“சர்வ சிக்ஸா அபியான்’ என்ற மத்திய அரசின் திட்டம், பின்னர் ‘சமூதர சிக்ஸா அபியான்’ என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.சின் நண்பரான அந்தப் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, “மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்படும் திட்டத் திற்கு டெண்டர் எதுவும் இல்லாமல் அதன் திட்டங்களை செயல்படுத்த லாம்”என ஒரு அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பினார்.

அந்த ஒரு அறிக்கையை வைத்துக்கொண்டு 410 கோடி ரூபாய் மதிப் புள்ள அந்தத் திட்டத்தை தங்களுக்கு நெருக்கமான பெண்கள் அமைப்பு கள் மூலம் செயல்படுத்தத் தொடங்கினார் நந்தகுமார். ‘மனிதி’ என்கிற அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் ‘மனிதி’ அமைப் பின் தலைவராக இருந்த பெண்ணிற்கும், அதன் நிர்வாகியாக இருந்த மற்றொரு பெண்ணிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

தலைவராக இருந்த அந்தப் பெண் உதயசந்திரனுக்கு நண்பர். தலைவியுடன் கருத்துவேறுபாடு கொண்ட பெண், நந்தகுமாரின் நண்பர். இருவருக்கும் தனித்தனியே இந்தத் திட்டம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இருவரும் இத்திட்டத்தை செயல்படுத்த தனித்தனி ‘வார் ரூம்’களை பள்ளிக் கல்வித்துறையின் தலைமையகமான ‘பேராசிரியர் அன்பழகன் வளாகம்’ என அழைக்கப்படும் டி.பி.ஐ.யில் ஏற்படுத்திக் கொண்டனர். முழுவதும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்களால் நிர்வகிக்கப்பட்டுவந்தது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இதில் உடன் பாடில்லை. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறையில் நந்தகுமார் செய்யும் அடாவடிச் செயல்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார். துறையில் விடப்படும் டெண்டர்கள் அனைத்தையும் நந்த குமாரே முடிவு செய்வார். துறையில் ‘சமூதர சிக்ஸா அபியான்’ திட்டத்தை நிறைவேற்ற இன்னொரு பெண்கள் அமைப்பை கொண்டுவர முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரை யை நந்தகுமார் நிராகரித்தார். “டெண்டர் விவகாரங்களில் என்னைக் கேட் காமலேயே முடிவு செய்கிறார்கள்” என முதல்வரிடமே புகார் செய்தார் அமைச்சர். அதற்கு ஆதாரமாக ஒரு டெண்டர் மீட்டிங்கில் “அமைச்சரை எல்லாம் கேட்க வேண்டாம்” என நந்தகுமார் பேசியதை புகாராகவே பதிவு செய்தார் அமைச்சர். செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்த நந்தகுமார், இளம் பகவத் ஆகிய அதிகாரி கள் ஒன்றுசேர்ந்து “"கல்வித்துறையில் பெயிலான அன்பில் மகேஷ்'” என ஒரு செய்தியையே பத்தி ரிகைகளில் தொடர்ந்து வெளிவரச் செய்தார்கள். “கல்வித் துறையில் அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டாலும் நந்தகுமார் வேறொரு அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டதற்கு நேரெதிராக வெளி யிடுவார். இரண்டு அறிவிப்புகளுமே நடைமுறைக்கு வராது” என நந்தகுமாரின் அடாவடிச் செயல்களை சொல்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள். துறை சார்ந்த கூட்டங்கள் நடக்கும்பொழுது, அமைச்சர் சொல்லும் அட்வைஸ்களை அவரது முகத்துக்கு நேராக மறுத்து அவரை அவமானப்படுத்தும் விதத்தில் ‘நோஸ்கட்’ கொடுக்கும் வழக்கத்தை நந்தகுமார் கடைப்பிடித்தார்.

Advertisment

நந்தகுமாரின் இந்த செயல்கள் மத்திய அரசின் கவனத்திற்குப் போனது. மத்திய அரசின் திட்டமான ‘சமூதர சிக்ஸா அபியான்’ திட்டத்தில் டெண்டர் இல்லாமல் முறைகேடு நடப்பதையும், அதில் பெண்களை ஈடுபடுத்தி முறைகேடு நடப்பதையும் சீரியஸாக எடுத்துக் கொண்ட மத்திய அரசு, நந்த குமாரையும் அவருக்கு குருவாக இருந்த உதய சந்திரனையும் கண்காணிக்க ஒரு குழு போட்டது.

"தமிழக அரசில் அமைச்சர்களாக இருப்பவர் களுக்கு பெரிய அளவிற்கு அறிவு இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள்தான் அறிவுடன் செயல்படுகிறோம்' என நந்தகுமார் போன்றவர்கள் உதயசந்திரனின் ஆசியோடு அமைச்சர்களை மட்டம் தட்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள். இந்த அதிகாரிகளுக்கு சொந்த வாழ்க்கையில் பலகீனங்கள் இருந்தது. இந்த இரண்டையும் கண்டுபிடித்த மத்திய அரசின் புலனாய்வுத்துறை பொறி வைத்து இவர்களைப் பற்றி பல ரிப்போர்ட்டுகளை தயார் செய்தது.

இந்த தகவல்கள் எல்லாம் மாநில உளவுப் பிரிவு தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு தெரியும். “அவர் இந்த தகவல்களை உதயசந்திரனு டன் சேர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு போகாமல் மறைத்து விட்டார்” என குற்றம் சாட்டு கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். முதல்வரின் இரண்டாம் நிலை செயலாளராக இருக்கக்கூடிய உமாநாத். எடப்பாடி ஆட்சியில் தமிழ்நாடு ‘மெடிக் கல் சேல்ஸ் கார்ப்பரேசன்’ தலைவராக இருந்தவர். கொரோனா காலத்தில் பெருமளவு ஊழல் நடந் துள்ளது என கண்டுபிடித்த மத்திய அரசு அவ ருக்கு எதிராகவும் கத்தியைத் தீட்டி வருகின்றது.

Advertisment

‘ஜி ஸ்கொயர்’ ரெய்டைத் தொடர்ந்து அதில் கிடைத்த சில தகவல்களின் படி கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் ‘லைக்கா’ பட நிறுவனத்தையும், அமலாக்கத்துறை மற்றும் இன்கம்டாக்ஸ் துறையினர் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தி தேடிவரும் சூழலில், “தன்னை நோக்கி மத்திய அரசு பாயும் என உணர்ந்த உதயசந்திரன் முதல்வரின் செயலாளர் என்ற இடத்திலிருந்து தனது உடல்நிலையைக் காரணம்காட்டி விலகிக் கொண்டார். அத்துடன் தனது நண்பரான நந்த குமாரையும் அதிலிருந்து விலக வைத்துவிட்டார்” என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

இதற்கிடையே, மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பா.ஜ.க.வின் தாக்குதலுக்குப் பயந்து மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை இருவரும் காப்பியடித்தார்கள் என்கிற கூத்தும் நடந்திருக்கிறது. “இதற்காக என்னை மிரட்டினார்கள் என கல்விக் கொள்கை குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு இந்தக் கூட்டணியின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றிவிட்டது” என மாற்றத்தின் பின்னணியை விளக்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.