புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப ஆகும் ரயில் கட்டணம் தொடர்பாக மத்திய-மாநில அரசுளுக்கிடையிலான விவாதங்களால் மூடிமறைக்கப்படும் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
இரண்டு கட்ட ஊரடங்கின்பின்பும் கொரோனா கட்டுக்கடங்காத நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பவேண்டு மென கிளர்ச்சிகள் எழுந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை யொட்டி, அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ளலாமென உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.
முதலில் தொழிலாளர்கள் ஊர்திரும்ப ஆகும் மொத்தச் செலவையும் மாநிலங் களின் தலையில் கட்டியது மத்திய அரசு. இது மாநில அரசுகளை டென்ஷனாக்கிய நிலையில், தொழிலாளர்கள் ஊர்திரும்பும் செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்று கொரோனா கிரவுண்டில் சிக்சர் அடித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதையடுத்து தொழிலாளர்கள் ஊர்திரும்பும் செலவில் 85 சதவிகிதத்தை மத்தி
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப ஆகும் ரயில் கட்டணம் தொடர்பாக மத்திய-மாநில அரசுளுக்கிடையிலான விவாதங்களால் மூடிமறைக்கப்படும் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
இரண்டு கட்ட ஊரடங்கின்பின்பும் கொரோனா கட்டுக்கடங்காத நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பவேண்டு மென கிளர்ச்சிகள் எழுந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை யொட்டி, அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ளலாமென உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.
முதலில் தொழிலாளர்கள் ஊர்திரும்ப ஆகும் மொத்தச் செலவையும் மாநிலங் களின் தலையில் கட்டியது மத்திய அரசு. இது மாநில அரசுகளை டென்ஷனாக்கிய நிலையில், தொழிலாளர்கள் ஊர்திரும்பும் செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்று கொரோனா கிரவுண்டில் சிக்சர் அடித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதையடுத்து தொழிலாளர்கள் ஊர்திரும்பும் செலவில் 85 சதவிகிதத்தை மத்திய அரசும் 15 சதவிகிதத்தை மாநில அரசும் ஏற்றுக்கொள்ளுமென அறிவித்து தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து நழுவமுயன்றது பா.ஜ.க.
இதையொட்டி நடந்த சில விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், காங்கிரஸ் ஆதரவுதரும் மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்திய அரசாங்கம்தான் 85 சதவிகிதம் பொறுப்பேற்றுக்கொண்டதே...… பிறகு ஏன் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கவேண்டுமென பா.ஜ.க. ஆதரவாளர்கள் அரசியல் ஆதாயம் தேடமுயன்றனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாக ஊர் திரும்பியதையும், அந்தப் பயணத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்ததையும் நாடே பார்த்தது. அப்படி அவர்கள் ஊர்திரும்ப முக்கியக் காரணம், ஊரடங்கு காலத்தில் தாம் தங்கியிருக்கும் இடத்தில் செலவிட பணமில்லாததே முக்கியக் காரணம். அப்படியிருக்க, அவர்கள் ஊர்திரும்ப ரயில் கட்டணத் தைக் கோருவது எப்படி நியாயமாயிருக்க முடியும்?
இப்போது மத்திய அரசு அறிவித் திருக்கும் 85 சதவிகித கட்டணக் கழிவு பற்றி பா.ஜ.க.வைச் சேர்ந்த சம்பித் பத்ரா அளிக்கும் விளக்கம் இப்படியிருக்கிறது…
""சாதாரண காலகட்டத்தில்… இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 47 சதவிகித மான்யம் அளிக்கிறது மத்திய அரசு. இப்போது தொழிலாளர்களுக்கு விடப்படும் சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியைப் பேணவேண்டிய அவசியமிருப்பதால் 1200 தொழிலாளர் களுக்கு மேல் ஏற்றிச்செல்ல முடியாது. தவிரவும் வரும்போது காலியாகவே வரவேண்டியிருப்பதால் அதில் எந்த வருவாயும் ரயில்வேக்கு கிடையாது. இருந்தும் 85 சத மான்யத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது'' என்கிறார்.
மாறாக எதிர்க்கட்சிகளோ நமுட்டுச் சிரிப்புடன், ""ஒரு சிறப்பு ரயிலுக்கு சம்பந்தப்பட்ட மாநிலம் சம்பந்தப்பட்ட ரயில்வே நோடல் ஆபிசருக்கு இப்படி யொரு சிறப்பு ரயில் வேண்டுமென கோரிக்கை வைப்பதுடன், முன்கூட்டியே 5 லட்ச ரூபாயைச் செலுத்திவிடவேண்டும். அப்புறம்தான். தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல ரயிலே வரும். தவிரவும் சம்பித் பத்ரா சொல்வதுபோல் ஏற்கெனவே இரண்டாம் வகுப்புக்கு அளிக்கும் 47 சத மானியத்தை 85 சதத்திலிருந்து கழித்தால் மீதமுள்ள 38 சத மானியம்தான் தற்போது அளிப்பது.
தவிரவும் இந்த சிறப்பு ரயிலுக்கு டிக்கெட் ஒன்றுக்கு கொரோனா சர்சார்ஜ் என குறைந்தபட்சம் ரூ 50 அதிகம் வசூலிக்கிறது. இதையும் கழித்துப் பார்த்தால் மத்திய அரசு சொல்லும் டிஸ்கவுண்ட் இருபது சதத்துக்குமேல் வராது'' என்கிறார்கள்.
மேலும் சம்பித் பத்ரா, பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்கள் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டன என்கிறார். அதாவது மற்ற மாநிலங்களும் இதுபோல் தொழிலாளர்களிடம் காசு வசூலிக்கக்கூடாது என்கிறார். ஆனால், பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் பயணிகளிடம் கட்டணம் வசூலித்திருப்பது அவர்கள் கட்சிக்காரர்கள் வாயாலேயே வெளிப்பட்டிருக்கிறது.
வழக்கமான இரண்டாம் வகுப்பு கட்டணத்தைவிட இந்த சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம் என்பதை மும்பையிலிருந்து உ.பி.யின் கோரக்பூருக்கு பயணித்த வர்களும், கேரளாவிலிருந்து ஜார்கண்ட் பயணித்தவர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஊரடங்கை அறிவித்திருப்பது மத்திய அரசு. ரயில்வேயை நிர்வகிப்பது மத்திய அரசு. ஆனால் உலகப் பேரிடராக ஒரு இக்கட்டு தேசத்தை அழுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், எந்தவித வருவாயுமில்லாத மாநிலங்கள், தொழிலாளர்களின் பயணச் செலவை சுமக்கவேண்டுமென்பது என்ன நியாயம் என மாநிலங்களின் தரப்பிலிருந்து குரல்கள் எழுகின்றன.
இன்னும் நேரடியாகச் சொன்னால், 85 சத கட்டணத்தை மத்திய அரசு பொறுப்பெடுத்துக்கொண்டால் ஒரு ஊருக்குச் செல்வதற்கு முன்பு நூறு ரூபாய் என்றால் இப்போது வெறும் 15 ரூபாயாகத்தானே இருக்கவேண்டும். ஆனால் இப்போது 150 ரூபாயாக இருப்பது எப்படி என்கிறார்கள். வழக்கமாக நாசிக்கிலிருந்து போபாலுக்கு இரண்டாம் வகுப்பு கட்டணம் 300 ரூபாய். தற்போது வசூலிக்கப்பட்டதோ 350 ரூபாய்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில அரசோ, மொத்தக் கட்டணத்தையும் நாங்கள்தான் செலுத்தி யுள்ளோம் என தெரிவித்துள்ளது. தண்டம் மாநிலங்களுக்கு, தற்பெருமை மத்திய அரசுக்கு.
- க.சுப்பிரமணியன்