ஆளுங்கட்சியில் சாதிப் பிரிவினை! சாதியால் அவமதிக்கப்படும் எம்.எல்.ஏ. -அதிருப்தியில் தொண்டர்கள்

dd

தி.மு.க. எம்.எல்.ஏவை சாதி ரீதியாக அவரது தொகுதிக்குள் அவரது கட்சியினரே அவமானப்படுத்து வதை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளது இந்திய குடியரசு கட்சி.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆளும்கட்சியை சேர்ந்த அமுலு. விஜயன் என்கிற வன்னியரை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி குடியாத்தம் கொண்டசமுத்திரம் கிராமத்திலுள்ள மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள், குறைகேட்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், எம்.எல்.ஏ. அமுலு, சேர்மன் சத்தியானந்தம் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய பெண்மணி, தனக்கு எழுதிக் கொடுத்தபடி பேசியதில், கடைசிவரை எம்.எல்.ஏ. பெயரை சொல்லவில்லை.

mmmla

எம்.எல்.ஏ. அலமு விஜயன் இதுபற்றி அந்தப் பெண்மணியிடம் கேட்டபோது, எழுதித் தந்ததைப் படித்தேன் என்றார் யதார்த்தமாக. அதற்கு எம்.எல்.ஏ., நான் உன்னை எதுவும் சொல்லலம்மா, உங

தி.மு.க. எம்.எல்.ஏவை சாதி ரீதியாக அவரது தொகுதிக்குள் அவரது கட்சியினரே அவமானப்படுத்து வதை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளது இந்திய குடியரசு கட்சி.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆளும்கட்சியை சேர்ந்த அமுலு. விஜயன் என்கிற வன்னியரை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி குடியாத்தம் கொண்டசமுத்திரம் கிராமத்திலுள்ள மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள், குறைகேட்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், எம்.எல்.ஏ. அமுலு, சேர்மன் சத்தியானந்தம் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய பெண்மணி, தனக்கு எழுதிக் கொடுத்தபடி பேசியதில், கடைசிவரை எம்.எல்.ஏ. பெயரை சொல்லவில்லை.

mmmla

எம்.எல்.ஏ. அலமு விஜயன் இதுபற்றி அந்தப் பெண்மணியிடம் கேட்டபோது, எழுதித் தந்ததைப் படித்தேன் என்றார் யதார்த்தமாக. அதற்கு எம்.எல்.ஏ., நான் உன்னை எதுவும் சொல்லலம்மா, உங்க நிலைமையும், என் நிலைமையும் ஒண்ணுதான் என்றவர், அருகில் அமர்ந்திருந்த அமைச்சரிடம், நான் தலித் என்பதால் புறக்கணிக்கிறார்கள். இந்த விழா மட்டுமல்ல என் தொகுதியில் நடைபெறும் எல்லா அரசு விழாக்களிலும் இதே நிலைதான் என கண்களில் கண்ணீர் தளும்ப முறையிட்டார். விழா ஏற்பாட்டாளர்களிடம் இதுபற்றி கண்டிப்பான குரலில் பேசினார் அமைச்சர் மஸ்தான்.

அவுங்க வருவாங்கன்னு தெரியாது என நிர்வாகி ஒருவர் கூறினார். "நான் வந்து உட்கார்ந்துயிருக்கேனே, அதுக்கப்பறம்தானே அவுங்க பேசறாங்க. எழுதித் தந்ததை திருத்தியிருக்கலாமே' என எம்.எல்.ஏ கேட்டதும், யாரும் பதில் சொல்ல வில்லை. இது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டனப் போராட்டம் நவம்பர் 12-ஆம் தேதி குடியாத்தத்தில் நடைபெற்றது. அதன் மாவட்ட தலைவர் தலித்குமார், "இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. அவமதிக் கப்பட்டதற்கான ஆதாரம் இருக்கு. நகரத்தில் ஒரு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்துவைத்தார். அதை எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதே கட்டிடத்தை தி.மு.க. நகர பொறுப்பாளர் சௌந்தர்ராஜன், ஒன்றிய சேர்மன் சத்தியானந்தம் இருவரும் தனியே ரிப்பன் வெட்டி திறக்கறாங்க. சமூக நீதி, பெண்ணுரிமை பேசும் தி.மு.க.வில் இப்படி நடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. எம்.எல்.ஏ. வுக்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம்'' என்றார். எம்.எல்.ஏ தரப்பும் இந்த இருவர் மீது குற்றம் சாட்டுகிறது. அவர்கள் தரப்போ, "உள்ளாட்சி தேர்தல் தகராறால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டுள்ள எம்.எல்.ஏ. மச்சினரான ஒ.செ. கல்லூர் ரவி பின்னணியிலிருந்து இப்படி குற்றம் சாட்டி பேசவைக்கிறார்' என்கிறது.

mla

கட்சி சீனியர்களோ, "எம்.எல்.ஏவை சாதி ரீதியாக ஒதுக்குவது உண்மைதான். இதைக்கேட்டபோது எங்களுக்கு அதிர்ச்சியாயிருக்கு. கட்சியில் பெரும்பாலும் சாதி ரீதியாகவே மாநிலம் முழுவதுமுள்ள நிர்வாகிகள் செயல்படுகிறார்கள்' என வேதனைக்குரலில் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன். இவரது தந்தை பெ.சு.திருவேங்கடம் சீனியர் கட்சி நிர்வாகி. பல முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். எம்.எல்.ஏ சரவணன் மீது சாதி ரீதியான புகாரை தெற்கு மா.செவும், பொதுப் பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு அனுப்பியுள் ளனர். அந்த புகாரில், தொகுதியில் நடந்த. போளுர், கலசப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவரை தன் அருகில் மேடையில் அமரவைத்து கூட்டம் நடத்தினார் எம்.எல்.ஏ. ஆனால், புதுப்பாளையம் ஒன்றிய கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாக, அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேடை மீது அமர்ந்து கூட்டம் நடத்தக்கூடாது, மேடையை விட்டு கீழே இறக்கி உட்காரவைத்து கூட்டம் நடத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படியே கூட்டம் நடந்தது. அந்த ஒன்றியத்தில் சேர்மனாக இருப்பவர் சுந்தரபாண்டியன். கட்சியின் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர், சீனியர் கட்சிக் காரர். ஆனால் அவர் பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த பாகுபாடு.

கட்சிக்காரனை விட தன் சாதிக்கார ஒப்பந்ததாரர்கள், பிரமுகர் களுக்குதான் அதிகம் செய்கிறார். புதுப்பாளையம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் காண்ட்ராக்ட் வேலை களை அந்த ஒன்றியத்துக்கு சம்பந்த மேயில்லாத ஒப்பந்ததாரருக்கு சாதி பார்த்து தருகிறார் என அதற்கெனப் பட்டியலையும் இணைத்துள்ளனர். அதேபோல் வனத்துறை, வேளாண்துறை கமிட்டிகளில் பல இடங்களில் தனது சாதிக்கார பிரமுகர்களாக நியமிக்க சிபாரிசு செய்துள்ளார். அதில் அ.தி.மு.க. பா.ம.க.வினரும் அடக்கம் என அது குறித்த பெயர்ப் பட்டியலை இணைத்து புகாரை அனுப்பியுள்ளார்கள். இது திருவண் ணாமலை மாவட்ட தி.மு.க.வினரி டையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் கருத்தறிய, நாம் அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டபோது... அவர் எடுக்கவில்லை.

"இப்படிப்பட்ட பிரச்சனைகளை தலைமை கண்டிக்கவில்லை யென்றால் அது தொடர்கதையாகி, கட்சியின் அடிமட்டத்தை காலி செய்துவிடும்' என்கிறார்கள் விசுவாசமான கட்சியினர்.

nkn201121
இதையும் படியுங்கள்
Subscribe