மீண்டும் முதல்வராகும் சந்திரபாபு நாயுடு!

naidu

7 கட்ட நீண்ட தேர்தல்களுக்குப் பின், இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்தாலும் சரிக்குச் சமமாகவும், 50-ருந்து 75 தொகுதிகள் பின்னாலும் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்தது.

சிக்கிமில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக ஜூன் 2-ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இங்குள்ள

7 கட்ட நீண்ட தேர்தல்களுக்குப் பின், இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்தாலும் சரிக்குச் சமமாகவும், 50-ருந்து 75 தொகுதிகள் பின்னாலும் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்தது.

சிக்கிமில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக ஜூன் 2-ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இங்குள்ள மாநிலக் கட்சியான சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துவிட்டு தனித்து தேர்தலில் களம் கண்டது. அதன் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியும் தனித்துக் களமிறங்க, தேசியக் கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டும் தனித்துவிடப்பட்டன. இதில் பிரேம்சிங் தமங்கின் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளை அள்ள, எதிர்க்கட்சிக்கு 1 இடம் மட்டுமே கிடைத்தது. பா.ஜ.க., காங்கிரஸýக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

ஆந்திராவில் தொடக்கம் முதலே தெலுங்கு தேசம்# பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகிக்க, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பின்தங்கியது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 137 தொகுதிகளிலும், ஜனசேனா 14 தொகுதிகளிலும், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரúஸô 18 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தது. ஆக, ஆந்திராவில் சந்திரபாபுவின் கை ஓங்கியிருக்கிறது.

ஒடிஸாவில், தமிழர்களை இழிவுபடுத்துவதையே தேர்தல் பிரச்சாரமாக முன்வைத்து பா.ஜ.க. அடித்து ஆடியது. ஒடிஸô முதல்வர் நவீன் பட்னாயக்கின் நம்பிக்கைக்குரிய கார்த்திகேயப் பாண்டியனை இழிவுபடுத்தி தேர்தல் விளம்பரங்களை வெளியிட்டதுடன், பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலச் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாக பிரதமரே இழிவுபடுத்தினார்.

ஒடிஸாவில் காலை பதினொன்னரை மணியளவில் 76 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகித்து ரேஸில் முன்னால் ஓட, பிஜு ஜனதா தளம் 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், சி.பி.ஐ. (எம்) ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்தன. தற்போது முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வென்றாலே பா.ஜ.க. ஒடிஸôவில் ஆட்சியைப் பிடித்துவிடும்.

இதையும் படியுங்கள்
Subscribe