ன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை மாற்றப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதற்கு முன்பாக கட்சித் தலைவராக ஏழரை ஆண்டு கள் பொறுப்பு வகித்துவந்த ஏ.வி. சுப்பிர மணியனை நீக்கிவிட்டு நமச்சிவாயம் புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது ரங்கசாமிக்கு இருந்த மாஸ் இமேஜை எதிர்கொள்ளும் வகையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த ரங்கசாமியின் உறவினரான நமச்சிவாயத்தை முன்னிறுத்தி சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ்.

po

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில், திடீரென நாராயணசாமி கட்சித் தலைமையில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி முதலமைச்சராக பதவியேற்றார். அதேசமயம் நமச்சிவாயத்தை சமாதானப்படுத்தி அமைச்சரவையில் முக்கிய இலாகாவான பொதுப்பணித்துறை அமைச்சராக நியமித்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் நமச்சிவாயம் நீடித்து வந்தார்.

கிரண்பேடியின் நெருக்கடிகளைச் சமா ளிக்க நமச்சிவாயம் தனக்கு ஆதரவாக இல்லை யென கருதிய நாராயணசாமி, கட்சியும் ஆட்சி யும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டு மென்று தனக்குத் தோதான ஒருவரை மாநில தலைவராக போடவேண்டுமென நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே மேலிடத்தில் ‘தூபம்’ போட்டுவந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் தலைவரை மாற்றினால் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு எந்த மாற்றமும் வேண்டாம்’ என அப்போதைக்கு அவ்விவகாரம் தள்ளிப் போடப்பட்டது.

அதையடுத்து தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சிப் பணிகளை தீவிரமாக ஆற்ற வேண்டியிருப்பதால் கட்சித் தலைவர் பதவி யை வேறு ஒருவருக்கு வழங்கவேண்டுமென மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோரிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதையடுத்து கடந்த 04 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையின் ஒப்புதல் பெயரில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், ""பெரும்பான்மை (வன்னி யர்) சமுதாயத்தை நாராயணசாமி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அதன் வெளிப்பாடு தான் இந்த தலைவர் மாற்றம். ஏற்கனவே தனவேலு எம்.எல்.ஏ.வை கட்சியிலிருந்து நீக்கியதோடு அல்லாமல் எம்.எல்.ஏ. பதவியை யும் பறிக்க முயற்சிக்கிறார். 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயத்தை முன்னிறுத்திதான் ஆட்சியைப் பிடித்தார். தற்போது எங்கே அவர் தலைவராக நீடித்தால் முதல்வர் பதவிக்குப் போட்டிக்கு வந்துவிடுவா ரோ என நினைத்துதான் நமச்சிவாயத்தை ஓரம்கட்டியுள்ளார். ஆனால் இது ரெங்க சாமிக்குதான் சாதகமாக அமையும்'' என்கின் றனர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸார்.

மாநில தலைவர் மாற்றம் மாற்றத்தைக் கொடுக்குமா… ஏமாற்றத்தைக் கொடுக்குமா..? என போகப்போக தெரியும்.

-சுந்தரபாண்டியன்