தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாக 71 புதிய மாவட்டத் தலைவர்கள் பட்டியலை, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் ஜோடங்கர் வெளியிட்டுள்ளார், இதில், தற்போது கடலூர் தெற்கு மாவட்டத் தலைவராக சித்தார்த்தன், மத்திய மாவட்டத் தலைவராக ரங்கமணி, மேற்கு மாவட்டத் தலைவராக லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் லாவண்யா தலைவராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காரணம், லாவண்யா 2022-ல் தான் கட்சிக்குள் என்ட்ரி. அதன்பிறகு மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவியாக இருந்துள்ளார்.
"லாவண்யா, மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் சரியாக செயல்படாததால் இரண்டரை மாதத்தில் அவரிடமிருந்த பதவியை மாற்றி விட்டனர். ஆனால் தற்போது அவருக்கு மாவட்டத் தலைவர் பதவியை வழங்கியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடமுள்ள பதவியை பறிக்க வேண்டும்'' என்று கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பெரியசாமி, தற்போதைய மாவட்ட பொருளாளர்
தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாக 71 புதிய மாவட்டத் தலைவர்கள் பட்டியலை, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் ஜோடங்கர் வெளியிட்டுள்ளார், இதில், தற்போது கடலூர் தெற்கு மாவட்டத் தலைவராக சித்தார்த்தன், மத்திய மாவட்டத் தலைவராக ரங்கமணி, மேற்கு மாவட்டத் தலைவராக லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் லாவண்யா தலைவராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காரணம், லாவண்யா 2022-ல் தான் கட்சிக்குள் என்ட்ரி. அதன்பிறகு மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவியாக இருந்துள்ளார்.
"லாவண்யா, மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் சரியாக செயல்படாததால் இரண்டரை மாதத்தில் அவரிடமிருந்த பதவியை மாற்றி விட்டனர். ஆனால் தற்போது அவருக்கு மாவட்டத் தலைவர் பதவியை வழங்கியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடமுள்ள பதவியை பறிக்க வேண்டும்'' என்று கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பெரியசாமி, தற்போதைய மாவட்ட பொருளாளர் ராஜன், மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கூட்டாக விருத்தாச்சலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடி கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக, கட்சியின் தலைமை அலுவல கத்திலும் போராடுவோம் என்கிறார்கள்.
"கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய மாநிலத் தலைவர் அழகிரியின் ஆதர வாளரான நெய்வேலி தொகுதி யைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனை மாவட்டத் தலைவராக்கி, அவ ருக்கு விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தது கட்சி. அவரை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற வைத்தோம். ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தா சலம் தொகுதியை சேர்ந்தவர் களுக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தேர் தலில் வேலை செய்யமாட்டோம்'' என்றும் தெரிவித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/cuddalore-congress1-2026-02-02-16-52-19.jpg)
"கட்சியின் தேசியத் தலைமை, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற அடிப்படையில் லாவண்யாவை தேர்வுசெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, எந்த கட்சியென்றாலும், இங்கு பெருமையான்மை யாக வாழும் வன்னியர், தலித் சமூகத்தினருக்கே முன்னுரிமை கொடுக்கும். மத்திய மாவட்டத் தலைவர் ரங்கமணி யாதவர் சமூகம். தெற்கு மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் வன்னியர் சமூகம். மேற்கு மாவட்டத் தலைவர் லாவண்யா நாயுடு சமூகம். இவருக்கு பதிலாக பட்டியலினத்தவருக்கு தான் வாய்ப்பளித்திருக்க வேண்டும்.
மேலும், கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக இருந்து மறைந்த சுவாமி சகஜானந்தா, இளைய பெருமாள், வள்ளல் பெருமான் ஆகியோர் சிறப்பாக கட்சிப்பணி செய்தார்கள். அவர் களுக்குப் பிறகு சுமார் 20 ஆண்டு களாக தலித் சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிக்காமல் புறக் கணித்து வருகிறார்கள். மாவட்டத் தலைவர் தேர்வுப் பட்டியலில் 21 பேர் தலைவர் பதவிக்கு விண் ணப்பித்துள்ளனர் அவர்களில் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பட்டியலினத்தைச் சேர்ந்த காமராஜ், வன்னியர் சமூகத்தை சேர்ந்த ராஜி ஆகியோரும் இருந்தனர். இறுதியில் லாவண்யா பெயரை தேர்வு செய்துள்ளதாகக் கூறுகின்றனர் கட்சி முன்னோடிகள். லாவண்யாவுக்கு கடலூர் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை மீறி, முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரியின் செல்வாக்கே காரணமாக இருந்துள்ளது'' என்கிறார்கள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்.
தலித் மக்களுக்காக சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறங்கிப் போராடி வருகிறார்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? எனவே பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்கு மாவட்டத் தலைவர் பதவி வழங்க வேண்டும். அப்படி வழங்கவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக, மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் தெரி வித்துள்ளார். "ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தவர் களை மாற்றம் செய்யப்போவதாக கட்சித்தலைமை அறிவித்தது, அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், கட்சிக்காக உழைத்து சொத்தை இழந்தவர்கள் ஏராளம் உள்ளனர். அவர்களுக்கு மாநில அளவில் பதவியும், சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பும் வழங்க வேண்டும்'' என்கிறார்கள் கட்சியின் முன்னோடிகள்.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி, மாவட்ட தலைவர் லாவண்யா பதவி யேற்பு நிகழ்ச்சி விருத்தாசலம் காங்கிரஸ் கட்சி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, மாநில தலைவர் ஹசீனா சையத் ஆகியோர் வருகை புரிந்தனர். அப்போது மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அரசாயி, அல்கா லம்பாவுக்கும், ஹசீனா சையத்துக்கும் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிக்கச் சென்றார். அப்போது லாவண்யா ஆதரவாளர்களோ, "இது மகிளா காங்கிரஸ் நிகழ்ச்சியல்ல, காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி. இப்போது சால்வை போடக்கூடாது'' என்று தடுத் துள்ளனர். இதில் நடந்த தள்ளுமுள்ளு களுக்கிடையே லாவண்யாவின் பதவியேற்பு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், லாவண்யா பதவியை மாற்றக்கோரி 50க்கும் மேற்பட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்திக்க சென்னைக்கு சென்றுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் தலைவலியையும், திருகுவலியையும் தேடிக்கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சித் தலைமை!
-எஸ்.பி.எஸ்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us