அண்மையில் மண்டபம் அருகே வாட்டர் கேன்களில் அடைத்துக் கடத்தப்பட இருந்த மர்மப் பொருள் பிடிபட்டது. உடனே புலனாய்வுக்குழு, "அது போதைப் பொருள் அல்ல. இலங்கைக்குக் கடத்த இருந்த உரம்' என்று அறிவித்தது. இந்த அறிவிப்பே, ஹம்பக் அறிவிப்பு என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
இதன் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு பெரும்புள்ளி இருக்கிறார் என்ற தகவல், மாண்டஸ் புயலை விடவும் பெரும் சூறாவளியாக எழுந்து பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், என்னதான் நடந்தது? என்று களமிறங்கினோம்.
கடந்த 28ஆம் தேதி இரவு நேரம். மண்டபம் -வேதாளை சாலை வெறிச்சோடிக் கிடக்க, சரசரக்கும் பனையோலை சத்தத்தோடு பிசுபிசுத்த கடற்காற்று வழக்கம் போல் சுழன்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது.
அப்போது கடலோர காவல் குழுமத்தைச் சேர்ந்த போலீசார் சிலர், வாகன சோதனைக்காகக் காத்திருந்தனர். இரவு 8 மணியளவில் அந்த சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்தது ஒரு பிரவுன் கலர் பஜீரோ கார். அதன் நம்பர் பிளேட்டில் பச 57 ஆஆ 0077 என்ற பதிவெண் இருந்தது.
கார் வந்த வேகத்தைப் பார்த்துத் திகைத்த போலீஸ் டீம் அதை வழிமறித்தது. கார் நின்றதும் அதன் முன்பக்க கண்ணாடி சரசரவென கீழே இறங்கியது. காருக்குள் ஸ்டைலாக அமர்ந்திருந்த அந்த நபர், தெனாவட்டாக ”"எதுக்குய்யா காரை நிறுத்தறீங்க? நான் தி.மு.க. கவுன்சிலர்யா. என் காரையே நிறுத்தறீங்களா?''’என்றபடி, டிரைவரைப் பார்த்து "வண்டியை எடுப்பா''’என்றார் தோரணை யாக.
அந்த நபரிடம் தெரிந்த படபடப்பைப் பார்த்த போலீஸ் டீம், "ஏய்... வண்டியை எடுக்காத...''’-என்றபடி, வண்டியைத் தட்டி நிற்கச் சொன்னதோடு, "காரை சோதனையிட வேண்டும்''’என்றனர்.
உடனே அந்த நபர், மேலும் பதட்டமாகி செல்போனில் யாரையோ தொடர்புகொள்ள முயன்றார்

உடனே அந்த நபர், மேலும் பதட்டமாகி செல்போனில் யாரையோ தொடர்புகொள்ள முயன்றார். அதற்குள் போலீஸார், காரின் கதவைத் திறந்து நோட்டம் விட்டனர். பின்இருக்கைப் பகுதி முழுக்க பெரிய பெரிய தண்ணீர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்டு சந்தேகமாகி.... "இதெல்லாம் என்ன?''’ என்றபடி டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தனர்.
அந்த கேன்களில் தண்ணீருக்கு பதிலாக வெள்ளைநிற பவுடர் நிரப்பப்பட்டு, அவை பக்காவாக ‘சீல்’ செய்யப்பட்டிருந்தன.
இந்தத் தகவல் உயரதிகாரிகளுக்குப் பறந்தது. காரோடு சேர்த்து அதில் வந்த 2 நபர்களும் மண்டபம் கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள், மாவட்ட காவல்துறை உயரதிகாரி கள் சிலரின் செல்போன்கள் அலறின.
"சார், அவங்க நம்ப ஆளுங்கதான் சார், இப்ப அனுப்பி விட்ருங்க. காலைல நானே அவங்களை நேரில் வரச் சொல்றேன்''’என ஆரம்பத்தில் அழுத்தமாகவும், பிறகு கெஞ்சலாகவும் பேசியது அந்தக்குரல். அது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரின் குரல்.
சுதாரித்த அதிகாரிகள், ஆக்டோபஸைப் போல, மெல்ல மெல்ல தங்கள் கரங்களை இறுக்கத் துவங்கினார்கள். காரில் மொத்தம் 30 தண்ணீர் கேன்களில் அந்த வெள்ளை நிற பவுடர்கள் இருந்ததை குறித்துக் கொண்டனர். அப்படியே எல்லாவற்றையும் எடை போட்டதில், மொத்தம் 394 கிலோ பவுடர் பொருள் இருந்தது.
விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது காரில் வந்தவர்கள் சர்பராஸ் நவாஸ், ஜெயினுதீன் என்கிற சகோதரர்கள் என்பது தெரியவந்தது. அந்த 2 பேருமே கீழக்கரை சங்குளிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சர்பராஸ் நவாஸ், கீழக்கரை 19-ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருக்கிறார். அவரது சகோதரரான ஜெயினுதீன் முன்னால் கவுன்சிலராம்.
இந்த பவுடர் சமாச்சாரம் குறித்த தகவல் உளவுப் பிரிவு காவலர்கள் மூலம் மேலிடத்துக்குச் சென்றது. இதனால் கஸ்டம்ஸ், கடலோர காவல் படையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, கியூ பிராஞ்ச், ஐ.பி. என அத்தனை புலனாய்வுத்துறை அதிகாரிகளும் அந்த நள்ளிரவில் பரபரப்பாகிவிட்டனர். ரூபாய் 300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியிருப்பதாக எப்படியோ விசயம் மீடியாக்களுக்கு அப்போதே கசிய, காவல் நிலையத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு விசாரணை நடந்தபடியே இருந்தது.
அந்த கேன்களில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பவுடர், செடிகளுக்கு போடும் உரம் என்றும், அவற்றை அதிக விலைக்கு விற்பதற்காக தோவாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாகவும் பிடிபட்ட இருவரும், சொன்ன தையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் பலவும் தி.மு.க. அரசை விமர்சிக்கத் தொடங்கின. இந்த சூழலில்... தண்ணீர் கேன்களில் இருந்தது உரம் என்று விசாரணையில் தெரியவந்ததாகவும், இது கடத்தல் வழக்காக இருப்பதால், அதை சுங்கத் துறையிடம் ஒப்படைத்து விட்டதாக வும் கடலோர காவல் குழும எஸ்.பி., ஒரு அறிக்கையை வெளியிட, அப்போதைக்கு அந்த விவகாரம் அமைதியடைந்தது.
எனினும் அந்த விவகாரத்தில் தொடர் புடையவர் என்று சொல்லப்பட்ட அந்த ஆளுங்கட்சிப் பிரமுகர், அந்தப் பகுதியில் இருந்து தலைமறைவாகி சென்னைக்குள் நுழைந்துவிட்டார். இருந்தும், டிசம்பர் முதல்வாரம் சென்னையில் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அந்தப் பிரமுகர் தலையைக் காட்டவில்லை. இது ஒரு பக்கம் பரபரப்பை உண்டாக்கியது.
இதற்கிடையே, “கடத்தல் பேர்வழிகள் போலீசில் சிக்கியதும், அவர்களை விடுவிக்க சென்னையில் டேரா போட்டபடி, பெரும்பாடு பட்டிருக்கிறார் அந்த பிரமுகர். சென்னையில் பெரும்பாலும் தி. நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் தங்கும் அவர், இந்த முறை லீலா பேலஸ் ஓட்டலில் தங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு அவர் யார் யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்தும் விதவிதமாகத் தகவல்கள் பரவிவருகின்றன.
இந்த விவகாரம் உளவுத்துறை மூலம் கட்சித் தலைமையின் காதுவரை சென்றதாகவும், அவரை ’"இந்தப் பக்கம் வந்துடாதே'’ என்று எச்சரித்ததாகவும் கூட ரகசிய டாக் அடிபடுகிறது. அந்த ஆளுங்கட்சிப் பிரமுகரின் ஆட்களால், அப்படி என்ன மாதிரியான போதைப்பொருள், எங்கிருந்து கடத்தி வரப்பட்டி ருக்கிறது என்று விசாரித்தபோது...
"கடந்த 2021 செப்டம்பர் மாதம் குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் பல நூறு கோடி மதிப்புள்ள 3 டன் போதைப் பொருள் சிக்கியது. அதனை சோதனை செய்து பார்த்ததில், அது போதைப் பொருள் என்று தெரியாமல் இருப்பதற்காக, அதோடு டால்கம் பவுடர் கலக்கப்பட்டிருப்பதை அப்போது கண்டுபிடித்தனர். அதே போல, இந்தமுறை தோவாளையில் சிக்கியுள்ள அந்த வெள்ளை நிற பவுட ரான ‘ஐஸ்’ என்ற காஸ்ட்லியான ஒரு போதை வஸ்து வோடு, சில வேதிப்பொருட்களைக் கலந்து குஜராத்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். சென்னையில் இருந்து சர்ப்பஸ் நவாஸ், ஜெயினுதீன் ஆகியோருக்குச் சொந்தமான டிராவல்ஸ் மூலம் அந்த சரக்கு கீழக்கரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு அது அனுப்பப்பட இருந்த நிலையில்தான் வாகன சோதனையின் போது பிடிபட்டது. இலங்கையில் இருக்கும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்த மிக்ஸிங் சமாச்சாரத்தில் இருந்து, போதைப் பொருளைப் பிரித்தெடுக்கும் ‘டெக்னிக்’ தெரியும். இப்படி ஒரு மெஹா கடத்தலுக்கான திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது'' என்றார் அந்த காவல்துறை அதிகாரி.
இந்த நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்த விவகாரமும், அந்த பிரமுகரின் தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறதாம்'' என்கிறார் கள். சட்டவிரோதமாக அந்த முக்கியப் புள்ளி கடத்த இருந்த பலகோடி ரூபாய் மதிப்பி லான 394 கிலோ போதைப்பொருள் பிடி பட்டிருக்கும் விவகாரம், அகில இந்திய அள வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நம்மிடம் மனம் திறந்து பேசிய ஒரு ஆளுங்கட்சிப் பிரமுகர் "தற்போது, பிடி பட்டிருக்கும் அந்த வாகனத்துக்கு ஒரு அம்பாசிடர் காரின் எண்ணை பயன்படுத்தி யிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இருந்து அந்தப் பெரும்புள்ளியைக் காப்பாற்ற, அவருடைய நெருங்கிய உறவினரான த்ரீ கிங்’ என்ற நபரும், பரமக்குடியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய பிரமுகரான அந்த ’வெள் ளைக்காரக் கடவுளும்’ பெரும் முயற்சி செய்து வருவதாகவும் கூட தகவல் வருகிறது''’என்றார் கிசுகிசுப்பாக.
தலைமறைவாக இருக்கும் அந்த ஆளுங்கட்சி முக்கிய புள்ளிமீது விரைவில் சட்ட நடவடிக்கை கடுமையாகப் பாயும் என்கிறார்கள். அதேபோல், காவல் துறை தரப்பில் பிடிபட்ட போதைப்பொரு ளை மறைப்பதற்காக, அது வெறும் உரம்தான் என்று அறிக்கை வெளியிட்டு, அந்தப் பெரும்புள்ளிக்கு ’அனுசரணை’ காட்டிய, காவல்துறை அதிகாரிகளும் சிக்குவார் என்றும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஆளுங்கட்சி என்ற கோதாவில் புல னாய்வு டீம்களின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, பலகோடி மதிப்பிலான போதைப் பொருட் களை இலங்கைக்குக் கடத்த முயன்ற, பலே கில்லாடியான அந்த பெரும்புள்ளியைத் தீவிரமாகத் தேடிவருகிறது காவல்துறை.
அவர் கைது செய்யப்படுவாரா? இல்லை... காப்பாற்றப்படுவாரா? பொறுத் திருந்து பார்ப்போம். போதை வளர்க்கும் இவர்கள் யாராக இருந்தாலும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.