கிருஷ்ணகிரியை சாதிக் கலவரத்தின் விளைநிலமாக மாற்றி வருகின்றனர் அரசியல்வாதிகள். கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த மக்களும், அதன் அருகிலேயே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் களும் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் இரு சமூகத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் கோயில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கிரானைட் கற்கள் கொண்டுவரப்பட்டு பாலீஷ் போடும் பணிகள் நடந்துவருகிறது. கிரானைட் கற்களை பாலீஷ் போடும்போது அதிலிருந்து வெளிவரும் தூசித்துகள்கள், அருகில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் மக்களின் வீடுகளில் படிந்திருக்கிறது. அவர்கள் உண்ணும் உணவிலும் படிந்துள்ளது. இதனையறிந்த அன்பரசன் என்பவர், கடந்த 29ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில், "இப்படி தொடர்ந்து தூசித்துகள்கள் வந்துகொண்டிருக்கிறதே, எதாவது தடுப்பை ஏற்படுத்தலாமே?" எனக் கேட்டுள்ளார். அதற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், "நீங்கல்லாம் என்னை கேள்விகேட்கும் அளவிற்கு வந்துவிட்டதா?'' என சாதி வன்மத்தோடு பேசி அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பரசனும் திருப்பி அடித்துள்ளார். இருதரப்பினரும் மாறிமாறி அடித்துக்கொண்ட னர். இந்த விவகாரம் கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரனுக்கு தெரிந்தவுடன், உடனடியாக பிரச்சனையை பேசி சமாதனம் செய்து முடித்துவைத்துள்ளார்.
இந்நிலையில், இவர்களை விட்டுவிடக்கூடாது என திட்டம் தீட்டிய மாற்று சமூகத்தினர், அன்றிரவு 10 மணிக்கு, சோக்காடி ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 500க்கும் மேற்பட் டோர் நுழைந்து, அங்கு வசிக்கும் மக்கள்மீது, உருட்டுக்கட்டை, தடிகளைக்கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பட்டியலின மக்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், பிரச்சனை யை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது அவர்கள்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை யடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. இரவு 12 மணிக்கு நேரடி யாக பிரச்சனை நடந்த பகுதிகளுக்கு வந்து விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களை இரவு 2 மணிக்கு மருத் துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியுள்ளார். பின்னர் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்த வி.சி.க. மாவட்டச் செயலாளர் மாதேஸ் அந்த மக்களிடம் உண்மையைக் கேட்டறிந்த பிறகு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யை சந்தித்துள்ளார்.
"பட்டியலின மக்களின் பகுதிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், சோக்காடி அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் கொடியின் கணவர் இராமலிங்கம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கலவரக்காரர் கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும். இல்லையேல் கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் படும்'' என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. ராஜன் மீது எஸ்.சி., எஸ்.டி., வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆனால் அனைவரையும் கைது செய்துள்ள போலீசார், ராஜனை மட்டும் தேடிவருவதாகக் கூறுகின்றனர்.
அப்பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பாக மாற்றுச் சமூகத்தை சேர்ந்த காதல் தம்பதியினர் திருமணத்தில் பிரச்சனை எழுந்தது. அதேபோல், அப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு திட்டமிட்டபோது, மாற்றுச் சமூகத் தினர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த தால் பிரச்சனை எழுந்தது. இதேபோல், ராஜனின் செயல்பாடுகளுக்குப் பின்னணியில் ஓர் அரசியலும் உள்ளது. அ.தி.மு.க. ராஜன், ஆரம்ப காலத்தில் தம்பி துரையின் ஆதரவாளராக இருந்து, தற்போது கே.பி. முனுசாமியின் தீவிர ஆதரவாளராக உருவெடுத்து ஒன்றிய பதவியைப் பெற்றுள்ளார். ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணகிரியை தனது கோட்டையாக வைத்திருந்த கே.பி.க்கு அதை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தலித் மக்களும், முஸ்லீம்களும் என நினைக்கிறார். எனவே, இந்த முறை எம்.எல்.ஏ. தேர்வில் அ.தி.மு.க. சார்பாக கிருஷ்ணகிரியில் நிற்பதாக இருந்த கே.பி.க்கு, அ.தி.மு.க. தலைமையே வேப்பனஹள்ளியைக் கொடுத் துள்ளது. அந்த கோபத்தைக் காட்டுகிறார்களாம்.
அ.தி.மு.க. தலைவராக ஜெ. இருந்தபோது, பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. அப்போது கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரப் பதாகை எழுதும்போது அ.தி.மு.க. கொடியிலிருக்கும் அண்ணாவை எடுத்துவிட்டு அதில் மாம்பழத்தை வரைந்திருந் தார் கே.பி. இந்த விவகாரம் ஜெ. காது வரைக்கும் சென்று, ஜெ.வே ஒருமுறை, "அவருக்கு நான் தலைவர் இல்லை, பா.ம.க. தலைவர் தான் அவருக்கு தலைவர்'' எனப் பேசியுள்ளார். அந்த அளவிற்கு சாதிப் பற்று அவருக்குள் இருந்துவரு வது ஊரறிந்த உண்மை. இவரது வளர்ப்பான ராஜன், பட்டியலின மக்களின் பொருளாதாரத்தை வீழ்த்த வீடுகளைக் கொளுத்தியதாகக் கூறப்படு கிறது. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரே அப்பகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தும், இதுவரை அந்த மக்களை சந்திக்கவில்லை என்கிறார்கள். இதுவே அவர்களின் சாதிய அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.