Advertisment

காவிரி ஆணையம் ஒரு பொம்மை அமைப்பு! -பெ.மணியரசன் விளாசல்!

maniarasan

க்களுக்கெதிரான செயல்பாடுகளைக் கண்டித்து போராடுபவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. அந்தவகையில், 1991ஆம் ஆண்டு மேடையில் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கை 2018-ல் தூசிதட்டி காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவருமான பெ.மணியரசன் மீது தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிணையில் வெளிவந்துள்ள அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

Advertisment

எந்த வழக்கிற்காக உங்

க்களுக்கெதிரான செயல்பாடுகளைக் கண்டித்து போராடுபவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. அந்தவகையில், 1991ஆம் ஆண்டு மேடையில் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கை 2018-ல் தூசிதட்டி காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவருமான பெ.மணியரசன் மீது தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிணையில் வெளிவந்துள்ள அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

Advertisment

எந்த வழக்கிற்காக உங்கள்மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது?

maniarasan

தமிழீழ விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த போராளி திலீபனின் 4-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, “"திலீபன் மன்றம்' சார்பில் 29-10-1991 அன்று தி.நகரில் தோழர் தியாகு தலைமையிலான கருத்தரங்கம் நடந்தது. அதில் “"தேசிய இன போராட்டங்களும் ஈழ விடுதலையும்' என்ற தலைப்பில் பேசினேன். பிரிவினையை ஏற்படுத்தும்படி பேசியதாக நான்காண்டுகள் கழித்து 28-4-1994-ல் வழக்குப் பதிந்துள்ளார்கள். மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறித்தான் இப்படியொரு வழக்கு இருப்பதே தெரிந்தது. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் பிணைவாங்கி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டு வருகிறேன்.

Advertisment

காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவின் செயல்பாடுகள் பற்றி..

அவை ஒழுங்காகச் செயல்பட்டால் எதற்காக கர்நாடகாவில் குமாரசாமியும், தமிழ்நாட்டில் எடப்பாடியும் தண்ணீர் திறக்க உத்தரவிடுகிறார்கள்; திறந்துவிடுகிறார்கள்? ஜூன் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், இதுவரை எந்த அணைகளையும் பார்வையிடவில்லை. அணைகளைத் திறந்து மூடும் அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதில் சந்தேகம் எழுகிறது. ஒழுங்காற்றுக் குழு பெங்களூருவில் அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை வரவில்லை. ஆக, மத்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் பொம்மை அமைப்புகளை இந்த அரசுகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. இந்தநிலை மாறி ஆணையமும், ஒழுங்காற்றுக்குழுவும் சுதந்திரமான அமைப்புகளாக களமிறங்கவேண்டும்.

உங்களைத் தாக்கியவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்படுவதாக முதல்வர் சொன்னாரே. குற்றவாளிகள் பிடிபட்டார்களா?

போராட்டங்களை முன்னெடுக்கக்கூடாது என அச்சுறுத்த நடத்தப்பட்ட தாக்குதல்தானே தவிர, அது வழிப்பறி கிடையாது. தனிப்படை அமைக்கப்பட்டது. யாரையும் பிடித்ததாக தெரியவில்லை.

போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்கிறதே?

300 நாட்கள் கடந்துவிட்டன. தன்மீதான குற்றத்தையே முகிலனுக்கு விளக்கவில்லை. இயக்குநர் பாரதிராஜா, சீமான், கௌதமன், அமீர் என அச்சுறுத்தல்கள் தொடரும். சமயத்தில் நானும் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படலாம்.

-சந்திப்பு: இரா.பகத்சிங்

nkn27-07-2018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe