Advertisment

சேர்மன் கணவர் கைது! புலம்பும் உடன்பிறப்புகள்!

dd

மே கடைசி வாரத்தில் திருவண்ணா மலை மாவட்டம், போளுர் பகுதியில் ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசும், அம்மாநில உளவுத்துறையினரும் வட்டமடித்துக்கொண்டிருந் தனர். போளூர் டூ வேலூர் சாலையில் வந்த அந்த விலையுயர்ந்த காரை நிறுத்திய மப்டி போலீஸார், துப்பாக்கி முனையில் நிறுத்தி, காருக்குள் இருந்த வரையும், அவரது ஓட்டுநரை யும் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காரையும் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டனர்.

Advertisment

அடுத்த இரண்டாவது நாள், ஆந்திராவிலிருந்து காரில் 2 கோடி ம

மே கடைசி வாரத்தில் திருவண்ணா மலை மாவட்டம், போளுர் பகுதியில் ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசும், அம்மாநில உளவுத்துறையினரும் வட்டமடித்துக்கொண்டிருந் தனர். போளூர் டூ வேலூர் சாலையில் வந்த அந்த விலையுயர்ந்த காரை நிறுத்திய மப்டி போலீஸார், துப்பாக்கி முனையில் நிறுத்தி, காருக்குள் இருந்த வரையும், அவரது ஓட்டுநரை யும் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காரையும் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டனர்.

Advertisment

அடுத்த இரண்டாவது நாள், ஆந்திராவிலிருந்து காரில் 2 கோடி மதிப்புள்ள 100 செம்மரக் கட்டைகளை கடத்தியபோது, பெருமாள், வேலு என இருவரை கைது செய்துள்ளோம், 8 பேர் தப்பி ஓடிவிட்டார்கள். அவர்களைத் தேடிவருகிறோம். இவர்களில் பெருமாள், திரு வண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியக்குழு தலைவராக உள்ள சாந்தியின் கணவர் என ஜூன் 1-ஆம் தேதி சொன்னது ஆந்திர போலிஸ்.

Advertisment

dd

இதுகுறித்து நம்மிடம் பேசிய போளூர் தி.மு.க.வினர், "உள்ளாட்சித் தேர்தலில் போளூர் ஒன்றியத்திலுள்ள 22 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 10 என வெற்றி பெற்றிருந்தனர். இருவர் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்க, சேர்மன் பதவிக்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா முயற்சிசெய்தார். தி.மு.க. சார்பில் சேர்மனுக்கு முன்னிறுத்தப்பட்ட விளாங்குப்பம் சுப்பிரமணி தோல்வி யடைய, சேர்மன் தேர்தலில் செலவு செய்ய கவுன்சிலர்கள் யாருமில்லை. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரனால் முன்னிறுத்தப்பட்டவர் ஒன்றியக்குழு கவுன்சிலராக வெற்றிபெற்றிருந்த சாந்திபெருமாள்.

அ.தி.மு.க. அப்போது ஆளும்கட்சி என்பதால் அங்கு பதவி கேட்டார் பெருமாள். ஜெயசுதா எதிர்ப்பால் சேர்மன் பதவி இல்லையெனச் சொல்லிவிட்டார்கள். எங்கள் கட்சி யில் இவரை முன்னிறுத்தியபோது, "பெருமாள் செம்மரக் கடத்தல் மன்னன், இவர்மீது பல வழக்குகள் ஆந்திர மாநிலத்தில் உள்ளன' என இவரின் குற்றப்பின்னணி குறித்து தலைமைவரை புகார் அனுப்பினோம், "நீ யாராக வேண்டு மானால் இரு... பணமிருந்தால் பதவி' என்கிற எழுதப்படாத விதி மாவட்டத்தில் கடைப்பிடிப்பதால் பெருமாள் மனைவியை சேர்மனாக்க முடிவு செய்தார்கள். கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு என 3.17 கோடி ரூபாய் செலவு செய்து தன் மனைவி சாந்தியை சேர்ம னாக்கி அதிகாரம் செலுத்திவந்த பெருமாளைத்தான் இப்போது ஆந்திர போலிஸ் கைது செய்துள்ளது. இவர் மட்டுமல்ல கட்சிக்கு சம்பந்தமில்லாத, தங்கள் பாதுகாப்புக் காக கட்சிக்கு வந்து நிர்வாகிகளுக்கு செலவு செய்து பதவி வாங்கிக்கொண்டு சிலர் வலம் வருகிறார்கள்.

கட்சியில், மக்கள் மன்றத்தில் பொறுப்பான, முக்கிய பதவிக்கு வந்தபிறகு குற்றச் சம்பவங்களைக் கைவிடாமல் பதவியிருக்கும் தைரியத்தில் இன்னும் அதிகமாகச் செய்கின்றனர். கட்சி விசுவாசமில்லாத இவர்கள் சிக்கும்போதெல்லாம் "தி.மு.க.ன்னாலே இப்படித் தான்' என்கிற பெயரை பொதுமக்கள் மத்தியில் பரப்புகின் றனர் எதிர்கட்சியினர்''’என புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

nkn080622
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe