Advertisment

கோயிலுக்குள் சாதி பாகுபாடு! -சமயபுரம் சர்ச்சை!

ss

னைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் அர்ச்சகராக பணியாற்றி வரும் நிலையில், கோயில் நிர்வாகத்திற்குள் என்ன நிலவரம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது திருச்சியில் நடந்த சம்பவம்.

Advertisment

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் பணி ஆணை பெற்று கோயில் பணியில் ஈடுபட்டு வருபவர் மகேஷ்குமார். கடந்த 05-12-2021 இரவு தனது மனைவியுடன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

அந்த புகார் மனுவில் "சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் காவலர் வரதன் மதுபோதையில், அர்ச்சகரான தன்னை சாதி பெயரை கூறி திட்டியும், வேலையினை விட்டு விலகுமாறு தொடர்ந்து தன்னை மிரட்டுவதாக'வும் அர்ச்சகர் மகேஷ்கும

னைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் அர்ச்சகராக பணியாற்றி வரும் நிலையில், கோயில் நிர்வாகத்திற்குள் என்ன நிலவரம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது திருச்சியில் நடந்த சம்பவம்.

Advertisment

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் பணி ஆணை பெற்று கோயில் பணியில் ஈடுபட்டு வருபவர் மகேஷ்குமார். கடந்த 05-12-2021 இரவு தனது மனைவியுடன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

அந்த புகார் மனுவில் "சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் காவலர் வரதன் மதுபோதையில், அர்ச்சகரான தன்னை சாதி பெயரை கூறி திட்டியும், வேலையினை விட்டு விலகுமாறு தொடர்ந்து தன்னை மிரட்டுவதாக'வும் அர்ச்சகர் மகேஷ்குமார் குறிப்பிட்டிருந்தார்.

sa

இப்பிரச்சனை குறித்து விசாரித்த போது...…

மகேஷ்குமாரின் சொந்த ஊர் தாராபுரம். அர்ச்சகரான அவர் சமயபுரம் மாரியம்மன் கோயில் குடியிருப்பு வளாகத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கோயிலுக்குள் நுழைந்து சமயபுரம் கோவில் காவலாளி வரதன், சாதியை குறிப்பிட்டும் அர்ச்சகர் பணியில் நீடிக்கக்கூடாது எனவும் அருகிலுள்ள வீட்டாரிடம் நீ பேசக்கூடாது எனவும், தொடர்ந்து அடையாளம் தெரியாத சிலரோடு சேர்ந்து மது போதையில் மிரட்டி வந்துள்ளார். அதனால் கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் காவல்துறையின ரிடம் புகார் அளித்துள்ளார்.

எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் டிசம்பர் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோயில் குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த வரதன், மகேஷ்குமாரை "அர்ச்சகர் வேலையை விட்டு விலகிவிட வேண்டும்' எனவும் "போலீசிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும்' எனவும் காவலர் வரதன் மிரட்டி அடிக்கச் சென்றுள்ளார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த கோவிலில் நடைபெற்ற மற் றொரு சம்பவத்தில் இந்த வரதராஜனின் அண்ணன் சீனி, அன்னதானத் திட் டத்தில் பணியாற்றிய ஒரு பெண்ணை கோவிலுக் குள்ளேயே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, சீனியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

ssa

அதேபோல் ரெங்ககுரு, வஸ்திர ஏலத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் பணிக்கு மது போதையில் வந்து கோவிலில் வந்து படுத்து உறங்கிவிட்டு செல்வது தான் வழக்கம். அதிலும் வெளி ஆட்களை இந்த வஸ்திர ஏலத்தில் பயன்படுத்தி கொண்டுள் ளார். ஒருநாளும் இந்த கோவில் பணியை செய்த தில்லை. இப்படி தொடர்ந்து பல பிரச்சனைகள் இந்த கோவிலுக்குள் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. இதன் பின்னணி குறித்து விசாரித்த தில், கோயில் வளாகத்திற்கு உள்ளே பிரசாதம் ஸ்டால் போடுவது வழக்கமாக ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும். இந்த ஒப்பந்த அடிப்படையில் ஸ்டாலில் விற்பனை செய்யப்படும். அதிரசம், முறுக்கு உள்ளிட்ட ஒவ்வொரு ஒப்பந்தமும் ஒவ்வொருவருக்கு வழங்கப்படும். அதற்கு ஒப்பந்ததாரர்கள் 30 ஆயிரம் லஞ்சம் கொடுத்து தான் இந்த ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் ஒரு ஒப்பந்தத்தை கோயில் காவலாளி வரதன் எடுத்துக்கொண்டு 30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். எனவேதான் இதுபோன்ற பிரச்சினைகளை குறித்து கண்டுகொள்ளாமல், இதுவரை வரதனிடம் இப்பிரச்சினை குறித்து இணை ஆணையர் விசாரிக்காமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

sa

இதுகுறித்து யார் விளக்கம் கேட்டாலும், "குடியிருப்பு பகுதியில் நடக்கும் சம்பவத்திற்கு இணை ஆணையர் நான் என்ன செய்ய முடியும்'' என்று தனக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறுவதுபோல் பதிலளிக்கிறார்.

"கோயில் நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல் ஒவ்வொரு பணியிலும் கமிஷன் மட்டுமே பார்க்க முயலுவதால் பணியாளர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே அழைத்துப் பேசி தீர்வுகாண விரும்பாமல், இப்படி தொடர்ந்து வளர விட்டுவிட்டார். தற்போது ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சாதியின் பெயரை சொல்லித் திட்டியதோடு, பணியை விட்டுச் செல்ல வற்புறுத்துவது, அடியாட்களைக் கொண்டு மிரட்டுவது என்று மோசமான நிகழ்வுகள் தொடரக் காரணம், இணை ஆணையரின் அலட்சியம்தான்' என்று பலர் கடுமையாகச் சாடுகின்றனர்.

"ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு, அதனை செயல்படுத்தி, ஆன்மிகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிவரும் அறநிலையத்துறை அமைச்சர், இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக தீர்வு காணவேண்டும்' என்கிறார்கள் சமயபுரம் கோயில் அலுவலர்களும் பக்தர்களும்.

nkn111221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe