ராங்கால்! சங்கர்லால் விஜய் கட்சிக்குத் தாவும் பிரபலங்கள்! இரண்டு துணை முதல்வர்கள்! அறிவாலய பரபரப்பு

ss

"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் எல்லாத் தரப்பிலும் பரபரப்பு தெரிகிறது.''”

"ஆமாம்பா, அமைச்சரவை தொடங்கி கோட்டைவரை புழுதி பறக்குதே?''”

cm

"ஆமாங்க தலைவரே, 27ஆம் தேதி இரவு 9.40-க்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சென்னையிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே இந்த பயணம் என்ற போதும், இந்த பயணத்தின் போது, முழு உடல் பரிசோதனையையும் செய்து கொள்ள இருக்கிறாராம். "சிகாகோ -அமெரிக்க தமிழர்களுடனான சந்திப்பு' நிகழ்ச்சி உட்பட மேலும் சில நிகழ்ச்சிகளிலும் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அவருடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர் உமாநாத், தொழில்துறைச் செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள். செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இரவு புறப்பட்டு 14ஆம் தேதி ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அமெரிக்காவில் அவர் இருப்பதால், தனது டேபிளில் எந்த கோப்புகளும் காத்திருக்கக் கூடாது என்று, அனைத்து கோப்புகளையும் அவர் க்ளியர் செய்திருக்கிறார். இதனால்தான் அவர் அலுவலகம் கடந்த சில நாட்களாக றெக்கை கட்டிப் பறக்கிறது. அமெரிக்கா செல்லும் அவர், அங்கிருந்தபடியே அரசு நிர்வாகத்தையும், அமைச்சர்களின் நடவடிக்கை களையும் கவனிக்கும் வகையில் சில ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.''”

"சூப்பர் ஸ்டார் ரஜினி கலாய்த்தது குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆதங்கப்படுகிறாராமே?''”

cc

"நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’"கலைஞர் எனும் தாய்'’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கார். கலைஞர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டியவர் அவர். அப்படிப்பட்ட சீனியர்களை எல்லாம் வைத்து சமாளிக்கிறீர்களே, ஹேட்ஸ் ஆஃப் ஸ்டாலின் சார்'’என்ற ரீதியில் பேசி கலகலப்பை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பேச்சை, முதல்வர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டி ரசித்து சிரித்தது. அரங்கத்தில் இருந்த துரைமுருகன் இதனை ரசித்ததுபோல் காட்டிக் கொண்டாலு

"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் எல்லாத் தரப்பிலும் பரபரப்பு தெரிகிறது.''”

"ஆமாம்பா, அமைச்சரவை தொடங்கி கோட்டைவரை புழுதி பறக்குதே?''”

cm

"ஆமாங்க தலைவரே, 27ஆம் தேதி இரவு 9.40-க்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சென்னையிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே இந்த பயணம் என்ற போதும், இந்த பயணத்தின் போது, முழு உடல் பரிசோதனையையும் செய்து கொள்ள இருக்கிறாராம். "சிகாகோ -அமெரிக்க தமிழர்களுடனான சந்திப்பு' நிகழ்ச்சி உட்பட மேலும் சில நிகழ்ச்சிகளிலும் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அவருடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர் உமாநாத், தொழில்துறைச் செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள். செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இரவு புறப்பட்டு 14ஆம் தேதி ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அமெரிக்காவில் அவர் இருப்பதால், தனது டேபிளில் எந்த கோப்புகளும் காத்திருக்கக் கூடாது என்று, அனைத்து கோப்புகளையும் அவர் க்ளியர் செய்திருக்கிறார். இதனால்தான் அவர் அலுவலகம் கடந்த சில நாட்களாக றெக்கை கட்டிப் பறக்கிறது. அமெரிக்கா செல்லும் அவர், அங்கிருந்தபடியே அரசு நிர்வாகத்தையும், அமைச்சர்களின் நடவடிக்கை களையும் கவனிக்கும் வகையில் சில ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.''”

"சூப்பர் ஸ்டார் ரஜினி கலாய்த்தது குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆதங்கப்படுகிறாராமே?''”

cc

"நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’"கலைஞர் எனும் தாய்'’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கார். கலைஞர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டியவர் அவர். அப்படிப்பட்ட சீனியர்களை எல்லாம் வைத்து சமாளிக்கிறீர்களே, ஹேட்ஸ் ஆஃப் ஸ்டாலின் சார்'’என்ற ரீதியில் பேசி கலகலப்பை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பேச்சை, முதல்வர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டி ரசித்து சிரித்தது. அரங்கத்தில் இருந்த துரைமுருகன் இதனை ரசித்ததுபோல் காட்டிக் கொண்டாலும், அவர் முகம் இறுக்கமாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குச் சென்ற துரைமுருகனிடம் கட்சியின் மூத்த மா.செ.க்கள் சிலர், "என்னண்ணே, ரஜினி உங்களை இப்படிப் பேசிட்டார்? அது நகைச்சுவையாக இருந்தாலும் உங்களை டேமேஜ் பண்ற மாதிரில்ல இருந்தது' என்று சொல்ல... துரைமுருகனோ, ’"ஆமாய்யா, ரஜினி பேசியிருக்காரு. நம்மாளு ஒருத்தன் சொல்லித்தான் என்னை நக்கலடிச்சிருக்காரு'’என ஆதங்கத்துடன் சொன்னாராம். பலருக்கும் இதே பதிலை அவர் சொல்லிக்கொண்டும் இருக்கிறாராம்.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியை பகிரங்கமாக புறக்கணித்திருக்கிறாரே எடப்பாடி?''”

"ஆமாங்க தலைவரே, மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஸுக்கு கடந்த 23ஆம் தேதி கோவையில் திருமண நிச்சய தார்த்தம் நடந்தது. மாஜி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங் கோட்டையன், தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், வீரமணி தொடங்கி அ.தி.மு.க. புள்ளிகள் பலரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க. மா.செ.க்களும் திரண்டு வந்திருந்தனர். ஆனால், இந்த நிச்சயதார்த்த வைபவத்திற்கு எடப்பாடி மட்டும் வராமல் புறக் கணித்துவிட்டார். இத்தனைக்கும் எடப்பாடிக்குத்தான் வேலுமணி, முதல் அழைப்பை வைத்திருந்தாராம். இருந்தும் இப்படி பகிரங்கமாக வேலுமணியைப் புறக்கணித்ததற்குக் காரணம், அவர் பா.ஜ.க.வின் கையாளாக மாறிவிட்டார் என்று எடப்பாடி கருது வதால்தானாம். எடப்பாடியின் இந்தப் புறக்கணிப்பால் அப்செட்டான வேலுமணி, அவரிடம் கேட்டுவிட்டுத்தான் இந்த தேதியில் விழா வையே வைத்தேன். நிச்சயம் வர்றேன்னு சொன்னார். ஆனால், வேண்டு மென்றே இப்படி செய்துவிட்டார் என்று வந்திருந்த சீனியர்களிடம் புலம்பி னாராம். இது அ.தி.மு.க.வில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.''”

"எடப்பாடியின் மனநிலை இதுதானா?''”

"ஆமாங்க தலைவரே, எடப்பாடியைப் பொறுத்தவரை பா.ஜ.க. சொல்லித்தான் வேலுமணியும், தங்கமணியும் தனி ஆவர்த்தனம் செய்கிறார் கள் என்று நினைக்கிறார். அதனால், அண்மையில் இருவரிடமும் எரிச்சலாகப் பேசிய அவர், "நீங்கள் இங்கிருந்து டெல்லிக்கு சேவகம் செய்வதைவிட, பேசாமல் பா.ஜ.க.விற்கே சென்றுவிடுங்கள் என்று மனம் நொந்து சொன்னாராம். இதற்கு இருவரும் ’"அப்படி எல்லாம் இல்லை'’என்று சிரித்து மழுப்பினார்களாம். இந்த நிலையில், 2 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. என அறிவிக்கவிருக்கும் எடப்பாடி, கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச விரும்புகிறாராம். இதற்கிடையே வேலுமணி நியமித்த 13 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 10 எம்.பி. வேட்பாளர்களை அவர், தி.மு.க. அமைச்சர் ஒருவர் சொல்லியே நியமித்தார் என்று எடப்பாடிக்கு மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறதாம். அதனால் அவரது கோபம் பன்மடங்காகி இருக்கிறது என்கிறார்கள்.''”

"நடிகர் விஜய்யின் கட்சிக்குப் போக பிரபலங்கள் பலரும் முண்டியடிக்கிறார்களே?''”

vv

"நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த இடத்தில் அமரும் ஆசை பிரபலங்கள் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.. குறிப்பாக புதுக்கட்சிகளைத் தேடிப்போகும் தமிழருவி மணியன், பழ.கருப்பையா ஆகியோர், விஜய் கட்சிக்குப் போக தூதுவிட்டு வருகிறார்கள். பா.ஜ.க. மீது நம்பிக்கை வைத்து டெல்லியையே சுற்றி வந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தும், அங்கு பெரிதாகக் கண்டுகொள்ளப் படாததால் இப்போது விஜய் கட்சிக்குச் செல்ல, ரூட்போட்டு வருகிறாராம். ஓ.பி.எஸ்.ஸுக்கு சாணக்கியராக இருந்துவரும் பண்ருட்டி ராமச்சந்திரனும், தமிழக வெற்றிக்கழகம் செல்ல முயற்சி எடுத்திருக்கிறாராம். இதேபோல் பா.ஜ.க. பின்னாலேயே சென்றுகொண்டிருந்த ’புதிய நீதிக் கட்சி ‘ஏசி.சண்முகமும் அவர்கள் தரப்பில் பேசிவிட்டார் என்கிறார்கள். சிறுத்தைகள் கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் ஐக்கியமான தடா பெரியசாமியும், நானும் விஜய் பக்கம் வருகிறேன் என்று கை தூக்கிக் கொண்டிருக்கிறாராம். இதேபோல் பா.ஜ.க. தரப்பில் இருக்கும் பலரும் விஜய் மோகம்கொண்டு தூதுவிட்டு வருகிறார்கள். செப்டம்பர் 22-ல் மாநாடு நடத்தும் முயற்சியில் இருக்கும் நடிகர் விஜய்யோ, தங்கள் பக்கம் வரத்துடிக்கும் பெருசுகளால், தங்கள் கட்சிக்கு சிக்கல் வர வாய்ப்பிருக்கிறதா? என்று எச்சரிக்கையோடு ஆராய்ந்து வருகிறாராம்.''”

"லண்டன் போகும் பா.ஜ.க. நிர்வாகி புதுக்கட்சி தொடங்கும் ஐடியாவிலும் இருக்கிறார்னு தகவல் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, லண்டன் சென்று திரும்பியதும் கொங்கு பிரமுகர்கள் பலத்தில் புதுக்கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்ட மிட்டிருக்கிறாராம் அந்த பா.ஜ.க. நிர்வாகி. இதை மனதில் வைத்துக்கொண்டுதான், டெல்லி தலைமை சொல்லியும் கூட அடங்க மறுத்து, எடப்பாடியுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறாராம். டெண்டர் எடுத்து முதல்வரானவர் என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கு மாதா மாதம் படியளந்து பதவியைத் தக்க வைத்துக்கொண்டவர் என்றும் எடப்பாடியை அவர் காட்டமாகவே வசைபாடி வருகிறார். கொங்கு பெல்டில் எடப்பாடிக்கு இருக்கும் அவரது சமூக ரீதியிலான ஆதரவை, தான் கட்சி தொடங்கும்போது தன் பக்கம் திருப்புவதுதான் இந்த அட்டாக்கிற்குக் காரணமாம். இந்த நிலையில் கமலாலயத்தில் அந்த நிர்வாகி கூட்டம் போட்டுப் பேசிய போது, "நான் லண்டன் சென்று திரும்பியதும் மக்களை ஈர்க்க மறுபடியும் பாதயாத்திரை போகப் போகிறேன்' என்று அறி வித்தாராம். இவரது மன நிலையை அறிந்த எவரும் கைதட்டவில்லை என் கிறார்கள். அந்த நிர்வாகியின் புதுக்கட்சி சிந்தனையால் அதிர்ந்துபோயிருக்கிறதாம் கமலாலயம்.''”

"தமிழக பா.ஜ.க.வுக்கு செயல் தலைவரை நியமிக்கும் ஆலோசனையில் டெல்லி இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, சொந்தக் கட்சியிலேயே சச்சரவை உண்டுபண்ணி வரும் அந்த தமிழக பா.ஜ.க. நிர்வாகி, வருகிற 28ஆம் தேதி டெல்லிக்கு சென்று அங்கிருந்து லண்டன் செல்கிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு, அவருடைய தலைவர் பதவி தவிர பா.ஜ.க.வில் உள்ள அனைத்து பதவிகளும் காலாவதி ஆகிறது. இந்த நிலையில்,செப்டம்பர் 1ஆம் தேதி புதிய உறுப்பினர்களைச் சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித் திருக்கிறார்கள். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்ததும் பா.ஜ.க.வில் காலியாக இருக்கும் அனைத்து பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்களாம். இதற்கிடையே, அந்த பா.ஜ.க. நிர்வாகி லண்டன் சென்று திரும்பும்வரை, தற்காலிகமாக செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாமா என்று பா.ஜ.க.வின் தேசிய தலைமை தீவிர ஆலோசனை நடத்தி யிருக்கிறது. இதையறிந்ததும், தமிழக பா.ஜ.க.வின் பெண் பிரபலங்களான தமிழிசை, வானதி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அந்த செயல் தலைவர் பதவியைக் கைப்பற்ற சோழி உருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.''”

"நானும் என் காதுக்கு வந்த அதிரடிச் செய்திகளை பகிர்ந்துக்கறேன். அமைச்ச ரவை மாற்றத்தின்போது, சீனியர்களுக்கும் மதிப் பளிக்கும் விதத்தில் உதயநிதியோடு, துரை முருகனையும் துணை முதல்வராக ஸ்டாலின் அமர்த்தவிருக்கிறார் என்று ஒரு அதிரடிச் செய்தி கிளம்பி, அறிவாலயத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. அதேபோல், துரைமுருக னிடம் இருக்கும் கனிம வளத் துறையை எடுத்து இன்னொரு சீனியர் அமைச்சருக்கு ஸ்டாலின் கொடுக்கப்போகிறார் என்றும் கூறுகிறார்கள். இதற்கிடையே துரை முருகன், கனிமவளத் துறையில் தனக்கு நெருக்கமான 30 அதிகாரி களுக்கு புதிய நியமனம், இட மாறுதல் என்று கொடுத்து ஒரே நேரத்தில் தன் பவரைக் காட்டி கோட்டை வட்டாரத்தையே திகைக்க வைத்திருக்கிறார் என்கிறார்கள்.''”

______

இறுதிச் சுற்று!

தி.மு.க.வின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் மீது 26-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலையில் ஒருவர் மதுபாட்டில்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கோவர்த்தன் அ.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி. 26-ஆம் தேதி அதிகாலையில், அறிவாலயம் பகுதிக்கு டூவீலரில் வந்த அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அறிவாலயத்திற்குள் செல்ல முயற்சித்திருக்கிறார். போலீஸ் வருவதைப் பார்த்ததும் தனது கையில் இருந்த பீர் பாட் டில்களை அறிவாலயத்திற்குள் வீசியதோடு, "மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்று கத்தியிருக்கிறார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, "சாராயத்தால் வீட்டில் தினமும் பிரச்சினை வருது. இந்த மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தருகிறது. அதனால் தி.மு.க. அரசு, மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதை சொல்லத்தான் பீர் பாட்டில்களை வீசினேன்'' எனச் சொல்லியிருக்கிறார் கோவர்த்தன்.

-இளையர்

nkn280824
இதையும் படியுங்கள்
Subscribe