க்கீரன் ஆசிரியரை சிறையில் அடைக்கவும், நக்கீரனை முழுமையாக முடக்கவும் எடப்பாடி அரசுடன் இணைந்து தாங்கள் போட்ட திட் டம், நீதிபதி கோபிநாத் உத்தரவால் தகர்ந்ததையும், நீர்த்துப் போனதையும், பத்திரிகைச் சுதந்திரத்தை பாதுகாக்க நக்கீரனுக்கு பக்கபலமாக ஒட்டுமொத்த ஊடகங்கள் துணை நின்றதையும் ராஜ்பவனால் ஜீரணிக்க முடியவில்லை. கடுங் கோபத்தை வெளிப் படுத்துகிறது.

Advertisment

governorஆத்திரத்துடன் நடவடிக்கைகளைத் தொடரும் ராஜ்பவன், "நக்கீரன் ஆசிரியர் கைது விவகாரத்தை சரிவர கையாளவில்லை' எனச் சொல்லி, "அதில் சம் பந்தப்பட்டிருக்கும் அத்தனை அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும்' என முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறது. இதனையடுத்து, அரசுக்கும் அதிகாரிகளுக்கு மிடையே முரண்பாடுகள் அதிகரித்திருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்களில் எதி ரொலிக்கிறது.

கடந்த நான்கு நாட்களாக ராஜ்பவனில் பல்வேறு ஆலோசனைகள் நடந்து முடிந்திருக்கின்றன. இது குறித்து நாம் விசாரித்தபோது, ""நீதிபதி கோபிநாத்தின் தீர்ப்பினை பல கோணங்களில் அலசியது கவர்னர் மாளிகை. குறிப்பாக, கவர்னரின் செயலாளர் ராஜகோபால், வழக் கறிஞர் ரமேஷ் உட்பட தனக்கு நெருக்கமான சட்டவல்லுநர்கள் பலரிடமும் விவாதித்திருக் கிறார். அப்போது, "நீதிமன்றத்தின் முடிவு மிகச் சரியானது. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதில் நீதிபதி கவனம் செலுத்தி யிருக்கிறார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் அங்கேயும் காவல்துறைதான் கேள்விக்குள்ளாக்கப்படும், பலனிருக்காது. ஜனாதிபதி மற்றும் கவர்னரின் பதவிக்காக கொடுக்கப்பட்ட சிறப்பு சட்டத்தை (செக்சன் 124) இந்த விவகாரத்தில் பயன்படுத்தியது தவறு' என்பதாகக் கருத்து தெரிவித்திருக் கிறார்கள். இது, கவர்னருக்கும் தெரிவிக்கப் பட்டது. சட்ட வல்லுநர்களின் கருத்தையறிந்து கவர்னர் பன்வாரிலாலும் ராஜகோபாலும் அப்-செட்டாகியிருக்கிறார்கள்.

IAS-officers

Advertisment

இந்த நிலையில், "ராஜ்பவனின் புகாரை போலீஸ் கமிஷனர் முறையாக அணுக வில்லை. போலீஸ் அதிகாரிகள் சரிவர கையாளாததால்தான் பிரச்சனையே. சி.எம்.மும் (எடப்பாடி பழனிச்சாமி) சரியான வழிகாட்டுதலை கமிஷனருக்கு சொல்ல வில்லை' என்கிற ராஜ்பவனின் கோபம் எடப்பாடி பழனிச்சாமி மீது திரும் பியது. உடனே, அவரை தொடர்பு கொண்டு , "நக்கீரன் கோபால் சிந்தா திரிப்பேட்டை காவல்நிலையத்தில் இருப்பது மீடியாக்களுக்கு எப்படித் தெரிந்தது? வைகோவை ஆரம்பத்தி லேயே தடுத்து அவரை அப்புறப் படுத்தாமல் போலீஸ் ஏன் தாமதித்தது? ஹாஸ்பிட்டலில் நக்கீரன் கோபாலை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச அனுமதித்தது யார்? அவர்கள் இருவரும் பேசுவது போன்ற புகைப் படம் வெளியானது எப்படி? நீதிமன்ற அறைக்குள் பத்திரிகையாளர் என்.ராம்மை அனுமதித்தது யார்? எங்களுக்கு எதிராக கேம் ஆடுகிறீர் களா?' என்கிற ரீதியில் எடப்பாடி பழனிச்சாமியை துளைத்தெடுத்த ராஜ்பவன், "ஒரு புகாரை சரியான கோணத்தில் கையாளத் தெரியாத போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுங்கள். கமிஷனரின் இடமாற்றமும் அதில் இருக்க வேண்டும்' என கட்டளையிட்டிருக்கிறது. இந்த நிலையில்தான்... நக்கீரன் விவகாரம் பற்றி ஒரு விளக்கமளிக்க முடிவு செய்தது கவர்னர் மாளிகை'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 3 டெபுடி கமிஷனர்கள், அவர்களுக்கு கீழுள்ள போலீஸ் அதிகாரிகள் என பலரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது ராஜ்பவன். அரசின் உயரதிகாரிகள் மூலமாகவும் எடப்பாடிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ராஜ்பவனின் நெருக்கடியால் மூடுஅவுட்டான முதல்வர் எடப்பாடி, மூத்த அமைச்சர்களிடம் விவாதித்துள்ளார். அதில், ""அவர்களின் (ராஜ்பவன்) கெடுபிடிகளுக்கு வளைந்து கொடுப்பது எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு நீங்கள் முகம் கொடுக்க வேண்டியிருக்கும்'' என தெரிவித்ததுடன், ராஜ்பவனைப் பற்றி மாறுபட்ட பல கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி மற்றும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரிடமும் கலந்தாலோசித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

இது குறித்து, தலைமைச் செயலகத்தில் விசாரித்தபோது, ""ராஜ்பவன் கொடுத்த புகாரை முறைப்படி பதிவு செய்து போலீஸ் வழக்கு போட்டது. ஆனால், போடப்பட்ட செக்சன் தவறு என்பதால் நீதிமன்றம் அவரை (நக்கீரன் ஆசிரியர் ) விடுவித்துள்ளது. இந்த செக்ஷனில் வழக்குப் பதிவு செய்யச் சொல்லி புகார் கொடுத்ததே கவர்னர் மாளிகை தான். இதில் நம்முடைய போலீஸ் அதிகாரிகளின் தவறு எங்கிருக்கிறது? இதெல்லாம் உணராமல் ஏதோ அதிகாரிகள் தவறு செய்ததுபோல "அவர்களை மாற்றுங்கள்' என்றால் என்ன செய்வது? என உயரதிகாரிகளிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் முதல்வர்.

உயரதிகாரிகளோ, "ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்றவேண்டி ஏற்கனவே விவாதித்திருக்கிறோம். அதனை செயல்படுத்துவதுபோல இதனையும் செய்திடலாம். எதற்கு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?' என தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், ராஜ்பவனின் எதிர் பார்ப்புகளுக்கேற்ப அதிகாரிகளை மாற்ற எடப்பாடி ஆமோதித்த நிலையில், மாற்றம் தொடர்பாக கமிஷனர் ஏ.கே.வி.யை தொடர்புகொண்டு பேசி யுள்ளார் முதல்வர்.

com.ak_.vishwanathஅப்போது, "பொதுவாக புகார் கொடுப்பவர்கள் செக்ஷனை குறிப் பிட்டெல்லாம் புகார் தெரிவிக்கமாட்டார்கள். என்ன செக்ஷன்ங்கிறதை போலீஸ்தான் முடிவு செய்யும். ஆனால், ராஜ்பவனிலிருந்து வந்த புகாரில் எந்த செக்ஷனில் (124) வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் என்ன செக்ஷன் குறிப்பிடப்பட்டிருந்ததோ அதைத்தான் பதிவு செய்துள்ளது போலீஸ். கொடுக்கப்பட்ட புகாரின் தன்மைக்கு இந்த செக்ஷன் பொருந்தாதுங்கிறது போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரியும். ராஜ்பவன் செய்த தவறுக்கு போலீஸ் அதிகாரிகள்தான் கோர்ட்டில் வாங்கிக் கட்டிக்கொள் கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை. அவர்களை குற்றம் சாட்டுவது சரி அல்ல' என எடப் பாடியிடம் ஏ.கே.வி. பதிலளிக்க, அதனை மறுத்துப் பேசவில்லை முதல்வர்.

"கமிஷனர் பதவியி லிருந்து என்னை மாற்றி விடுங்கள்' என எடப்பாடியிடம் ஏற்கனவே ஏ.கே.வி. கோரிக்கை வைத்திருக்கும் நிலையில்... தற்போது ராஜ்பவனின் அழுத்தங்களுக்குப் பணிந்து தன்னையும் தனக்குக் கீழுள்ள அதிகாரிகளையும் எடப்பாடி அரசு மாற்றத் துடிப்பதைத்தான் ஏ.கே.வி.யால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் திடீரென மூன்று நாள் லீவ் எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பியவர் திங்கள்கிழமைதான் சென்னை திரும்பினார்'' ‘என்கின்றனர் உள்துறை அதி காரிகள்.

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம், சூப்பர் முதல்வராக செயல்பட துடிக்கும் ராஜ்பவனுக்கு அடங்கிப் போவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

-இரா.இளையசெல்வன்

படங்கள் : ஸ்டாலின்