Advertisment

சித்துவிடம் கோட்டை விட்ட கேப்டன்! -பஞ்சாப் காங்கிரஸ் கலாட்டா!

pp

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, செப்டம்பர் 20-ஆம் தேதி புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

Advertisment

பத்தாண்டுகள் பொறுமையாகக் காத்திருந்து, 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிரோன் மணி அகாலி தளம் கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி ஆட்சிக்கு வந்ததில் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிரதான இடம் உண்டு.

hh

2017 பஞ்சாப் தேர்தலுக்கு சற்று முன்பாக பா.ஜ.க.விலிருந்து காங்கிரஸில் சேர்ந்தது முதலே ஏனோ சித்துவை அமரீந்தருக்குப் பிடிக்கவில்லை. ராகுல் மற்றும் பிரியங்காவின் சிபாரிசில் பஞ்சாபின் துணை முதல்வராக வரவும், தனக்கு உள்துறையைக் கேட்டுப்பெறவும் முயற்சித்தார் சித்து. ஆனால், இரண்டுக்குமே அமரீந்தர் வலுவான நோ சொல்லிவிட்டார். தலைமையின் அழுத்தம் காரணமாக அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியளித்தார். நாட்கள் செல்லச் செல்ல அமரீந்தர் மீதான விமர்சனங்களை சித்து தீவிரப்படுத்தத் தொடங்கினார். முதல்வர் தேர்தலின்

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, செப்டம்பர் 20-ஆம் தேதி புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

Advertisment

பத்தாண்டுகள் பொறுமையாகக் காத்திருந்து, 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிரோன் மணி அகாலி தளம் கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி ஆட்சிக்கு வந்ததில் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிரதான இடம் உண்டு.

hh

2017 பஞ்சாப் தேர்தலுக்கு சற்று முன்பாக பா.ஜ.க.விலிருந்து காங்கிரஸில் சேர்ந்தது முதலே ஏனோ சித்துவை அமரீந்தருக்குப் பிடிக்கவில்லை. ராகுல் மற்றும் பிரியங்காவின் சிபாரிசில் பஞ்சாபின் துணை முதல்வராக வரவும், தனக்கு உள்துறையைக் கேட்டுப்பெறவும் முயற்சித்தார் சித்து. ஆனால், இரண்டுக்குமே அமரீந்தர் வலுவான நோ சொல்லிவிட்டார். தலைமையின் அழுத்தம் காரணமாக அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியளித்தார். நாட்கள் செல்லச் செல்ல அமரீந்தர் மீதான விமர்சனங்களை சித்து தீவிரப்படுத்தத் தொடங்கினார். முதல்வர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான போதைப் பொருள் ஒழிப்பில் பின்தங்கிவிட்டதாக விமர்சித்தார். அமரீந்தர் சிங்குக்கும், சிரோன்மணி அகாலி தள தலைமைக்கும் இடையே வெளித்தெரியாத உறவு நிலவுவதாகவும் விமர்சித்தார்.

Advertisment

தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்த முதல்வர் அமரீந்தர் சிங், இம்ரான்கான் முதல்வராகப் பதவியேற்றபோது சித்து அந்நிகழ்வுக்குச் சென்றுவந்ததையும், பாகிஸ்தான் ராணுவத் தலைமை அதிகாரியான அஹ்மத் பஜ்வாவை சந்தித்ததையும் வைத்து, சித்துவை தேசத்துரோகியாகவும், எதிரிநாட்டு ராணுவத் தலைமைகளுடன் ரகசியத் தொடர்புடையவராகவும் சித்தரித்தார்.

2015-ல் நடைபெற்ற பேபல் காளன் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய, சிரோன்மணி அகாலிதள தலைவர்கள் மீது அவர்கள் மேலான கரிசனத்தால்தான் அமரீந்தர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இரு தரப்புக்குமிடையேயான அண்டர்ஸ்டேண்டிங்கால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நியாயமான நீதி விசாரணை நடைபெறவில்லை எனவும் சித்து பட்டவர்த்தனமாக விமர்சித்தார்.

மேலும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சித்து திரட்ட ஆரம்பித்தார். விவகாரம் ஆட்சிக் கவிழ்ப்பில் முடிந்துவிடக்கூடாதென மல்லிகார்ஜுன கார்கேவை அனுப்பி இரு தரப்பையும் சுமுகப்படுத்தினார் சோனியா. அதன்பின் சில மாதங்களுக்கு சலசலப்பு குறைந்தது. இரு தரப்பிலிருந்தும் அரிதாக பாராட்டுரைகளும் வெளிப்பட்டன.

2019-ல் சித்துவின் அமைச்சுப் பொறுப்பின் செயல்திறன் குறித்து அமரீந்தர் சிங் விமர்சிக்க, சராசரிக்கும் கீழான அமைச்சர்களையெல்லாம் விட்டுவிட்டு தன்னைக் குறிவைத்து விமர்சிப்ப தாகக் கூறி தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார் சித்து.

அதன்பின் நாளுக்கு நாள் சித்து, அமரீந்தர் மீதான விமர் சனத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். காங்கிரஸ் தலைமையோ அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் ஜூலை யில், சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸுக்குத் தலைவராக்கியது. பதிலுக்கு, அடுத்த தேர்தலிலும் அமரீந்தர் சிங்கே முதல்வர் வேட்பாளரென சமாதானம் செய்தது.

yy

இந்நிலையில் பஞ்சாப் பின் அமைச்சர்கள் சிலரும், எம்.எல்.ஏ.க்கள் சிலரும் அமரீந்தர்சிங்குக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து செப்டம்பர் 19-ஆம் தேதி எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடக்கவிருப்பதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. தன்னை ஆட்சியிலிருந்து இறக்குமளவுக்கு சித்து கையில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதையும், விஷயம் கைமீறிப் போய்விட்டதையும் உணர்ந்தே அமரீந்தர் சிங், "நான் இழிவுபடுத்தப்பட்டேன்'’ என்றுகூறி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சித்து அல்லது சுக்ஜிந்தர்சிங் ரந்தா முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத சரண்ஜித் பெயரை தலைமை அறி வித்திருக்கிறது. சித்து தனக்கு வேண்டாத விக்கெட்டை வீழ்த்தியிருப்பதோடு, தனக்கு வேண்டப்பட்ட சரண்ஜித் சிங்கை முதல்வராக்கி ஜெயித்திருக்கிறார்.

வரும் தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம், ஒரு தலித்தை துணை முதல்வராகப் போடுவோம் என கூறிவரும் நிலையில்... அதற்குப் பதிலடியாக நாங்கள் ஒரு தலித்தை முதல்வராகவே ஆக்குவோம் எனக் காட்டுவதற்காகவே காங்கிரசால் சரண்ஜித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

வரும் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க., சிரோன்மணி அகாலிதளம், ஆம் ஆத்மி என ஐம்முனைப் போட்டி நிகழ வாய்ப்பிருக்கிறது. வேளாண் சட்டங்கள் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க.வுக்கு பஞ்சாப் தேர்தலில் மங்கலான வாய்ப்பே தென்படுகிறது. மிச்சமிருக்கும் கட்சிகளில், காங்கிரஸுக்கு கடந்த ஐந்தாண்டு ஆட்சியிலிருந்த கட்சி என்பதைத் தவிர பெரிய விமர்சனங்கள் எதுவும் கிடையாது. மீண்டும் ஆட்சியில் அமர வலுவான வாய்ப்பிருந்தது.

ஆனால், சித்துவின் மீதான கோபத்தால் முதல்வர் பதவியிலிருந்து இறங்கியிருக்கும் அமரீந்தர் சிங், சித்துவின் ஆதரவாளரை நான்கு மாதங்களுக்கு தொடரவிடுவாரா… என்பதில் பலருக்கும் ஐயமிருக்கிறது. அதனால்தான் ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட், “"அமரீந்தர் காங்கிரஸை புண்படுத்தமாட்டாரென நம்புகிறேன். மற்றெல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி மற்றும் தேசநலனை முன்னிறுத்தி அனைவரும் செயல்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், "புதிய முதல்வர் சரண்சித் சிங், “பெண் ஐ.ஏ.எஸ். ஆபீசருக்கு அத்துமீறலான வாசகத்தை எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்... ராகுல், பஞ்சாப்புக்கு நல்ல முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளார்'’என பா.ஜ.க.வின் அமித்மாளவியா வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளார்.

nkn250921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe