"மனைவியர், கணவருக்கு அடங்கி நடக்க மறுப்பதே, குடும்பத்தில் குழந்தைகளும் வேலைக்காரர்களும் ஒழுக்கமின் றிப் போனதற்குக் காரணம்'' -இது யாரோ சிந்தனையில் தேங்கிப்போன பிற்போக்குவாதி யின் கருத்தல்ல. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாணவர்களை நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து.
சி.பி.எஸ்.இ.யின் இந்த வினாத்தாள் மீண்டுமொரு முறை சர்ச்சைக்கு ஆளாகி யிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வில் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கருத்துகள் இடம்பெற்றதற்கு எதிராக இந்தியா முழுவது மிருந்து எதிர்ப்புக் குரல்கள் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளன. வினாத்தாளைப் பார்த்ததும் இந்தியா முழுவதுமிருந்து இந்தக் கேள்விக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “"நம்பவே முடியவில்லை. இதையெல்லாமா நாம் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம்? நிச்சயமாக இந்த பிற்போக்குத்தனமான கருத்துகளை பா.ஜ.க. அரசு வலியுறுத்துகிறது. இல்லையெனி
"மனைவியர், கணவருக்கு அடங்கி நடக்க மறுப்பதே, குடும்பத்தில் குழந்தைகளும் வேலைக்காரர்களும் ஒழுக்கமின் றிப் போனதற்குக் காரணம்'' -இது யாரோ சிந்தனையில் தேங்கிப்போன பிற்போக்குவாதி யின் கருத்தல்ல. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாணவர்களை நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து.
சி.பி.எஸ்.இ.யின் இந்த வினாத்தாள் மீண்டுமொரு முறை சர்ச்சைக்கு ஆளாகி யிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வில் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கருத்துகள் இடம்பெற்றதற்கு எதிராக இந்தியா முழுவது மிருந்து எதிர்ப்புக் குரல்கள் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளன. வினாத்தாளைப் பார்த்ததும் இந்தியா முழுவதுமிருந்து இந்தக் கேள்விக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “"நம்பவே முடியவில்லை. இதையெல்லாமா நாம் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம்? நிச்சயமாக இந்த பிற்போக்குத்தனமான கருத்துகளை பா.ஜ.க. அரசு வலியுறுத்துகிறது. இல்லையெனில் அவை ஏன் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்''’என கேள்வியெழுப்பியுள்ளார்.
சி.பி.எம். கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப் பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இந்த விவகாரம் குறித்து, ஆணாதிக்க சிந்தனை நிரம்பிய இத்தகைய கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சி.பி.எஸ்.இ. தலைவர் மனோஜ் அகுஜாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“அக்கடிதத்தில்... "சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாளில் உரைநடைப் பகுதி வாசிப்பு பகுதியில் இடம்பெற்ற பத்தி, பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்டுள்ளது. பெண்விடுதலை என்பது குழந்தைகள் மீதான பெற்றோர் அதிகாரத்தைச் சிதைத் திருக்கிறது என்பதை மக்கள் தாமதமாகவே உணர்ந்திருக்கிறார்கள்… கணவனின் செல்வாக் குக்கு மனைவி கீழ்ப்படிவதன் மூலமாகவே, அவள் தன் குழந்தைகளிடமிருந்து கீழ்ப்படி தலைப் பெறமுடிகிறது' என அது தொடர்கிறது. இந்தக் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மேலும் சமூக வரலாற்றின் பரிணாமத் தையும், பாலின நிகர்நிலை குறித்த நவீன சிந்தனைகளை மறுப்பதாகவும் உள்ளது. சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் இல்லாமலிருந்திருந்தால், சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம், குழந்தைத் திருமணம், தேவதாசி முறை இன்னும் நீடித்திருந்திருக்கும். 1930-களில் இந்தியாவில் 3 கோடி குழந்தை விதவைகள் இருந்தனர். பெண்ணுரிமைப் போராட்டங்களே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தன.
ஆனால் கேள்வித்தாளை உருவாக்கியவர் கள், மாணவர்கள் மத்தியில் பிற்போக்கான கருத்துகளை பரப்பியிருக்கிறார்கள். இது அவர்களின் மனதைப் பாழ்படுத்துவதோடு, தவறான பார்வைகளைப் பதியச் செய்யும். அரசியல் சாசனம் வலியுறுத்தும் பாலின சமத்துவத்துக்கு எதிரான கருத்துகள் இடம் பெறக் காரணமானவர்கள்மீது கடும் நட வடிக்கை எடுப்பதோடு, உங்கள் நிறுவனத்தின் கீழ் வரும் பள்ளிகள் பிற்போக்கான கருத்துகளை பரப்பக்கூடாதென அறிவுறுத்துமாறும் வேண்டுகிறேன்''’என குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் இப்பிரச்சனை எதிர்க்கட்சி களால் எழுப்பப்பட்ட நிலையில், சி.பி.எஸ்.இ. நிர்வாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், "கடந்த 11-ஆம் தேதி நடந்த 10-ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளால் நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. கல்வி நிபுணர்கள் பரிந் துரையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய கேள்விகள் நீக்கப்படுகிறது. அதற்கு உண்டான முழு மதிப்பெண் கள் அனைவருக்கும் வழங் கப்படும். இனி இதுபோல் எந்த பிரச்சனைகளும் வராத அளவுக்கு முன்னெச் சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித் துள்ளார்.
2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 6-ஆம் வகுப்புத் தேர்வில் தலித் என்பதன் பொருள் என்ன?, முஸ்லிம்களின் பொதுவான குணாம்சம் என்ன? -என்பதுபோல் கேள்வியமைத்து, அதற்கு சர்ச்சைக்குரிய பதில்களும் இடம்பெற்றது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு கேள்வித்தாள் பதிவிடப் பட்டு பிரச்சனை கிளம்பியது. இதையடுத்து சென்னை மண்டலத்துக்குட்பட்ட 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இதுபோன்ற கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படவில்லை என மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதேசமயம் தேசிய பாடத்திட் டத்தில் தீண்டாமை எனும் கருத்துக்குப் பதிலாக தீண்டத்தகாதவர்கள் எனும் பொருளில் "அன்டச்சபிள்ஸ்' என்றே இடம்பெற்றிருக்கிறது. "செருப்பை உற்பத்தி செய்பவர்கள் யார், கீழ் ஜாதியினர், உழைக்கும் ஜாதியினர்' (சூத்திரர்) என்ற தலைப்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதை பலரும் கவனப்படுத்த, பாடத்திட்டத்தில் இத்தகைய சர்ச்சைக்குரிய விஷயங்கள் சேர்க்கப்படுவதே கேள் வித்தாள்வரை இடம் பெறக் காரணமாகி விடுகிறது என்ற விமர் சனங்கள் எழுந்தன.
பாடத்திட்டங்களை உருவாக்குபவர்களிலும், கேள்வித்தாள் தயா ரிப்பவர்களிலும் ஜாதி மேலாண்மை யையும், சமூகப் பிளவுகளை யும் விரும்பு பவர்கள் தொட ரும் வரை சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.