பெரியார் பல்கலைக்குள் ஊடுருவிய சாதி-மத வெறி! -பெயரை மாற்ற பா.ஜ.க. தீவிரம்!

dd

துர்கா மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறி வருவதுபோல், சேலம் பெரியார் பல்கலையை காவிக் கூடாரமாக மெல்ல மெல்ல உருமாற்றி வருகின்றனர், இப்போதுள்ள துணை வேந்தரும், அவருடைய பரிவாரங்களும் என்கிறார்கள் கல்வி யாளர்கள். எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது தமிழக அரசின் உயர் கல்வித்துறை.

கடந்த செப். 24-ம் தேதியன்று, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தர்மபுரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலம் வழியாக செல்லும்போது, திடீரென்று பெரியார் பல்கலைக்குள் காரை திருப்பிவிடச் சொன்னார். அங்குள்ள புவியமைப்பியல் இணை பேராசிரியர் ராம்குமார் என்பவருடன் உரையாடினார். அங்கேயே மதிய உணவையும் முடித்துக்கொண்டு, கிளம்பிச் சென்றார். ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இத்தனைக்கும் அன்று, துணைவேந்தர் ஊரில் இல்லை. அவருடைய அறையில் கதவுகளை மூடிக்கொண்டு ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளனர் என்கிறார்கள் பல்கலை வட்டாரத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த ஹெச்.ராஜா, இங்கே புரபசராக இருக்கும் தனது நண்பரை பார்க்க வந்ததாக மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

faf

இந்த நிலையில்தான், அக். 24-ம் தேதியன்று பல்கலையில் பட்டமளிப்பு விழா நடந்தது. அரசியல் கட்சிகளும் ஊட கங்களும் இடைத்தேர்தல் முடிவுகளில் பிஸியாக இருந்த நேரம் அது. பல்கலை முகப்பில் கம்பீரமாய் நின்றிருக்கும் பெரியார் சிலையை மூடி மறைக்கும் வகையில் டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டது. அதில், இந்து மத அடையாளங்களை குறிக்கும் வகையில் விநாயகர், ஓம், திரிசூலம் ஆகிய படங்கள் எல்.இ.டி. விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டிருந்தன. கல்வி நிலையங்களில் மத ffஅடையாளங்களைத் திணிக்கக்கூடாது என்ற நிலையில், பெரியார் பல்கலைக்

துர்கா மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறி வருவதுபோல், சேலம் பெரியார் பல்கலையை காவிக் கூடாரமாக மெல்ல மெல்ல உருமாற்றி வருகின்றனர், இப்போதுள்ள துணை வேந்தரும், அவருடைய பரிவாரங்களும் என்கிறார்கள் கல்வி யாளர்கள். எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது தமிழக அரசின் உயர் கல்வித்துறை.

கடந்த செப். 24-ம் தேதியன்று, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தர்மபுரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலம் வழியாக செல்லும்போது, திடீரென்று பெரியார் பல்கலைக்குள் காரை திருப்பிவிடச் சொன்னார். அங்குள்ள புவியமைப்பியல் இணை பேராசிரியர் ராம்குமார் என்பவருடன் உரையாடினார். அங்கேயே மதிய உணவையும் முடித்துக்கொண்டு, கிளம்பிச் சென்றார். ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இத்தனைக்கும் அன்று, துணைவேந்தர் ஊரில் இல்லை. அவருடைய அறையில் கதவுகளை மூடிக்கொண்டு ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளனர் என்கிறார்கள் பல்கலை வட்டாரத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த ஹெச்.ராஜா, இங்கே புரபசராக இருக்கும் தனது நண்பரை பார்க்க வந்ததாக மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

faf

இந்த நிலையில்தான், அக். 24-ம் தேதியன்று பல்கலையில் பட்டமளிப்பு விழா நடந்தது. அரசியல் கட்சிகளும் ஊட கங்களும் இடைத்தேர்தல் முடிவுகளில் பிஸியாக இருந்த நேரம் அது. பல்கலை முகப்பில் கம்பீரமாய் நின்றிருக்கும் பெரியார் சிலையை மூடி மறைக்கும் வகையில் டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டது. அதில், இந்து மத அடையாளங்களை குறிக்கும் வகையில் விநாயகர், ஓம், திரிசூலம் ஆகிய படங்கள் எல்.இ.டி. விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டிருந்தன. கல்வி நிலையங்களில் மத ffஅடையாளங்களைத் திணிக்கக்கூடாது என்ற நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் அவரது சிலையை மறைத்து இப்படிச் செய்தது சர்ச்சையை உருவாக்கியது.

பள்ளிகளில் மதவெறி குறித்து கல்வித் துறை சுற்றறிக்கை பரபரப்பான நிலையில், கல்லூரி-பல்கலைக்கழகங்களிலும் திட்டமிட்டு மதவெறி நுழைக்கப்படுகிறது என்றும் பெரியார் பல்கலைக்கழகம்தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாவின் முதல் இலக்கு என்றும் சொல்கின்றனர். நாம் பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.

""இந்தப் பல்கலையில் துணை வேந்தர், பதிவாளர், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர், ஆர்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர், ஆடை வடிவமைப்புத்துறைத் தலைவர், உணவு அறிவியல் துறை தொலைநிலைக் கல்வித்திட்ட துணை இயக்குநர் என முக்கிய பொறுப்புகளில் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர்தான் கோலோச்சுகின்றனர். உணவு அறிவியல் துறைத் தலைவராக உள்ள பூங்கொடி விஜயகுமார், ஆளுநரின் நியமனமான (கவர்னர் நாமினி) சிண்டிகேட் உறுப்பினராகி இருக்கிறார். அவரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களை ஜி ஃபேக்டர் என்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகள்தான் இங்கே அமல்படுத்தப்படுகிறது.

முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர் கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில், தற்போதைய துணைவேந்தர் குழந்தைவேலு லஞ்ச குற்றச் சாட்டுகளில் சிக்காவிட்டாலும், அவரும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ளவர்தான். அதனால்தான், துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலில் 8-ஆவது இடத்தில் இருந்த அவரால் பதவி பெற முடிந்தது. அடுத்து, பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த உதவி பேராசிரியர் களும் இங்கே கூட்டுச்சேர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு, விவேகானந்தர் ரத யாத்திரையை பெரியார் பல்கலையில் இருந்தே தொடங்கினர். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார். பெரியார் பல்கலை புவியமைப்பியல் துறை இணைப்பேராசிரியராக உள்ள ராம்குமார்தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த ராம்குமாரைத்தான் கடந்த மாதம் ஹெச்.ராஜா சந்தித்து ரகசியமாக உரையாடிவிட்டுப் போயிருக்கிறார். அந்த சந்திப்பின் தொடர்ச்சிதான், பட்டமளிப்பு விழாவின்போது பெரியார் சிலையைச் சுற்றிலும் இந்துமத அடையாளங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

dd

ஆசிரியர் தினம் போன்ற நாட்களிலும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. இவற்றின் ஆதிக்கம்தான் அதிகம். இப்படி சாதியும், காவி வர்ணமும் பல்கலைக்குள் துளித்துளி விஷமாக படிப்படியாக பரப்பி வருகிறார்கள். அதற்கு பல்கலை நிர்வாகம் எல்லா வகையிலும் ஒத்துழைக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால், பா.ஜ.க. எப்படி தேசத்துரோகி என்கிறதோ, அதேபோல் பல்கலையும் எங்களை நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்று சொல்லி சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கிறது,'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.

யார் அந்த ராம்குமார்? அவருடன் ஹெச்.ராஜா என்னதான் பேசினார்? அதையும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் விசாரித்தோம். ""செப். 24-ஆம் தேதி, தர்மபுரியில் ஆர்டிக்கிள் 370 பற்றிய பரப்புரை கூட்டம் நடந்தது. அதில் பேசுவதற்காக ஹெச்.ராஜா வந்திருந்தார். பெரியார் பல்கலையில் புவியமைப்பியல் துறை இணைப்பேராசிரியராக உள்ள ராம்குமார், மத அடிப்படையி லான சிந்தனை கொண்டவர். கீழடி அகழ்வாராய்ச்சியிலும் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அதனால், பெரியார் பல்கலையில் புவியமைப்பியலையும் தொல்லியலையும் ஒருங்கிணைத்து "ஜியோஆர்க்' என்ற புதிய படிப் பைத் தொடங்கலாம் என்று ஏற்கனவே சிண்டிகேட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வந்திருந்தார்.

மேலும், சேலத்தில் தொல்லியல் துறை சார்பில் ஒரு ஆய்வு மையம் அமைக்கவும் பா.ஜ.க. வட்டாரங்களில் பேசி வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய பா.ஜ.க. அரசில் செல்வாக்குள்ள ஹெச்.ராஜாவிடம் அவர் பேசியிருந்தார். அதன்பேரில்தான் இந்த திடீர் சந்திப்பு நடந்தது. துணைவேந்தர் அறையில் ராம்குமார், கீழடி அகழாய்வு சம்பந்தமான சில வீடியோ காட்சிகளை பவர் பாயிண்ட் மூலம் போட்டுக் காட்டினார்.

அன்றைய தினம் ஹெச்.ராஜாவின் பயணத்திட்டத்தில் பெரியார் பல்கலைக்குச் செல்லும் நிகழ்ச்சி நிரலே இல்லை. வரும் வழியில் அவருக்கு அப்படி ஒரு யோசனை தோன்றி இருக்கிறது. அதை உடனே சேலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தெரிவித் தார். அதன்பேரில்தான் நாங்களும் பல்கலைக்குச் செல்ல நேர்ந்தது. இதில் துளிகூட அரசியல் கிடையாது,'' என்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

எது எப்படி இருப்பினும், பெரியார் பல்கலையின் மீது படர்ந்து வரும் காவி வர்ணம், அரசியல் களத்திலும் சூட்டைக் கிளப்பி இருப்பது என்னவோ உண்மைதான்.

இடதுசாரி மாணவர் அமைப்பினர், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வளர்ந்துவரும் மதவாதப் போக்கைக் கண்டித் திருப்பதுடன், கல்வித்துறை சார்ந்த எவ்வித பொறுப்பிலும் இல்லாத ஹெச்.ராஜா எந்த அடிப்படையில், துணைவேந்தர் அறையில் ஆலோசனை நடத்தினார் என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள்.

பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலிடம் இதுகுறித்து கேட்டபோது, ""ஹெச்.ராஜாவும், இணை பேராசிரியர் ராம்குமாரும் நண்பர்கள். அதனால் அவர், பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சந்தித்துள்ளார். அன்றைய தினம் நான் வெளியூரில் இருந்தேன். ஹெச்.ராஜா இங்கு வந்த பிறகுதான், அவருடைய வருகை குறித்தும், என் அறையைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் தகவல் அளித்தனர்.

என் அனுமதியுடன்தான் துணைவேந்தர் அறையில் அவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது கட்சிக்காரர்கள் சிலரும் அங்கே வந்தது குறித்து ஹெச்.ராஜாவும் கண்டித்து இருக்கிறார். பெரியார் சிலை பின்னணியில் இந்துமத அடையாளங்களை ஒளிரவிடப்பட்டது குறித்து ஆட்சேபணை எழுந்திருக்கிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டி முடிவின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி, பல்கலைக் கழகம் என்பது பொது நிறுவனம். யார் வேண்டு மானாலும் வரலாம்... போகலாம். இதில் தப்பு ஒன்றும் இல்லை,'' என்றார்.

1997-ல் தி.மு.க. ஆட்சியில் கலைஞர் காட்டிய அக்கறையும், வீரபாண்டி ஆறுமுகம் எடுத்த முயற்சியும்தான் சேலத்தில் பெரியார் பெயரிலான பல்கலைக்கழகம் அமைய காரணமாக இருந்தது. சமத்துவம் -சமூக நீதி இவையே கல்வியின் குறிக்கோளாக இருக்கும் நிலையில், அதற்கு மாறாக, மதவாதத்தை திணித்து, காலப்போக்கில் பெரியார் பெயரையும் பல்கலைக்கழகத்திலிருந்து எடுத்துவிட மத்தியில் உள்ள அதிகாரத்தைக் கொண்டு முயற்சிக்கிறார்கள் பா.ஜ.க.வினர் என்பதே கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.

பட்டமளிப்பு விழாவில் அதற்கான முன்னோட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது என்றும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றும் பெரியாரிய அமைப்பு களும், மாணவர் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

ஆனால், மாநில அரசின் உயர்கல்வித் துறையை கைக்குள் வைத்துக்கொண்டு நினைத்ததை சாதிக்கிறது பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தரப்பு.

-இளையராஜா

nkn011119
இதையும் படியுங்கள்
Subscribe