குழாயை திறந்துவிட்டு துணியை அலசாதீர்கள். வாளியில் தண்ணீர் பிடித்து அலசுங்கள். குறைந்தது 80 லிட்டர் தண்ணீர் மிச்சமாகும். துணி அலசுகிற தண்ணீரை சேமித்து வைத்தால் டாய்லெட் கழுவ உபயோகிக்கலாம்.

தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க வாளிகளையும் கப்புகளையும் பயன்படுத்தும்படி சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் பிரச்சாரம் செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் இன்று நேற்று சந்திக்கும் பிரச்சனை அல்ல. 1968 ஆம் ஆண்டு மக்கள்தொகை சில லட்சங்களில் இருக்கும்போதே சென்னை பஞ்சத்தில்தான் வாடியிருக்கிறது. அதனால் தி.மு.க. அரசு குடிநீர் பஞ்சத்துக்கு நிரந்தர தீர்வுகாண திட்டங்களை ஆய்வுசெய்து நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டது. கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான் 1971 ஆம் ஆண்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தனியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் என்ற அமைப்பை உருவாக்கியது.

சென்னையிலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரலாம் என்று கலைஞர் தலைமையிலான அரசு முதலில் திட்டமிட்டது. மிகப்பெரிய சிமெண்ட் குழாய்களை தரையில் பதித்து பம்ப் செய்து சென்னையின் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் இந்தத் திட்டம் மிகப்பிரமாண்ட மானது. ஆனால், தொழில்நுட்பம் முன்னேற்ற மடையாத காலகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நிர்வாக அமைப்பு இல்லையென்று கைவிடப்பட்டது. வீராணம் ஊழல் என தி.மு.க. மீது எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. ஆனால், சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டமே செலவு குறைவான, நடைமுறை சாத்தியமான திட்டம் என்று பொறியாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

Advertisment

water

வீராணம் திட்டத்தில் தி.மு.க. அரசு முறைகேடு செய்ததாக மத்தியஅரசிடம் எம்.ஜி.ஆர். கொடுத்த புகாரில் இடம்பெற்றிருந்தது. எனவே, அவர் ஆட்சிக்கு வந்தபிறகு சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதிநீரை பெறுவது என்ற திட்டத்தை முன்வைத்தார். அந்தத் திட்டத்துக்காக 1983-ஆம் ஆண்டு அன்றைய ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவுடன் ஒப்பந்தம் செய்தார் எம்.ஜி.ஆர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆந்திராவில் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் புதிய பாசனப்பகுதி உருவாக்கப்பட்டது. அதேசமயம், இத்திட்டம் ஒருவாறாக நிறைவேறி தி.மு.க. ஆட்சியில் 1996 செப்டம்பர் மாதம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்துசேர்ந்தது.

Advertisment

ஆனால், கால்வாய் அடிக்கடி சரிந்து 13 டி.எம்.சி. தண்ணீரில் அரை டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பூண்டி ஏரிக்கு வந்துசேர்ந்தது. இதற்கு முடிவுகட்டவும் கலைஞர்தான் திட்டம்வகுத்தார். கண்டலேறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்குள் வரும் 25 கிலோமீட்டர் கால்வாய்க் கரையை கான்கிரீட் கரையாக்க புட்டபர்த்தி சாய்பாபா டிரஸ்டிடம் பேசி முடிவு செய்தார். அதன்படி கால்வாய் கட்டும் பணியை சாய்பாபா ட்ரஸ்ட் முடித்துக் கொடுத்தது. இதற்காக சாய்பாபாவுக்கு கலைஞர் பாராட்டுவிழா நடத்தினார்.

tks

தெலுங்குகங்கை திட்டம் போக, ஜெயலலிதா மீண்டும் வீராணம் திட்டத்தை கையில் எடுத் தார். அதையடுத்து ராட்சத பைப்பு கள் மூலம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இது ஜெ. அரசுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னையில் செல்வாக்கை உயர்த்தியது.

சென்னை புறநகர் பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்காக மீஞ்சூர், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத் தையும், தமிழகத்தின் இதர பகுதிகளின் தண்ணீர் தேவையை சமாளிக்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், நாகை கூட்டுக்குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவையும், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டமும் தமிழக அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பெரும்பாலானவை கலைஞர் முதல்வராக இருக்கும்போது நிறைவேற்றப் பட்டவை.

இப்படி இருந்தும் சென்னையின் தண்ணீர் தேவை மட்டும் தீர்ந்தபாடில்லை. மாநகரின் தற்போதைய மக்கள் தொகை 74 லட்சம். இன்றைய நிலையில் நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினி யோகிக்கப்படுகிறது. சென்னையை சுற்றிலும் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளின் தண்ணீர் இருப்பு படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை நெருங்கிவிட்டது. இன்னும் 15 நாட்களுக்கு வருமா என்பதே உறுதியில்லை என்று சென்னை பெருநகர குடிநீர் வாரிய அலுவலகம் கூறுகிறது.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது…""வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அதிலிருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது. நெய்வேலி நீர்ப்படுகையில் 9 புதிய ராட்சத ஆழ்துளை கிணறுகள் நிறுவப்பட்டு அதிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள் மூலம் தினமும் 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. சிக்கராய புரம் கல் குவாரியிலிருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டமிடப் பட்டு பிப்ரவரியில் தண்ணீர் பெறப்படும். இரட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் தண்ணீரை சுத்தி கரித்து தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க 53 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது''’ என்று தெரிவித்தார்கள்.

d

மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே சென்னையை தண்ணீர் பஞ்சம் வாட்டியெடுக்கப் போகிறது என்பது தமிழக அரசுக்கு தெரியும், எனவேதான் தேர்தல் ஆரம்ப கட்டத்திலேயே நடத்தி முடித் தார்கள் என்ற பேச்சு அடிபட்டது.

புவிவெப்பம் காரணமாக வெப்பமாக இருந்தாலும், குளிராக இருந்தாலும் மிக அதிகமாகவே இருக்கும் என்று சூழல்இயலாளர் கள் எச்சரிக்கிறார்கள். இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் தண்ணீர்த் தேவைக்கு முன்னெச்சரிக்கையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு அசட்டையாக இருப்ப தால்தான் மக்கள் தண்ணீருக்காக அலைபாய வேண்டியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. சென்னையின் தண்ணீர்த் தேவைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்தான் உகந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கார் உற்பத்தி உள்ளிட்ட அதிகப்படியான நிலத்தடி நீரைக் குடிக்கும் தொழிற்சாலைகளே தண்ணீர் பற்றாக்குறைக்கு மிக முக்கியமான காரணம் என்று சூழல் இயலாளர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பஞ்சத்தின் போது அப்போதைக்கு பிரச்சனையை தீர்ப்பதற்கு வசதியாக கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டி தற்காலிக திட்டங்களை வகுப்பதிலேயே தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. அதற்குப்பதிலாக, நிரந்தரமாக சென்னையின் தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்க திட்டம் தீட்டுவதே புத்திசாலித்தனம் ஆகும் என்கிறார்கள் பொதுப் பணித்துறை பொறியாளர்கள்.

சென்னை குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடாத தமிழக அரசு, எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் தமிழக ஆலயங்களில் மழைவேண்டி யாகம் நடத்த அனுமதி கொடுத்தது. இது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கினாலும், இந்த தண்ணீர் பஞ்ச காலத்தில் யாகத்தின் பேரால் ஏராளமான தண்ணீரை வீணாக்கியதை சமூக ஆர்வலர்கள் கண்டித் தார்கள்.

யாகம் தவிர்த்து, தமிழகத் தின் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை தொடர்புகொண்டோம். "தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடல்நீரை குடிநீராக் கும் திட்டம் இரண்டு இடங்களில் செயல்படுத்தப் பட்டது. கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால், சென்னையின் புறநகர் பகுதிகளின் தண்ணீர் தேவை தீர்க்கப் படும். அதுபோல, சென்னையின் முக்கிய ஏரிகளை தூர்வாரி, ஏரிக்கு நீர்வரும் பாதைகளை சீரமைப்ப தும் தண்ணீரை சேமிக்க உதவும்''’என்றார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டிய ஆட்சியாளர்கள் மெத்தனமாக இருந்தால், சென்னையின் தாகம் அடங்கவே அடங்காது.

-ஆதனூர் சோழன்

படங்கள்: அசோக்