டிகர் விஜய்யை தங்களது கூட்டணிக்கு கொண்டுவர அனைத்து விதமான தந்திரங்களையும் பா.ஜ.க. தயார் செய்து வருகிறது. அதில் முதலாவது, கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை.. இரண்டாவது, வருமான வரி கட்டுவதில் விஜய் செய்த நூற்றுக் கணக்கான கோடி வரி ஏய்ப்பு பற்றிய விசாரணை. கரூர் சம்பவம் தொடர் பாக பிரவீன்குமார் என்கிற குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுதான் முதலில் விசாரித்து வந்தது. தற்பொழுது மேலும் ஆறு பேர் அந்தக் குழுவில் இணைந்திருக்கிறார்கள். மொத்தம் பன்னிரண்டு பேர் கொண்ட பெரிய குழு கரூர் சம்பவத்தை விசா ரிக்கிறது. சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில்  செயற்கைக் கோள் உதவியுடன் 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் பொதுக்கூட்டம் நடந்த சாலையை ஆய்வு செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் அந்தப்பகுதியில் குடியிருக் கும் பொதுமக்கள் நானூறுக் கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி தற்காலிக சி.பி.ஐ. அலுவலகமாக செயல்படும் பயணியர் விடுதிக்கு வந்து சாட்சி சொல்லுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் அழைக்கிறார் கள். அவர்களிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். 

Advertisment

த.வெ.க.வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோ    ருக்கு சம்மன் அனுப்பப்பட்டு  அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்த த.வெ.க.வின் தலைமை அலு வலகமான பனையூருக்கு செல்ல திட்டமிட்டுள்ள சி.பி.ஐ. த.வெ.க.வின் மற்ற நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோரையும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இறுதியாக நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பி அவரையும் விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக இறந்து போனவர்களின் உறவினர்களிடம் விசாரிப்பார்கள் என விஜய்யின் வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தார்கள். அதனால்தான் விஜய் அவர்களை அழைத்து ஆறுதல் தெரிவித் திருந்தார். ஆனால் சி.பி.ஐ. விஜய்க்கு சம்பந்தமில்லாத பொதுமக்களிடம் ஒரு பரவலான பிரமாண்ட விசாரணையை நடத்தி வருகிறது. எத்தனை மணிக்கு விஜய் வருவார் எனச் சொல்லப் பட்டது.. அவர் எத்தனை மணிக்கு வந்தார்.. அவருடன் எத்தனை பேர் வந்தார்கள். அங்கு கூடும் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் உட்பட என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன என விரிந்து பரவும் விசாரணை வளையங்கள் விஜய் வட்டாரத்தை பீதியடைய வைத்துள்ளது. தமிழக அரசு கூட இவ்வளவு விரிவான விசாரணை நடத்தவில்லை. நடிகர் விஜய்யை சாட்சியாகக் கூட வழக்கில் சேர்த்து விசாரிக்கவில்லை. அவர் பக்கமே தமிழக போலீஸ் செல்லவில்லை. ஆனால் சி.பி.ஐ. மிக விரிவான விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. இது  விஜய் வட்டாரத்தை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. அத்துடன் வருமான வரித்துறையின் புலனாய்வுப்பிரிவு 2016-17ல் விஜய் 170 கோடி கட்ட வேண்டும் எனத் தெரிவித் திருந்தது. அது தொடர்பாக நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்திருந்தார் விஜய். 

Advertisment

அதில், "எனக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.. 34 தமிழக மாவட்டங்களிலும் 4 புதுச்சேரி மாவட்டங்களிலும், இது தவிர கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. எனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் போஸ்டர் அடிப்பது, பூஜை செய்வது, பட்டாசு வெடிப்பது என சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் ஈடுபடுவார்கள். அதற்கான செலவுகளுக்காக நான் எனது சம்பளத்திலிருந்து பணம் கொடுப்பேன். அதையெல்லாம் கணக்கில் கொண்டுவர முடியாது'’என விஜய் தனது நீதிமன்ற வழக்குகளில் வருமான வரித்துறைக்கு எதிராகக் கூறியிருந்தார். ஆனால், “இது ஒரு வருடத்திற்கான விளக்கம்தான். தொடர்ந்து பல வருடங்களாக கணக்கில் வராத பணத்தை விஜய் வாங்கியிருக் கிறார். அந்த கணக்குகள் எங்கே?”என மத்திய வருமான வரித்துறை கேள்வி எழுப்பியுள்ளது. வருமான வரித்துறையின் கணக்குப்படி பார்த்தால் விஜய் நூற்றுக்கணக்கான கோடிகள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள். இந்த விசாரணை தற்பொழுது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள். 

விஜய்க்கு நெருக்கமான உறவினர்கள் விஜய் நடிக்க வருவதற்கு முன்பு சாதாரணமாக இருந்தார்கள். தற்பொழுது அவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளார்கள். அவர்கள் மீதும் வருமான வரித் துறை மோசடி போன்ற பொருளாதாரக் குற்ற வழக்குகள் உள்ளன. அதை இப்பொழுது சீரியஸாக மத்திய அரசு விசாரிக்கத் தொடங்கி யுள்ளது. “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை துவங்குவதற்கு ஒரு காரணம், அவர் மீது இந்திரா காந்தி தொடுக்க முயற்சித்த வருமான வரித்துறை வழக்குகள்தான். அதே பாணியில் பா.ஜ.க.வும் கரூர் சம்பவம் மற்றும் விஜய், அவரது உறவினர்கள் மீதான பொருளாதார வழக்குகள் ஆகியவற்றை கையிலெடுத்துள்ளது. விஜய்ராகுல் காந்தியோடு நெருக்கமாக இருப்பதுவும், ‘பாம்புக்கு தலை மீனுக்கு வால்’ என நீக்குப்போக்கு காட்டி வருவதும் அமித்ஷாவுக்கு சுத்தமாகப் பிடிக்க வில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று வெளிப்படையாகக் கூட்டணி விசயத்தில் பதில் சொல் என அமித்ஷா டிசம்பர் மாதம் வரை கெடு விதித்திருக்கிறார். அதற்குள் விஜய் பதில் சொல்லா விட்டால் அவர் மீது  மேலும் பல வழக்குகள் பாயும்” என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். 

Advertisment