மிழக அரசின் கட்டுப் பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலைகள் பலவற்றை சாலை நிதித் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கி அகலப்படுத்தி தரமுயர்த்தி வருகிறது மத்திய அரசு. என்னதான் நிதி ஒதுக்கினாலும் தரம் உயர்த்தி னாலும் பல இடங்களில் சாலைகள் படுமோசமாகவே உள்ளதாக மக்களிடமிருந்து புகார் வர... நேரிலேயே ஒரு விசிட் சென்றோம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முதல் தொழுதூர் வரை போடப்பட்டுள்ள 44 கிலோமீட்டர் சாலை ஒரு உதாரணம். இந்த சாலையில் 29 கிலோமீட்டர் ஏற்கனவே இருவழிச் சாலையாக இருந் தது.

இந்தச் சாலையிலுள்ள சிறு பாலங்கள் அகலப்படுத்து தல், திரும்பக் கட்டுதல் ஆகிய பணிகளைச் செய்வதற்காக சுமார் 5 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. "இந்தப் பணிகள் 2018-19-ஆம் ஆண் டுக்குள் முழுமையாக முடிக் கப்படும்' என அறிவிப்புப் பலகைகளை பணி நடை பெறும் சாலையின் ஓரம் வைத்துள்ளனர். ஆனால் இன்றுவரை பணி முடிந்த பாடில்லை.

r

Advertisment

மிக மிக மெதுவாக சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை ஏற்கனவே ஏழு மீட்டர் அகலம் இருந்ததை 11 மீட்டர் அகல தார்ச்சாலையாக விரிவுபடுத்தும் பணி இப்போது நடந்துவருகிறது. இதில் பட்டூர், அரங்கூர், பாளையம் ஆகிய பகுதிகளில் 8 கிலோமீட்டர் சாலைப் பணியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு மற்ற இடங் களில் மட்டும் பணிகளைச் செய்துவருகிறார்கள். சில இடங்களில் சாலைகள் அகல மாகவும் சில இடங்களில் பழைய இருவழிச் சாலையாக குறுகியும் உள்ளது

மேலும் சாலையோரம் அகலப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் அப்படியே உள்ளன. டெண்டர் காலம் முடிந் தும் இன்னும் பணிகளை முடிக்கவில்லை. பணிகளின் தரம் சரியில்லை. திட்டக்குடி, பெண்ணாடம், பாளையம் போன்ற பகுதிகளில் பைபாஸ் சாலை அமைக்கப்போவதாக கூறினார்கள். ஆனால் இப்போது அதுபோன்ற பணிகள் செய்யாமல் நகரத் திலேயே சாலைப்பணி நடந்து வருகிறது. இடையிடையே சாலையை விட்டுவிட்டு சாலையை அகலப்படுத்துவது விபத்துக்களை அதிகரிக்கவே செய்யும். உதாரணமாக ஆக்கனூர்பாளையம் அருகில் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்று சாலை அகலமாக உள்ளது என நினைத்து ஓட்டிச்சென்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

rr

Advertisment

"ஆங்காங்கே சாலைகளை பிட்டுப் பிட்டாக போடுவதை மாற்றி கருவேப்பிலங்குறிச்சி முதல் தொழுதூர் வரை சாலைப்பணியை முழுமையாக செய்து முடிக்கவேண்டும். அதிகாரிகள் அப்படிச் செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என்றார் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் கோடங்குடி பிலிப் என்கிற தயா.

விருத்தாசலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு விசாரிக்கச் சென்றோம். எந்த விளம்பரப் பலகையும் இல்லாமல் தனி அறையில் இரண்டு மூன்று ஊழியர்களுடன் ஒரு அலுவலகம் செயல்பட்டுக்கொண்டிருந்தது இதுதான் மத்திய அரசு சாலைப் பணித் திட்டத்தின் அலுவலகம் என்று கூறினர்.

அங்கு உதவிசெயற்பொறியாளர் வேலுமணியிடம் கேட்டபோது, ""சாலைப் பணிகள் விரைவாகத்தான் நடந்துவருகின்றன. மின்கம்பங்கள், சாலையோர மரங்கள் உள்ள இடங்களை ஒதுக்கிவிட்டு பணிகளை செய்துவருகிறோம். அந்த மரங்களை அகற்றித் தருமாறு வருவாய்த் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம். இடையில் சில கிலோமீட்டர் சாலைப் பணிகள் நடைபெறாததற்குக் காரணம் அந்த இடங்களில் சமீபத்தில்தான் சாலைப் பணிகள் நடந்துள்ளன. ஐந்து ஆண்டுகள் அந்த இடத்தில் மீண்டும் பணிகள் செய்யக்கூடாது என்பது அரசு விதி. டெண்டர் காலம் முடிந்தாலும் பிரச்சினை இல்லை; இன்னும் மூன்று மாதத்தில் சாலைப் பணி முழுமையாக முடிக்கப்படும்'' என்றார்.

"பயணிக்கும் சாலையா மக்களை சாகடிக்கும் சாலையா?' என கேள்வி கேட்கிறார்கள் பொதுமக்கள். அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ள சாலைகளால் மக்கள் உயிருக்கு ஆபத்தே அதிகம் ஏற்படுகிறது என்ற முணுமுணுப்பையும் அவர்களிடம் கேட்கமுடிந்தது.

-எஸ்.பி.சேகர்