Advertisment

சேர்மன் Vs பொறியாளர்! திருப்பத்தூர் நகராட்சி குஸ்தி!

ss

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரமன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன். இவரை நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி அவமானப் படுத்துவதாக சில கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Advertisment

என்னவென்று அவர்களிடம் விசாரித்தபோது, "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் நகராட்சியில் பொறுப்பு ஆணையாளராக இருந்தார். அங்கிருந்து இங்கு எம்.இ.யாக வந்தவர், ஆணையாளர் போலவே செயல்படுகிறார். சேர்மனை மட்டுமல்ல, கமிஷனர் ஜெய ராமராஜாவையும் மதிப்ப தில்லை. திருப்பத்தூர் நகராட்சிக்கு தென்பெண்ணையாற்றிலிருந்து குடிநீர் எடுக்கப

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரமன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன். இவரை நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி அவமானப் படுத்துவதாக சில கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Advertisment

என்னவென்று அவர்களிடம் விசாரித்தபோது, "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் நகராட்சியில் பொறுப்பு ஆணையாளராக இருந்தார். அங்கிருந்து இங்கு எம்.இ.யாக வந்தவர், ஆணையாளர் போலவே செயல்படுகிறார். சேர்மனை மட்டுமல்ல, கமிஷனர் ஜெய ராமராஜாவையும் மதிப்ப தில்லை. திருப்பத்தூர் நகராட்சிக்கு தென்பெண்ணையாற்றிலிருந்து குடிநீர் எடுக்கப் படுது. இதற்காக 100 எச்.பி. மோட்டார்கள் பயன்படுத்தப் படுகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை அது ரிப்பேராகி விட்டதென்று 7 லட்ச ரூபாய்க்கு பில் போட்டு எடுக்கிறது பொறியாளர் பிரிவு. பாலாற்றில் இருந்து திருப்பத் தூருக்கு குடிநீர் வரும் பைப் ஆசைநகர் பகுதியில் உடைந்து விட்டது. 24 இன்ச் பைப் 100 அடி தூரம் மாற்ற 40 லட்சம் ரூபாய் செலவானதாக பில் வைக்கின்றனர்.

tt

இதனை நகரமன்றக் கூட்டத்தில் அப்ரூவலுக்காக தீர்மானமாக வைத்தால், சேர்மன் போலி கணக்கு எழுதி பணம் எடுப்பதாக கவுன்சிலர்கள் நினைத் துக்கொண்டு குற்றம்சாட்டு கிறார்கள். இதுபற்றி கமிஷனரிடம் விவரம் கேட்டால் எம்.இ.யிடம் கேட்கணும் என்கிறார். நகரமன்றக் கூட்டம் நடக்கும்போது எம்.இ. கூட்டத்துக்கு வருவதில்லை. யாருக்கும் நான் பதில் சொல்லவேண்டிய அவசிய மில்லைன்னு சொல்றாங்க. நகராட்சி சார்பில் நடைபெறும் வேலைகள் எப்படி நடக்கிறது என தினமும் போய் பார்க்கவேண்டி யது எம்.இ. பணி. அவர் போவ தேயில்லை. வேலையெல்லாம் முடிந்தது என ஒப்பந்ததாரர்கள் வந்தால் ஃபீல்ட் விசிட் போகாமலே வேலை தரமாக இல்லை என்கிறார். வேலையெல்லாம் முடிந்தபின் தரமில்லை என்றால் எப்படி?'' என்றார்கள்.

Advertisment

tt

இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சிப் பொறியாளர் உமா மகேஸ்வரியை தொடர்புகொண்டு கேட்டதும், "நான் ஒர்க் நடக்கற இடங்களுக்கு விசிட் போய்க் கிட்டுதான் இருக்கேன். அது குறித்த தகவல்களை கமிஷனருக்கு சொல்றேன். நான் வேலை செய்யலன்னு மக்கள் சொல் லட்டும், கவுன்சிலர்கள் சொல்ற துக்கு யார்? நான் அவங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. இன்ஜினியரிங் செக்ஷனில் எலக்ட்ரீஷியன் இருக்காங்க, அவுங்கதான் இ.பி. பிரச்சனையால் மோட்டார் ரிப்பேராகுதுன்னு நோட் வைக்கறாங்க. நான் விசாரிச்ச பிறகே அப்ரூவல் தர்றேன். மக்கள் பணத்தை கொள்ளையடிச்சி நான் என்ன செய்யப்போறேன்? நான் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நியாயமா வேலை செய்துக் கிட்டு இருக்கேன்'' என்றார்.

எம்.இ.யை மாற்றக்கோரி, நகராட்சித்துறை அமைச்சர் நேருவை சேர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இரண்டு முறை நேரில் சந்தித்து முறை யிட்டுள்ளனர். அமைச்சர் மாற்றச்சொல்லியும் அமைச் சரின் உதவியாளர் ஒருவர் மாற்றக்கூடாதெனத் தடுக்கிறார் என்கிறார்கள். நகராட்சியில், சேர்மன் தரப்பு கவுன்சிலர்கள் - பொறியாளர் ஆதரவு கவுன்சிலர்கள் என இரு தரப்புக்கிடைப்பட்ட பிரச் சனையால் பாதிப்பென்னவோ மக்களுக்கான பணிகளுக்குத் தான்!

nkn010323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe