சிக்கும் சாமியார்களில் லேட்டஸ்ட், "கல்கி சாமியார்' என அழைக்கப் படும் விஜயகுமார் நாயுடு.
எல்.ஐ.சி.யில் வேலை, அதன்பின் ஆசிரியர் பணி என சுற்றிச் சுழன்ற விஜயகுமாரும் அவரது மனைவி பத்மாவதியும் சென்னை தாம்பரத்திற்கு பக்கத்தில் உள்ள சோமங்கலத்தில் ஒரு வீட்டை ஆசிரமமாக்கி "ஒருமை' தத்துவத்தை உபதேசித்தனர். அதற்கு ஆதரவு அதிகமாக இல்லை என்றவுடன் மஞ்சளில் உடை தரித்து "நான் கொடியவர்களை அழிக்க வந்த கல்கி பகவான்' என தன்னைத்தானே கூறிக்கொண்டு உரை நிகழ்த்த ஆரம்பித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalki_1.jpg)
ஆச்சார்யா ரஜனீஷ் ஓஷோவின் தத்துவங் களை உல்டா செய்து பேசிய விஜயகுமாரை பார்க்க 1989-களில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். ஆசிரமம் பெரிதானது. விஜயகுமாரின் உரையை கேட்க 5 ரூபாயில் ஆரம் பித்த கட்டணம் அதி கரித்தது. செய்தி களில் அடிபடத் துவங்கினார் விஜயகுமார்.
பூந்தமல்லிக்கு பக் கத்தில் நேமம் என்ற இடத்தில் ஒரு பெரிய ஆசிரமத்தை அமைத்தார். அங்கே நடை பெற்ற விவகாரங்கள் செய்திகள் ஆயின. (அதை முதலில் வெளியிட்டது நக்கீரன்). அங்கேயே ஒரு பெரிய கோயிலை கட்ட திட்டமிட்டார். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, திருப்பதிக்கு போகும் வழியில் வரதாபாளை யம் என்ற இடத்தில் ஒரு கோயிலை கட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனுமதித் தார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு முன்பு முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் கால் ஊன்ற முயன்ற விஜயகுமாரை அனுமதிக்கவில்லை. சந்திரபாபுவும் கல்கி சாமியாரும் நாயுடு என்கிற ஒரே சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தமிழக எல்லைப் பகுதியான சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு கட்டத்தில் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வந்த தமிழக 
போலீசாருடன் ஆந்திர போலீசார் மோதுமளவிற்கு சந்திரபாபு நாயுடு, விஜய குமாருக்கு ஆதரவு அளித்தார் என்கிறார்கள் கல்கி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள்.
விஜயகுமார் பேச்சில் வல்லவர். ""நான் கடவுள் அல்ல. இங்கு நீங்கள் ஆராதிக்கும் எதுவும் கடவுள் அல்ல. நீங்கள் என்னை உங்களது நண்பனாக எடுத்துக்கொள்ளலாம். கடவுளைக் காண வேண்டுமென்றால் என்னில் காணலாம். நான் போட்டிருப்பது வேஷம். இந்த வேஷத்தைப் பார்க்கத்தான் மக்கள் வருகிறார்கள். நான் மக்களை நம்புகிறேன். என் கூடவே இருக்கும் யாரையும் நம்புவதில்லை'' என்பது விஜயகுமாரின் உரைகளில் இடம் பெறும் வார்த்தைகள்.
""நீ என்னில் கடவுளை காண். கடவுள் என்பது இல்லை'' என்பது விஜயகுமாரிடம் இருந்து நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் எடுத்தாளும் வார்த்தைகள். இதை விஜயகுமார் ரஜனீஷிடமிருந்து எடுத்தார் என விஜயகுமாரின் ஆன்மிக தத்துவத் தேடலின் பின்னணியை விவரிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமான பக்தர்கள்.
இந்த ஆன்மிக போதையும் பகுத்தறிவும் கலந்த உரையாடல்தான் பல வெளிநாட்டவர்களை ரஜனீஷ் பக்கம் இழுத்தது. அதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே வழியைக் கையாண்ட "கல்கி' விஜயகுமாரின் கட்டணத் தொகையின் தற்போதைய நிலை ஒரு லட்ச ரூபாய். இந்த பணத்தை முதலில் தனது சிஷ்யர்கள் மூலம் முதலீடாக மாற்றினார் விஜயகுமார். ஒரு கட்டத்தில் அதில் முறைகேடு என அவர்களை விரட்டியடித்தார்.
அதன்பிறகு அவரது மகன் கிருஷ்ணா பணத்தை கையாண்டார். அவரும் முறைகேடு செய்தார் என மகனையும் விரட்டி அடித்தார். ""நான் ஒரு நடைபாதை பிச்சைக்காரன். எனக்கு பணம் எதுவும் தேவையில்லை'' என்பது விஜயகுமாரின் புகழ்பெற்ற வரிகள். பணம் எந்த அளவிற்கு குவிந்தது என்றால் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆந்திர மாநிலம் வரதாபாளையத்தில் ஆசிரமம் அமைக்கும் அளவிற்கு வளர்ந்தார். அதன்பிறகு மகன் கிருஷ்ணா மறுபடியும் இணைந்து கொண்டார்.
கிருஷ்ணா சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் கட்டுமான நிறுவனங்களை ஆரம்பித்தார். சந்திரபாபு நாயுடு உருவாக்கிய ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் பெரிய காண்ட் ராக்ட்டுகளைப் பெற்றார். சந்திர பாபுவிடம் காட் டிய நெருக்கம் தான், புதிதாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கும் கல்கி குடும்பத் திற்கும் மோதலை ஏற்படுத்தி யது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்க மான ஜக்கி சாமியார் உட்பட பலர் கல்கி பகவானிடம் "சந்திரபாபு நாயுடுவின் பணம் கல்கி ஆசிரமம் வழியாக வெளிநாட்டு முதலீடாக மாற்றப்பட்டதா?' என கேட்டார்கள். "சந்திரபாபு நாயுடு காலத்தில் செய்யப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் எனக்கு இப்போது பணம் தர வேண்டும்' என மிரட்டி வரும் ஜெகன்மோகன் ரெட்டியை மதிக்காமல் தனது பா.ஜ.க. தொடர்பான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூலம் எதிர் ஃபைட் கொடுத்தார் விஜயகுமார்.
இந்தச் சண்டையில் ஜெகன்மோகன், ஜக்கி வாசுதேவ் அணி வெற்றிபெற... கல்கி சாமியாருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடத்த உத்தரவிட்டார் நரேந்திரமோடி. "சோதனையில் 20 கோடி ரூபாய் வெளிநாட்டு கரன்சியாகவே கிடைத்தது. அத்துடன் மொத்தம் 600 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணமாகவும் சொத்தாகவும் கிடைத்தது' என்கிறது வருமானவரித்துறை வட்டாரம்.
ரெய்டுக்குப் பின் வெங்கையா நாயுடு மூலம் மோடியிடம் பேசி, "வெளிநாட்டு கரன்சி 20 கோடி வைத்திருந்ததற்காக' ப.சிதம்பரம் போல அமலாக்கத்துறை கைது செய்யாது' என்கிற உறுதியைப் பெற்ற பிறகே பக்தர்கள் முன்பு தோன்றினார் கல்கி பகவான்.
-தாமோதரன் பிரகாஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11-05/kalki-t.jpg)