தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட் டணியை தக்க வைத்தாலே ஓட்டு சதவிகித அடிப்படையில் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என அரசியல் கூர்நோக்கர்கள் கூறு கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன் அவ் வப்போது அதிருப்தி கருத் துக்களை தெரிவித்துவரு கிறார். சி.பி.எம். கட்சியும் தி.மு.க.வுடன் மோதுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கும் ஏற்பட்ட மோதல் சட்ட சபையிலும், வெளியிலும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது. இத னால் தி.மு.க. கூட் டணியிலிருந்து வேல் முருகன் வெளியேறி விடுவார் அவருக்குப் பதிலாக பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர் வதற்கான சூழல் உருவாகியுள்ளது என அ.தி.மு.க. தரப்பி லிருந்து செய்திகள் கட்டமைக்கப்படுகின் றன. தலைமைச் செய லகத்தில் நடந்த லோக் சபா தொகுதிகள் மறு வரையறை ஆலோ சனைக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி பங்கேற்றதை, தி.மு.க. கூட்டணிக்கு அவர் வரத் தயார் என கொடுக்கப் பட்ட சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலை யில் தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்கிற கேள்வியை தி.மு.க. வட்டாரங்களில் முன்வைத்தோம்.
தி.மு.க. கூட்டணியிலிருந்து வேல்முருகன் வெளியேறமாட்டார். அவர் அமைச்சர் சேகர் பாபுவை விமர்சித்தாலும் மற்ற தி.மு.க. அமைச்சர் களுடன் நல்லபடியாகவே பழகி வருகிறார். "சட்டசபையில் நான் பேசினால் ஜெயலலிதாவே கேட்பார்'’என வேல்முருகன் பேசியதை தி.மு.க. வினர் ரசிக்கவில்லை என்றாலும், "அவர் கேட்டபடி அவரது பண்ருட்டி தொகுதிக்கு தடய அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் வேகம் பெற்றுள்ளன' என முதல்வர் கடலூர் கூட் டத்தில் அறிவித்தார். அது தொடர்பாக வேல்முருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார். “வேல்முருகன் தி.மு.க. கூட்டணியோடு உரசுவதும் பின்பு சமரசமாவதும் அடிக்கடி நிகழும் நிகழ்வு. அது ஒரு பொருட்டல்ல” என்கிறார்கள் தி.மு.க.வினர். வி.சி.க.வும், கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. மீது விமர்சனம் வைத்தாலும் அந்த விமர்சனங்கள் எல்லாம் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ என்கிற ஒற்றைவரி கோஷத்தில் முடங்கிப் போய்விடும். சமீபத்தில் தொகுதி வரையறை தொடர்பாக ஸ்டாலின் கூட்டிய தென்மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம் கம்யூனிஸ்ட்டுகளையும், வி.சி.க.வையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
உண்மையில் சலசலப்புகள் அ.தி.மு.க. கூட் டணியில்தான் இருக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க. விற்கு ராஜ்யசபா சீட் தருவோம் என எடப்பாடி வாக்களித்திருந்தார். அந்த வாக்குறுதியை எடப்பாடி காற்றில் பறக்க விட்டுவிட்டார். “தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் தருவோம் என நாங்கள் எந்த வாக்குறுதியும் தரவில்லை. அப்படி எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் கையெழுத்திட வில்லை” என எடப்பாடி வெளிப்படையாகவே அறிவித்தார். இதைப்பற்றி பிரேமலதா வெளிப் படையாகப் பேசவில்லை என்றாலும் ‘தே.மு.தி.க. இடம்பெறும் அணியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும்’ என காட்டமாகவே சொல்லியிருக் கிறார். “உண்மையில் தே.மு.தி.க., அ.தி.மு.க. சட்டமன்றத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போது ராஜ்யசபா சீட் தருவது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதை வெளிக் காட்ட எடப்பாடி மறுத்துவிட் டார்” என பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி குறிப்பிடுகிறார். ராஜ்ய சபா சீட் மறுக்கப்பட்டதால் தி.மு.க.வின் கதவை தே.மு.தி.க. தட்டுகிறது. தே.மு.தி.க.விற்கு தி.மு.க. கூட்டணியில் ராஜ்யசபா சீட் கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. அணி மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது என்கிற நிலை ஏற்பட்டாலும் அ.தி.மு.க. அதை வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குகிறது. நடிகர் விஜய், சீமான் ஆகியோர் அ.தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஒரு பிம்பத்தை அ.தி.மு.க. ஏற்படுத்திவருகிறது. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இடம்பெறும் கூட்டணியில் திராவிடத்திற்கும், தேசியத்துக்கும் எதிரான சீமான் கட்சி சேராது. அப்படி சேர்ந்தால் அ.தி.மு.க.விட மிருந்து ‘மொழி வழி’ சிறுபான்மையினரின் வாக்குகளும், சீமானிடமிருந்து ‘தமிழ் தேசிய’ வாக்குகளும் காணாமல் போய்விடும் என இரு கட்சிகளிலும் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது.
விஜய் கட்சியைப் பொறுத்தவரை அ.தி.மு.க. விடம் முன்பு நடத்திய பேச்சுவார்த்தை முறிந்துபோனபிறகு புதிய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி சேர வாய்ப்பில்லை. பா.ஜ.க.வுடன் நல்ல உறவில் இருக்கும் பா.ம.க. அந்த கூட்டணியை விட்டு விலகுகிறது. தற்போதைய சூழலில் தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தி.மு.க.வுடன் கைகோர்க்க வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க. தனது கூட்டணி விசயத்தை இறுதி செய்யாத தால் மாநிலத் தலைவர் மாற்றம் உட்பட எதையும் முடிவு செய்யாமல் காத்திருக் கும் பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்படி அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்னைகள் இருக்கும் போது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு என செய்தி களை கிளப்பி வரு கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள்.
"சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு போன் றவை பா.ம.க.வும் வேல்முருகனும் இணைந்து எழுப்பும் பிரச்னைகள். இந்த இரண் டிலும் கருத்து மாறுபாடுகள் கொண்டது தி.மு.க. இந்நிலையில் ‘த.வா.க. அவுட் -பா.ம.க. இன்’ என்பது எப்படி சாத்தியமாகும்?' என கேள்வி கேட்கிறார்கள் தி.மு.க.வினர்.