"வழக்குப் போடுவதே பணம் பறிக்கத்தான்.. அச்சப்படத் தேவையில்லை' என திண்டுக்கல்லில் பணம் பறிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி சிக்கிய நிலையில், "ரூ.7 லட்சம் கொடு வழக்கிலிருந்து விடுவிக்கின்றேன்' என ஆபர் கொடுத்திருக் கின்றார் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர்.
"ஆசிரியர் ராமச்சந்திரன் என்றால் மாணாக் கர்களுக்கு மட்டுமல்ல. எங்களைப் போன்ற பெற் றோர்களுக்கும் குஷி. அண்ணன் பிரச்சினையில் ஆசிரியரான தம்பியை கோர்த்துவிட்டிருக்கின்றது சி.பி.ஐ. தரப்பு. இப்ப குட்டு வெளிப்பட்டுடுச்சு. கொரோனா காலகட்டத்தில் மாணாக்கர்களின் கல்வி தடைப்படக்கூடாது என்பதற்காக சொந்தச் செலவில் தன்னுடைய கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணாக்கர் களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து அதன் மூலம் ஆன் லைன் வகுப்பை நடத்தி அசத்தினார்.
அதுபோல் கிராமத்திலிருக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குச் செல்லும்விதமாக ஆன் லைனில் பயிற்சி அளித்ததோடு மட்டுமில்லாமல் "ஸ்டூடண்ட்ஸ் ஸ்கில்ஸ்' என்ற பெயரில் தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து, மாணவர்களின் திறன் களை வளர்த்ததில் அவரின் பங்கு அலாதியானது'' என்கின்றனர் செம்பொன்குடி கிராமவாசிகள்.
நல்லாசிரியர் விருதுபெற்ற ராமச்சந்திரனின் சகோதரர் பஞ்சாட்சரம், "டேக்ஸ் இன்பர்மேஷன் நெட்வொர்க்' என்ற நிதி நிறுவனத்தை மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் நடத்திவந்திருக்கின்றார். இந்த நிறுவனம் வருமானவரி கணக்கினை ஊ எண்ப்ங் மூலம் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்து வந்துள்ளது. இதில் பல வாடிக்கையாளர்களுக்கு குறைவான கணக்குக் காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும், அரசுக்கு கிடைக்கவேண்டிய வருமானத்திற்கு ரூ. 2.84 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாகவும் கடந்த 2021லிஆம் ஆண்டு பஞ்சாட்சரத்துக்கு எதிராக புகார்கள் சென்றிருக்கின்றது. புகார் சி.பி.ஐ. வசம் சென்ற நிலையில் பஞ்சாட்சரத்தை விசாரித்து அவரை அதிரடியாக கைதுசெய் தது சி.பி.ஐ. அதன் பின்னர் நடை பெற்ற தொடர் விசாரணை யில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பஞ்சாட்சரம் மற்றும் அவ ருடனான 6 நபர்கள் இந்த மோசடியில் உள்ளனர் என பெயர் குறிப் பிடாமலேயே குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்தது சி.பி.ஐ. தரப்பு. இந்த நிலையில் "பணப் பரிமாற்றம் செய்துள் ளார்' என தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ராமச்சந்திர னையும் கைதுசெய்தது சி.பி.ஐ.
இதில் ஜாமீனில் வெளி வந்த ஆசிரியர் ராமச்சந்திரன், "எந்தவொரு ஆவணங்களும் இல்லாமலேயே என்னை இந்த வழக்கினில் சேர்த்துள்ளது சி.பி.ஐ. கைதின்போதான விதிமுறைகளைக் கூட சி.பி.ஐ. பின்பற்றவில்லை. ஆகையால் வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டு மென' சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து சி.பி.ஐ.க்கு குடைச்சல் கொடுத்திருக்கின்றார்.
இதேவேளையில், 26-06-2023 மற்றும் 27-06-2023 ஆகிய தேதிகளில் மறைமுகமாக எடுக்கப்பட்ட மூன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளார் ஆசிரி யர் ராமச்சந்திரன். அந்த வீடியோவின் முதல் பாகத்தில் (00.46) குறிப்பிட்ட அந்த நபர்தான் சி.பி.ஐ. அதிகாரி அலுவலகத் தின் பிரதான நாற்காலியில் அமர்ந்து நிபந்தனை ஜாமீன் கையெழுத்திற்கான நோட்டுப் புத்தகத்தை ராமச்சந்திரனிடம் கொடுக்கின்றார். இரண்டாவது வீடியோவில் (27.45) குறிப்பிட்ட அந்த நபர் சி.பி.ஐ. அதிகாரிதான் என்பதற்கான ஆதாரமும், அவர் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தினைப் பொறுத்தவரை எஸ்.பி., டி.எஸ்.பி. அடுத்து உயர்பதவியில் நான்தான் உள்ளவன் என்றும், அவ்வாறு உயர் பதவியில் உள்ளதால்தான், தான் ஸ்லீப்பர் செருப்பு அணிந்து அலுவலகம் செல்வதாகக் கூறுகிறார். தொடர்ச்சி யாக பதிவான வீடியோவில், வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் வேண்டும் என்றும், ரூ.2 லட்சம் முன்பணம் என்று கூறுவதும், இரண்டு மாதங்களில் எப்படி முழுமையாக வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்பதனையும் விளக்கிக் கூறுகிறார் அந்த சி.பி.ஐ. அதிகாரி. தொடர்ந்து, நீதிமன்றத்திலிருந்து வழக்கு ஆவணங்கள் அனைத் தையும் திரும்பப்பெற்று அதில் உள்ள ஆதாரங் களை அழித்து குற்றவாளி பெயரை நீக்கி, மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் முறை பற்றி விளக்கமாகக் கூறு கிறார் அவர். இதே போல நாங்கள் இந்தியா முழுமையும் செய்துவருவதாக இரண்டு நாட்களுக்கு முன் இதுபோல் செய் துள்ளோம் எனவும், சி.பி.ஐ.யின் கட்டுப் பாட்டில்தான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர் என்றும், சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்வதைத்தான் நீதிபதிகள் செய்வார்கள் என்றும் அந்த அதிகாரி கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும், தான்தான் (அந்த சி.பி.ஐ. அதிகாரிதான்) சி.பி.ஐ.யின் உயர் அதிகாரி களுக்கு ஒரு மீடியேட்டராகச் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார். கேட்கப்படும் பணமானது, தனக்காக மட்டும் அல்ல, தனது உயர் அதிகாரிகளுக்காக என்றும் கூறுகிறார். மூன்றாவது வீடியோவிலோ (13.05), "பஞ்சாட்சரம் சி.பி.ஐ. எஸ்.பி. மீது புகார் செய்துள்ளதால், இன்னும் 15 நாட்களுக்குள் பஞ்சாட்சரத்தின் சொத்துக்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர் ராமச்சந்திரனின் சொத்துக்கள் அனைத்தையும் சி.பி.ஐ. முடக்கிவிடும். வருகின்ற 12-07-2023 அன்று சி.பி.ஐ. டி.எஸ்.பி. யிடம் நேரில் அழைத்துச் செல்கிறேன். இதுகுறித்து நாளை (28-06-2023) அவருடன் போனில் அழைத்துப் பேசி உறுதி செய்வதாகவும் கூறுவது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆசிரியர் ராமச்சந்திர னோ, "நான் கைது செய்யப்படும்போது எனது சகோதரர் வங்கிக் கணக்கிலிருந்து எனது வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 12 லட்சம் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் குற்றப் பத்திரிக்கையில் ரூபாய் 12 லட்சம் தொகை எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானது அறிவிக்கப்பட்ட மிகச்சரியான நாள் மற்றும் நேரத்தில் (25-8-2022, மாலை 3:30 மணி அளவில்) எவ்வாறு சி.பி.ஐ. என் வீட்டிற்கு சோதனைக்கு வந்தது? அப்போது என் சகோதரர் வீட்டில் கைப் பற்றப்பட்ட ஆவணங் களை என்னிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக என்னை மிரட்டி என்னி டம் கையொப்பம் வாங் கியது சி.பி.ஐ. அதுபோல், துவக்கத்தில் இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர். வருடம் 2021 என்றார்கள். பின்னாளில் எஃப்.ஐ.ஆர். வருடத்தை 2023 என்றும், சி.பி.ஐ. சென்னை என்றும் எஃப்.ஐ.ஆர். பதிவுகளை மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நான் கைது செய்யப்படுவதற்கு முன்பே 24-2-2023 மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத் தில் முதன்மை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின் 31-3-2023 அன்று மீண்டும் முதன்மை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு மீண் டும் மதுரை சி.ஜே.எம். நீதிமன்றத்தில் முதன்மை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே வழக்கில் மூன்று முதன்மை குற்றப் பத்திரிகைகள் தாக்கல்செய் துள்ளனர். முதன்மை குற் றப் பத்திரிகை தாக்கல் செய்த பின் ஒருவரை வழக்கில் சேர்ப் பது என்றால் சி.ஆர்.பி.சி. குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 173(8)இன் கீழ் உச்ச நீதிமன்ற வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் விதிமீறி என்னை இந்த வழக்கில் கைதுசெய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் டாக்டரிடம் லஞ்சம் வாங்க பயன்படுத்திய அதே சட்டப் பிரிவினை (சி.ஆர்.பி.சி.-173 (8))-ஐ பயன்படுத்தி என்னை பொய்யாக எனது சகோதரர் வழக்கில் சேர்த்தது மட்டுமல்லாமல், தற்போது சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் மூலமாக வழக்கிலிருந்து விடுவிப்ப தற்கு தொடர்ந்து ரூபாய் 7 லட்சம் லஞ்சம் கேட்கின்றனர். இதற்காகவே நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்து இரண்டு மாதங்கள் ஆனநிலையில் இதுவரை சி.பி.ஐ. தரப்பில் எதிர்வாதம் (ஈஞமசபஊத எஒகஒசஏ) தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்து கின்றனர்'' என்கிறார் அவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன்படி இந்திய தண்டனைச் சட்ட விதிகளின்கீழ் மட்டும் வழக்குப் பதிவுசெய்து சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது மாநில அரசின் கடமையாகும். டெல்லி ஸ்பெஷல் போலீஸ் சட்டம் 1948 (DSPE ACT-1948)-ன்படி மத்திய விசாரணை அமைப் பான சி.பி.ஐ. ஆனது, ஐ.பி.சி.யின் கீழ் மட்டும் வழக்கை நடத்த மாநில அரசின் அனுமதியோ நீதிமன்ற உத்தரவோ தேவை. ஆனால் இந்த விதிகளை மீறி, ஐ.பி.சி.யின் கீழ் மட்டும் இந்த வழக்கை சி.பி.ஐ. நடத்துவது எதனால்?
லஞ்சத்திற்காகவா..?
படங்கள்: விவேக்