மிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதிநீர் பிரச்சனை 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புடன் முடிந்துவிட்டது என பெருமூச்சுவிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மேகதாது அணை விவகாரத்தால் மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.

kk

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் 9 ஆயிரம் கோடியில் அணை கட்ட விரி வான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறது. மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணை யத்தின் தலைவர் எஸ்.கே ஹல்தர், காவிரிநீர் ஒழுங்காற்று குழுத் தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் ஜூன் 17-ஆம் தேதி மேட்டூர் அணை மற்றும் கல்லணை கால்வாய்ப் பகுதிகளை இரண்டுநாள் பயணமாக வந்து ஆய்வுசெய்தனர். ஆய்வுக்குப்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹல்தர், "ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது" என்று கூறினார். இந்தப் பேச்சுதான் டெல்டா விவசாயிகளை மீண்டும் போராட்டத்தில் குதிக்கச்செய்துள்ளது.

கல்லணையை பார்வை யிட வந்த ஹல்தர் தலைமை யிலான குழுவினருக்கு எதிர்ப்புத்தெரிவிக்க முயன்ற விவசாயிகளும், தமிழார்வலர் களும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். "கருப்புக் கொடி காட்டும் சனநாயகத்தை மறுத்து முன்கூட்டியே உழவர் களையும், உணர்வாளர்களை யும் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்துவிட்டனர். தமிழ் நாட்டு குடிநீராகவும், பாசன நீராகவும் 22 மாவட்டங் களுக்கு பயன்படக்கூடிய காவிரி ஆற்றை மற்றொரு பாலாறாக மாற்றும் நோக்கத்துடன்dd இந்திய அரசும் அதன் அதிகாரியான ஹல் தரும் சட்டவிரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக் கின்றனர்''’என்கிறார் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன்.

தமிழக முதல்வர் ஸ்டா லினோ, "காவிரி உரிமையைப் பெறுவதில் எந்த அளவுக்கு சென்றும் தமிழக அரசு போராடும்'' என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், பிரதமர், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை மேகதாது அணை தொடர்பாக சந்திக்க உள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞரும், கடைமடை விவசாய சங்கங்களின் ஆலோசகருமான சிவச்சந்திரன் கூறுகையில், "கர்நாடகா மேகதாது அணையை மட்டுமல்ல… இதற்கு முன்பு கட்டிய ஐந்து அணைகளையுமே சட்டத்திற்கு முரணாகவே கட்டியுள்ளனர்.

1970-ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு 350 டி.எம்.சி. தண்ணீர் வந்தது. இறுதியாக 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் 177.25 டிஎம்சி என்று குறைத்து தீர்ப்பளித்தனர். அந்தத் தண்ணீரையும் சரியான நேரத்தில் கொடுக்காமல் கர்நாடகவின் வெள்ளக்கால வடிகாலாகவே தமிழ்நாட்டை பயன்படுத்தி கணக்கு காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது என்கிற நோக்கத்துடனே கர்நாடக அரசு செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் கர்நாடக அரசை ஒன்றிய அரசு அறிவுறுத்தி நெறிப்படுத்தவேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்''’என்கிறார்.

23-ஆம் தேதி திருவாரூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ள தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், "ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணை யம் வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாதென உத்தரவிட வலியுறுத்த உள்ளதாக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறுவது ஏற்கவியலாது.

காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டுப்பட வேண்டும். அவ்வாறு கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் ஆணையம் மத்திய அரசிடம் உதவி கோரினால், உதவிடவேண்டும். மத்திய அரசும் மறுக்கும் பட்சத்தில் ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என தெளிவாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் மாநில அரசியல் லாபத்திற்காக ஜல்சக்தி துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்தித்துப் பேசுகிறதென்றால், தமிழக அரசும் ஜல்சக்தி துறை அமைச்சர் மூலமாக ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்போவது ஏற்கத்தக்க தல்ல. இது கர்நாடகாவின் ஆணையத்தை முடக்கும் நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடும்''” என்கிறார்.

மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்திவரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருவாரூர் பி.எஸ்.மாசிலா மணி, "உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புப் படி எந்த ஒரு புதிய அணையையும் கட்டக்கூடாது. ஆனால் அதை மீறி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக கர்நாடக அரசு செயல்படுகிறது. அதற்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்கிறது. ஆணைய தலைவர் ஒருதலைப்பட்சமாக கர்நாடக அரசிற்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம்''’ என்கிறார்.

-க.செல்வகுமார்