Advertisment

சி.பி.ஐ. வளையம்! காங்கிரஸ் தயவை நாடும் விஜய்!

vijay

"கட்சிக் கொள்கையின்படி "ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்பதனை நினைவில் கொண்டு வருகின்ற 12ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து முடிவெடுங்கள்'' என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் நிபந்தனை விதித்துள்ளது நடிகர் விஜய்யின் த.வெ.க. பல காங்கிரஸ் தலைவர் களிடையே த.வெ.க. கூட்டணி தொடர்பாக ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கியதால் காங்கிரஸ் கட்சி சலசலத்துள்ளது. 

Advertisment

12ஆம் தேதி என்ற நிபந்தனை விதிக்க என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்த நிலையில், "கரூரில் நடந்த 41 படுகொலைகள் தொடர்பாக வருகின்ற 12ஆம் தேதி டெல்லியில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சி.பி.ஐ.யிடமிருந்து சம்மன் வந்துவிட்டது. அதற்கு பயந்துதான் காங்கிரஸிற்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற கூட்டணித் தூண்டிலை போட்டுள்ளது த.வெ.க. தரப்பு!

Advertisment

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடிகர் விஜய்யை பார்க்க அணி திரண்ட மக்கள் கூட்டத்திற்கு, த.வெ.க. தரப்பில் தரப்பட்ட மாறுபட்ட அறிவிப்புகளாலும்,  விஜய்யின் அஜாக்கிரதை யாலும் 41 உயிர்கள் பலியாகின. ஆளும் தி.மு.க. அரசு தனது அரசு இயந்திரத்தை திறம்பட இயக்கியதால் மேலும் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. எனினும், உயிர்ப்பலிகளுக்குக் காரணம் நாங்கள் இல்லை என த.வெ.க. வாதிட்ட நிலையில், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ.யின் தொடர் விசாரணையில், கரூர் அலு வலகத்தைத் தாண்டி டெல்லியிலும் விசாரணை தொடர்ந்தது. விசாரணைக்கு த.வெ.க. தரப்பில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் மற்றும் பிரச்சார வாகன ஓட்டுநர் அஜித் குமார் ஆகியோரும், காவல்துறை தரப்பில் எஸ்.பி. ஜோஸ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்

"கட்சிக் கொள்கையின்படி "ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்பதனை நினைவில் கொண்டு வருகின்ற 12ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து முடிவெடுங்கள்'' என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் நிபந்தனை விதித்துள்ளது நடிகர் விஜய்யின் த.வெ.க. பல காங்கிரஸ் தலைவர் களிடையே த.வெ.க. கூட்டணி தொடர்பாக ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கியதால் காங்கிரஸ் கட்சி சலசலத்துள்ளது. 

Advertisment

12ஆம் தேதி என்ற நிபந்தனை விதிக்க என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்த நிலையில், "கரூரில் நடந்த 41 படுகொலைகள் தொடர்பாக வருகின்ற 12ஆம் தேதி டெல்லியில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சி.பி.ஐ.யிடமிருந்து சம்மன் வந்துவிட்டது. அதற்கு பயந்துதான் காங்கிரஸிற்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற கூட்டணித் தூண்டிலை போட்டுள்ளது த.வெ.க. தரப்பு!

Advertisment

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடிகர் விஜய்யை பார்க்க அணி திரண்ட மக்கள் கூட்டத்திற்கு, த.வெ.க. தரப்பில் தரப்பட்ட மாறுபட்ட அறிவிப்புகளாலும்,  விஜய்யின் அஜாக்கிரதை யாலும் 41 உயிர்கள் பலியாகின. ஆளும் தி.மு.க. அரசு தனது அரசு இயந்திரத்தை திறம்பட இயக்கியதால் மேலும் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. எனினும், உயிர்ப்பலிகளுக்குக் காரணம் நாங்கள் இல்லை என த.வெ.க. வாதிட்ட நிலையில், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ.யின் தொடர் விசாரணையில், கரூர் அலு வலகத்தைத் தாண்டி டெல்லியிலும் விசாரணை தொடர்ந்தது. விசாரணைக்கு த.வெ.க. தரப்பில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் மற்றும் பிரச்சார வாகன ஓட்டுநர் அஜித் குமார் ஆகியோரும், காவல்துறை தரப்பில் எஸ்.பி. ஜோஸ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள்             தரப்பு விளக்கத்தை பதிலாக அளித்தனர். விசாரணையின் இறுதியில், ஆதவ் அர்ஜுனா முகம் கறுத்து வெளியேறியதாகக் கூறப்பட்டது. இந்த சூழலில், விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்க்கு வருகின்ற 12ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மனை கடந்த 2ஆம் தேதியன்று அனுப்பியது சி.பி.ஐ.


"வருகின்ற 12ஆம் தேதி டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் வந்ததிலிருந்து விஜய்க்கு மூடு அவுட்! அவரைப் பொறுத்தவரை இது முதல் காவல் விசாரணை. இதுநாள்வரை சாதாரண போலீஸ் விசா ரணையில்கூட ஆஜரானது கிடையாது. அதற்கான பக்குவமும் அவருக்கு இல்லை. இதற்கு முன்பாக வருமான வரித்துறை சோதனை நடந்தது. அப்பொழுதுகூட அதி காரிகள் கேட்ட கேள்விகளுக்கு ஆடிட்டரை வைத்து சமாளித்துவிட்டார். ஆனால் இப்பொழுது என்ன செய்வதென அவருக்கு தெரியவில்லை. சட்டப்படி முதலிரண்டு சம்மன்களை தவிர்த்து மாற்று நாள் கேட்கலாம். ஆனால் மூன்றாவது சம்மனுக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும். மூன்றாவது சம்மனுக்கு செல்லவில்லை யென்றால் தான் அரஸ்ட் வாரண்ட் வரை செல்லும். அப்படியிருக்க, வருகின்ற 22, 23 தேதிகளில் ஆஜராக தேதி கேட்க வாய்ப்பிருக்கின்றது. அப்படி யிருந்தாலும் எப்படி இதனை சமாளிப்பார்? அதற்காகத் தான் காங்கிரஸ் உதவியை நாடுகின்றார்'' என்றார் பனையூர் அலுவலக நிர்வாகி ஒருவர்.

விஜய்யின் அழைப்பை ஏற்பது குறித்து காங்கிரஸில் இரு வேறு கருத்துகள் நிலவு கின்றன. தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று சில புள்ளிவிபரங்களையும் கூறுகிறார்கள். 

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி மட்டுமே காங்கிரஸை கரை சேர்க்கும். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், அதற்கடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி மட்டுமே வென்றது. சொல்லிவைத்ததுபோல் 2019-ல் 39 எம்.பி.க்கள், 2024ல் 40 எம்.பி.க்கள். த.வெ.க. பக்கம் கூட்டணிக்கு சென்றால் அவர்கள் 70 சீட்கள் தருவார்கள் என்கின்றீர்கள். அதில் எத்தனை வெல்வீர்கள்? 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டது, எட்டில் வென்றது. அதன் வெற்றி  19%. 2021-ல் அதே கூட்டணியில் 25 சீட்களை மட்டுமே பெற்று போட்டியிட்டது, 18-ல் வென்றது. அதனின் வெற்றி 72%. இதனை வைத்தே நாம் கணிக்க வேண்டாமா? சிலரின் தேவைக்காக த.வெ.க. சென்றால் ஒரு சீட்டாவது கிடைக்குமா? தி.மு.க. கூட்டணி வேண்டு மென்பது கார்கே, ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, ஜோதிமணி போன்றோரின் விருப்பம். ஆனால் தற்பொழுது கட்சியில் எம்.எல்.ஏ.க்களாக இருக்கின்ற நபர்களில் பலர் தங்களுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்கின்ற எண்ணத்தில் த.வெ.க. என்கின்றனர். அங்குதானே கூடுதல் சீட் கொடுப்பார்கள். அப்படி கூட்டணி அமைந்துவிட்டால் நிற்பதற்கு ஆள் இருக்காது. மீண்டும் நமக்கே கிடைக்கும் என்கின்ற எண்ணம். இதனை பிரவீன் சக்ரவர்த்தி அறுவடை செய்கின்றார். ஆனால், ஒருவேளை காங்கிரஸ், த.வெ.க. பக்கம் போனால் மீண்டும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை போன்ற கட்சிகள் தோன்றலாம் என்பதே உண்மை'' என்கின்றார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர்.

இது இப்படியிருக்க, "விஜய்யை பொறுத்தவரை பா.ஜ.க.விடம் சேர்ந்தால் நமக்கு கிடைக்கவுள்ள மைனாரிட்டி வாக்குகள் சுத்தமாகக் கிடைக்காது. அதுபோக, பிற்காலத்தில் த.வெ.க.வையே அழித்துவிடும் என்பதில் உறுதியாய் இருக்கின்றார். அ.தி.மு.க.வை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இருப்பினும் பா.ஜ.க. தவிர்த்த அ.தி.மு.க. என்றால்கூட விஜய்க்கு ஓ.கே. ரகம்தான். ஆனால் ஜெ. போன்று, நான் மட்டுமே முடிவெடுப்பேன். யாருடைய பேச்சையும் கேட்கமாட்டேன் என்பது விஜய்யின் பாணி. அதனால் அ.தி.மு.க.வுடன் ஒன்றுசேர வாய்ப்பில்லை. விஜய்யை சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லிக்கு வரவழைத்து, "கரூரில் போலீஸ் ஒத்துழைத்தது, அதற்கு நன்றி என்றீர்கள்! அப்புறம் ஏன் போலீஸை குறைகூற வேண்டும்? கரூர் வேலுச்சாமிபுர கூட்டத்திற்கு முன்பு நாமக்கல் கூட்டம் காலை 8.30 மணிக்கு என அறிவிக்கப்பட்டது. நீங்கள் சென்னை வீட்டிலிருந்து புறப்பட்டதே லேட்தான். திட்டமிட்டே காலதாமதம் செய்தீர்களா? பயண மாறுதல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தினீர்களா? காவல்துறைக்கு இதுகுறித்து தெரிவிக்கப் பட்டதா? கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு        நீங்கள் வரும்போது இரவு 7.15 மணி. கரூர் வரும்வரை உங்களது பிரச்சார வாகனத்திற்கு பின்னால் நிறைய வாகனங்கள் வந்தது உங்களுக்கு தெரியுமா? கரூர் வேலுச்சாமிபுரம் குறித்து முன்னரே தெரிவிக்கப் பட்டதா? கரூர் சம்பவத்திற்கு பிறகு திருச்சிக்கு செல்ல உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் யார்? யார்?' என்பன உள்ளிட்ட கேள்வி களுடன் சி.பி.ஐ. காத்திருக்க, அதன்மூலம் விஜய்யை தன்பக்கம் வைத்துக்கொள்ள பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால் காங்கிரஸுடன் கூட்டணி என்றால் இந்த விவகாரத்தை பா.ஜ.க.விற்கு எதிரான பிரச்சனையாக மாற்றி, தன்னை காங்கிரஸ் காப் பாற்றும் என்பது விஜய்யின் நம்பிக்கை. அதற்காகத்தான் "ஆட்சி அதிகாரத்தில் பங்கு' எனத் தூண்டிலைப் போட்டு காத்திருக்கின்றார். இது கெடு அல்ல! காங்கிரஸிடம் சரணாகதி அடைந்துள்ளார் விஜய்' என்கின்றார் விபர மறிந்த ஒருவர்.

12ஆம் தேதி மட்டுமல்ல, வருகின்ற அனைத்து நாட்களும் விஜய்க்கு சோத னையான காலங்களே!


___________
கார் ஷெட்டில் பி.ஏ! அப்செட்டில் செங்ஸ்!

vijaybox

"எம்.ஜி.ஆர்., ஜெ.விற்கு பிறகு விஜய்க்கு ஆலோசகராக இருக்கலாம். உங்களை விட்டால் அந்த இடத்திற்கு பொருத்தமானவங்க யாரும் இல்லை'' என பரிவட்டம் கட்ட, எடப்பாடி பழனிச்சாமி யோடு ஏற்பட்ட புகைச்சலால் வேறு வழியில்லாமல் த.வெ.க.வில் இணைந்தார் செங்கோட்டையன். வந்த வேகத்திலேயே ஈரோடு பெருந்துறையில் பொதுக்கூட்டம் நடத்தி மாஸ் காட்டினார். 

கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கின்றோம். நம்முடைய ஆலோசனையில் தான் கட்சி இயங்குகின்றது என்று அவர் நினைத்துக்கொண்டார் போலும். கட்சியின் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடக்கும்போது தன்னுடைய உறவினரும், பி.ஏ.வுமான நவீன் என்பவரையும் கூட்டத்தில் வைத்துக்கொள்வது செங்கோட்டையனின் வழக்கம். கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களெல்லாம் த.வெ.க.வில் இணைய பனையூர் அலுவலகம் வந்தபொழுது, விஜய், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் செங்கோட்டையன் கலந்துகொண்ட கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடந்திருக்கிறது. வழக்கம்போல் இந்த கூட்டத்திலும் செங்கோட்டையனின் பி.ஏ. ஆஜர்.

"ஏம்பா, அவரை அப்புறப்படுத்துங்க. இங்க யாரும் நிற்கக்கூடாது. கூட்டத்திற்கு சம்பந்தமில்லாத யாரும் கூட்டத்தில் இருக்கக்கூடாது. செங்கோட்டையனே புரிந்திருப்பார் என நினைத்தேன். ஏற்கெனவே இரண்டு கூட்டத்திற்கு கூட்டி வந்தார். மன்னித்தோம், மாறவில்லை! இப்பவும் கூட்டி வந்துள்ளார். இது அவருடைய ஆபீஸ் கிடையாது'' என புஸ்ஸிஆனந்த் காட்டமாகக் கத்த, பவுன்சர்கள் செங்கோட்டையன் பி.ஏ.வை கார் நிற்குமிடத்தில் நிற்க வைத்தனர். "சார், கீழே அலுவலகத்தில் உட்கார வைத் திருக்கலாம். கார் ஷெட்டில் நிற்க வைக்கலாமா? இது எனக்கான மரியாதையா?'' என அப்செட்டாகி நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளார் செங்கோட்டையன்.

nkn100126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe