மதுரை மேயரை மாற்று! தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க்கொடி!

ff

"இப்படி ஒரு சம்பவம் மதுரை தி.மு.க. வரலாற்றில் நடந்த தில்லை' என ஆதங்கப்படு கின்றனர் அதன் தொண்டர் களும் சீனியர் நிர்வாகிகளும்.

அப்படி என்ன நடந்தது?

கடந்த 13-ஆம் தேதி மதுரை மாவட்டத்தின் மூன்று மாவட்டச் செயலாளர்களான மூர்த்தி, கோ.தளபதி, மணிமாறன் ஆகியோர் ஒன்றாக இணைந்து, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களின் செயல்பாடு கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வேலைகள் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தினர். எந்த பத்திரிகைக்கும் அழைப்பு இல்லை. யாரும் படமெடுக்கக்கூடாது என்ற கண்டிஷனோடு கூட்டம் நடைபெற்றது.

mm

இதில் பங்குகொள்ள அனைவரும் வந்திருந்த நிலையில், மேயர் இந்திராணி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் வராமல் தவிர்த்ததால் அனைவரையும் கொந்தளிக்க வைத்து, அவர்களுக்கு எதிராகத் தீர்மானம் போடுமளவுக்குச் சென்றுள்ளது.

கூட்டத்தில் பேசிய வேலுச்சாமி, “"தி.மு.க. கட்டுக் கோப்பான அதன் கட்டமைப்பால்தான் இவ்வளவு காலம் அசைக்கமுடியாத இயக்கமாக இருந்துவருகிறது. நான் 15 வருடமாக மாவட்டச் செயலாளராக இருந்துள்ளேன். அப்போ தெல்லாம் மாநகராட்சியில் என்ன தீர்மானம் போடவேண்டு மென்றாலும் முதலில் மாவட்டச் செயலாளருக்கு அதன் பிரதியை அனுப்பி அனுமதிபெறவேண்டும். தி.மு.க.வைப் பொறுத்தவரை வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர் இவர்களெல்லாம் இணைந்தது. மாவட்டச் செயலாளருக்கே மாவட்டத்தில் கட்சியை நடத்தும் அனைத்து அதிகாரமும் உள்ளது. அமைச்சராக இருந் தாலும் கட்சி நிகழ்ச்சி அல்லது மக்கள் நிகழ்ச்சி என்றால் மாவட்டச் செயலாளருக்குக் கட் டுப்பட்டுதான் செயல்படமுடியும்.

மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வார்டிலும் எந்தவித கட்சி நிகழ்ச்சிகள், மக்கள்

மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வார்டிலும் எந்தவித கட்சி நிகழ்ச்சிகள், மக்கள் பணிகள் நடத்தவேண்டுமென்றாலும் மாவட்டச் செயலாளர் அனுமதி யின்றி செய்யமுடியாது. அதே நேரத்தில், மாவட்டச் செயலாளரே வார்டு பகுதிக்கு செல்லவேண்டு மென்றாலும், அந்தப் பகுதி வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளருக்கு தகவல் கொடுத்த பின்புதான் அங்கு செல்லமுடியும். அந்த அளவுக்கு ஒரு வலைப் பின்னலான அடுக்குமுறை அமைப் புடன் கட்சியின் செயல்பாடுகள் உள்ளன. அப்படி கட்டுக்கோப் புடன் உள்ள தி.மு.க.வில் முதல் முறையாக இந்த விதிமுறையை அமைச்சரும், மேயரும் மீறியிருக்கிறார்கள்''’ என்று கொந்தளித்துள் ளார்.

gg

மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வற்புறுத்தி யுள்ளார்கள் தி.மு.க.வின் பெரும்பாலான நிர்வாகிகள். இதை ஆமோதிப்பதைப் போல, கூட்டத்தைப் புறக்கணித்த கவுன்சிலர்கள், மேயர் மற்றும் அமைச்சருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் மாவட்டச் செயலாளர்கள். இந்த சம்பவம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி பேசுகையில், "இந்தக் கூட்டம் மிக முக்கியமான கூட்டம். 100 மாநகராட்சி கவுன்சிலர்களில் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டும் 67 பேர். தற்போது மண்டலவாரியாக கவுன்சிலர்கள் குழு அமைக்கப் படும். ஒவ்வொரு மண்டலங்களி லும் என்ன என்ன வேலைகள் செய்யவேண்டும். மக்களின் எதிர் பார்ப்பு என்ன என்று இந்த குழு வகுக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரவர் வார்டு வாரியாக மக்களைச் சந்திக்கப்போவது நீங்கள்தான். எனவே எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

ff

தி.மு.க.வைப் பொறுத்தவரை கட்சி விதி என்று ஒன்று இருக்கிறது. அதன்படி மாவட்டச் செயலாளர், அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், அமைச்சராக இருந்தாலும் மேயராக இருந்தாலும் கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும். இங்கு கட்சிதான் முக்கியம். கட்சி விதிப்படி தான் நடக்கவேண்டும். வரமுடியவில்லை என்றால் அதற்கான விளக்கத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் தெரிவிக்காதபட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றதும் கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது.

ddதொடர்ந்து பேசிய அவர், "இந்தக் கூட்டத்தைப் பொறுத்த வரை மூன்று மாவட்டச் செயலாளர்களும் ஒன்றாக இணைந்து முறையாக அழைப்புவிடுத்தும் மேயர் இந்திராணி செந்தில்குமார், பொன்வசந்த், சோலை செந்தில், உசிலை சிவா போன்றோர் வராதது இதுவரை நடக்காதது. இவர்கள் கட்சிக்காக எந்த வேலையும் செய்யாதவர்கள். எந்த போராட்டங்களிலும் பங் கெடுக்காதவர்கள். அப்படியிருந்தும் ஒரு முக்கிய நபர் சொன்னாரே என்று அவரைப் போட்டோம். ஆனா பாருங்க, அவுங்கதான் மிரட்டுகிறார்கள். கட்சிதான் பெரிசு. தனிநபர் அல்ல. இவ்வளவு முக்கியமான கூட்டத்தை புறக்கணிச்சிருக்காங்க. இது யாரு கொடுத்த தைரியம்? இதனை விட்டுக் கொடுக்கக்கூடாது. இதற்கு கட்டாயம் நடவடிக்கை இருக்கும்''’என்றார்.

கூட்டத்தில் இருந்தவர்கள், "மேயரை மாற்றுங்கள்.’67 மாநகராட்சி கவுன்சிலர் களில் 60 பேர் மெஜாரிட்டியாக இருக் கிறோம். இவர் மேயராகத் தொடர்ந்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர். எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. தி.மு.க. கவுன்சிலர்களை தி.மு.க. மேயரே மதிப்பதில்லை. எந்தவித ஆலோசனையும் செய்வதில்லை. சமீபத் தில் அமைச்சர் பல முறை சொல்லியும் கண்டுகொள்ளாமல் இருந்ததுடன், வலுக்கட்டாயமாக மேயரை அழைத்து தொகுதி முழுவதும் அதன் அவலங்களைச் சுற்றிக் காண்பித்தும் பலனில்லை. மழை நீரை அகற்றாவிட்டால் நானே உண்ணாவிரதம் இருப்பேன் என மேயரிடம் கூறுமளவுக்கு இருக் கிறது அவரது செயல்பாடுகள். எனவே மேயரை மாற்றுங்கள்'' எனச் சொல்ல, அதற்கு ஆதரவாக அனைத்து கவுன்சிலர்களும் குரல்கொடுக்க, கூட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.

அடுத்தநாள் நகரெங்கும் கோ.தளபதியைக் கண்டித்து கள்ளர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், “"கள்ளர் சமூகத்தை இழிவாகப் பேசிய கோ.தளபதியே நாவை அடக்கு இல்லையென்றால் அடக்கி வைக்கப்படு வாய்'’என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பிரச்சனைக்கு மேலும் தூபம் போட்டுள்ளது.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் கோ.தளபதியிடம் நாம், "உங்கள் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சாதிரீதியாகப் பேசினீர்களா? உங்களைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனரே?… நிதியமைச்சர், மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்களா? மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதாகச் சொல்கிறார்களே அது உண்மையா? என்ன நடக்கிறது தி.மு.க.வில்?''” எனக் கேட்டோம்.

"சாதிரீதியாக பேசியது என்பதில் எள்ளளவும் உண்மையில்லை. நிர்வாகத்தில் என்னுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஜெயராமன், சின்னம்மா, மூவேந்திரன், ஒச்சுபாலு, கொடி சந்திரசேகர், தங்கபாண்டி என அனைவருமே என் கூடவே இருப்பவர்கள். நான் என்றைக்குமே சாதிரீதியாகப் பழகுவது இல்லை. அனைவரிடத்திலும் ஒரே மாதிரிதான் இருப்பேன். எனகூட இருப்பவர்களுக்கு அது தெரியும். தி.மு.க.வே சாதியத்திற்கு அப்பாற் பட்டதுதான். இந்த ஆலோசனைக் கூட்டத் திற்கு வராமல் புறக்கணித்தவர்கள் வேண்டு மென்றே இந்த விசயத்தை திசைதிருப்பவே இதுபோன்ற பொய்யான அவதூறுகளைப் பரப்புகிறார்கள்''’என்றவர்... "தற்போது இருக் கும் மேயரால் எந்த முடிவும் எடுக்கமுடி யாது. அவருக்கு முதலில் கட்சி என்றால் என்ன,… மேயர் என்றால் என்ன,… அதற்கான நிர்வாகம் என்ன என்று எதுவுமே தெரியவில்லை. மொத்தத்தில் நிர்வாகம் மிகவும் சீர்கெட்டுப் போய்விட்டது. அனைத்து கவுன்சிலர்களும் வார்டுக்குள் தலைகாட்டமுடியவில்லை. எந்த வேலையிலும் உடனுக்குடன் முடிவு எடுக்கமுடியாமல் திணறுகிறார்கள்.

ff

மாநகராட்சியில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த அதிகாரிகளே இன்னமும் முழு அதிகாரத்தோடு வலம்வருகிறார்கள். எதிர்க்கட்சி யான அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களே ஒன்றும் செய்யமுடியமல் இருக்கிறார்கள் என்பதை நன்றாக தெரிந்துகொண்டு, ஒவ்வொரு கூட்டத்திலும் பிரச்சனை எழுப்புகிறார்கள். இவை எல்லாவற்றையும் முறியடிக்கவேண்டும்.

மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளவேண்டும், மக்கள் பணிகளைத் தொய்வில்லாமல் செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவதற்குத் தான் எந்த பத்திரிகையையும் அழைக்காமல் ஆலோசனைக் கூட்டம் போட்டோம். அதில் முதல் ஆளாகக் கலந்துகொள்ள வேண்டிய மேயரே கலந்துகொள்ளவில்லை. மேயரோடு கலந்துகொள்ளாத அவரின் ஆதரவாளர் களுக்கு இதுவிசயமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மற்றபடி, மேயருக்கு எதிராக மாநகராட்சியில் நம்பிக்கையில்லாத் தீர்மானமெல்லாம் கொண்டுவரப்போவதில்லை. தலைமையைக் கேட்காமல் எந்த முடிவும் யாரும் எடுக்கமுடி யாது. இது சம்பந்தமாக தலைவரிடம் எடுத்துச் சொல்லவிருக்கிறேன்''’ என்று முடித்துக் கொண்டார்.

கட்சி ரெண்டுபட்டா எதிர்க்கட்சிகளுக் குக் கொண்டாட்டம் என்பதை மதுரை தி.மு.க. வினர் மனதில் வைத்துக்கொண்டால் சரி!

nkn231122
இதையும் படியுங்கள்
Subscribe