Advertisment

இலங்கைக்கு கஞ்சா கடத்தல்! பிடிபட்ட பா.ஜ.க. புள்ளி!

ss

மிழ்நாட்டி லிருந்து இலங் கைக்கு கிழக்கு கடற்கரைப் பகுதி வழியாகக் கஞ்சா கடத்தப்படுவது குறித்து நக்கீரன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரு கிறது. இந்நிலை யில், தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடற்கரையிலிருந்து பைபர் படகுகளில் இரவு நேரத்தில் கஞ்சா பண்டல்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதில் பா.ஜ.க. பிரமுகர் களும் சம்பந்தப் பட்டிருக்கும் தகவல் தனிப்பிரிவு போலீசார் மூலம் தஞ்சாவூர் எஸ்.பி. ஆசிஷ் ராவத்துக்கு அனுப்பப் படுகிறது. அதனையடுத்து சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

Advertisment

ss

இந்நிலையில் 22ஆம் தேதி பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக் காடு கிராமத்திற்குள் கண்டெய்னர் ஏற்றிச்செல்லும் ஒரு பெரிய லாரி சுமையில்லாமல் சென்று கொண்டிருக் கிறது. அந்த லாரிக்கு பின்பாகவே சந்த

மிழ்நாட்டி லிருந்து இலங் கைக்கு கிழக்கு கடற்கரைப் பகுதி வழியாகக் கஞ்சா கடத்தப்படுவது குறித்து நக்கீரன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரு கிறது. இந்நிலை யில், தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடற்கரையிலிருந்து பைபர் படகுகளில் இரவு நேரத்தில் கஞ்சா பண்டல்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதில் பா.ஜ.க. பிரமுகர் களும் சம்பந்தப் பட்டிருக்கும் தகவல் தனிப்பிரிவு போலீசார் மூலம் தஞ்சாவூர் எஸ்.பி. ஆசிஷ் ராவத்துக்கு அனுப்பப் படுகிறது. அதனையடுத்து சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

Advertisment

ss

இந்நிலையில் 22ஆம் தேதி பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக் காடு கிராமத்திற்குள் கண்டெய்னர் ஏற்றிச்செல்லும் ஒரு பெரிய லாரி சுமையில்லாமல் சென்று கொண்டிருக் கிறது. அந்த லாரிக்கு பின்பாகவே சந்தேகத்துக்குரிய ஒரு நபரின் காரும் பின்தொடர்ந்ததைப் பார்த்த தனிப்படை போலீசார், அந்த லாரியை பின் தொடர்ந்தனர். அதிலிருந்த கஞ்சா பண்டல்களை பின்னால் வந்த காரங்குடா கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் காரில் மாற்றிக் கொண்டிருக்கும் போது மடக்கிப் பிடித்தனர்.

Advertisment

அந்த லாரியை, பெரமராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கஞ்சா பண்டல்களை மாற்றிக்கொண்டிருந்த முத்தையா என் பவரையும் பிடித்த போலீசார், 330 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய லாரி, கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா பண்டல்களை ஆந்திராவில் அனகப்பள்ளி யிலிருந்து எடுத்துவந்துள்ள னர்.

ss

இதை தஞ்சாவூர் விளார்ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா வாங்கி, லாரியின் ரகசிய அறையில் ஏற்றியுள்ளார். ஏற்றியதுடன் லாரி ஓட்டுநர் பெரமராஜிடம் ஒரு செல்போன் கொடுக்கப்பட்டது. போனில் சொல்லும் இடத்துக்கு வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும். இதற்கு ஓட்டுநர் பெரமராஜ்க்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு 200, 300 கி.மீ.க்கும் ஒருமுறை போலி நம்பர் பிளேட்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஓட்டுநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே ஓட்டுநர் முடச்சிக்காடு வந்துள்ளார்.

ss

மேலும், லாரி பேராவூரணி வந்ததும் தஞ்சை கருப்பையா, "முடச்சிக்காடு போ, அங்கே நம்ம ஆட்களின் காரில் ஏற்றிவிட வேண்டும்'' என்று சொல்ல, அதன்படியே பா.ஜ.க பிரமுகர் அண்ணாத்துரை, தனது காரில் பண்டல்களை ஏற்றினார். அந்த பண்டல்களை இரவில் அண்ணாத்துரைக்கு சொந்தமான பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினர். கருப்பையா தலைமறைவாகிவிட, அண்ணாத்துரை, முத்தையா மற்றும் பெரமராஜ் ஆகியோரை கைதுசெய்த போலீசார், பா.ஜ.க. பிரமுகர் அண்ணாத் துரையின் கடத்தலுக்கு பயன்படுத்த வைத்திருந்த 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அண்ணாத்துரை, "நான் பா.ஜ.க. வெறியன். மோடிக்காக வீடுவீடாகத் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்தவன். அதனால்தான் என் நெஞ்சில் ஜெய்ஸ்ரீராம் என்று பச்சை குத்தியிருக்கிறேன். பா.ஜ.க. பிரச்சார அணியில் இருக்கிறேன். கஞ்சா கடத்தலில் நிறைய சம்பாதிக்கலாம் என்று கொல்லுக்காடு கருப்பு (எ) அந்தோணி பிச்சை சொன்னதையடுத்து, தஞ்சாவூர் கருப்பையா அறிமுகமாகி பொருள் அனுப்புவார். அந்த பொருளை இரவில் சேதுபாவாசத்திரத்திலிருந்து எனது பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்தினால் ரூ.1 லட்சம் கொடுப் பாங்க'' என்று கூறியுள்ளார்.

தென்னை நாரிலிருந்து கேக் தயார் செய்து கண்டெய்னர்களில் ஏற்றித்தான் விற்பனைக்கு போகிறது. அதனால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால்தான் அந்த லாரிகளின்மூலம் கஞ்சா கடத்துவது தெரிந்தது. ஓராண்டுக்கு முன்பு ஒரு எய்சர் லாரியில் ரகசிய அறை அமைத்து 800 கிலோ கஞ்சா ஏற்றிவந்தபோது, பேராவூரணி காவல் சரகத்திற்குட்பட்ட பின்னவாசல் கிராமத்தில் பிடிபட்டது.

21ஆம் தேதி மல்லிபட்டினம் அரசுப் பள்ளியில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியை ரமணி வீட்டிற்கு ஆறுதல் சொல்லப்போன பா.ஜ.க. கருப்பு முருகானந்தம், "கஞ்சா அதிகமாக புழக்கத்தில் உள்ளது. அதனைத் தடுக்கவில்லை' என்று பேசிவிட்டுச் சென்ற மறுநாளே கஞ்சா கடத்தலில் பா.ஜ.க. பிரமுகர் சிக்கியிருப்பது அதிர்ச்சியாகப் பேசப்படுகிறது.

nkn301124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe