கடந்த சில தினங்களாக மணப்பாறை பகுதி மிகவும் பரபரப்பாக, காணப்பட்டு வருகிறது. டெல்லியிலிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டு ஒரு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருவதாக ஒரு தகவல் பரவியதே அதற்குக் காரணம்.
திருச்சி காவல்துறை வட்டாரங்களில் எந்தவிதத் தகவலும் சொல்லப்படாமல் நீதிமன்றம் மூலம் நேரடியாக அனுமதி பெற்று இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் மணப் பாறையை அடுத்த பூமாலைப் பட்டியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற சுகாதார
கடந்த சில தினங்களாக மணப்பாறை பகுதி மிகவும் பரபரப்பாக, காணப்பட்டு வருகிறது. டெல்லியிலிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டு ஒரு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருவதாக ஒரு தகவல் பரவியதே அதற்குக் காரணம்.
திருச்சி காவல்துறை வட்டாரங்களில் எந்தவிதத் தகவலும் சொல்லப்படாமல் நீதிமன்றம் மூலம் நேரடியாக அனுமதி பெற்று இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் மணப் பாறையை அடுத்த பூமாலைப் பட்டியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலைபார்த்து வந்துள்ளார். தற்போது திருப் பூரில் துணி மாதிரி ஏற்றுமதி தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் டிசம்பர் 1 காலை, அவரது வீட்டிற்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லியிலிருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், சிறார் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்வது, வெளிநாட்டிற்கு பதிவேற்றம் செய்தது என இணையத்திலிருந்து பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை முடிவில் ராஜாவிடமிருந்து அவரது மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்ட சில மென்பொருட் கள், சேமிப்புக் கலன்களை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவரை திருச்சி கண்டோன் மென்ட் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்திலுள்ள தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
ராஜாவை எப்படி சி.பி.ஐ. நெருங்கியது என்பது குறித்து விசாரித்ததில், கடந்த 6 மாதங் களுக்கு மேலாக சிறார்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற் றம் செய்தும், பதிவிறக்கம் செய்தும் அதன்மூலம் பலகோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்ததாக குஜராத், மஹாராஷ் டிரா மாநிலங்களிலிருந்து ஒரு நபரை கைதுசெய்துள்ளனர். அவ ரிடம் விசாரணை நடத்தியதில் அதில் ராஜாவுக்குத் தொடர் பிருப்பது தெரியவந்திருக்கிறது. அவரிடமிருந்தும் ஏராளமான பணப் பரிவர்த்தனை நடை பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சிறார்களின் ஆபாச வீடியோக்கள் அனைத்தும் ஜெர்மனி நாட்டில் அதிகளவில் ஊடுருவியதால், அந்நாட்டின் இண்டர்போல் வழக்குப் பதிவுசெய்து, அவர்கள் தேடும் குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பதாக, கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கிருந்து வெளியுறவுத்துறை மூலம் இந்தியாவில் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த 6 மாத காலமாக ராஜாவைக் கண்காணித்த சி.பி.ஐ., டெல்லியிலிருந்து வந்த 6 பேர் கொண்ட குழு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியிடம் ராஜாவிடம் விசாரணை நடத்து வதற்கான அனுமதி பெற்று விசா ரணையைத் தொடங்கியிருக் கிறார்கள்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தெரி வித்தால் மட்டுமே முழுமையான விவரங்களும், இதிலுள்ள உண்மைத்தன்மையும் தெரியும் என திருச்சி மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.