Advertisment

சி.பி.ஐ. வளையத்தில் டேவிட்சன் ஆசிர்வாதம்! -பகீர் தகவல்கள்!

ss

மிழக உளவுத்துறை தலைவராக இரண்டாண்டு காலம் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர் வாதத்தை டம்மி பதவிக்கு தூக்கியடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

அரசின் உயரதிகாரிகள் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இடமாற் றத்தின் பின்னணியில் போலி பாஸ்போர்ட் விவகாரம் உள்பட பல்வேறு வில்லங்கங்கள் சூழ்ந்திருக்கின்றன என் கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

மதுரை காவல் துறை ஆணையராக டேவிட்சன் இருந்தபோது அதிகளவில் போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு மிகப்பெரிய குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகார்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி யிருந்தார் பத்திரிகையாளர் வாராகி.

dd

Advertisment

அவரது புகாரின் மீது கவனம் செலுத்திய உள்துறை அமைச்சகம், போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக டேவிட்சன் மீது உரிய ஆக்சனை எடுக்குமாறு கடந்த ஜூன் 14-ந்தேதி தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதம் முதல்வரின் கவனத்துக் குச் செல்ல அதிர்ச்சியடைந்தார் ஸ்டாலின். இதனையடுத்து இறையன்பு, உள்துறையின் முதன்மைச் செயலாளர் அமுதா, தனது செயலாளர் முருகானந்தம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர்.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கடந்தாண்டே அரசின் விளக்கம் தரப்பட்டி ருக்கிறது. அதே விளக்கத்தை மீண்டும் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பலாமா? என்றும் ஆலோசிக்கப்பட் டது. அதனால், டேவிட்ச னுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டப் படவில்லை.

இந்த சூழலில், தங்க ளின் கடிதத்துக்கு எந்த ரியாக்சனையும் தமிழக அரசு காட்டாததை அறிந்து டேவிட்சனை சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிடுவத

மிழக உளவுத்துறை தலைவராக இரண்டாண்டு காலம் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர் வாதத்தை டம்மி பதவிக்கு தூக்கியடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

அரசின் உயரதிகாரிகள் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இடமாற் றத்தின் பின்னணியில் போலி பாஸ்போர்ட் விவகாரம் உள்பட பல்வேறு வில்லங்கங்கள் சூழ்ந்திருக்கின்றன என் கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

மதுரை காவல் துறை ஆணையராக டேவிட்சன் இருந்தபோது அதிகளவில் போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு மிகப்பெரிய குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகார்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி யிருந்தார் பத்திரிகையாளர் வாராகி.

dd

Advertisment

அவரது புகாரின் மீது கவனம் செலுத்திய உள்துறை அமைச்சகம், போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக டேவிட்சன் மீது உரிய ஆக்சனை எடுக்குமாறு கடந்த ஜூன் 14-ந்தேதி தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதம் முதல்வரின் கவனத்துக் குச் செல்ல அதிர்ச்சியடைந்தார் ஸ்டாலின். இதனையடுத்து இறையன்பு, உள்துறையின் முதன்மைச் செயலாளர் அமுதா, தனது செயலாளர் முருகானந்தம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர்.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கடந்தாண்டே அரசின் விளக்கம் தரப்பட்டி ருக்கிறது. அதே விளக்கத்தை மீண்டும் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பலாமா? என்றும் ஆலோசிக்கப்பட் டது. அதனால், டேவிட்ச னுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டப் படவில்லை.

இந்த சூழலில், தங்க ளின் கடிதத்துக்கு எந்த ரியாக்சனையும் தமிழக அரசு காட்டாததை அறிந்து டேவிட்சனை சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிடுவதை யும், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் டேவிட்சனுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வாராகி தொடர்ந்த வழக்கு ஒன்று விரைவில் விசாரணைக்கு வரவிருப் பதையும் அறிந்து அதிர்ந்து போகிறார்கள் தமிழக உயரதிகாரிகள்.

மேற்கண்ட இரண்டு விவகாரங்களும் கடந்த 25-ந் தேதி முதல்வரின் கவனத்துக் குச் செல்ல, அமைச்சர் உதயநிதி, உயரதிகாரிகள் ஆகியோருடன் அவசர ஆலோசனையை முதல்வர் நடத்தியபோது, டேவிட்சனுக்கு எதிராக தனக்குக் கிடைத்த பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக் கிறார் உதயநிதி.

இதனையடுத்தே, உளவுத்துறையிலிருந்து உடனடியாக டேவிட்சனை மாற்றுங்கள்; மாற்றப்பட்டாலும் முக்கிய பதவியில் நியமிக்க வேண்டாம் என அமுதாவுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.

உடனே, டேவிட்சன் உட்பட 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, உளவுத்துறையிலிருந்து டேவிட்சனை அகற்றி காவல்துறையின் தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி.யாக நியமித்தனர். உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலனிடம் உளவுத்துறையின் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஆவடி போலீஸ் கமிஷ்னர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடி.ஜி.பி.யாகவும், இந்த பதவியில் இருந்த ஏ.டி.ஜி.பி. சங்கரை ஆவடி கமிஷ்னராகவும் நியமித்து உத்தரவிட்டார் அமுதா.

dd

ஆக, அசைக்க முடியாத அதிகார சக்தியாக கோலோட்சிய டேவிட்சனை முதல்வர் அசைத்திருப்பதுதான் அரசு நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பத்திரிகையாளர் வாராகியிடம் நாம் பேசிய போது, ’"மதுரையில் டேவிட்சன் ஆசிர்வாதம் போலீஸ் கமிஷனராக இருந்தபோது இலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட 200-க்கும் அதிகமான நபர்களுக்கு போலி பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். 2019-ல் இந்த விவகாரம் நடந்திருக்கிறது. இந்த விசயம் ஒரு கட்டத்தில் தெரியவந்தபோது. இதன் பின்புலத்தில் இருப்பவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என புலனாய்வு செய்ய ஆரம்பித்தேன். இதற்காக இலங்கை வரை சென்று விசாரித்தேன். இவருடன் தொடர்பிலிருந்த பலரையும் பார்க்கிறேன். பல உண்மைகள் தெரிய வந்தது. இவரது மனைவி நடத்தி வந்த ட்ராவல்ஸ் ஏஜென்சி மூலமாகவே போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

போலி பாஸ்போர்ட் விவகாரம் மட்டுமல்ல; டேவிட்சன் சம்பாதித்த ஏகப்பட்ட பண விவகார மும் இருக்கிறது. உடனே, டேவிட்சனுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணை வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் தெரிவித்தேன். இதைத் தொடர்ந்து என் னிடம் விசாரித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், என்னிட மிருந்த சில ஆதாரங் களை வாங்கிச் சென்றனர்.

அதைவைத்துதான் பா.ஜ.க. அண்ணாமலைக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது. அதன்படி அண்ணாமலையின் ஆட்களும் என்னிடம் வந்து பர்ட்டிகுலர்ஸ் சிலவற்றை வாங்கிச் சென்றனர். இதனையடுத்து பொது வெளியில் பேசினார் அண்ணாமலை.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கீழ்நிலை அதிகாரிகள் சிலர் மீதுதான் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஆனால், இதன் சூத்திரதாரியான டேவிட்சன் மீது ஆக்சன் எடுக்கப்படவில்லை என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி தி.மு.க. அரசுக்கு புகார் தெரிவித்தேன். பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய்குமார் பல்லா, தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) டைரக்டர் ஜெனரல், மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குநர், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு கடந்த மே மாதம் 24-ந்தேதி இந்த விவகாரம் குறித்து 4 பக்க அளவில் விரிவாக கடிதம் எழுதினேன். இதன்பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஏற்கெனவே சி.பி.ஐ.யும் தமிழக அரசுக்கு சில கடிதங்களை எழுதியது. அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

அதேசமயம், இதனை சீரியசாக எடுத்துக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், தங்களின் சோர்ஸ்கள் மூலம் விசாரித்திருக்கிறது. அப்போது நான் கொடுத்த புகாரில் உள்ள விபரங்கள் உண்மை எனத் தெரிந்து கொண்டதால் தான், உடனடியாக டேவிட்சன் ஆசிர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஜூன் 14-ந்தேதி தலைமைச் செயலாளருக்கு கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்தது. கடிதம் அனுப்பி 14 நாட்கள் கடந்த பிறகே டேவிட்சனை பணியிட மாற்றம் செய்திருக்கிறது தி.மு.க. அரசு.

போலி பாஸ்போர்ட் என்பது தேசத் துரோகம். சட்டத்தில் இதற்கு கடுமையான தண்ட னைகள் உண்டு. குறைந்தபட்சம் சஸ்பெண்டாவது செய்திருக்க வேண்டும். சாதாரண ஒரு அரசு ஊழியன் தவறு செய்யாமல் இருந்தால்கூட அவருக்கு எதிரான புகார் வந்தால் விசாரிக்காமலே சஸ்பெண்ட், டிஸ்மிஸ் எனக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் இந்த அரசாங்கம், ஒரு தேசத்துரோகக் குற்றத்தை செய்திருக்கும் டேவிட்சனுக்கு வெறும் இடமாற்றம்தான் தண்டனையா?

அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்திருக்க வேண் டும். அப்படி செய் யாமல் அவரை காப்பாற்ற முயற்சிக் கிறார்கள். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நான் வழக்கு போட்டுள்ளேன். அதன் விசாரணையின்போது பல்வேறு உண்மைகள் அம்பலமாகும்'' என்கிறார் வாராகி.

இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, "மதுரை போலீஸ் ஸ்டேசன்கள் மூலமாக மட்டும் 200 போலி பாஸ்போர்ட்டுகள் பெற்றுத்தரப்பட்டி ருப்பதாக 2019-லேயே தமிழக கியூ பிராஞ்ச் ரிப்போர்ட் தந்திருக்கிறது. இதனையடுத்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போடப்பட்ட ஒரு வழக்கில், இந்த விவகாரத்தை 1 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து விசாரித்த கியூ பிராஞ்ச் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி பல விசயங்களை கண்டு பிடிக்கிறார். அதன் ஒருகட்டமாக, டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என டி.ஜி.பி.க்கு தகவல் தருகிறார். ஆனால், அனுமதி மட்டும் கிடைக்கவில்லை. அதனால் வழக்கும் அப்படியே கிடந்தது'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

தி.மு.க. அரசு அமைந்ததும் உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட டேவிட்சன் ஆசிர் வாதம், கள்ளக்குறிச்சி ஸ்கூல் மேட்டர் தொடங்கி சமீபத்தில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்கிற்கு எதிராக நடத்தப்பட்ட ரெய்டு மேட் டர் வரை அனைத்து விசயங்களையும் முதல்வருக்கு முன்கூட்டி தகவல் தருவதில் தோல்வியடைந்தார்.

டேவிட்சனுக்கு எதிராக கவர்னரிடம் அண்ணாமலை புகார் கொடுத்த பிறகு, அண்ணா மலையும் டேவிட்சனும் ராசியாகிவிட்டனர். அதேபோல டேவிட்சனும் செந்தில்பாலாஜியும் நெருக்கமானார்கள். டேவிட்சனுக்கு படி அளக்கும் பகவானாக இருந்தார் செந்தில்பாலாஜி. இதனால், டாஸ்மாக்கில் நடந்த அட்டூழியங்கள் எதுவும் முதல்வரின் கவனத்துக்குப் போகாமல் பார்த்துக் கொண்டார் டேவிட்சன். இவை அனைத்தும் அறிந்த உதயநிதி, முதல்வரிடம் தெரிவிக்க, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் டேவிட்சன்.

இப்படி டேவிட்சனுக்கு எதிராக பல வில்லங்கங்கள் அணிவகுக்கின்றன. போலி பாஸ்போர்ட் குறித்து டேவிட்சன் ஆசிர்வாதத் திடம் கேட்டபோது, "குற்றச்சாட்டுகள் அனைத் தும் தவறானது'' என்கிறார். போலி பாஸ்போர்ட் விவகாரம் இவரை காவு வாங்காமல் விடாது என்கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

nkn010723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe