Advertisment

சாதி அரசியல் ஆசிரியர்கள்! சிக்கலில் சேலம் அரசுப் பள்ளி!

teahcer


சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே யுள்ள வெள்ளாரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. 1,100 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 11 முதுகலை ஆசிரியர்கள் உள்பட 40 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சுற்று வட்டார கிராம மக்களின் நம்பிக்கை முகமாக இருந்துவந்த இந்தப் பள்ளி, கடந்த சில ஆண்டு களாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். 

Advertisment

இதுதொடர்பாக வெள்ளார் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தோம். ''வெள்ளார் சுற்றுவட்டாரத்தில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடமும் அந்த சமூகத்தின் ஆதிக்க உணர்வு மேலோங்கி யிருக்கிறது. 

Advertisment

இந்தப் பள்ளியில், வணிகவியல் பாடப் பிரிவில் பெண் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சத்யா, தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) வரை யாருக்கும் கட்டுப்படுவதில்லை. கடந்த செப்டம் பர் மாதம் காலாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் ராஜா, மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவி களை திறந்தவெள


சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே யுள்ள வெள்ளாரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. 1,100 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 11 முதுகலை ஆசிரியர்கள் உள்பட 40 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சுற்று வட்டார கிராம மக்களின் நம்பிக்கை முகமாக இருந்துவந்த இந்தப் பள்ளி, கடந்த சில ஆண்டு களாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். 

Advertisment

இதுதொடர்பாக வெள்ளார் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தோம். ''வெள்ளார் சுற்றுவட்டாரத்தில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடமும் அந்த சமூகத்தின் ஆதிக்க உணர்வு மேலோங்கி யிருக்கிறது. 

Advertisment

இந்தப் பள்ளியில், வணிகவியல் பாடப் பிரிவில் பெண் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சத்யா, தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) வரை யாருக்கும் கட்டுப்படுவதில்லை. கடந்த செப்டம் பர் மாதம் காலாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் ராஜா, மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவி களை திறந்தவெளியில் அமரவைத்து தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் சி.இ.ஓ. கபீர், திடீரென்று பள்ளிக்கு ஆய்வுசெய்ய வந்துவிட்டார். எல்லா ஆசிரியர்களும் சி.இ.ஓ. முன்னிலையில் ஆஜராகியிருந்தபோது, ஆசிரியர் சத்யா மட்டும் தனது வகுப்பறையைவிட்டு வெளியேவரவில்லை. ஊழியர்கள் மூலம் அவரை அழைத்த சி.இ.ஓ., அதிகாரிகள் வந்தால்கூட நேரில் வரமுடியாதோ? என்று கடிந்துகொண்டார். 

அதற்கு ஆசிரியர் சத்யாவோ, "நீங்கள் வந்திருக்கும் தகவலே எனக்குத் தெரியாது' என்று அலட்சியமாகப் பதிலளித்தார். இதனால் டென்ஷனான சி.இ.ஓ., "உங்கள் வகுப்பறையில் மாணவர்களே இல்லாதபோது, அவர்கள் எங்கே போனார்கள், என்ன செய்கிறார்கள்' என்றாவது விசாரித்திருக்கவேண்டாமா? என்று ஒரு காட்டு காட்டிவிட்டுச் சென்றார்.  

ஆசிரியர் சத்யா பயன்படுத்திவரும் வகுப்பறைக் கட்டடம் பயன்பாட்டிற்கு உகந்த தல்ல என்று பொதுப்பணித்துறை சான்றளித்துள் ளது. ஆனாலும், ஒதுக்குப்புறமாக உள்ள அந்த கட்டடத்திலேயே மாணவர்களை அமர வைத்து பிடிவாதமாக பாடம் நடத்திவருகிறார். 

உடனடித் தேர்வில் தேர்ச்சிபெற்று, +1 வகுப்பில் சேர வரும் மாணவர்களுக்கு வணிகவியல் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சத்யா, தலைமை ஆசிரியரிடம் நேரடியாகவே மோதினார். ஹெச்.எம். அவரைக் கண்டித்ததால், மயங்கிவிழுந்து நாடகமாடினார்'' என்று ஆசிரியர் சத்யாவைப் பற்றி புட்டுப் புட்டு வைத்தனர் சக ஆசிரிய பெருமக்கள். 

இவர் இப்படியென்றால், ஆங்கில பட்டதாரி ஆசிரியரான அறிவழகன், கற்பித்தல் பணிக்கே லாயக்கற்றவர் என ஒட்டுமொத்தமாக பொங்கி யெழுகிறார்கள் ஆசிரியர்கள். 

teahcer1

"ஆசிரியர் அறிவழகன், பணிக்கு வராமல் திடீர் திடீரென்று தலைமறைவாகி விடுவார். முன்னனுமதியின்றி மாதக்கணக்கில் விடுப்பிலிருப் பார். ஆட்சேபனை கிளம்பினால் மட்டும் யாரையாவது ஒரு டாக்டரைப் பிடித்து உடல்நலம் சரியில்லை என்று சான்றிதழ் பெற்றுக் கொடுத்து விடுவார். 

அவரிடம் நெருங்கிப்போனால் மதுபான வாடை வீசுவதாக ஏற்கனவே மாணவர்கள் புகாரளித்துள்ளனர். அவருடைய உறவினர்கள் சிலர் காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை யில் முக்கிய பதவிகளில் இருப்பதாலும், இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் துறைரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக்கொள்கிறார். அவர் பணிக்கு வராத நாட்களில் தற்காலிக ஆசிரியரை வைத்து ஆங்கிலப் பாடங்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கிறது. 

சமீபத்தில் பிளஸ்டூ மாணவன் ஒருவன், சக மாணவிகளை செல்போனில் படமெடுத்தும், அவர்களின் குரலைப் பதிவுசெய்தும் வைத்திருந்தது தெரியவந்தது. அவனிடமிருந்த செல்போனை ஹெச்.எம்., பறிமுதல் செய்துவிட்டார். தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு அதே மாணவன் புத்தகப் பைக்குள் நாட்டு வெடிகளை பதுக்கிவைத்து வகுப்பறைக்குள் எடுத்துவந்திருந்தான். அரசியல் அழுத்தம்காரணமாக மாணவன்மீது ஹெச்.எம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருக்கிறது. அதை நிரப்பவும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே பொறுப்பற்றுச் செயல்படுவதாலும், அரசியல் அழுத்தத்தாலும் பள்ளியின் நிர்வாகப் பணிகள் பாதித்துள்ளன. தலைமை ஆசிரியரும் தவறுசெய்யும் ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறார்'' என்று புலம்புகின்றனர் நேர்மையான ஆசிரியர்கள். 

"முதுகலை ஆசிரியர்களில் வணிகவியல் பாட ஆசிரியர் சத்யா மட்டும்தான் பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதில்லை. மற்ற ஆசிரியர்களுடன் சகஜமாக இருக்கமாட்டார். அவருக்கு ஏதேனும் தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம். அவர் மீதும், பணிக்குச் சரிவர வராமல் அடிக்கடி விடுப்பில் சென்றுவிடும் ஆசிரியர் அறிவழகன்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாரளித்துள்ளேன். டி.இ.ஓ. இதுகுறித்து ஒருமுறை விசாரித்துவிட்டுப் போனார்'' என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜா. 

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஞானவேல், "ஆசிரியர்கள் சத்யா, அறிவழகன் மற்றும் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காத ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பி.டி.ஏ., கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.   

"கல்விக்கூடத்திற்குள் சாதியையும், அரசியலையும் புகுத்தும் ஒழுங்கீனமான ஆசிரி யர்களால் எப்படி சமூகத்திற்கும், மாணவர் களுக்கும் ரோல் மாடலாக இருக்க முடியும்?' என கேள்வியெழுப்புகிறார்கள் நடுநிலையான ஆசிரியர்கள். 

nkn011125
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe