ரசியல் இயக்கமாக மட்டுமின்றி, சமூக-பண்பாட்டுத் தளத்திலும் தனது தடத்தைப் பதித்துவருகிறது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். அந்த இயக்கத்தின் சார்பிலான விருது வழங்கும் விழா, பெரியார் நினைவுநாளான டிசம்பர் 24 அன்று பெரியார் திடலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

Advertisment

tt

வி.சி.க.வின் "அம்பேத்கர் சுடர்' விருது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், "பெரியார் ஒளி' விருது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கும், "காமராசர் கதிர்' விருது தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கும், "அயோத்திதாசர் ஆதவன்' விருது கரியமாலுக்கும், "காயிதே மில்லத் பிறை' விருது பஷீர் அகமதுக்கும், "செம்மொழி ஞாயிறு' விருது ராமசாமிக்கும் வழங்கப் பட்டது. விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், வன்னியரசு, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருது வழங்கி வாழ்த்துரை ஆற்றிய திருமா, "அம்பேத்கர் சுடர் விருதினைப் பெற்ற முதலமைச்சர்கள் வரிசையில் ஸ்டாலின் அவர்கள் 4-ஆவது முதலமைச்ச ராக இந்த அரங்கிலே அமர்ந்து சிறப்பு சேர்த்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், "அம்பேத்கர் சுடர்' விருதினைப் பெற்று நமக்கு பெருமை சேர்த்தார். அதேபோல கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுவை மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி வரிசையில் விருதுபெற்றுள்ள, மக்களுக்காக சுற்றிச் சுழன்று பணியாற்றும் முதல்வர் அவர்களை வி.சி.க. சார்பில் வாழ்த்துகிறேன்.

தி.மு.க.வும் வி.சி.க.வும் கருத்தியல் சார்ந்து உறவைப் பேணிக் காத்து வருகிறோம். 2009- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. இருக்கின்றதா இல்லையா, என்ற கேள்வி எழுந்தபோது, கலைஞர் அவர்கள், "விடுதலை சிறுத்தைகள் எங்க ளோடுதான் இருக்கிறார்கள். எங்களுக்கும் விடுதலை சிறுத்தை கள் கட்சிக்கு உறவென்பது வெறும் தேர்தல் கூட்டணி உறவு அல்ல. நாங்கள் பேசுகின்ற சமூக நீதிதான் விடுதலை சிறுத்தைகளும் பேசு கிறது. நாங்கள் பேசும் பொது வுடமை அரசியலைத்தான் விடு தலை சிறுத்தைகளும் பேசுகிறார் கள். எனவே எங்களின் உறவு கொள்கை சார்ந்த உறவு' என்றார்.

வெறுமனே கூட்டணிக் கணக்கு போட்டு அரசியல் நடத்துவதில் பயனில்லை இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் ஆபத்து வரும் காலத்தில் இணைந்து துணிந்து போராட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்ந்து இந்த உறவு தொடரும்''’என்றவர், பா.ஜ.க ஆட்சியில் மதவாதம் ஏற் படுத்தும் பெரும் அச்சுறுத்தலையும் சிறுபான்மையினருக்கும் பட்டியலின மக்களுக்கும் ஏற் பட்டுள்ள ஆபத்துகளையும் சுட்டிக்காட்டினார்.

"இந்தியாவிலேயே மதவாத அரசியல் தலையெடுக்காமல் பாது காப்பாக இருப்பது தமிழ்நாடுதான் என்றும், திராவிட இயக்கக் கொள்கைகள் அதற்கு அடித்தள மிட்டன என்றும் எடுத்துக்கூறி, மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமூக நீதிநாள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, தலித் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கான ஆய்வுப் படிப்புக்குரிய உதவித் தொகை உயர்வு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியைக் கட்டிக்காக்கும் ஆற்றல் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது'' என்று முத்தாய்ப்பு வைத்தார் திருமா.

விருதைப் பெற்றுக்கொண்ட முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் பேசுகையில், “"நான் "அம்பேத்கர் சுடர்' விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருமா தெரிவித்தார். அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன். இப்போது அவர் பேசிய பேச்சுக்கும் நான் கட்டுப்பட்டவன். இதற்குமேல் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அம்பேத்கர் பெயரிலான விருதினை பெருமளவுக்கு நான் சாதனை செய்யவில்லை. நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். மாநில ஆதி திராவிட ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்தி தாசர் மணிமண்டபம் என பலவற்றையும் நிறை வேற்றத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது''’என்றார்.

"பெரியார் ஒளி' விருது பெற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “"பெரியார் திடலில் பெரியார் ஒளி விருது பெறுவதில் பெருமைகொள்கிறேன். தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை மூத்திரச் சட்டியை சுமந்துகொண்டு இந்த தமிழர்களுக்கும் சமத்துவத்திற்கும் போராடிய தலைவர் பெரியார் அவருடைய நினைவுநாளில் எனக்கு இந்த விருதைக் கொடுத்தமைக்கு தம்பி திருமாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டவன் நான்''’என்றார்.

காமராசர் கதிர் விருது பெற்று நெல்லை கண்ணனின் பேச்சு மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. "எனக்கு உடல்நிலை சரியில்லாமல் நேற்றுவரை மருத்துவமனையில் படுத்துக் கிடந்தேன். விழாவுக்கு செல்லக்கூடாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் திருமாவின் மேடையில் மறைந்தால், அவர் மடியிலேதான் மறைவேன். அந்த பெருமை ஒன்று போதுமென்று கிளம்பி வந்தேன். முதல்வரிடமும், தம்பி திருமாவிடமும் நான் கைகூப்பிக் கேட்கிறேன். உங்கள் உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் யாருமில்லை''’என கண்கலங்கினார்.