Advertisment

சாதி மாறி காதல்! பெற்ற மகளைக் கொடூரமாகக் கொன்ற தாய்!

ss

தொழில்நுட்பம் விண்ணைத் தாண்டிய டிஜிட்டல் யுகத்திலும், சாதி மாறி திருமணம், சமூகம் மாறிப் பிடிவாதக் காதல் போன்றவைகளில் ஆக்ரோஷம் காரணமாக நடத்தப்படுகிற ஆணவக்கொலைகள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக அரங் கேறிக் கொண்டுதானிருக்கின்றன. அரிதிலும் அரிதாக பெற்ற தாயே ஆணவக் கொலையில் ஈடுபட்டதுதான் நெற்றியைச் சுருங்க வைக்கிற விஷயம்.

Advertisment

caste

பாளையங்கோட்டையை ஒட்டியுள்ள சீவலப்பேரிப் பக்கமுள்ள பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. வேலைநிமித்தம் சென்னையில் லாரி டிரைவராக இருப்பவர். இவரது மனைவி ஆறுமுககனி. இவர்களின் மகள் அருணா. பாலாமடை கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் தாய் ஆறுமுகக்கனி, மகளை சிரமப்பட்டு கோவையில் டிப்ளமோ நர்சிங் படிக்க வைத்திருக்கிறார். படிப்பிற் குப் பின்னர் கோவை யிலேயே நர்சாகப் பணிபுரிந்து வந்திருக் கிறார் அருணா. ஒரே மகள் என்பதால் மகளை பாசமாகவும் செல்லமாக வும் வளர்த்த தாய் ஆறுமுகக்கனி அவ

தொழில்நுட்பம் விண்ணைத் தாண்டிய டிஜிட்டல் யுகத்திலும், சாதி மாறி திருமணம், சமூகம் மாறிப் பிடிவாதக் காதல் போன்றவைகளில் ஆக்ரோஷம் காரணமாக நடத்தப்படுகிற ஆணவக்கொலைகள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக அரங் கேறிக் கொண்டுதானிருக்கின்றன. அரிதிலும் அரிதாக பெற்ற தாயே ஆணவக் கொலையில் ஈடுபட்டதுதான் நெற்றியைச் சுருங்க வைக்கிற விஷயம்.

Advertisment

caste

பாளையங்கோட்டையை ஒட்டியுள்ள சீவலப்பேரிப் பக்கமுள்ள பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. வேலைநிமித்தம் சென்னையில் லாரி டிரைவராக இருப்பவர். இவரது மனைவி ஆறுமுககனி. இவர்களின் மகள் அருணா. பாலாமடை கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் தாய் ஆறுமுகக்கனி, மகளை சிரமப்பட்டு கோவையில் டிப்ளமோ நர்சிங் படிக்க வைத்திருக்கிறார். படிப்பிற் குப் பின்னர் கோவை யிலேயே நர்சாகப் பணிபுரிந்து வந்திருக் கிறார் அருணா. ஒரே மகள் என்பதால் மகளை பாசமாகவும் செல்லமாக வும் வளர்த்த தாய் ஆறுமுகக்கனி அவளின் தேவைக்கானவைகளை குறையின்றிச் செய்துகொடுத்திருக்கிறாராம்.

இதனிடையே கோவையில் வேலைபார்த்து வந்த அருணா, அங்கு வேலை பார்த்துவந்த பாலாமடையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை உயிருக்குயிராய் காதலித்து வந்திருக்கிறார். அந்த வாலிபர் வேறு சமுதாயம் என தெரிந்தும்கூட அவர்களின் காதல் தீவிரமாக நீடித்திருக்கிறது. மகளின் இந்தக் காதல், அரசல்புரசலாக தாய் ஆறுமுககனிக்கு எட்டவே, பேச்சுவாக்கில் ஜாடை மாடையாகவும் தனது எதிர்ப்பை தெரிவித்திருக் கிறார் தாய். ஆனாலும் மகள் தன் காதலை விடுவ தாகத் தெரியவில்லை. “இந்தக் காதல் வேண்டாம். அவர் வேறு சமுதாயம்” என்று அருணாவிடம் நேருக்கு நேர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஏற்காத மகள் அருணா, நான் அவரைத் தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார்.

இதனிடையே, கோவையிலிருந்த மகளை ஊருக்கு அழைத்து வந்திருக்கிறார் தாய். மகளின் மனது மாறும் என்று தாய் நினைக்க, மாறாக, அருணாவின் பிடிவாதம் தளரவில்லை. இத னிடையே பெற்றோர் வேறிடத்தில் மாப்பிள்ளை பார்த்து தனக்குத் திருமணம் செய்துவைக்கப் போவதையறிந்த அருணா, "அதற்குச் சம்மதிக்க மாட்டேன். அவரைத் தான் திருமணம் செய்வேன்' என்று தீர்க்கமாகச் சொன்னது கண்டு ஆத்திரமாகியிருக்கிறார் தாய்.

இந்த நிலையில், நவ.22 இரவு, தாய்க்கும் மகளுக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டி ருக்கிறது. தன்னுடைய சமாதானத்தை ஏற்காமல் முரண்டு பிடிக்கிறாளே என்று ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட தாய், நொடியும் யோசிக் காமல், பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல், அருணாவின் தோளில் கிடந்த துப்பட்டாவால் அவளது கழுத்தைச் சுற்றி நெரித்துக் கதறக் கதறக் கொலை செய்திருக் கிறார்.

cc

Advertisment

மகளின் மரணம் அவரை மனமுடைய வைத்ததுடன், இனி நாம இருந்தென்ன என்ற முடிவில், வீட்டிலிருந்த மாத்திரைகள் மற்றும் ஹேர் டையைக் குடித்து தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்த சீவலப்பேரி போலீசார் அருணாவின் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சம்பவம் தொடர்பாக தாயிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமியிடம், மகளைக் கொன்றதை விவரித்த தாய், தானும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவில் அளவுக்கதிக மான மாத்திரைகள், ஹேர் டையை குடித்ததாகவும் தெரிவிக்க, பதறிப்போன போலீசார், அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி யைத் தொடர்புகொண்டு கேட்டபோது...

"அந்தப்பையன் வேற சமூகமாம். நாங்க பாத்த மாப்பிள்ளைய வேண்டாம்னு சொல்லிட்டா. அவமாட்டேன்னு சொன்னதினால நா கோவத்தில அப்டி பண்ணிட்டேம்னு சொன்ன ஆறுமுகக்கனி, ஹேர்டையையும் குடிச்சதோட, வீட்ல உள்ள கண்ணாடித் துண்டுகள அரைச்சிக் குடிச்சதா சொன்னதால, அந்தம்மாவ ஐ.சி.யு.வில சேர்த்திருக்கோம். அவங்களால மேற்கொண்டு பேச முடியல. மயக்கத்துல இருக்காங்க. மேலும் ஸ்டமக் வாஷ்பண்ணா இன்ஃபெக்சன் ஆயிரும்றதால, தீவிரமா சிகிச்சை பண்ணிட்டிருக் காங்க''’என்றார்.

அக்கம்பக்கத்து வீட் டார்கள், உறவினர்கள் இது குறித்துப் பேசத் தயங்கினர். ஒரு சிலரோ, “"தந்தை சென்னையிலிருப்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வந்துசெல்வார். அந்தப் பொண்ணு இரண்டு மாசமா இங்கதான் இருந்தா. அன்னைக்கி என்ன நடந்துச்சோ தெரியல''” என்று முடித்துக் கொண்டார்கள்.

சமூகமும் உலகமும் எத்தனையோ விஷயங்களில் மாறிக்கொண்டிருக்கின்றன. ஜாதி, மத விவகாரங்கள் என்று வரும்போது மட்டும் சிலருக்கு மனது குறுகிப்போய்விடுகிறது. பெற்ற மகளையும் கொன்று, தன்னையும் அழித்துக்கொள்ள முனைகிற இத்தகைய பிற்போக்கு மனநிலை மாற, புதிதாக ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் உலகு.

செய்தி மற்றும் படங்கள்: ப.இராம்குமார்

nkn031222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe