"ஹலோ தலைவரே, உதயநிதி தொடர் பான எதிர்பார்ப்பு நிமிடத்திற்கு நிமிடம் தி.மு.க.வினர் மத்தியில் வலுத்திருக்கிறது.''”

"ஆமாம்பா, கவனிச்சேன், அதுகுறித்து ராணிப்பேட்டையில் சீனியர் அமைச்சர் துரைமுரு கன் டென்சனாக பதிலளித்ததையும் பார்த்தேன்.''”

ss

"உண்மைதாங்க தலைவரே, உதயநிதி துணைமுதல்வர் ஆவதற்கான ஏற்பாடுகள் அனைத் தும் தயார் நிலையில் இருக்கின்றன. அவர் பொறுப் பேற்கும் நேரத்தில் அமைச்சர்கள் நீக்கம், சீனியர் அமைச்சர்களின் இலாகா மாற்றம் என எந்தவித அதிரடி நடவடிக்கையும் வேண்டாம் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்திருக்கிறதாம். இது அமைச்சர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. இப்போதிருக்கும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தபடியே உதயநிதியை துணைமுதல்வராக்க மேலிடம் முடிவெடுத்திருக்கிறதாம். இதற்கு கவர்னரின் ஒப்புதல் எதுவும் தேவையில்லை. முதல்வரின் அறிவிப்பே போதும் என்கிறார்கள். தன் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் முதலீடு களை ஈர்த்து வந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரதமரைச் சந்தித்து அவற்றுக்கான ஒப்புதலை முறைப்படி பெறவேண்டும். எனவே ஸ்டாலின், பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்தித்த பிறகு, உதயநிதி தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறது கோட்டைத் தரப்பு. இதற்கிடையே செந்தில்பாலாஜி விடுதலையாகி வெளியேவந்தால் மட்டுமே, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட அதிரடிகள் இருக்கலாம் என்கிறது அறிவாலயத் தரப்பு. செந்தில்பாலாஜி விடுதலையாகி அமைச்ச ரானால், அப்போது துணைமுதல்வராகும் உதயநிதிவசம் உள்ளாட்சித்துறை தரப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.'' ”

Advertisment

ff

"இருக்கட்டும்பா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 21ஆம் தேதி நடத்திய சீக்ரெட் ஆலோசனைக் கூட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர்களை டென்சனாக்கியிருக்கிறதே?.''

"பா.ஜ.க. மாநில நிர்வாகி லண்டன் சென்ற நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலை வராக நியமிக்கப்பட்ட ஹெச்.ராஜாதான், கடந்த ஒரு மாதமாக கட்சிப் பணிகளைக் கவனித்துவரு கிறார். இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்தால், ஹெச்.ராஜாவுக்கு தகவல் தெரி வித்தாக வேண்டும் என்பது கட்சியின் நடைமுறை. ஆனால், கடந்த 21ஆம் தேதி சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றிய தகவல்கள் ஹெச்.ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதேபோல் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் இந்த விபரம் சொல் லப்படவில்லையாம். யாரையும் கண்டுகொள்ளாமல் சென்னை வந்த நிர்மலா சீதாராமன், வழக்கம் போல் இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் தங்கினார். அவர் வந்த வுடன், ஒரு ஆலோசனைக் கூட் டத்தை, அவரது விசுவாசியான கே.டி.ராகவன் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்திற்கு பா.ஜ.க.வின் மாநில பொதுச்செய லாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், பால்கனகராஜ், ஷெல்வீ உள்ளிட்ட நிர்மலாவின் ஆதரவாளர்களான இரண் டாம்நிலைத் தலைவர்கள் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தனர். இதுதான் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை டென்சனாக்கியிருக்கிறதாம்.''”

Advertisment

"அந்த சீக்ரெட் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?''”

rr

"தமிழக பா.ஜ.க.வில் நடக்கும் அரசியல் குறித்து அந்த சீக்ரெட் கூட்டத்திற்கு வந்தவர்களி டம் நிர்மலா சீதாராமன் கேட்டிருக்கிறார். பலரும் பலவித தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது, தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள்முன் தமிழக பா.ஜ.க.வினர் எடுத்துச் செல்லவேண்டும். அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும். அதைத் தமிழக பா.ஜ.க. இன்னும் செய்யவில்லை. இனியும் அப்படியிருக்கக்கூடாது என்று அந்த சீக்ரெட் கூட்டத்தில் வலியுறுத்தி யிருக்கிறார் நிர்மலா. இதனை அடுத்து, தி.மு.க. அரசு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்தில் பல துறைகளில் ஊழல்கள் அதிகரித்திருப்பதாகச் சொன்ன நிர்மலா சீதா ராமன், அது தொடர்பான ரெக்கார்டுகள் பலவும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் சொல்லியிருக்கிறார். இந்தக் கூட்டம் குறித்த தகவல் முழுதும் ஹெச். ராஜா உள்ளிட்டவர்களின் கவனத் துக்குப் போயிருக்கிறது. நம்மை யெல்லாம் தவிர்த்துவிட்டு அவர் அவரது ஆதரவாளர் களை மட்டும் அழைத்து கூட்டம் போடுவது எந்த விதத்தில் சரி? என பா.ஜ.க. நிர்வாகிகள் ஆதங்கத்தோடு குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்,.''”

"பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் மீண்டும் சம்மன் அனுப்பத் தயாராகி வருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக சென்னையிலிருந்து அவர் தொகுதிக்குக் கடத்தப்பட்ட சுமார் 4 கோடி ரூபாயை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பான வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்துவருகின்றனர். தமிழக பா.ஜ.க.வின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகப் பல தகவல்கள் சி.பி.சி.ஐ.டி.க்கு கிடைத்த நிலையில், அவரிடம் விசாரிப்பதற்காக அவர்கள் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவவிநாயகம் மனு தாக்கல் செய்ய, அதில் சம்மனுக்குத் தடை கிடைத் தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேல்முறையீடு செய்திருந் தனர். இதன் விசாரணை கடந்தவாரம் வந்தபோது, சி.பி.சி.ஐ.டி.யின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சம்மனுக்கு கொடுக்கப்பட்ட தடை உத்தரவை அதிரடியாக நீக்கினார்கள். இது கேசவவிநாயகத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் ஒருசேர பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் கேசவவிநாயகத் துக்கு சம்மன் அனுப்பத் தயாராகிவருகிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.''”

"வானதி சீனிவாசனைப் பத்தி ஒரு வில்லங்கம் வெளிச்சத்துக்கு வந்திருக்காம்ல...''

"அண்மையில் சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை அவமானப்படுத்திய விவ காரம் பூதாகரமாகி தனது பெயர், பெரிய அளவில் டேமேஜ் ஆனதற்குக் காரணம், வானதி சீனிவாசன் தான் என்கிற கடுப்பில் இருக்கிறாராம். அதனால், அதன்பிறகு தனது இரண்டுநாள் நிகழ்ச்சிகள் எதி லும் வானதியை அவர் சேர்க் காமல் ஓரம்கட்டிவிட்டாராம். மேலும் தன் பெயரைப் பயன் படுத்தி, எம்.எல்.ஏ. என்கிற கெத்தோடு, கோவைப் பகுதியில் வானதி பெரிய அளவில் நிதி வசூல் செய்த வில்லங்க விவகார மும் நிர்மலா சீதாராமன் வரை வெளிச்சத்திற்கு வந்து, அதிர்ச்சி கொடுத்ததால், அது குறித்தும் அவர் தீவிரமாக விசாரித்து வருகிறாராம். இதைத் தொடர்ந்து அவருக்கு விரைவில் பா.ஜ.க.வில் ஆப்பு உறுதி என்கிறது கமலாலயத் தரப்பு.''’

"பிற கட்சிகளில் இருக்கும் தேவர் சமூகப் பிர முகர்களுக்கு எடப்பாடி தூண்டில் போட்டுவரு கிறார் என்கிறார்களே?''”

"முக்குலத்தோர் ஆதரவு இன்றி அ.தி.மு.க. திணறுவதை எடப்பாடி உணர்ந்திருக்கிறாராம். அதனால், இதை ஈடுகட்டும் விதமாக, காங்கிரசில் இருக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக் கரசையும், பா.ஜ.க.வில் இருக்கும் நயினார் நாகேந்திரனையும் அ.தி.மு.க.வுக்கு அழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள். இருவரும் அவரவர் கட்சி மீது கடும் அதிருப்தியில் இருப்பதால், அவரது முயற்சி பலிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க. தரப்பில் வலுத்திருக்கிறது. அதே சமயம், தேர்தல் நேரத்தில் நயினாருக்காக கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் விவகாரம் சிக்கலாகிவருவதால், நயினார் தி.மு.க. பக்கம் வந்தால் அதிலிருந்து சற்று விடுபடலாம் என்று நினைக்கிறாராம். ஆனால் தி.மு.க. தரப்போ அவரது வரவுக்குக் கதவு திறக்க விரும்பவில்லையாம். அதனால் வேறுவழியின்றி அவர் அ.தி.மு.க.வுக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறாராம்.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறதே?''

"கடந்த 2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. அமைச்சரவையில் முக்கிய இடம் வகித்தவர் வைத்திலிங்கம். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீக மாகக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் கோலோட்சிய வைத்திலிங்கத்தின் மீதும், அவ ரது மூத்த மகன் பிரபு மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக அவர் இருந்த போது, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய மகன் பிரபுவின் பெயரில் 32 கோடியே 47 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என் றும், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபுவின் பெயரில் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் 23 கோடியே 60 லட்சம் மதிப்பில் திருவெறும்பூர் மற்றும் பூந்தமல்லியில் வீட்டு மனை வாங்கியதாகவும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை. இருவர் மீதும் வழக்கைப் பதிவுசெய்து, முதல் தகவல் அறிக்கையை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்... சென்னை நகரின் நிழலுலகத்தைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டு, க்ரைமில் கலக்கிவந்த ரவுடிகளான சி.டி.மணி, மற்றும் அப்பு ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய் திருக்கிறது சென்னை போலீஸ். அண்மையில் என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியும் சி.டி.மணியும் நெருங்கிய தோஸ்து களாம். சி.டி.மணியையும் என்கவுன்டர் செய்து விடுவார்கள் என்று பதறிய அவர் அப்பா, சுற்றி வளைக்கப்பட்டு மணி கைதானது முதல் அவர் எந்த எதிர்ப்பும் காட்டாத வகையில், காரில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுவது வரை, வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு, நீதி மன்றங்களை நோக்கி என் மகனைக் காப்பாற் றுங்கள் என்று கதறிக்கொண்டிருக்கிறார். அதனால், சி.டி.மணியை என்கவுன் டர் செய்யும் முடிவு, தற்போதைய நிலையில் கைவிடப்பட்டதாக தெரியவந்திருக்கிறது.''”