சிவகாசி தொகுதியில் 2 ணீ லட் சத்துக்கு மேல் வாக்காளர்கள் இருக்காங்க. இப்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ.வா இருக்கிற அசோகனுக்கு 78 ஆயிரம் வாக்காளர் களுக்கு மேல் ஓட்டு போட்ருக்காங்க. ஆனா.. அசோகன் எம்.எல்.ஏ.வுக்கு, இந்து நாடார் இடமாறி வகையறான்னு சொல்லப்படுற அவரோட சாதி சார்ந்த 2500 தலைக்கட்டுகள்தான் பெரிசா தெரியுது. சர்க்கார் புறம்போக்கு நிலத்துல அந்த வகையறாக்கள் கோயில்ங்கிற பேர்ல கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்ருக்காங்க. அரசியல் பலம் உள்ள எம்.எல்.ஏ.ங்கிறதுனால, அரசு அதிகாரிகள் அதை கண்டுக்கல. ஆனா.. 70 வருஷமா அஞ்சு தலைமுறையா பொத்தமரத்து ஊரணி ஓரமா வசிக்கிற பட்டியலினத்தைச் சேர்ந்த எங்க மக்களோட வீடுகளை இடிக்கணும்னு நோட்டீஸ் விட்ருக்காங்க. நாங்க தொடர்ந்து போராடிட்டு இருக்கோம்''’என்று ஆதங்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரான பொறியாளர் மாரியப்பன்.
ஆக்கிரமிப்பாளர் என சிவகாசி மாநகராட்சியால் கண்டறியப்பட்டவர்களில் ஒருவரான சங்கரேஸ்வரி நம்மிடம், "அந்த கோயில் கடைகளை மொதல்ல இடிச்சிட்டு அப்புறம் நாங்க குடியிருக்கிற வீடுகள் பக்கம் வரட்டும்''’எனக் குமுறினார்.
அசோகன் எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டின் பின்னணி இது-
சிவகாசி மாநகராட்சி யின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்துக்கு எதிரே 4.99 ஏக்கர் பரப்பளவுள்ள பெத்த மரத்து ஊரணியைத் தூர்வாரி பூங்கா அமைத் திட, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட் டத்தின் கீழ் ரூ.1.70 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அந்த ஊரணியில் வீடுகள், கடைகள் என 35 சதவீதத்துக்கும் மேல் ஆக்கிரமிக்கப்
சிவகாசி தொகுதியில் 2 ணீ லட் சத்துக்கு மேல் வாக்காளர்கள் இருக்காங்க. இப்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ.வா இருக்கிற அசோகனுக்கு 78 ஆயிரம் வாக்காளர் களுக்கு மேல் ஓட்டு போட்ருக்காங்க. ஆனா.. அசோகன் எம்.எல்.ஏ.வுக்கு, இந்து நாடார் இடமாறி வகையறான்னு சொல்லப்படுற அவரோட சாதி சார்ந்த 2500 தலைக்கட்டுகள்தான் பெரிசா தெரியுது. சர்க்கார் புறம்போக்கு நிலத்துல அந்த வகையறாக்கள் கோயில்ங்கிற பேர்ல கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்ருக்காங்க. அரசியல் பலம் உள்ள எம்.எல்.ஏ.ங்கிறதுனால, அரசு அதிகாரிகள் அதை கண்டுக்கல. ஆனா.. 70 வருஷமா அஞ்சு தலைமுறையா பொத்தமரத்து ஊரணி ஓரமா வசிக்கிற பட்டியலினத்தைச் சேர்ந்த எங்க மக்களோட வீடுகளை இடிக்கணும்னு நோட்டீஸ் விட்ருக்காங்க. நாங்க தொடர்ந்து போராடிட்டு இருக்கோம்''’என்று ஆதங்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரான பொறியாளர் மாரியப்பன்.
ஆக்கிரமிப்பாளர் என சிவகாசி மாநகராட்சியால் கண்டறியப்பட்டவர்களில் ஒருவரான சங்கரேஸ்வரி நம்மிடம், "அந்த கோயில் கடைகளை மொதல்ல இடிச்சிட்டு அப்புறம் நாங்க குடியிருக்கிற வீடுகள் பக்கம் வரட்டும்''’எனக் குமுறினார்.
அசோகன் எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டின் பின்னணி இது-
சிவகாசி மாநகராட்சி யின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்துக்கு எதிரே 4.99 ஏக்கர் பரப்பளவுள்ள பெத்த மரத்து ஊரணியைத் தூர்வாரி பூங்கா அமைத் திட, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட் டத்தின் கீழ் ரூ.1.70 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அந்த ஊரணியில் வீடுகள், கடைகள் என 35 சதவீதத்துக்கும் மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஒருசில வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களை சிவகாசி மாநகராட்சி அகற்றியபோது, தங்கள் பகுதிக்குள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் பட்டியலின மக்கள். சிவகாசி தாலுகாவில் நாடார் மற்றும் பிற சமுதாயத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய்கள் மற்றும் தெப்பக்குளங்களையும், புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கோவில்கள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்களையும் பட்டியலிட்டு "பிற சாதியினருக்கு ஒரு நீதி? பட்டியலினத்துக்கு ஒரு நீதியா?'’ என்று கேள்வி எழுப்பினர்.
நாட்டாமை முனியாண்டி மற்றும் தர்மராஜ் போன்ற பட்டியலின மக்கள் “"இப்ப அந்த கோயில் கடைகள் இருக்கிற இடம் அப்பல்லாம் பொத்தமரத்து ஊரணியா இருந்துச்சு. சரியா சொல்லணும்னா.. எல்லா ஊருலயும் இருக்கிற மாதிரி சிவகாசியிலும் ஊருக்கு வெளிய பொத்தமரத்து ஊரணிக்கரைல சர்க்கார் புறம்போக்கு இடத்துல காவல் தெய்வத்துக்கு கோயில் இருந்திருக்கு. பொதுவா எல்லாரும் வந்து மயான பூஜை நடத்திருக்காங்க. காலப்போக்குல பலருக்கும் மயான பூஜை பண்ணுறதுல ஈடுபாடு இல்லாம போச்சு. அப்பத்தான், இடமாறி வகையறாக்களால் இந்த கோயில் கைப்பற்றப்பட்டு, அவங்க அனுபவத்துக்கு வந்திருக்கு. நில அளவீடு நடந்தப்ப அங்கே கோயில் இருந்ததுனால, 192 சர்வே எண் தரப்பட்டு, சர்க்கார் புறம்போக்குல கட்டுன வழிபாட்டுத்தலம்னு புல வரைபடத்துல குறிச்சிட்டாங்க. 1997ல் திருத்தியமைக்கப்பட்ட சர்வே ஆவணத்துல மாடசாமி கோவில் இடமாறி வகைன்னும் எழுதிவச்சிட்டாங்க. இப்ப எம்.எல்.ஏ.வா இருக்கிற அசோகன், சிவகாசி நகராட்சி வைஸ்-சேர்மனா இருந்தப்ப, நகரமைப்புத்துறை அனுமதியே பெறாம, மாடசாமி கோயிலை இடிச்சு 9 வணிகக் கட்டிடங்களை கட்டுனாங்க. தனித்தனியா வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பும் வாங்கிட்டாங்க. சிவகாசி பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கிற இடம்கிறது னால, அந்த 9 கடைகள் மூலம் கணிசமான வாடகையை கோயில் நிர்வாகம் வசூலிச்சிட்டு வருது. அது தினமும் பக்தர்கள் வழிபட வரும் கோயில் கிடையாது. வருஷத்துக்கு ஒருதடவை அந்த வகையறாக்கள் மயான பூஜை நடத்துவாங்க. அவ்வளவுதான். இப்பக்கூட கோயில் இடத்துல கடைகள்தான் இருக்குது. அவங்க வருஷத்துக்கு ஒருதடவை சாமி கும்பிடறது கடைகளுக்கு மேலே உள்ள மொட்டை மாடிலதான். இடமாறி வகையறா தலைக் கட்டுகளோட தலைவரா அசோகன் எம்.எல்.ஏ. இருக்காரு. சிவகாசியில் அவர் வைத்ததுதான் சட்டம். வைஸ் சேர்மனா இருந்தப்பவும், இப்ப எம்.எல்.ஏ.வா இருக்கும்போதும், அதிகார துஷ்பிரயோகம் பண்ணி தன்னோட வகையறாக்களுக் காக மட்டுமே சுயநலமா செயல்படுறாரு. எல்லாருக்கும் பொதுவான எம்.எல்.ஏ.ன்னா இந்த நேரத்துல எப்படி நடந்திருக்கணும்? ஊரணிக்கரைல இருக்கிற பட்டிய லின மக்களோட வீடுகளை எல்லாம் இடிக்கப் போறாங்களே? அவங்க கண்ணுக்கு முன் னால, சர்க்கார் புறம்போக்கு இடத்துல கோயில்ங்கிற பேர்ல விதிமீறலா கடைகளைக் கட்டி விட்ருக்கோமேன்னு மனசாட்சி உறுத்திருக் கணும்ல? பட்டியலின மக்கள் மட்டுமில்ல.. புறம்போக்கு எம்.எல்.ஏ..னு பட்டப்பெயர் வச்சு ஊரே சிரிக்குது. நாங்களும் குடியிருக்கிற இடத்த காலி பண்ணப் போறதில்ல. இதே இடத்துக்கு பட்டா தரணும்னு கோரிக்கை வச்சிருக்கோம்''’ என்றார்கள்.
சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகனிடம் பேசினோம்.
"நான் வைஸ்-சேர்மனா இருந்தது 2006ல். மாடசாமி கோயில்ல 200 வருஷமா சாமி கும்பிடறாங்க. நான் மயான பூஜைக்கு போனது கிடையாது. எங்க கூட்டத்துக்கு இப்ப நான் தலைவர். எனக்கு முன்னால எங்க அண்ணாச்சி, அதுக்கு முன்னால எங்க அப்பா தலைவரா இருந்தாங்க. நான் கலெக்டரை போய் பார்த்தேனா? தாசில்தாரை போய் பார்த்தேனா? எம்.எல்.ஏ.வா இருந்துக்கிட்டு இதிலெல்லாம் நான் தலையிட முடியாது. நான் யார் வீட்டையும் இடிக்கச் சொல்லலியே? எங்களுக்கும் நோட்டீஸ் வந்துச்சு. செயலாளர் சுப்புராஜ் போய் விளக்கம் தந்தாரு. மத்தவங்க சொல்லுற மாதிரி எனக்கு இதுல சம்பந்தமே கிடையாது''’என்று ஒரே போடாகப் போட்டார்.
இடமாறி வகையறா செயலாளர் சுப்புராஜுவிடம், "கோவில் கடைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறாரே எம்.எல்.ஏ. அசோகன்?''’ எனக் கேட்டோம். “
"தலைவரே (அசோகன்) அப்படி சொல்லிட் டாருன்னா நான் என்ன சொல்லமுடியும்? மொதல்ல கோயில் கீழேதான் இருந்துச்சு. அப்ப அவ்வளவு பேரும் தண்ணி யடிக்கிறது, பாட்டிலை உடைச்சு போடுறதுன்னு மோசமான செயல்பாட்டுக்கு பயன் படுத்துனதுனால, கூட் டத்துல பேசி கடைகளைக் கட்டி, கோயிலை மேல கொண்டுபோயி பூடம் வச்சு வருஷா வருஷம் கும்பிடறோம். கடைல கிடைக்கிற வாட கைய வச்சு திருவிழா நடத்துறோம். இப்பகூட இந்தப் பிரச்சனைல ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு இருக்கோம்''’என்றவரிடம், "சர்க்கார் புறம் போக்கு இடத்துல இருந்த கோவிலை இடித்துவிட்டு, அனுமதியில்லாமல் கடைகளைக் கட்டி, இடமாறி வகையறாக்கள் வாடகை வசூலிப்பது சரிதானா?''’என்று குறுக்கிட்டபோது, "நான் 2500 தலைக்கட்டுக்கு பொது ஆளு. தலைவர்கிட்ட (அசோகன் எம்.எல்.ஏ.) கேட்காம உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனக்கு வேலை நிறைய இருக்கு''’என்று நழுவினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நமது லைனுக்கு வராத நிலையில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் சங்கரனைத் தொடர்பு கொண்டோம். “"நாங்க நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். அங்கு வீடுகள் கட்டி குடியிருக்கும் 43 பேரை அடையாளம் கண்டிருக்கிறோம். அவங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்துட்டுத்தான் ஆக்கிரமிப்பு வீடுகளை எடுக்கப்போறோம். இடமாறி வகையறா மாடசாமி கோயில் நீர்நிலை புறம்போக்கு இடத்துல இல்ல. அரசு புறம்போக்கு இடத்துல இருக்கு. கோயிலை கட்டுனவங்க வருமானம் பார்ப்பாங்க. பொத்தமரத்து ஊரணி ஆக்கிரமிப்பு அகற்றும் வேலைகள் முடிஞ்சதும், அந்த கோயில் கடை களை எடுப்பதற்கான வழிகளைச் செய்வோம். அதை கோயில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிவிட்டுத்தான் பண்ணவேண்டும்''’ என்றார்.
சர்க்கார் புறம்போக்கு இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு, முறையான அனுமதி பெறாமல் கடைகளைக் கட்டி காவி வர்ணம் பூசிய பித்தலாட்டத்தை, கடந்த 16 வருடங்களாக வேடிக்கை பார்த்து வருகிறார்கள் அரசுத்துறையினர்!