Advertisment

மீனவ கிராமங்களில் கஞ்சா! -வேதனையில் நாகை மீனவர்கள்!

ff

மீப காலமாக, நாகை மாவட்டம் வேதாரண் யம், கோடியக்கரை, புஷ்பவனம், விழுந்தமாவடி, சோழன்மாதேவி போன்ற மீனவ கிராமங்களின் கடல் மார்க்கமாக கஞ்சா வியாபாரிகள், மீனவர்களைப் போல் நடமாடி வருகிறார்களாம்.

Advertisment

குறிப்பாக அக்கரைப்பேட்டை கிராமம், மீனவ கிராமங்களின் தலைமைக் கிராமம் என்று பலராலும் வர்ணிக்கப்படுகிறது. அங்குள்ள மீனவர்கள் சிலர் கஞ்சா கடத்தலில் சிக்கி சிறையில் இருப்பது அப்பகுதி மக்களை கலவரப்படுத்தி வருகிறது.

ff

நம்மிடம் பெயரைச் சொல்லாமல் பேசிய அந்த நாட்டுப் படகு மீனவர், "கஞ்சா புழக்கத்துக்கு ஆதரவா இருப்பதே இங்குள்ள காவல்துறை அதிகாரிகளும், ஆளும்கட்சிப் பிரமுகர்களும்தான். இவர்களால், ஒற்றுமையாக இருக்கும் மீனவ கிராமம், சண்டையும் சச்சரவுமாய் மாறிக்கொண்டிருக்கிறது''’என்றார் கவலையாக.

நாகை காவல்துறை வட்டாரத் தைச் சேர்ந்தவர்களோ, "டிபார்ட் மெண்ட் ஆளுங்கன்னு சொல்லிக்கவே எங்களுக்கு சங்கடமாத்தான் இருக்கு. ஏன்னா, எங்க ஆளுங்களே சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கிறாங்க. அண்மையி

மீப காலமாக, நாகை மாவட்டம் வேதாரண் யம், கோடியக்கரை, புஷ்பவனம், விழுந்தமாவடி, சோழன்மாதேவி போன்ற மீனவ கிராமங்களின் கடல் மார்க்கமாக கஞ்சா வியாபாரிகள், மீனவர்களைப் போல் நடமாடி வருகிறார்களாம்.

Advertisment

குறிப்பாக அக்கரைப்பேட்டை கிராமம், மீனவ கிராமங்களின் தலைமைக் கிராமம் என்று பலராலும் வர்ணிக்கப்படுகிறது. அங்குள்ள மீனவர்கள் சிலர் கஞ்சா கடத்தலில் சிக்கி சிறையில் இருப்பது அப்பகுதி மக்களை கலவரப்படுத்தி வருகிறது.

ff

நம்மிடம் பெயரைச் சொல்லாமல் பேசிய அந்த நாட்டுப் படகு மீனவர், "கஞ்சா புழக்கத்துக்கு ஆதரவா இருப்பதே இங்குள்ள காவல்துறை அதிகாரிகளும், ஆளும்கட்சிப் பிரமுகர்களும்தான். இவர்களால், ஒற்றுமையாக இருக்கும் மீனவ கிராமம், சண்டையும் சச்சரவுமாய் மாறிக்கொண்டிருக்கிறது''’என்றார் கவலையாக.

நாகை காவல்துறை வட்டாரத் தைச் சேர்ந்தவர்களோ, "டிபார்ட் மெண்ட் ஆளுங்கன்னு சொல்லிக்கவே எங்களுக்கு சங்கடமாத்தான் இருக்கு. ஏன்னா, எங்க ஆளுங்களே சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கிறாங்க. அண்மையில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த இருக்குன்னு, நாகை தனிப்படை போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் துறைமுகத்தில் அதிரடி ஆய்வை மேற்கொண்ட எஸ்.ஐ பால முருகன் தலைமையிலான தனிப்படை, ரூ.4 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டை விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் சிலம்பரசன், நிவாஸ், கீச்சாங் குப்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர். இவர்களில் கஞ்சா கும்பல் தலைவன் சிலம்பரசன் வீட்டில் நாகை நகரக் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான தனிப் படை அதிரடியாக சோதனை செய்த போது, அவர் கஞ்சா கடத்தல் மாபியாக்களோடு தொடர்பில் இருப்பதற்கான பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

சிறையில் இருக்கும் சிலம்பரசன் இதைக் கேள்விப்பட்டு, கொதித்துப் போய்விட்டானாம். கட்டுக்கட்டா என்னிடம் பணத்தை வாங்கிக்கிட்டு, கறி மீனுன்னு தின்னதோட இல்லாம, என் கூத்தியாளையும் அனுபவிச்சிட்டு, என் வீட்டுலயே அந்த இன்ஸ்பெக்டர் பெரியசாமியும், வெளிப்பாளை யம் ஆய்வாளர் தியாகராஜனும் சோதனை நடத்தினாங்களா? அவர்கள் போலீஸ் துறையையும், பொதுமக்களையும் ஏமாற்றி பலவித நாடகம் போடலாம். என்கிட்ட இனி எதுவும் ஆகாதுன்னு கூச்சல் போட்டிருக்கிறான். அதோடு, தனது சொகுசு பங்களாவில், போலீஸ் யூனிபார்மோடு ஆய்வாளர் பெரியசாமி பிரியாணி விருந்தில் பங்கேற்ற புகைப்படத்தையும் தனது நண்பர்கள் மூலம் சமூக ஊடகங்களில் வெளியிடச் செய்து அதிர்ச்சியை உண்டாக்கினான். வெளிப்பாளையம் ஆய்வாளர் தியாகராஜன் குறித்தான போட்டோ ஒன்றையும் விரைவில் வெளியிடுவோம் என அவனும் அவன் நண்பர்களும் கூறியுள்ளனர். இதையறிந்து ஆய்வாளர் பெரியசாமியை காத்திருப்புப் பட்டிய லுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி''’என்றார்கள்.

Advertisment

ff

இதுகுறித்து மீனவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, "தி.மு.க. நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் மனோகர், அவரது உறவுக்காரனான கஞ்சா சிலம்பரசனுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறார். மனோகரின் மனைவி அழியாநிதி, அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அழியாநிதியின் உடன் பிறந்த சகோதரியின் மகன்தான் கஞ்சா கடத்தல் கும்பலின் தலைவனான சிலம்பரசன். இலங்கையில், பெரிய நெட்வொர்க்கை வைத்துக்கொண்டு கஞ்சா கடத்தலில் ஈடு படுகிறான். இவனைத் தனிப்படை கைது செய்ததும், மனோகர் ,நாகையில் உள்ள காவல் உயரதிகாரிகளைச் சந்தித்து விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சியில் இறங்கினார். அது நடக்கலை. "பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் அறிமுகமான நடிகரின் பெயர்கொண்ட ஒருவர், பல கடத்தல் வேலைகளைச் செய்துவருகிறார். இவர் மீது இலங்கையில் கடத்தல் வழக்கு ஒன்றும் இருக்கிறது. இவருக்கு பல நாடுகளில் உள்ள மாபியாக்களிடம் தொடர்பு இருக்கிறது. இவரை விசாரித்தாலே போதும், நாகை மாவட்டத்தில் கஞ்சா, தங்கம் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்''’என்றனர்.

ss

மாவட்ட எஸ்.பி.யிடம் இதுகுறித்து கேட்டோம்,’"கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கும் அனைத்து வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளோம், அடியோடு ஒழித்துவிடுவோம்'' என்றார்.

தி.மு.க. பிரமுகரான மனோகரைத் தொடர்புகொண்டோம், அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டோம், ’"மனோகரை இதில் இழுத்துவிடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான். அதே கிராமத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், சிட்டிங் தி.மு.க. மாவட்ட செயலாளர் கௌதமன் என பலமுக்கிய புள்ளிகள் இருக்காங்க... ஆனாலும் கிராமம் யார் கட்டுப்பாட்டில் இருக்கணும் என்கிற போட்டா போட்டியில் ஊரு ரெண்டாகும் நிலையாகிடுச்சி. அதேநேரம் மனோகரின் சகலை மகன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதானதும் இவருக்கு தொடர்பில்லை என விலகியிருக்கணும். ஆனால் இவரு காப்பாற்ற எடுத்த மறைமுக முயற்சியே எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்து விட்டது''’என்கிறார்.

கடல் நீரில் தள்ளாடிக்கொண்டிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையை, கஞ்சா போதையில் தள்ளாட வைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக காவல்துறை ஒடுக்கவேண்டும்..

nkn180522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe