Advertisment

கஞ்சா வழக்கு! திணறும் போலீஸ்! -நாகை அவலம்!

ss

ராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி அடுத்துள்ள விழுந்தமாவடி கிராமப் பகுதியில் கடலும், காட்டுப்பகுதியுமாக இருப்பதால் தங்கக்கட்டி, ஹெராயின், மெத்தபெட்ட மைன், கஞ்சா கடத்தல்கள் அவ்வப்போது நடப்பதும், பிடிபடுவதும் வழக்கமாக நடக்கும். விழுந்தமாவடி ஊராட்சிமன்றத் தலைவரான மகாலிங்கத்தின் பெயரும், ஒன்றிய கவுன்சிலரான அவரது மகன் அலெக்ஸ் பெயரும் அவ்வப்போது இதில் அடிபடும்.

Advertisment

ss

இச்சூழலில், அந்த ஊராட்சியிலுள்ள ஒரு கோடி மதிப்பிலான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்திருப்பதாகப் புகார் எழுந்தது. அதற்கு எதிராக மக்களைத் திரட்டி வேதாரண் யம் பிரதான சாலையில் போராட்டத்தில் இறங்கினார் ஊராட்சித் தலைவர். ஆக்கிரமிப் பாளர், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கு நெருக்க மானவர் என்பதால் இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கோபமான ஆளுங்கட்சி பிரமுகர் போலீசாரைத் தூண்டிவிட, ஊராட்சி தலைவர

ராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி அடுத்துள்ள விழுந்தமாவடி கிராமப் பகுதியில் கடலும், காட்டுப்பகுதியுமாக இருப்பதால் தங்கக்கட்டி, ஹெராயின், மெத்தபெட்ட மைன், கஞ்சா கடத்தல்கள் அவ்வப்போது நடப்பதும், பிடிபடுவதும் வழக்கமாக நடக்கும். விழுந்தமாவடி ஊராட்சிமன்றத் தலைவரான மகாலிங்கத்தின் பெயரும், ஒன்றிய கவுன்சிலரான அவரது மகன் அலெக்ஸ் பெயரும் அவ்வப்போது இதில் அடிபடும்.

Advertisment

ss

இச்சூழலில், அந்த ஊராட்சியிலுள்ள ஒரு கோடி மதிப்பிலான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்திருப்பதாகப் புகார் எழுந்தது. அதற்கு எதிராக மக்களைத் திரட்டி வேதாரண் யம் பிரதான சாலையில் போராட்டத்தில் இறங்கினார் ஊராட்சித் தலைவர். ஆக்கிரமிப் பாளர், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கு நெருக்க மானவர் என்பதால் இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கோபமான ஆளுங்கட்சி பிரமுகர் போலீசாரைத் தூண்டிவிட, ஊராட்சி தலைவர் மகாலிங்கத்தையும் அவரது மகனையும் கீழையூர் போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். ஆனால் அவரோ, நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக ஜாமீனில் வெளிவந்து போலீசாருக்கு அதிர்ச்சியளித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பிர தமபுரம் புதுப்பாலம் அருகிலுள்ள வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவ தாக தகவல் வந்தது. நாங்கள் ரகசியமாகக் கண்காணித்தபோது, விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் ஒரு பாலிதீன் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அவரைப் பிடித்து திட் டச்சேரி காவல் நிலையத் தில் வைத்து விசாரித்ததில், பாலிதீன் பையில் இரண் டரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதற்குள் செய்தியறிந்த அவரது உறவினர்கள், காவல்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் இறங்கினர். அதையடுத்து மகாலிங்கத்தை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தோம். மகாலிங்கத்தின் ஆதரவாளர்களோ உண்மைக்கு மாறாகக் கோர்ட்டில் கூறி அவரை ஜாமீனில் எடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது'' என்றார்கள்.

Advertisment

ss

இந்த கடத்தல் விவகாரம் குறித்தெல்லாம் தெரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது விஷயமே வேறாக இருந்தது. "கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இப்பகுதி யில் கடத்தலே நடக்காததுபோல் ஒருவரைக் கூட போலீசார் பிடிக்காமல் இருந்தனர். திரு வாரூர், தஞ்சை மாவட்ட கடலோர எல்லை களில் வாரத்துக்கு இருமுறை கஞ்சா கடத்தல் வழக்கில் பலர் பிடிபடுவார்கள். தனிப்படை காவல்துறையினர் மிகுந்த கண்காணிப்போடு கடத்தல்காரர்களைப் பிடித்து, அனைத்து ஆவணங்களையும் தயாரித்து கோர்ட்டில் சமர்ப்பித்து அவர்களை உள்ளே தள்ளினார்கள். ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் டீமுக்கு கண்ணக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கிறது.

குறிப்பாக, விழுந்தமாவடி ஒத்தப்பணை மரம் ஏரியாவில் கடத்தலில் ஈடுபடுபவர்கள், எப்போது கடத்துவது, எந்த வழியாகக் கடத்து வது உள்ளிட்ட விவரங்களை கோட் வேர்ட் மூலமாக பாஸ் செய்வார்கள். அந்த கோட் வேர்டை கண்டுபிடிக்கவே ஒரு வருஷமாகும்! அதன்பிறகுதான் கடத்தல்காரர்களைத் தூக்க முடியும். இதெல்லாம் தனிப்படையினருக்கு தெரியும். ஆனால் மாவட்ட காவல்துறை உயரதிகாரி ஒருவர், முன்பிருந்த தனிப்படை மீதிருந்த காழ்ப்புணர்ச்சியில் அவர்கள் மீது குற்றம்சுமத்தி அந்த டீமையே கலைத்துவிட்டார். தற்போது வந்துள்ள புது டீமால் கடந்த ஆறு மாதங்களாக யாரையுமே பிடிக்க முடியவில்லை. அதனால்தான் பிரபல கடத்தல்காரரான விழுந்தமாவடி மகாலிங்கத்தை இரண்டரை கிலோ கஞ்சா விற்றதாகக்கூறி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளனர்! இது ஜோடித்த வழக்கு என பொதுமக்களே மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட எஸ்.பி.யிடமும் புகாரளித்தனர்.

இப்போதுள்ள போலீஸ் டீம் திணறு வதால், கடத்தல்காரர்கள் எவ்விதத் தடையு மில்லாமல் கடத்தலில் ஈடுபடுவதாக மீனவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. புதுப்பாலம் அருகிலிருக்கும் பங்களாவும், நாகூர் பகுதியிலுள்ள பிரமாண்ட இறால் பண்ணையும் மகாலிங்கத் தின் கடத்தல் சாம்ராஜ்ய கூடாரங்கள்! கடத்தலில் சர்வதே டீலிங்கில் இருப்பவரை வெறும் இரண்டரை கிலோ கஞ்சா விற்றதாகக்கூறி கைது செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார்கள். ஆக்கிரமிப்பு செய்த நபரை எதிர்த்து மறியல் செய்த மறுநாளே இப்படி கஞ்சா கேஸில் பிடித்திருப்பதால் இது போலீசாரின் நாடகமென்பது வெட்டவெளிச்சமாகி யுள்ளது. சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டதால் அப்பா, மகன் மீது பொய் வழக்குகள் பதியப்படுகிறதா என்று நீதிமன்றமே கேள்வியெழுப்பி, அவர்களைப் புனிதர்களாக்கி ஜாமீனில் விட்டுவிட்டது! பழைய டீமை மீண்டும் களமிறக்கினால்தான் கடத்தல்களுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்'' என்றார்.

மகாலிங்கத்தின் ஆதரவாளர்களோ, "யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பொய் வழக்கு போட்டிருக்காங்க. பொதுச்சொத்தை மீட்கப் போராடியதால் இந்த வழக்கு போடப் பட்டிருப்பதை மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்துறையிலும் எடுத்துக்கூறி னோம். அதையேதான் உயர்நீதிமன்றமும் குறிப்பிட்டு ஜாமீனில் விடுவித்துள்ளது!'' என்றனர். நாகை மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் இதுகுறித்து விசாரிக்க தொடர்புகொண்டபோது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை!

nkn251224
இதையும் படியுங்கள்
Subscribe