Advertisment

கேரம் உலக சாம்பியன் காஸிமா! உற்சாகத்தில் வண்ணாரப்பேட்டை!

ss

ட சென்னை பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில், கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே கேரம் போட்டிக்கும் தனி மவுசு உண்டு. தற்போது இந்த கேரம் விளையாட்டிலும், உலக அளவில் சாதனை படைத்து, தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித்தந்திருக்கிறார் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காஸிமா என்ற 17 வயது சிறுமி.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் நடைபெற்ற 6வது கேரம் போர்டு உலகக் கோப்பை தொடரில், தனி நபர் பிரிவு, இரட் டையர் பிரிவு, குழுப் ப

ட சென்னை பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில், கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே கேரம் போட்டிக்கும் தனி மவுசு உண்டு. தற்போது இந்த கேரம் விளையாட்டிலும், உலக அளவில் சாதனை படைத்து, தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித்தந்திருக்கிறார் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காஸிமா என்ற 17 வயது சிறுமி.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் நடைபெற்ற 6வது கேரம் போர்டு உலகக் கோப்பை தொடரில், தனி நபர் பிரிவு, இரட் டையர் பிரிவு, குழுப் பிரிவு என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக் கத்தை தட்டிப்பறித்து மிகப்பெரிய சாதனை படைத்து இந்தியாவை பெருமைப்படுத்தியிருக்கிறார் காஸிமா. தனி நபர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், 3 முறை உலக சாம்பி யன், 12 முறை தேசிய சாம்பியன் பட் டம் வென்றுள்ள சக இந்தியரான ராஷ்மி குமாரி யை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார் காஸிமா.

Advertisment

c

இவரது குடும்பமே கேரம் விளையாட்டில் ஆர்வமுள்ள குடும்பமாக உள்ளது. இவரது அண்ணன், கேரம் விளையாட்டில் ஜூனியர் நேஷனல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதைப்பார்த்து காஸிமாவும் கேரம் போட்டி யில் கலந்துகொள்ள ஆர்வத்தோடு இருந்ததால், அவரது 6வது வயதிலேயே சென்னை, புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரிலுள்ள கேரம் போர்டு பயிற்சி மையத்தில், காஸிமாவின் தந்தை மஹபூப் பாஷாவே பயிற்சியளித்துள் ளார். மஹபூப் பாஷா, பகலெல்லாம் ஆட்டோ ஓட்டி வருமானமீட்டி வந்துள்ளார். மாலையில் கேரம் போர்டு பயிற்சியாளராக இருந்திருக் கிறார். தனது மகள் காஸிமா உட்பட 14 தேசிய சாம்பியன்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் மஹபூப் பாஷா.

காஸிமா முதலில் சப்ஜூனியர் லெவலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். அடுத்து ஜூனியர் நேஷனல் சாம்பியனாக வெற்றிபெற் றார். அதற்கடுத்ததாக ஃபெடரேஷன் கப் வெற்றி பெற்றார். இறுதியாக தற்போது, உலக சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியுள் ளார். வெற்றிக்கோப்பையோடு வந்த காஸிமாவுக்கு விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை செரியன் நகர் வரை உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தனக்கு ஊக்கமளித்து, பயிற்சியளித்து, உலக சாம்பியனாக உருவாக்கிய தனது அப்பாவுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன காஸிமா, "தமிழ்நாடு அரசும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ள 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இதுகுறித்து தெரிவித்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதனை விளையாட்டுத்துறை அமைச்சர் எங்களுக்கு வழங்கினார். எனவே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

-ஆதவன்

Advertisment
nkn301124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe