ddவிவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் இரு கண்களாகக் கொண்ட நாகப்பட்டினம் நாடாளு மன்றத் (தனி) தொகுதியில். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

பட்டியல் சமூகத் தவர்களை அதிகம் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் முக்குலத் தோர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், மீனவர்கள் என மற்ற சமூகத்தினரும் பரவலாக இருக்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார். சிறுவயது முதலே போராட்டக்களத்தில் மக்களோடு மக்களாக நின்றவர். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருந்தபொழுது வெண்ணாற்றில் மண்டிக்கிடந்த நெய்வேலி காட்டாமணக்கு களை அழித்து பாராட்டுப் பெற்றவர். காவிரிப் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, மீத்தேன் உள்ளிட்ட விவசாயத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு மக்களிடம் நற்பெயர் ஈட்டியவர்.

அ.தி.மு.க. சார்பாக சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். இவர் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் மாநில விவசாய அணி துணைத்தலைவராக இருந்து, பாராளுமன்ற உறுப்பினருக்கான சீட் கேட்டு, அங்கு தனக்கு சீட் கிடைப்பதற் கான வாய்ப்பில்லை என்று விரக்தியில் இருந்தவரை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அ.தி.மு.க.வுக்கு அழைத்துவந்து, சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

Advertisment

ss

"அ.தி.மு.க.வில் இணைவதற்கு "முன்பு நாகை தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் வாங்கிக் கொடுப்பதாக இருந்தால், கட்சிக்கு 10, உங்களுக்கு 10, தேர்தல் செலவு 30 சி செலவு செய்வேன்' என பேசி முடித்து உத்தரவாதத் தோடு இணைந்தார். கட்சி விதிப்படி அ.தி.மு.க.வில் உறுப்பினராகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும், ஆனால் பணம் எல் லாத்தையும் மாற்றிவிட்டது'' ’என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரமேஷ், செந்தில், அரசன் என மூவருக்கிடையே போட்டி நிலவிய நிலையில், சித்தமல்லி பகுதியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான முருகையனின் மகனும் சிட்டிங் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மைத்துனருமான ரமேஷ் களத்தில் போட்டியிடுகிறார்.

Advertisment

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கார்த்திகா போட்டியிடுகிறார். இவர் கோவையைச் சேர்ந்த பெண் பொறியாளர். அனைவருக்கும் முதலாக தொகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தேர்தல் பரபரப்பை உண்டாக்கியதோடு முதற்கட்ட பிரச்சாரத் தையும் செய்துவருகிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர் சுர்ஜித்சங்கர், "ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி விமான நிலையம் அமைக்கப் பாடுபடுவேன்'’என்று பெரிய வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

சி.பி.ஐ. செல்வாக்கை செல்லுபடியாக்க கடுமையாக போராட வேண்டியுள்ளது/