலியைப் போக்குங்கள்'' என்று போதையில் புலம்பிவிட்டு... நிமிர்ந்து பார்த்தான்.
தளபதியையும், படைவீரர்களையும் காணவில்லை.
"எங்கே அவர்கள்?' என மெய்க்காப்பாளனிடம் கேட்டான்.
“"நீங்கள் அவர்களிடம்... ‘"ஏதாவது முடிவு கட்டுங்கள்'’எனச் சொன்னவுடனேயே கிளம்பிச் சென்றுவிட்டார்கள்' என்றான் மெய்க்காப்பாளன்.
"நான் சொன்னதை தளபதி தவறாகப் புரிந்துகொண்டுவிட்டானா?' எனப் பதறிய இளவரசன்... குதிரையின் மீதேறி பாய்ந்து சென்றான்.
தேவாலயம். அறுபது படிக்கட்டுகள் கொண்ட ஒரு பீடத்தின் மீது... ஏசுபிரான் காட்சியளிக்கிறார். ஏசுவின் பாதங்கள் முன்நின்று பிஷப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். தளபதி ஈட்டியுடன் அங்கே வருகிறான். பின்னாலேயே இளவரசன் வந்துகொண்டிருக்கிறான்.
பிஷப் பிரார்த்தனை முடிந்து... படிகளிலிருந்து இறங்கவிருக்கும் வேளையில்... ஈட்டியை ஏவினான் தளபதி.
பிஷப்பின் மார்பைத் துளைத்து வெளியேறியது ஈட்டி.
இளவரசன் பதறி ஓடிவர... பிஷப் ரத்தம் வழிய ஒவ்வொரு படிக்கட்டிலும் உருண்டுவர... இளவரசன் முதற்படிக்கட்டின் அருகே வர... அவன் காலடியில் பிஷப் உருண்டு விழ...
""நண்பா... நான் சொன்னதை தளபதி தவறாகப் புரிந்துகொண்டுவிட்டான்...'' என்று இளவரசன் கதறுகிறான்.
""இளவரசே பதறவேண்டாம்... நான் உன் நண்பன். பிஷப் என்கிற கடமை தவறாமல் உனக்குப் பெருமை சேர்த்துவிட்டேன்.. இப்போது, உன் உப்பைத்தின்று வளர்ந்த நான்... உன் பாதங்களில் சரணடைந்துவிட்டேன். இனி எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்...'' என இளவரசனைப் பார்த்துச் சொல்லியபடியே உயிரைவிட்டார் பிஷப்... உயிரை விட்டான்... தாமஸ் பெக்கெட்.
""நண்பா'' என கதறினான் இளவரசன். தேவாலயமே கதறியழுவதுபோல ஆனது.
நீதி தவறாத பிஷப்பை ஏசுபிரான் ஏற்று ஆசிர்வதிக்கும் காட்சி பார்வையாளர்களை துயரத்தில் ஆழ்த்துகிறது.
தன் நண்பனான பிஷப்பின் முழுஉருவ தங்கச்சிலையை வடிக்கச் செய்து... அரண்மனையின் ஓர் அறையில் அச்சிலையை படுக்கை வசமாக வைத்து, திரையிட்டு மூடியிருக்கிறான் இளவரசன். அருகே கையில் சவுக்குடன் இரு வீரர்களையும் நிறுத்தியிருக்கிறான்.
மேல் சட்டை அணியாமல் அங்கு வருகிறான் இளவரசன்.
திரை விலகுகிறது. பிஷப் உருவ தங்கச் சிலை தெரிகிறது.
அச்சிலையின் முன் தலைகுனிந்து வணங்குகிறான் இள வரசன்.
அப்போது... இரு வீரர்களும் இளவரசனை சவுக்கால் மாறிமாறி அடிக்கிறார்கள். அடித்து முடிந்ததும்... அந்த வீரர்களுக்கு நன்றி சொல்கிறான். மீண்டும் பிஷப் சிலையை வணங்கிவிட்டுச் செல்கிறான்.
"நடந்துவிட்ட மாபெரும் தவறுக்காக... இளவரசன் ஒவ்வொருநாளும் சவுக்கடியை விரும்பி தண்டனையாகப் பெற்றுவருகிறான்...' என ‘தாமஸ் பெக்கெட்’ படம் முடிகிறது.
பாண்டவர்களும், தானும் ஒருதாய் மக்கள் என்று அறிந்தும், செஞ்சோற்றுக் கடனுக்காக... தீயவனான துரியோதனனின் பக்கம் துணையாக இருந்து மாண்டான் கர்ணன். ஆனால் தாமஸ் பெக்கெட்டின் கொள்கையே வேறு.
"செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரையே தியாகம் செய்யலாம்... மக்களுக்கு துரோகம் செய்யவே கூடாது' என்பதில் உறுதியுடன் நேர்மை தவறாது வாழ்ந்து... மாண்டான்.
"கர்ணன்' கதை சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதிகாசம்.
தாமஸ் பெக்கெட் கதை 1119-1170-ஆம் ஆண்டுகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடந்த உண்மைக் கதை.
மாவீரன் அலெக்ஸாண்டரைப் பற்றிய இரண்டு திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். பலமொழிகளில்... அலெக்ஸாண்டரைப் பற்றிய புத்தகங்களும் வந்திருக்கிறது. அதில் சில சம்பவங்களை, கருத்துகளை அவரவர் போக்கில் சுருக்கியும், நீட்டியும் எழுதி யிருக்கிறார்கள். இங்கே நமக்குத் தேவை... ‘இரு நண்பர்கள்’ பற்றியது என்பதால்... அதை சுருக்கமாக எழுதுகிறேன்.
கிரேக்க தேசத்தின் ஒரு பகுதிதான் மாஸிடோனியா. அந்த குறு நிலப்பரப்பை ஆண்டு வந்தவன் மன்னன் பிலிப். அவன் மனைவி ஒலியம்ஸ். இவர்கள் மகன்தான் அலெக் ஸாண்டர். ராஜாவுக்கும், ராணிக்கும் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்தபோதிலும்... மகன் அலெக் ஸாண்டரை வளர்ப் பதில் அவர்கள் எந்தக் குறையும் வைக்க வில்லை.
அலெக்ஸாண்ட ருக்கு அப்போது எட்டு வயதிருக்கலாம். ஒருநாள்... வீரப்போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது குதிரையுடன் வந்த ஒருவன்... “"என் குதிரையின் பெயர் பியூசி பேலஸ். இதை அடக்க வல்லவர் ஒருவர் உண்டோ?' என்று சவால்விட்டான்.
சவாலை ஏற்று பல வீரர்கள் வந்தார்கள். யாராலும் குதிரையை அடக்க முடிய வில்லை. சிறுவன் அலெக்ஸாண்டர் தன் தந்தையான மன்னன் பிலிப்பிடம் அனுமதி பெற்று குதிரையை அடக்க மைதானத்திற்கு வந்தான். மன்னர், மகாராணி, மக்கள்... என அனைவருக்கும் வியப்பு. ‘"எட்டு வயதுச் சிறுவன் இப்படி விளையாட்டுத்தனமாக செயல்படு கிறானே...'’ என்கிற அதிர்ச்சி அவர்களின் முகத்தில் இருந்தது.
அலெக்ஸாண்டர்-ஹெபஸ்டியோன் நட்பும் அதில் உண்டான துயரமும்...