கேரக்டர்! -கலைஞானம் (58)

ch

(58) மங்கையர் திலகங்களின் மகுடம்!

ரு கிராமத்தில் சாரதா-சதாசிவம் தம்பதி வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன்.

சதாசிவத்தின் தந்தை இறந்துவிட்டார். அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எடுத்துச் செல்கிறார்கள் சதாசிவமும், சாரதாவும்.

கிராமத்திலிருந்து தூரத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்ல மாட்டுவண்டியில் பயணிக்கிறார்கள். அவர்களின் வீட்டு வேலைக்காரன் வண்டியோட்டிச் செல்கிறான். வண்டியின் அடிப்பகுதியில் ஒரு மண் கலசத்தில் அஸ்தி தொங்கவிடப்பட்டிருக்கிறது.

கரடுமுரடான பாதையில் வண்டி ஆடி அசைந்து பயணிக்கிறது. களைப்பில் வண்டிக்குள் அயர்ந்து தூங்குகிறார்கள். வண்டியின் குலுங்கலில் சாரதாவின் மாராப்பு விலக... வண்டிக்காரன் கண் வைக்கிறான். காமத்தீ அவன் மனதில் கட்டு மீறுகிறது.

திடீரென்று கண்விழித்த சதாசிவம்... ""வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கி... அஸ்தி கலசத்தைப் பார்க்க... கலசத்தைக் காணவில்லை. பதறிய அவன்... “சாரதா நீ வண்டியிலேயே இரு. நான் வண்டி வந்த பாதையில் தேடிப்போய்ப் பார்க்கிறேன்'' எனச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு... சாரதாவை பாலியல் வன்புணர்வு செய்தான் வண்டிக்காரன்.

அஸ்தி கலசத்துடன் திரும்பிவந்தான் சதாசிவம். சாரதா வேதனையை உள்ளடக்கிக்கொண்டு... வண்டிக்குள் அமர்ந்திருந்தாள்.

""டேய்... சீக்கிரம் வண்டியை ஓட்டு. ரயில் வர்ற நேரமாச்சு'' என்றான்.

கணவனிடம் நடந்ததைச் சொல்லமுடியாமல் தவித்தாள் சாரதா.

ரயிலடி வந்தார்கள். சதாசிவம் கலசத்தை எடுத்துக்கொள்ள... வண்டிக்காரன் பெட்டி படு

(58) மங்கையர் திலகங்களின் மகுடம்!

ரு கிராமத்தில் சாரதா-சதாசிவம் தம்பதி வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன்.

சதாசிவத்தின் தந்தை இறந்துவிட்டார். அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எடுத்துச் செல்கிறார்கள் சதாசிவமும், சாரதாவும்.

கிராமத்திலிருந்து தூரத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்ல மாட்டுவண்டியில் பயணிக்கிறார்கள். அவர்களின் வீட்டு வேலைக்காரன் வண்டியோட்டிச் செல்கிறான். வண்டியின் அடிப்பகுதியில் ஒரு மண் கலசத்தில் அஸ்தி தொங்கவிடப்பட்டிருக்கிறது.

கரடுமுரடான பாதையில் வண்டி ஆடி அசைந்து பயணிக்கிறது. களைப்பில் வண்டிக்குள் அயர்ந்து தூங்குகிறார்கள். வண்டியின் குலுங்கலில் சாரதாவின் மாராப்பு விலக... வண்டிக்காரன் கண் வைக்கிறான். காமத்தீ அவன் மனதில் கட்டு மீறுகிறது.

திடீரென்று கண்விழித்த சதாசிவம்... ""வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கி... அஸ்தி கலசத்தைப் பார்க்க... கலசத்தைக் காணவில்லை. பதறிய அவன்... “சாரதா நீ வண்டியிலேயே இரு. நான் வண்டி வந்த பாதையில் தேடிப்போய்ப் பார்க்கிறேன்'' எனச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு... சாரதாவை பாலியல் வன்புணர்வு செய்தான் வண்டிக்காரன்.

அஸ்தி கலசத்துடன் திரும்பிவந்தான் சதாசிவம். சாரதா வேதனையை உள்ளடக்கிக்கொண்டு... வண்டிக்குள் அமர்ந்திருந்தாள்.

""டேய்... சீக்கிரம் வண்டியை ஓட்டு. ரயில் வர்ற நேரமாச்சு'' என்றான்.

கணவனிடம் நடந்ததைச் சொல்லமுடியாமல் தவித்தாள் சாரதா.

ரயிலடி வந்தார்கள். சதாசிவம் கலசத்தை எடுத்துக்கொள்ள... வண்டிக்காரன் பெட்டி படுக்கையை கொண்டு வந்து வைத்தான்.

சாரதா குனிந்த தலை நிமிரவில்லை. வண்டிக்காரனோ... சாரதாவையும், சதாசிவத்தையும் மாறிமாறிப் பார்த்தான்.

துரோகம் செய்துவிட்டதை எண்ணி... அவன் கண்கள் கண்ணீரை வடித்தது.

""டேய்... மடையா... நீ ஏண்டா குழந்தை மாதிரி அழற? நாங்க என்ன வெளிநாடா போறோம். நல்லபடியா நாங்க திரும் பிவரணும்னு வெங்கடாஜலபதிகிட்ட வேண்டிக்கடா.. கங்கையில முழுக்குப் போட்டா... செஞ்ச பாவதோஷமெல்லாம் போயிடுமாம். எங்களையே நம்பி வாழ்றவன் நீ. உன்னையறியாம நீயும் ஏதாவது பாவம் பண்ணிருக்கலாம். உனக்கும் சேர்த்து ஒரு கங்கைல முழுக்கு போட்டுட்டு வர்றோம்'' என சூதுவாதில்லாமல் சதாசிவம் சொல்ல...

தப்பு செய்த வண்டிக்காரனை அந்த வார்த்தைகள் சுட்டெரித்தது.

ரயிலில் ஏறி அமர்ந்தனர். ரயில் ஊளையிட்டுப் புறப்பட்டது.

ரயிலில் பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

சாரதா துக்கத்தில் தூக்கம் வராமல் தவித்தபடி இருந்தாள்.

""என்ன சாரதா? ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க?'' என சதாசிவம் கேட்க... ""அதெல்லாம் ஒண்ணுமில்ல...'' எனச் சமாளித்து, முகத்தை சேலைத் தலைப்பால் மூடி... சாய்ந்துகொண்டாள்... தூங்குகிற பாவனையில்.

கங்கையில் மூழ்கி, அஸ்தியை கரைத்துவிட்டு... காசிநாதனை தரிசனம் செய்து மனமுருகப் பாடினான் சதாசிவம்.

சம்பிரதாயங்கள் முடிந்து கங்கை நதிக்கரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். சதாசிவம் தன் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை கழட்டியபடி... ""சாரதா.. இந்த மோதிரத்தை நான் கங்கைல விட்டுட்டு வர்றேன்'' என எழுந்தான்.

"ஏன்?' என்பதுபோல கணவனைப் பார்த்தாள்.

""காசிக்கு வந்தவங்க... ஏதாவது ஒரு பொருளை கங்கைல போட்டுட்டுப் போனா... அதோட நாம செய்த பாவங்களும் போய்விடும்னு எங்க அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது'' என விளக்கம் சொன்னான்.

c

படக்கென்று எழுந்த சாரதா... ""கொஞ்சம் பொறுங்க. நானும் ஏதாவது பாவம் செய்திருப்பேனில்லையா... அந்தப் பாவத்தைப் போக்க... நான் ஒரு பொருளை முதல்ல போட்டுட்டு வர்றேன்'' எனச் சொல்லியபடி விறுவிறுவென நதிக்குள் அவள் இறங்க... புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சதாசிவம்.

சாரதா கங்கையை வணங்கினாள். நீரைத் தொட்டு கும்பிட்டாள்.

""தாயே... எனக்கு ஏற்பட்ட கொடுமையை என் கணவரிடம் சொன்னால்... வாழ்நாள் முழுதும் அதை நினைச்சே செத்துக்கிட்டிருப்பார். இதை குடும்பம் அறிந்தால்... வாழ்நாள் முழுக்க அவமானப்பட்டே வாழணும். குடும்ப மானத்தைக் காக்க ஒரே வழி... எனக்கு நான் நடந்ததைச் சொல்லாமல்... என் உயிரை ஒரு பொருளாக நினைத்து உன்னிடம் சேர்த்துவிடுகிறேன். எனக்குச் செய்யப்பட்ட பாவம் என்னோடு போகட்டும். என் குடும்பம் மாசுபடாமல் வாழட்டும்... என்னை ஏற்றுக்கொள் தாயே...'' என வேண்டியபடி நீரில் மூழ்கினாள்.

மறுபடி எழவே இல்லை.

""சாரதா... சாரதா...'' என அரற்றியபடி அலறினான் சதாசிவம்.

அழுதபடியே கங்கைக் கரையில் தேடிப்பார்த்துவிட்டு... கிராமத்திற்குப் புறப்பட்டான்.

வீட்டிற்கு வந்தான் சதாசிவம்.

""அப்பா...'' என ஓடி வந்தது குழந்தை.

மகனை கட்டிப் பிடித்துக்கொண்டு... ""பாபு... அம்மா நம்மள விட்டுட்டுப் போய்ட்டாடா...'' என கதறி அழுதான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வண்டிக்காரனின் இதயம் குற்றவுணர்ச்சியால் நொறுங்கியது.

"உண்ட வீட்டுக்கு துரோகம் செஞ்சிட்டேன். நான் வாழ்றதுக்கு தகுதியில்லாதவன்... ஒரு நிமிஷம்கூட இனியும் நான் வாழக்கூடாது...' என தனக்குள் வெடித்தபடி... தற்கொலை செய்துகொண்டான்.

இதுதான்... "நிமஜனம்' தெலுங்குப் படத்தின் கதை. இது 1952-ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கிறது.

"நிமஜனம்' படக் கதையின் சாராம்சம் துளியும் கெடாமல்... சின்ன மாற்றங்களுடன்... கதையைச் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தின் உரிமை பெறமுடிந்தால் தமிழில் இந்தக் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் படமாக எடுக்கலாம்.

ca

காதலை கௌரவித்த... கௌரவிக்கிற விதமாக நிஜ வாழ்க்கையின் மங்கையர் திலகங்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம். அவர்களின் கேரக்டர் எவ்வளவு உன்னதமானது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கார்ல் மார்க்ஸ்-ஜென்னி காதல் எவ்வளவு அழுத்தமானது...

கார்ல் மார்க்ஸின் தந்தை ஒரு யூதர். மிகச்சிறந்த வழக்கறிஞர். ஆனால் வருமானம் இல்லை. ஏனென்றால், அவர் வாழ்ந்துவந்த நாடு முழுக்க கிறிஸ்தவர்கள். யூதரான அவரை தங்களுக்கு வக்கீலாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஏழு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கிறிஸ்தவராக மதம் மாறினார். அதன்பிறகே வக்கீல் தொழில் நன்றாக நடந்தது.

அவர்கள் குடியேறிய வீடு... பிரபுவம்சத்து கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டிற்கு பக்கத்து வீடாக இருந்தது. அந்தக் குடும்பத்தின் செல்ல மகள் ஜென்னி.

அடுத்தடுத்த வீடுகள் என்பதால் சிறுவயதிலிருந்தே மார்க்ஸும், ஜென்னியும் இணைபிரியாத நட்பு கொண்டனர். அளவற்ற அன்பால் அவர்களின் அகமும், முகமும் மலர்ந்துவந்தன. அது காதலாகவும் கனிந்துவிட்டது. மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது மூத்தவர். மார்க்ஸின் குடும்பத்தைவிட ஜென்னியின் குடும்பம் பல மடங்கு அந்தஸ்திலும் உயர்ந்தது.

""நம் காதலுக்கு கண்டிப்பாக இடையூறு வரும். கல்லூரி வாழ்க்கையில் நீங்கள் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்துவிட்டீர்கள். ஒரு உத்தியோகம் பார்த்து நீங்கள் சம்பாதிக்கும் வரை... உங்களுக்காகவே நான் காத்திருக்கிறேன். அதன்பின் நாம் திருமணம் செய்துகொள்ளலாம். நீங்கள் தொழிலாளர்களின் துயர் துடைக்கப் பிறந்த சூரியன். உங்கள் லட்சியம் நிறைவேறுவதற்கு நானும் உறுதுணையாகவே இருப்பேன்...'' எனச் சொல்லி ஏழாண்டுகள் குறையாத காதலுடன் காத்திருந்தார் ஜென்னி.

மார்க்ஸுக்கு வேலை கிடைத்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பிறகென்ன.... யாரும் காணாத சுகபோகமா?

இல்லவே இல்லை. முடியாத சோகம், மடியாத வறுமை, விடியாத வாழ்க்கை... இதுதான் ஜென்னி கண்ட உலகம்.

மார்க்ஸ் கடுமையான நோயால் அவதிப்பட்ட நேரங்களிலும், தன் லட்சியத்திற்காக அல்லும் பகலும் அல்லல்பட்ட நேரங்களிலும் ஜென்னி, உண்ணாமல்... உறங்காமல் ஒரு நிமிஷமும் காதல்கணவனைப் பிரியாமல், உடனிருந்தே துன்பப்பட்டார் ஜென்னி.

அதை எழுத எழுதுகோலை எடுத்தால்... அதில் ரத்தம்தான் வரும். அப்படி ஒரு நோய்க்கு ஆளாகி... ஜென்னியும் பலியாகிவிட்டார்.

இத்தனை துயரத்தையும் தாங்கியது காதலுடன் காத்திருந்து கைப்பிடித்த கணவனுக்காக... அவரின் லட்சியத்திற்காக....

உலகம் உள்ளவரை தொழிலாளர்கள் உள்ளத்தில் வைத்து பூஜிக்கவேண்டிய ஜென்னி... மங்கையர் திலகங்களின் மகுடமல்லவா!

nkn240519
இதையும் படியுங்கள்
Subscribe