Advertisment

மேயரை மாற்று! நெல்லை ஆளும்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி!

ss

மேயரை மாற்றவேண்டும் என்று கவுன்சிலர்கள் குரலை உயர்த்தியதாக வந்த சேதி நெல்லை மாநகரைத் தகிக்க வைத்திருக்கிறது.

Advertisment

தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம். "கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நெல்லை மாநகராட்சிக்கான வார்டு கவுன்சிலர் பதவிக்கு தனக்கு வேண்டப்பட்ட, தன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்களையே போட்டியிட அனுமதித்தார் மா.செ. அப்துல்வகாப்.

ff

இந்த சமயத்தில் குவாரி அதிபரான ராஜூ என்ற கவுன்சிலரை மேயராக்குவதாகத் தெரிவித்து அதற்காக தேர்தல் செலவு என்ற வகையில் மா.செ. தரப்பில் ராஜூவிடமிருந்து பெருந்தொகை பெறப்பட்டிருக்கிற தாம். நெல்லை மாநகர் பிள்ளை சமூகம் சார்ந்தவர்களை மெஜாரிட்டியாகக் கொண்டது. எனவே மேயர் பதவி பிள்ளை சமூகம் சார்ந்தவருக்கே தரப்படவேண்டும் என்ற குரல்கள் கட்சித் தலைமை வரை எதிரொலித்திருக்கிறது.

நிலவரத்தையறிந்து தலைமையும் பிள்ளைமார் சமூகம் சார்ந்த சரவணனை மேயராக்கும்படி மா.செ. அப்துல் வகாப்பிற்குத் தெரிவிக்க, சரவணன் மேயராக்கப் பட்டிருக்கிறார். ஆனாலும், தேர்தல் செலவு என்று அவ ரிடமிருந்தும் மா.செ. தரப்பினர் கணி

மேயரை மாற்றவேண்டும் என்று கவுன்சிலர்கள் குரலை உயர்த்தியதாக வந்த சேதி நெல்லை மாநகரைத் தகிக்க வைத்திருக்கிறது.

Advertisment

தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம். "கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நெல்லை மாநகராட்சிக்கான வார்டு கவுன்சிலர் பதவிக்கு தனக்கு வேண்டப்பட்ட, தன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்களையே போட்டியிட அனுமதித்தார் மா.செ. அப்துல்வகாப்.

ff

இந்த சமயத்தில் குவாரி அதிபரான ராஜூ என்ற கவுன்சிலரை மேயராக்குவதாகத் தெரிவித்து அதற்காக தேர்தல் செலவு என்ற வகையில் மா.செ. தரப்பில் ராஜூவிடமிருந்து பெருந்தொகை பெறப்பட்டிருக்கிற தாம். நெல்லை மாநகர் பிள்ளை சமூகம் சார்ந்தவர்களை மெஜாரிட்டியாகக் கொண்டது. எனவே மேயர் பதவி பிள்ளை சமூகம் சார்ந்தவருக்கே தரப்படவேண்டும் என்ற குரல்கள் கட்சித் தலைமை வரை எதிரொலித்திருக்கிறது.

நிலவரத்தையறிந்து தலைமையும் பிள்ளைமார் சமூகம் சார்ந்த சரவணனை மேயராக்கும்படி மா.செ. அப்துல் வகாப்பிற்குத் தெரிவிக்க, சரவணன் மேயராக்கப் பட்டிருக்கிறார். ஆனாலும், தேர்தல் செலவு என்று அவ ரிடமிருந்தும் மா.செ. தரப்பினர் கணிசமான தொகை யைப் பெற, முக்கால்வாசித் தொகையைக் கொடுத்த சரவணன், மீதத் தொகைக்கு ஈடாக அவரின் வீட்டுப் பத்திரத்தை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் மேயர் பதவி தரப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்ட கவுன்சிலர் ராஜூவை துணை மேயர் பொறுப்புடன், மாநகராட்சியில் அப்பாயிண்ட்மெண்ட் கமிட்டி, வரி நிர்ணயக் குழு போன்ற கமிட்டி கள் அமைக்கும்போது, அதில் அப்பாயிண்ட் மெண்ட் கமிட்டித் தலைவர் பொறுப்பு தருவதாகச் சொல்லி சமாளித்திருக்கிறார்கள்.

Advertisment

dd

கமிட்டித் தலைவர்கள் நியமனம் செய்யப்படுகிற நேரத்தில், அப்பாயிண்ட் மெண்ட் கமிட்டி, வரி நிர்ணயம் தொடர்பான கமிட்டி களுக்கு தனது தரப்பு கவுன்சிலர்களே நிய மிக்கப்பட வேண்டும் என்று மேயர் சர வணன் முன்னிற்க, தனது தரப்பிலான கவுன்சிலர்களையே அனைத்திற்கும் நியமிக்க வேண் டும் என்று மா.செ. தரப்பு முட்டுக் கொடுக்க, அதுவரை நல்ல புரிதலிலிருந்த மேயர் சரவணன், மா.செ. அப்துல் வகாப்பின் நட்பில் உரசல் ஏற்பட்டிருக்கிறது.

மாநகராட்சிக்கு வரும் காண்ட்ராக்ட்கள் அனைத்தும் தனது கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டுமென மேயர் தரப்பும், தனக்கே வர வேண்டுமென மா.செ. தரப்பும் மல்லுக்கட்டியிருக் கிறது. இந்தச் சூழலில் இருவருக்குள் நடந்த பஞ்சாயத்தில் ஆளுக்கு சரிபாதி என்று முடிவாகியிருக்கிறதாம். இப்படியாக, அப்துல் வகாப், சரவணன் இருவருக்குமிடையேயான நட்பில் ஓட்டை விழுந்திருக்கிறது. மேலும் பாக்கித் தொகைக்காக தனது இல்லப்பத்திரம் அப்துல் வகாப் தரப்புக்குச் சென்றதுவேறு, மேயர் சரவணனை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறதாம்.

அ.தி.மு.க. ஆட்சியில் மேலப்பாளையத்தில் தூர்ந்துபோன சாலையை சீரமைக்க விடப்பட்ட டெண்டர் நிலுவையிலிருந்திருக் கிறது. இரண்டு வருடங்கள் கழித்து முதல்வர் நெல்லை ஆய்வுக்கு வருவதற்குள் சாலை யமைக்க அந்த காண்ட்ராக்ட ரிடம் ஏற்பாடு செய்திருக்கிறார் மாநகராட்சி கமிசனரான சிவ கிருஷ்ணமூர்த்தி. தற்போதைய விலைவாசியில் பழைய டெண் டர் விலையில் அமைக்க இயலாது என்று தெரிவித்த காண்ட்ராக்டரிடம் காலநிலையைக் கருதி சலுகை களை அனுமதித்து சாலையமைக்க கமிசனர் ஏற்பாடு செய்ய, அந்தக் காண்ட்ராக்டரிடம் எம்.எல்.ஏ. தரப்பினர் கொசுறுகளைக் கேட்க... அது பிரச்சினையாகி கட்சித் தலைமை வரை சென்றிருக்கிறது.

dd

இதுபோன்ற விவகாரங்கள் புகைய, கட்சித் தலைமை இதனை விசாரிக்கும்பொருட்டு குமரி மாவட்ட கட்சியின் முக்கிய புள்ளியை அனுப்பியிருக்கிறது. அவரும் ஏ டூ இஸட் விசாரித்து தலைமையிடம் தெரிவித்திருக் கிறார். இதையடுத்தே கட்சித் தலைமை எம்.எல்.ஏ.வை வரவழைத்து கடிந்து, மேயர் சரவணனுக்கான வழிவகைளை நேர் செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறது..

இத்தனைக்கும் காரணம் மேயர் சரவணன் என்ற முடிவுக்கு வந்த எம்.எல்.ஏ., தனது ஆதரவு கவுன்சிலர்களை அவருக்கு எதிராக மாமன்றக் கூட்டத்தில் பேசவைத்தும், அவரை மேயர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு துணை மேயரை மேயராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாநகரில் பேச்சுக்கள் ஓடியிருக்கின்றன. அதனையடுத்தே கடந்த 3-ஆம் தேதியன்று நடந்த மாமன்றக் கூட்டத்தில் எதிரொலிப்பு.

அதில் பேசிய மா.செ.வின் ஆதரவு கவுன்சிலர்களான சுதாமூர்த்தி, கோகிலவாணி, அஜய் உள்ளிட்ட மூவரும், மேயர் முன்னி லையில், "எங்களின் வார்டுகளில் சாலைகள் போடப்படவில்லை. உங்களின் வார்டுப் பணி களையே மேற்கொள்ளுகிறீர்கள். எங்களின் வார்டு கள் புறக்கணிக்கப்படுகின்றன'' என்று குரலை உயர்த்தி ஆவேசமாகப் பேசியது பரபரப்பாகி யிருக்கிறது. 16 கவுன்சிலர்கள் சேர்ந்து மேயரை மாற்றவேண் டும் என்று கோரிக்கை மனு கொடுத்ததாகவும் பேச்சு.

கவுன்சிலர்களின் கடிதம் குறித்துக் கேட்பதற்காக மாநகர கமிசனர் சிவகிருஷ்ணமூர்த்தி யைத் தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. நுண்ணறி வுப் பிரிவு நண்பர் ஒருவரிடம் பேசியபோது, “மேயரை மாற்றச் சொல்லி கவுன்சிலர்கள் யாரும் கடிதம் கொடுக்கவில்லை, அது பொய்யான தகவல்” என்றார்.

மேயர் சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "அன்றைக்கு சுதாமூர்த்தி, கோகில வாணி, அஜய் மூன்று கவுன்சிலர்களும் அப்படிப் பேசினார்கள். தலைமை சொன்னதற்கேற்ப அவர்கள் வந்து என்னிடம் சமாதானமாக பேசிச் சென்றனர். கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தது பொய்யான தகவல். எனக்கும் எம்.எல்.ஏ.வுக்குமான பிரச்சினை முடிந்துவிட்டது''’என்றார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. அப்துல் வகாப்பின் கருத்தறியும் பொருட்டு நாம் அவரைப் பலமுறை தொடர்புகொண்டும் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவரது விளக்கம் கிடைப்பின் அதனைப் பிரசுரம் செய்யத் தயாராக உள்ளோம்.

-பி.சிவன்

படங்கள்:ப.இராம்குமார்

nkn110123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe