(46) பார்த்திபன் மீது வருத்தம்! என் மீதும் குத்தம்!
விசு அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், அவருடைய கதைக்கு நான் திரைக்கதை எழுத ஒப்புக்கொண்டு... அவரிடமிருந்து கதை ஃபைலை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.
குடும்பக் கதைகள் எழுதுவதில் விசுவுக்கு நிகர் விசுதான். "சம்சாரம் அது மின்சாரம்'... அடேயப்பா... நான் பிரமித்துப்போன படம். இப்படியெல் லாம்கூட அவர் எழுதுகிறாரென்றால்... அவர் ஒரு பெரும் குடும்ப உறவுகளுக்குள் பிறந்து, வளர்ந்த பேராற்றல் உடையவராகத்தான் இருக்கவேண்டும்.
நான் திரைப்படங்களை தயாரித்த காலகட்டத்தில்... விசுவின் கதை -திரைக்கதை -வசனம் -இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துவிட வேண்டும் என பெரும்பாடுபட்டேன். விசுவின் தம்பி கிஷ்முவிடம் விசுவைச் சந்திக்கிற வாய்ப்பை தொடர்ந்து கேட்டுவந்தேன். ஆனால் என் ஆசை நிறைவேறவில்லை.
அந்தக்காலத்தில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஜுபிடர் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரான ஜுபிடர் சோமு அவர்களின் மகன் எம்.எஸ்.காசி அவர்கள், நான் எழுதிய கதைகளை வைத்து "வாயாடி', "தாய்வீட்டு சீதனம்' ஆகிய படங்களைத் தயாரித்தவராவார்.
ஒருமுறை என்னைச் சந்தித்தபோது... ""கலைஞானம்... நீங்கள் எழுதி, என் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றியைப் பெற்றபோதும்... சில சூழ்நிலைகளால் உங்களுக்கு என்னால் சரிவர பணம் கொடுக்க முடியாத நிலையிலும், எனக்கு நீங்கள் பணம் வாங்கிக் கொடுத்ததை என்னால் ஆயுள் உள்ளவரை மறக்க முடியாது. இப்போது நான் ஒரு முடிவுசெய்து வந்திருக்கிறேன். தற்போது நீங்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டீர்கள். மீண்டும் நீங்கள் படம் எடுங்கள். தேவையான பணத்திற்கு நான் ஏற்பாடு செய்துதருகிறேன்'' என்றார்.
""ரொம்ப சந்தோஷம். ஆனா... இப்ப நான் கதை எழுதுறதை கொஞ்சம் தள்ளிப் போட்டுட்டு... விசு அவர்களை வைத்து, அவருடைய கதை-இயக்கத்தில் படம்

""ரொம்ப சந்தோஷம். ஆனா... இப்ப நான் கதை எழுதுறதை கொஞ்சம் தள்ளிப் போட்டுட்டு... விசு அவர்களை வைத்து, அவருடைய கதை-இயக்கத்தில் படம் தயாரிக்க விரும்புகிறேன். இது என் நீண்டநாள் ஆசை'' என்றேன்.
""உங்கள் ஆசைப்படியே செய்யுங்கள்'' என்றார் எம்.எஸ்.காசி.
விசுவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து எனது விருப்பத்தைச் சொன்னேன்.
எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார்.
எனக்கு ஃபைனான்ஸ் செய்வதாகச் சொன்ன எம்.எஸ்.காசியிடம் பணம் இருந்தபோதும்... காசியின் நெருங்கிய நண்பரான... எம்.ஜி.ஆரை வைத்து "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'’ படத்தை தயாரித்தவரான மணிஐயரின் மகன் சீனு இப்போது கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். "அவரிடம் கதையைச் சொல்லி... படத்தை ரிலீஸ் செய்யும் வேலையை செய்துகொள்ளலாம்...' என்கிற யோசனையையும் சொன்னார் காசி.
இந்த விஷயத்தை விசுவிடம் சொல்லி... கார்ப்பரேட் கம்பெனியில் கதையும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு என்ன நெருக்கடியோ... நாட்கள் கடந்ததுதான் மிச்சம்.
இதனால் நம்பிக்கை இழந்த காசி... படம் தயாரிக்க பற்றாக்குறையாக இருந்த பத்து லட்ச ரூபாயை தனக்கு அறிமுகமான பெங்களூரு ஃபைனான்ஸியரிடம் கேட்க... அவரும், ‘"படத்துக்கு பூஜை போடுங்க. பணத்தோட வந்திடு றேன்'’ என்று சொல்ல... அதை நம்பி பூஜை போட்டோம்.
பெங்களூரு ஃபைனான்ஸியரோ... ""நான் உங்களுக்காக ரெடி பண்ணிவச்சிருந்த பணத்தை என் மகன்... ஒரு தெலுங்குப்படத் தயாரிப்பாளருக்கு கொடுத்துட்டான்... ஸாரி...'' எனச் சொல்லிவிட்டார்.
விசுவுக்கு இது சரியான சகுனமாகப் படவில்லை. எனக்கும் விசுவை வைத்து படம் தயாரிக்கிற பாக்கியம் கிடைக்கவில்லை....
இன்று, விசுவே அழைத்து... அவருடைய கதைக்கு என்னை திரைக்கதை எழுதச் சொல்லியதை எண்ணிய படியே வீட்டுக்கு வந்தேன்.
விசுவின் கதைக்கு திரைக்கதை எழுதி முடித்து, படக்குழு மத்தியில் அரங்கேற்றம் செய்தேன். அனைவருக்கும் என் திரைக்கதை பிடித்துவிட்டது. விசு சில திருத்தங்கள் செய்தார். திரைக்கதை குறித்து காரசாரமான விவாதமும் நடத்தி முடித்தோம்.
இந்தக் கதை பெண்ணுக்கு முக்கியத்துவமுள்ள கதை என்பதால் ஹீரோ கிடைப்பது அரிதாகிவிட்டது. புது ஹீரோவை வைத்து படத்தை இயக்குவதில்... அமெரிக்காவில் இயக்குநர் பயிற்சிபெற்று வந்த மதுமிதாவுக்கு தயக்கம்.
ஒருவழியாக பார்த்திபனைச் சந்தித்து கதையைச் சொன்ன மதுமிதா... "தேவைப்பட்டால்... நீங்கள் உங்களுக்கு தகுந்தபடி கதையில் மாற்றம் செய்துகொள்ளலாம்' எனவும் சொல்ல...
""இது விசு சார் எழுதின கதை... கலைஞானம் சார் திரைக்கதை எழுதியிருக்கார். இவங்க ரெண்டு பேருமே நான் மதிக்கிற சிறந்த படைப்பாளிகள். அவங்களோட சிந்தனையில் நான் திருத்தம் செய்து... எனக்கு முக்கியத்துவம் செய்தால்... அவர்கள் என் னைப்பற்றி தவறாக எண்ணக்கூடும்'' என்று சொல்லி... இந்தக் கதையில் நடிப்பதை தவிர்க்க முயற்சிக்க...
""நாங்க சொன்னா விசு சாரும், கலைஞானம் சாரும் ஏற்றுக்கொள்வாங்க. வேணும்னா... அவங்ககிட்ட அனுமதி வாங்கிக்கிட்டு மறுபடியும் உங்களைச் சந்திக்கிறேன்'' எனச் சொல்லிவிட்டு வந்த மதுமிதா... விசுவிடம் விஷயத்தைச் சொன்னார்.
""உங்க கதைக்கு ஒரு ஹீரோ இப்போ அவ சியம்னு நீங்க முடிவுசெஞ்சதை நான் வரவேற்கிறேன். நீங்கள் முதன்முதலில் ஒரு படம் இயக்குகிறீர்கள். உங்கள் ஆசையை நிறைவேற்றுவது என் கடமை. கலைஞானமும் நான் சொன்னால் மறுக்கமாட்டார். ஆகவே பார்த்திபன் விருப்பப்படி கதையில் அவர் மாற்றம் செய்துகொள்ள சம்மதித்து நாங்க அனுமதி கடிதம் தர்றோம். படத்தில் டைட்டில் கார்டில் எங்களுக்கு நன்றி தெரிவித்தால் போதும். இதில் எந்தவிதமான மனக்கசப்பும் எங்களுக்கு இல்லை. எந்த தடையும் இல்லாம உங்க டைரக்ஷன்ல படம் எடுக்கப்பட்டு, வெளியாகி வெற்றி பெறணும். அதில்தான் எங்களுக்கு பெருமை. அதோட... இந்தப் படம் மூலம் 150 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது கெட்டுவிடக்கூடாது...'' என விசு பெருந்தன்மையுடன் சொல்லி அனுமதிக் கடிதமும் கொடுத்தார். நானும் “"தேவையான திருத்தம் செய்துகொள்ளட்டும்' எனச் சொல்லிவிட்டேன்.
திரைக்கதையில் பார்த்திபன் செய்த திருத்தங்களுடன்... மதுமிதா இயக்கத்தில் திரிசக்தி சுந்தர்ராமன் தயாரிப்பில் "வல்லமை தாராயோ' என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டு... வெளியானது.
படம் கொஞ்சம் கிளாஸாக இருந்தது. அறிமுகப் படத்திலேயே பாராட்டத்தக்க விதத்தில் இயக்கியிருந்தார் மதுமிதா.
கதாநாயகி ஒருவனை காதலிக்கிறாள். ஆனால் அவளின் பெற்றோர் கட்டாயப்படுத்தி தங்கள் உறவுக்கார இளைஞனுக்கு திருமணம் செய்துவைக்க... முதலிரவின்போது.. "என் விருப்ப மில்லாமல் நடந்த திருமணம் இது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை' என்று சொல்லி, தனியாகப் படுத்துக்கொள் கிறாள். "நீ எப்போது என்னை ஏற்கிறாயோ... அப்போது நான் உன்னோடு மனப்பூர்வமாக வாழ்கிறேன்' எனச் சொல்கிறான். ஆனாலும்... அவளுக்குத் தேவை யான சகல உதவிகளையும் சலிப்பில்லாமல் செய்கிறான்.
பார்த்திபனும், சாயாசிங் கும் நடித்திருந்தனர்.
பார்த்திபன் நடித்த படங்களிலேயே மேன்மையான நடிப்பை வெளிப்படுத்திய படம் இது. காதலனை மறக்க முடி யாமல், கட்டினவனை ஏற்கமுடியாமல் தவிக்கும் மனப்போராட்டத்தை மிகச் சிறப்பாக வெளிப் படுத்தி நடித்திருந்தார் சாயாசிங். இப்படி ஒரு நிறை வான படம்... எதிர்பார்த்த அளவில் போகவில்லை.
எனக்கு பார்த்திபன் மீது கொஞ்சம் வருத்தம்.
"கதையை இஷ்டப்படி மாற்றிக்கொள்ளலாம்' என எங்கள் தரப்பில் கடிதம் கொடுத்திருந்தாலும்... "கலைஞானத்திடம் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்' என பார்த்திபன் சொல்லவில்லையே என்கிற வருத்தம்தான்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "சித்தி' படத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பத்மினி, தன் தந்தை பட்ட 50 ஆயிரம் ரூபாய் கடனுக்காக... கடன் கொடுத்த எம்.ஆர்.ராதா "பணத்தைக்கொடு... இல்லேன்னா உன் மகளை எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடு...' எனச் சொல்ல... மிரட்டலுக்குப் பயந்து, அப்பாவின் மானத்தைக் காக்க... எம்.ஆர். ராதாவை மணந்துகொள்ள சம்மதிப்பார் பத்மினி. தன் காதலர் ஜெமினிகணேசனிடம் சென்று... ""என் அப்பாவின் மானம் காக்க இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட்டேன். நீங்கள் ஐம்பதாயிரம் கொடுத்து அந்த கடனை அடைக்க முடிந்தால்... நாம் திருமணம் செய்துகொள்ளலாம்'' என்பார்.
""நான் வேலை தேடுபவன். என் குடும்பம் வறுமையில் உழல்வது உனக்குத் தெரியுமே... அப்படியிருந்தும் கேட்கிறாயே...?'' என ஜெமினி சொல்வார்.
""உங்க நிலமை எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும்... "என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக் கலாமே?'னு நீங்க சொல்லிடக்கூடாதே... அதனாலதான் கேட்டேன்''’ என்பார் பத்மினி.
இது சாதாரணமாகத் தெரிந் தாலும் மிக அழுத்தமான வசனம்.
"உங்க திரைக்கதைல திருத் தம் செஞ்சுக்கிறேன்'னு பார்த் திபன் என்கிட்ட கேட்டிருக்க லாமே... இல்லை நானாவது பார்த்திபனிடம் கேட்டிருக்கலாம்.
"யானைக்கும் அடி சறுக்கும்... பூனைக்கும் கொடி பறக்கும்' என்கிற பழமொழி என் வரையில் சரியாகத்தான் இருக்கிறது.
சில சுமாரான படங்கள் சூப்பராக ஓடும். "ஏன் இப்படி ஓடுது?' என்பதற்கு காரணம் தெரியாது. சில படங்கள் நன்றாக இருந்தும் ஓடாது. அதற்கும் காரணம் தெரியாது.
வெற்றி, தோல்விக்கான காரணங்களை அறிந்தவர் எவருமில்லை. அப்படி ஒருவர் இருந் தால் அவரிடம் கேட்டே படம் எடுத்துவிடலாமே. எல்லாப் படமும் நன்றாக ஓடுமே.
ஆனாலும்... "வல்லமை தாராயோ' என்கிற ஒரு சிறந்த படத்தில் நானும் உழைத்தேன் என்று பெருமைப்படுகிறேன்.
ஒன்றே ஒன்று... என்னிடம் நிரந்தரமாக இருக்கிறது...
நான் என்ன தொழில் செய்கிறேன் என்ற அடையாளத்தை தயவுதாட்சண்யம் பார்த்துப் பார்த்து... இழந்துவருகிறேன்.
வில்லச் சிரிப்புக்குப் பேர்போன
வீரப்பாவின் குழந்தை உள்ளம்