Advertisment

உல்லாச விடுதிக்காக வெட்டிப் புதைக்கப்படும் சாம்பிராணி மரங்கள்! வன அழிப்பு தடுக்கப்படுமா?

dd

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள, அந்தியூர் ஒன்றியம், பர்கூர் மலையில், ஆலனை கிராமப் பகுதியில், வனத்தையொட்டி அமைந் துள்ள வருவாய் தரிசு/நிபந்தனைப் பட்டா நிலங்களில், நன்கு ஓங்கி வளர்ந்து நிற்கின்ற, 100 ஆண்டு காலப் பழமையான அரிய சாம்பிராணி மரங்களை ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் பிடுங்கி எறிந்தும், குழிகளுக்குள் போட்டு மூடியும் இயற்கைச் சீரழிவு நிகழ்த்தப்பட்டு வருவது நக்கீரனின் கவனத்துக்கு வந்தது. அங்குள்ள மலைப்பகுதியில் இயற்கையைச் சிதைத்து, மரங்களைத் தூரோடு பிடுங்கியெறிந்து, மண் மேடுகளை வெட்டி, நிலச்சரிவு அபாயம் ஏற்படுவதுபோலத் தோண்டிப்போட்டு, சமவெளி களாக உருவாக்கும் வேலை நடைபெற்றுவருகிறது. செல்வாக்குமிக்கவர்களுக்கு ஆடிட்டராகச் செயல்பட்டுவரும் ஒருவர் தான் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அப்பகுதியி லுள்ள பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisment

dd

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் செங்குத்தாக உள்ள மலைப்பகுதி நிலங்களில், 15 அடி உயரத்திற்கு மண் வெட்டியெடுக்கப்பட்டு, பெரிய மரங்களை மண் போட்டு மூடிவருகிறார்கள். மேலும், ஆழ்துளைக் கிணறுகளும் தோண்டப்படுகின்றன. இங்கே உல்லாச விடுதிகள் அமைப்பதற்கும், பணப்பயிர் விவசாயம் செய்வதற்கும் திட்டமிட்டு வன அழிப்பு நடைபெறுவதாகத் தெரிகிறது.

அந்தியூர் பழங் குடியினர் ஃபவுண்டேஷனை (Tribal Foundation) சேர்ந்த அன்புராஜ் கூறுகையில், "ஆலனை பகுதி முழுக்க பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதி. இங்கே தனியாருக்கு பட்டா கொடுப்பதற்கான வாய்ப்பே கிடையாது. அதேபோல், இங்கு நூறாண்டுகளுக்கு மேல் வளர்ந்துள்ள

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள, அந்தியூர் ஒன்றியம், பர்கூர் மலையில், ஆலனை கிராமப் பகுதியில், வனத்தையொட்டி அமைந் துள்ள வருவாய் தரிசு/நிபந்தனைப் பட்டா நிலங்களில், நன்கு ஓங்கி வளர்ந்து நிற்கின்ற, 100 ஆண்டு காலப் பழமையான அரிய சாம்பிராணி மரங்களை ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் பிடுங்கி எறிந்தும், குழிகளுக்குள் போட்டு மூடியும் இயற்கைச் சீரழிவு நிகழ்த்தப்பட்டு வருவது நக்கீரனின் கவனத்துக்கு வந்தது. அங்குள்ள மலைப்பகுதியில் இயற்கையைச் சிதைத்து, மரங்களைத் தூரோடு பிடுங்கியெறிந்து, மண் மேடுகளை வெட்டி, நிலச்சரிவு அபாயம் ஏற்படுவதுபோலத் தோண்டிப்போட்டு, சமவெளி களாக உருவாக்கும் வேலை நடைபெற்றுவருகிறது. செல்வாக்குமிக்கவர்களுக்கு ஆடிட்டராகச் செயல்பட்டுவரும் ஒருவர் தான் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அப்பகுதியி லுள்ள பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisment

dd

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் செங்குத்தாக உள்ள மலைப்பகுதி நிலங்களில், 15 அடி உயரத்திற்கு மண் வெட்டியெடுக்கப்பட்டு, பெரிய மரங்களை மண் போட்டு மூடிவருகிறார்கள். மேலும், ஆழ்துளைக் கிணறுகளும் தோண்டப்படுகின்றன. இங்கே உல்லாச விடுதிகள் அமைப்பதற்கும், பணப்பயிர் விவசாயம் செய்வதற்கும் திட்டமிட்டு வன அழிப்பு நடைபெறுவதாகத் தெரிகிறது.

அந்தியூர் பழங் குடியினர் ஃபவுண்டேஷனை (Tribal Foundation) சேர்ந்த அன்புராஜ் கூறுகையில், "ஆலனை பகுதி முழுக்க பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதி. இங்கே தனியாருக்கு பட்டா கொடுப்பதற்கான வாய்ப்பே கிடையாது. அதேபோல், இங்கு நூறாண்டுகளுக்கு மேல் வளர்ந்துள்ள மரங்களை எந்த அனுமதியும் இல்லாமலேயே வெட்டி, அதே இடத்தில் குழிகளைத் தோண்டி, அந்த மரங்களைப் போட்டு மூடுகிறார்கள். இதைக் கொண்டு சென்றால் மடக்கி கேள்வி கேட்பார்கள் என நினைத்தோ ஏனோ, அதே இடத்திலேயே புதைக்கிறார்கள். மரங்களை வெட்டிய இடங்களை ஜே.சி.பி. மூலம் சமப்படுத்தி சமவெளிகளாக்குகிறார்கள். இதுகுறித்து வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டாலும் யாருமே சரியான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள். பழங்குடி மக்கள் கூடை பின்னவோ, வீடு கட்டவோ மூங்கில்களை வெட்டினால் அவர்களிடம் 5,000, 10,000 என்றெல்லாம் அபராதம் விதிக்கும் வனத்துறையினர், அரிய வகையிலான தொன்மையான சாம்பிராணி மரங்களை நூற்றுக்கணக்கில் வெட்டி அழிப்பதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். சொந்தப் பயன்பாட்டுக்காக, வீடு கட்டு வதற்காக வெட்டுவதாக இருந்தாலும் கூட பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதி பெற வேண்டு மென்று அரசாங்க ஆணை இருக்கிறது. அப்படியெல்லாம் இருந்தும்கூட இவர்கள் மரத்தை வெட்டி வீழ்த்துகிறார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகாரளித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை''’என்றார்.

Advertisment

dd

பர்கூர் மலைப்பகுதிகளில் காடுகளை அழித்து ஆக்கிரமிப்பு நடைபெறுவது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்த வி.பி. குணசேகரன் கூறுகையில், "இந்த ஆக்கிரமிப்புகளைக் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் செய்துவருகிறார்கள். தோராயமாக 100 ஏக்கர் நிலப்பகுதிகளுக்குமேல் வளைத்திருப்பார்களென்று தெரிகிறது. வனப்பகுதியைப் பொறுத்தவரை, எவரேனும் 5 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வாங்கினாலே போதும், சுற்றியுள்ள 75 ஏக்கர் நிலங்களையும் ஆக்கிரமித்துவிடுவார்கள். இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக நடந்துவரு கின்றன. சாம்பிராணி மரங்கள், பாரம்பரியமான அரிய வகை மூலிகை மர வகையைச் சேர்ந்தவை. இந்த சாம்பிராணி மரங்களையெல்லாம் வெட்டினால் மீண்டும் உருவாக்குவதற்கு நீண்ட காலமெடுக்கும்.

பொதுவாக வனப்பகுதியில், பழங்குடி யினராகவும், கொத்தடிமைகளாகவும் வாழ்ந்துவரும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசாங்கம் வழங்கும் நிபந்தனை பட்டாக் கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மக்களின் வாழ் வாதாரத்துக்காக வழங்கப்படும் நிபந்தனை பட்டாக்களை வேறு பிரிவினரால் விலைக்கு வாங்க முடியாது. நிபந்தனை பட்டா பெற்றவர்கள், குறைந்தபட்சம் பத்தாண்டு காலத்துக்கு அந்த பட்டா நிலத்தை அனுபவித்த பிறகு வேண்டுமானால் வேறு எவரேனும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு அதனை விற்பனை செய்யலாம். ஆனால் தற்போது வருவாய்த்துறை ரெக்கார்டுகள் முறையாக பராமரிக்கப்படாததால், எஸ்.சி., எஸ்.டி., அல்லாதவர் களுக்கெல்லாம் இந்த பட்டா நிலங்கள் விற்பனையாகும் முறைகேடுகள் நடக்கின் றன. சட்டப்படி மாற்ற வழியில்லையென்றாலும் ஏதோ முறைகேடு செய்து மாற்றுகிறார்கள். அந்த சூட்சுமம் அவர்களுக்குத் தான் தெரியும். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, விசாரணை பெண்டிங்கில் இருக்கிறது. இதுகுறித்து ஏதேனும் புகாரளித்தால் அதற்கான ஆதாரத்தைக் கொண்டு வா என்று நீதிமன்றம் சொல்லும். வருவாய்த்துறை ரெக்கார்டுகள் சரியானபடி இல்லாததால் நீதிமன்றத்தில் நிரூபிப்பதில் சிரமம் ஏற்படும். அதைவைத்தே, ஆதாரங்கள் இல்லையென்று சொல்லி புகாரை ரத்து செய்துவிடுவார்கள்.

இப்படியான கொடுமைகள் நடப்பதால் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று நாங்கள் கேட்கிறோம். மலைப்பகுதிகளிலுள்ள பழங்குடிகளின் அறியாமை யையும், வறுமையையும் பயன்படுத்தி, முறைகேடான முறையில் அவர்களுடைய பட்டா நிலங்களைக் கைப்பற்றி, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றுகிறார்கள். சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் வேதாந்தா போன்ற பெருநிறுவனங்கள் இப்படித்தான் மலைப்பகுதியிலுள்ள பழங்குடி மக்களின் நிலங்களை அரசின் துணையோடு அபகரிப்பதால், அவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்குகிறார்கள். உடனே அவர்களை அரசுக்கு எதிரான போராளிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கட்டமைக்கிறார்கள்.

அரசாங்கமென்பது, எளிய ஏழை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள், வசதி படைத்த வர்களுக்கும், அதிகார பலமிக்கவர்களுக்கும் ஆதரவானவர்களாக இருக்கிறார்கள். இப்படி யிருந்தால் அவர்கள் யாரிடம் நியாயம் கேட்பார்கள்? யார் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்களோ, அவர்களோடு சேர்ந்து தான் நியாயத்துக்காகப் போராடுவார்கள். வீரப்பன் போன்றவர்கள் ஆதரவளித்தால் அவர்களோடு இணைந்து தங்கள் நிலத்தைப் பாதுகாக்கப் போராடுவார்கள். பர்கூர் மலைப்பகுதிகளில் காடுகளை அழிப்பது குறித்து ஈரோடு மாவட்ட வனத்துறை அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களின் கவனத்துக்குக் கொண் டுசென்றுள்ளோம். அவர்கள்தான் உரிய நடவடிக்கை எடுத்து, வன அழிப்பு நடவடிக்கை களைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

பருவ நிலை மாற்றங்கள் குறித்து உலகிலுள்ள முன்னேறிய நாடுகள் அனைத்தும் கவலைப்படு கின்றன. நடப்பு ஆண்டில்கூட, எகிப்திலுள்ள ஷாம்-அல்-ஷேக் நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், அமெரிக்க அதிபர் பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உட்பட, மொத்தம் 198 நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில், இயற்கை வளங்களை அழிப்பதைத் தடுப்பது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் தென்பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மகாராஷ்டிர மாநில எல்லைப்பகுதியிலிருந்து தொடங்கி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என கன்னியாகுமரி எல்லை வரை 1600 கி.மீ. தொலைவுக்கு நீண்டு பரந்திருக்கிறது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூக்காத தாவரங்களும், மூலிகைச் செடிகளும், அரியவகை மரங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பாலூட்டியினங்களும், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பூச்சியினங்களும், ஐநூறுக்கும் மேற்பட்ட பறவை யினங்களும் நிறைந்துள்ள இம்மலைப்பகுதியை, உலகின் பாரம்பரியமிக்க இடமாக 2012ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தது. இவ்வளவு பெருமைமிக்க மலைப்பகுதி, வனத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், செல்வாக்குமிக்க மனிதர்களின் வலைப்பின்னல் மூலம் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவ தால், தனது சிறப்பையும் செழிப்பையும் இழந்துவருவதோடு, இங்குள்ள பழங்குடியின மக்களும் வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கப்படு கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

nkn301122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe