என் படங்களை பார்த்துவிட்டு நேரில் மட்டுமல்ல பலமுறை போனில் அழைத்தும் பேசியிருக்கிறார் கலைஞர். ஒவ்வொரு வசனமாகச் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார். சில வசனங்கள் இப்படி இருந்திருக்கலாம், இதைத் தவிர்த்திருக்கலாம், இதைச் சேர்த்திருக்கலாம் என்று கூறுவார். அவர் சொன்ன பிறகுதான் எனக்கே புரியும், அவர் சொன்னதையெல்லாம் செய்திருந்தால் அந்தக் காட்சி இன்னும் அற்புதமாக வந்திருக்கும் என்று. அவர் என் படங்களை மட்டுமல்ல, வேறு சில படங்களைப் பார்த்துவிட்டுக்கூட போன் பண்ணியதுண்டு.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழு தும் அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியம், முதலமைச்சராக இருக்கும்போதும் கலைஞர் அழைப்பதாக, அவரது உதவியாளராக இருந்த சண்முகநாதன் என்னை அழைத்திருக்கிறார்.
"என்னய்யா... எப்படியிருக்கே?'' என விசாரிப்பார் கலைஞர்.
"கை, காலெல்லாம் நடுக்கமா இருக்குப்பா...''
"ஏய்யா... ஜுரமா...''
"இல்ல... திடீர்னு நீங்க பேசணும்னு சொன்னதுனால வந்த நடுக்கம்...''
சிரிப்பார். அப்பொழுது அவர் பார்த்த படத்தைப் பற்றி கேட்பார்.
"படம் பாத்தியா... எப்படியிருக்கு?''
"பார்த்தேம்ப்பா... பரவாயில்ல..''
"அரசியலைப் பத்தி எழுத வேண்டியது தான்... உண்மைய எழுதணும்ல, இஷ்டத்துக்கு எழுதுறானுக.''
"கைத்தட்டல் வாங்கணும்கிறதுக்காகவே எழுதுறாங்கப்பா...''
"உண்மைய எழுதி கைத்தட்டல் வாங்க ணும்யா. நீ எழுதுறதுகூட என்னைப்பத்தி, ஆட்சியப் பத்தி எழுதுற மாதிரி இருக்கும். உன்மேல கூட எனக்கு
என் படங்களை பார்த்துவிட்டு நேரில் மட்டுமல்ல பலமுறை போனில் அழைத்தும் பேசியிருக்கிறார் கலைஞர். ஒவ்வொரு வசனமாகச் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார். சில வசனங்கள் இப்படி இருந்திருக்கலாம், இதைத் தவிர்த்திருக்கலாம், இதைச் சேர்த்திருக்கலாம் என்று கூறுவார். அவர் சொன்ன பிறகுதான் எனக்கே புரியும், அவர் சொன்னதையெல்லாம் செய்திருந்தால் அந்தக் காட்சி இன்னும் அற்புதமாக வந்திருக்கும் என்று. அவர் என் படங்களை மட்டுமல்ல, வேறு சில படங்களைப் பார்த்துவிட்டுக்கூட போன் பண்ணியதுண்டு.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழு தும் அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியம், முதலமைச்சராக இருக்கும்போதும் கலைஞர் அழைப்பதாக, அவரது உதவியாளராக இருந்த சண்முகநாதன் என்னை அழைத்திருக்கிறார்.
"என்னய்யா... எப்படியிருக்கே?'' என விசாரிப்பார் கலைஞர்.
"கை, காலெல்லாம் நடுக்கமா இருக்குப்பா...''
"ஏய்யா... ஜுரமா...''
"இல்ல... திடீர்னு நீங்க பேசணும்னு சொன்னதுனால வந்த நடுக்கம்...''
சிரிப்பார். அப்பொழுது அவர் பார்த்த படத்தைப் பற்றி கேட்பார்.
"படம் பாத்தியா... எப்படியிருக்கு?''
"பார்த்தேம்ப்பா... பரவாயில்ல..''
"அரசியலைப் பத்தி எழுத வேண்டியது தான்... உண்மைய எழுதணும்ல, இஷ்டத்துக்கு எழுதுறானுக.''
"கைத்தட்டல் வாங்கணும்கிறதுக்காகவே எழுதுறாங்கப்பா...''
"உண்மைய எழுதி கைத்தட்டல் வாங்க ணும்யா. நீ எழுதுறதுகூட என்னைப்பத்தி, ஆட்சியப் பத்தி எழுதுற மாதிரி இருக்கும். உன்மேல கூட எனக்கு சில நேரங்கள்ல வருத் தம் வந்திருக்கு. .. கோபம் கூட வந்திருக்கு. அதை உன்கிட்டயே நான் சொல்லியிருக் கேன். ஆனா நீ பொய்யா எழுதுறது இல்ல.''
"ஆமாப்பா...''
"கைத்தட்டல் வாங்குறதுக்காக நீயும் அவங்கள மாதிரியெல்லாம் எழுதாத'' என்பார்.
என் மீது அவர் வைத்திருந்த நம்பிக் கைக்கும், அவர் எடுத்துக்கொண்ட உரிமைக் கும் என்ன அளவுகோல், மதிப்பு என்று என்னால் இன்றுவரை கணக்கிட முடிய வில்லை. நான் இதைச் சொல்வதற்குக் கார ணம், பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந் தவர், ஒரு இயக்கத்தின் தலைவர், அவரே என்னிடம் தொடர்புகொண்டு தொலைபேசி யில் பேசுவார். நான் அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்து, சண்முகநாதன் அவர்களைத் தொடர்புகொண்டால் உடனே பேசுவார். வேலையாக இருக்கும்பட்சத்தில் சிறிதுநேரம் கழித்து தொடர்புகொண்டு பேசுவார். அப்படிப்பட்ட இடத்தில் என்னை வைத்திருந்தார்.
அந்த மதிப்பு, மரியாதையை எல்லாம் விட்டுவிட்டு வேறு இயக்கத்தில் போய் நான் சேர்ந்தேன். போலீஸ் கமிஷனராக இருந்தவர் ஹெட்கான்ஸ்டபிள் ஆனால் எப்படி இருக்கும்? அப்படித்தான் சில நேரங்களில் நான் நினைத்துக்கொள்வேன்.
கலைஞர் மட்டுமல்ல... இன்றைய முதல்வர், தளபதி அவருடைய பிறந்தநாளில் நேரில் சென்று வாழ்த்துவேன். அப்போது அவர் இளைஞர் அணி செயலாளர். நான் தேனாம்பேட்டையில் இருந் தேன். அவர் போட்டியிட்ட ஆயிரம்விளக்கு தொகுதியில் நான் ஒரு வாக்காளன். ஓட்டுப் போடு கிற ஒருவனாக மட்டுமல்ல, அவர் வெற்றிபெற வேண்டும் என்று களத்தில் நின்று பணியாற்றியவர் களுக்கு, தேர்தல் அன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றியவர்களுக்கு பல உதவிகளைச் செய்வேன். என் உடன்பிறந்த தம்பி... கல்லூரி மாணவன் பாக்கெட்டில் கத்தி வைத்துக்கொண்டு அவருடைய வெற்றிக்காக வேலை செய்தான்.
அந்த விஷயம் அவனுடைய நண்பர்கள் மூலம் எனக்குத் தெரிந்து, நான் கேட்டதற்கு, "தளபதிய எதிர்த்து வேலை செய்யற சிலபேரு கத்தியோட அலையறானுக. அவங்களால ஏதாவது பிரச்சினை வந்தா சமாளிக்கத்தான் நான் கத்தி வச்சிருக்கேன்''னு சொன்னான்.
தளபதி என்றால் அவ்வளவு வேகமாக இருந்த காலம். தளபதியும் என்னைப் பார்த்தால் அவ்வளவு அன்பாகப் பேசுவார். கலைஞர் வீட்டு விசேஷங்களுக் கான அழைப்பிதழை சகோதரர் மு.க.தமிழரசு என் வீட்டிற்கு வந்து கொடுத்திருக்கிறார். செல்வி அக்கா வந்து கொடுத்திருக்கிறார். அப்படி யெல்லாம் என்னை மதிப்புமிக்க வனாக வைத்திருந்தவர்களை விட்டுவிட்டு நான் திசைமாறிப் போனேன்.
போன இடத்தில் அந்த மரி யாதை கிடைத்ததா? அ.இ.அ.தி. மு.க.வில் எப்படிச் சேர்ந்தேன்?
அதற்கு காரணம் நடிகர் மன்சூர் அலிகான்.
மன்சூரலிகான் ஒரு மிகச்சிறந்த கலைஞன். மிகச்சிறந்த நடிகன் மட்டுமல்ல, மிகச்சிறந்த கற்பனாவாதி. கஷ்டப்படும் சின்ன நடிகர்களுக்கு உதவுகிற குணம். வெளியே தெரியாமல் அவன் செய்கிற உதவிகள் ஏராளம்.
அவன் என்று சொல்வதற்கான காரணம், என்னை விட வயதில் இளையவன். எனக்கு தம்பி மாதிரி. உன்னை "அவன்' என்று சொல்லித்தான் தொடரில் எழுதப்போகிறேன் என்று போன் பண்ணி சொல்லிவிட்டுத்தான் எழுதுகிறேன்.
மன்சூரலிகான் பல வகைகளில் பலசாலி, திறமைசாலி. அவனிடம் இருக்கும் ஏதோ ஒரு பலவீனம்... அதை பலவீனம் என்று சொல்வதை விட நேரத்திற்கு ஏற்றாற்போல அவன் எடுக்கும் முடிவு... அவனுடைய அரசியல் பயணம்... எந்தக் கட்சியிலும் உறுதியாக இருக்காமல் பல கட்சிகள் மாறியது என்றுகூடச் சொல்ல லாம். இன்னும் மிக உயரத்திற்கு சினிமாவிலும், அரசியலிலும் போகவேண்டியவன், ஏதோ ஒரு இடத்தில் தேங்கி நிற்பதுபோல் நின்றுவிட்டான். அதற்குக்காரணம் ஒளிவுமறைவு இல்லாமல் பேசும் குணம். தவறு என்றால் கொதித்தெழுகின்ற வேகம்... அந்த வேகம்தான் அவனுடைய வளர்ச்சி வேகத்திற்கே தடையாக இருக்கிறது.
ஆனால் அரசியல் பற்றிய அக்கறை, நல்ல அரசியல், நல்ல கட்சி, நல்ல ஆட்சி என்ற சிந்தனை மன்சூரலிகானிடம் நிறையவே இருக்கிறது. நடிகனாக வேண்டும் என்ற வெறியோடு மன்சூரலிகான் அலைந்துகொண்டிருந்த நேரம், உதவி இயக்குனர் என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
மன்சூரலிகான் தினம், தினம் எனது வீட்டுக்கு வருவான். அவன் வந்துவிட்டுப் போவதை தெருவில் இருப்பவர்கள் பார்த்துவிட்டு, "ஆளே ஒரு தினுசா இருக்கானே? அவன் வந்து நிற்கிறது, நடக்கிறது, பேசுறது எல்லாமே ஒரு ஸ்டைலா இருக்கு சார்' என்று என்னிடம் சொல்வார்கள்.
நான் அவனை அழைத்துச் சென்று இப்ராகிம் ராவுத்தரிடம் அறிமுகம் செய்துவைத்தேன். அவர் விஜயகாந்த், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இருவரிடம் சம்மதம் வாங்கி னார். "கேப்டன் பிரபாகரன்' படத்திற்கு அவனை வில்லனாக முடிவு செய்தோம்.
இரண்டு, மூன்று நாட்கள் கழித்து பி.வாசு சார் டைரக்ஷனில் சத்யராஜ் சார் நடித்த "வேலை கிடைச்சிருச்சு' படம் ப்ரிவியூ ஷோவுக்கு இப்ராகிம் ராவுத்தரும், நானும் போயிருந்தோம். அதில் வில்லனின் அடியாட்களில் ஒருவனாக மன்சூரலிகான் நடித்திருந்தான். எங்களிடம் "இதுவரை எந்தப் படத்திலும் நடிக்கவில்லை' என்று சொல்லியிருந்தான். இப்ராகிம் ராவுத்தர் ஷாக்காகிவிட்டார்.
"என்னண்ணே வில்லன் கேரக்டருக்கு ஒரு புதுமுகத்தை போடணும்னு நினைச்சிருந்தோம். படத்துல அம்ஜத்கான் மாதிரி இருக்கணும்னு நினைச்சோம். இவன் இப்படி ஒரு சின்ன வேஷத்துல, அடியாள் கேரக்டர்ல நடிச்சத நம்மகிட்ட சொல்லவே இல்லியே?'' என்றார்.
என்ன பதில் சொல்வதென்று எனக்கும் தெரியவில்லை.
மறுநாள் மாலை. பாம்குரோவ் ஹோட்டலில் மனோ பாலா சார் இயக்கத்தில் ராம்கி ஹீரோவாக நடிக்கும் "வெற்றிப் படிகள்' படத்தின் கதை விவாதத்தில் நான் இருந்தேன். என்னைப் பார்க்க மன்சூரலிகான் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அறையைவிட்டு வெளியே வந்தேன்.
கலங்கிய கண்களோடு நின்றிருந்தான்.
"என்ன மன்சூர்?'' என்றேன்.
"ராவுத்தர் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு. உன்னை புதுமுகமா அறிமுகம் செய்யலாம்னு நினைச்சேன். எங்களை நீ ஏமாத்திட்டேன்னு கன்னா பின்னான்னு கத்துறாரு'' என்று அழும் குரலில் தழுதழுத்தவாறு சொன்னான்.
மன்சூரலிகானை மறுநாள் காலை ராஜாபாதர் தெரு ஆபீசிற்கு வரச்சொன்னேன்.
(வளரும்...)