கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தின் எதிரொலியாக, இந்தியாவில் பலரும் வேலையிழப்பு, வருமான இழப்புக்கு ஆளானார்கள். இதுவே, சிலர் நேர்வழியிலிருந்து மோசமான பாதைக்கு மாறவும் காரணமாகியிருக்கிறது. குறிப்பாக, கடந்த 20 மாதங்களில், கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை அதிகரித் துள்ளது. இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பெருமளவில் இருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாகும். டாஸ்மாக் மூடப்பட்டதும்கூட கஞ்சா விற்பனை அதி கரித்ததற்குக் காரணமாகும். இப்படி போதைக்கு அடிமையானவர்கள், தங்கள் பணத்தேவைக் காகவும், போதையின் காரணமாகவும் குற் றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

ff

கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் மதுரை கரிமேடு பகுதியில் தனிப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழி யாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட காரைச் சோதனையிட்டதில், காரிலிருந்த 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த தாக, நாகையில் சந்தேகப்படும்படியாகத் திரிந்த ஆம்புலன்ஸைப் பிடித்துச் சோதனை யிட்டதில், 200 கிலோ கஞ்சா பிடிபட்டது.

அண்டை மாநிலங்களிலிருந்து தமி ழகத்துக்குள் கஞ்சா கடத்தும் மொத்த விற்பனையாளர்களும், சில்லறை விற்பனையாளர் களும் மாதந்தோறும் நன்முறையில் 'கவனிக்க' வேண்டியவர்களைக் கவனிப்பதால், கண்டுங் காணாமல் இருந்துகொண்டு, மாதத்துக்கு ஒருமுறை மட்டும் கணக்குக் காட்டுவதற்காக, சில கிலோ கஞ்சாவை மட்டும் பிடிப்பது வழக்கமாக உள்ளது. தமிழகத்துக்குள் கஞ்சா கொண்டுவரப்பட்டு, மாவட்ட வாரியாக மொத்த வியாபாரிகளுக்குக் கொண்டு சேர்க்கப்படுவது, காவல்துறைக்குத் தெரிந்து அவர்களைப் பிடிக்க முயல்வதற்குள், அத்தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவந்து தப்பிவிடுகிறார்கள். அதேபோல சுங்கச்சாவடிகளைக் கடப்பதற்கு, ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்களும், பணத்துக்கு ஆசைப்பட்டு உடன்படுகிறார்கள்.

Advertisment

திருச்சியில், மினி வேனில் கொண்டு வரப்பட்ட 1,800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 125 கிலோ, அதே மாதத்தில் 550 கிலோ, செப்டம்பர் மாதத்தில் காய்கறி லாரியில் 1 டன் குட்கா என்று குட்கா பறி முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. திருச்சியில் காவல்துறை ஆணையராக இருந்த அருண் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். மொத்தமாக பறிமுதல் செய்ததால் மாநகருக்குள் கஞ்சா, குட்கா புழக் கம் கட்டுப்படுத்தப் பட்டது. ஆனால் புதித தாக பொறுப் பேற்ற காவல்துறை ஆணையர் கார்த்தி கேயன், குட்கா, கஞ்சா பயன்பாட் டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், எதுவும் மாறவில்லை. அதற்கு முக்கிய காரணம், திருச்சி நகர் முழுவதுமுள்ள மொத்த மற்றும் சில்லறை கஞ்சா வியாபாரிகளைப் பெரும்பாலான காவலர்கள் தெரிந்து வைத்திருப்பதால், அதிகாரி கள் நடவடிக்கை எடுப்பதற்குள் காவலர்களே வியாபாரிகளைக் காப்பாற்றி விடுகின்றனர்.

gg

செப்டம்பர் மாதத்தில் முட்டைக்கோஸ் வேனில் கடத்திக் கொண்டுவரப்பட்ட குட்காவை காவல்துறை ஆணையரின் தனிப்படை பிடித்தது. ஆனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தால், தனிப்படையையும் அவர் பணியிட மாற்றம் செய்தார். ஆனால் அவர்களில் பலர் பணியிடம் மாறாமல், அதே இடங்களில் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக எஸ்.பி.சி.ஐ.டி. என்று சொல்லக்கூடிய தனிக் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் பல ஆண்டு களாக ஒரே இடத்தில் பணியாற்றுவதால், அவர்களில் சிலர், வியாபாரிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டுத் தப்ப வைக்கின்ற னர். அவர்களுக்குத் தமிழகம் முழுக்கவே கஞ்சா, குட்கா பொருட்களைப் பதுக்கிவைக்கும் குடோன் களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தாலும், பதுக்கல்காரர்கள் யாரும் தற்போது இங்கில்லை என்று பொய்யான அறிக்கையை மேலிடத்திற்கு சமர்ப்பிக்கின்றனர். குற்றச்செயல்களுக்கு இவர்களே உடந்தையாக இருப்பது குறித்தும், உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ்களே கஞ்சா கடத்தலுக்கு உதவுவது குறித்தும் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisment

கொரோனா காலத்தில் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. தனி யார் ஆம்புலன்ஸ் கள் பலவும் முறை யான ஆவணங் களை வைத்திருப் பதில்லை. தனி யார் மருத்துவ மனைகள் தவிர, தனிப்பட்டவர் களும் ஆம்பு லன்ஸ் வாகனங் களை இயக்கு கிறார்கள். இத்த கைய ஆம்பு லன்ஸ்கள், கஞ்சா கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே ஆம்புலன்ஸ் வாகனங்கள்மீது தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இதைத்தாண்டி, இந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை அவசரத் தேவைக்காக அழைக்கும்போது, கிலோமீட்டருக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில், மிகவும் அதிகமான தொகையை வசூலிக்கிறார்கள் என்றும், அரசாங்கம் தலையிட்டு வரம்புகளை நிர்ணயிக்க வேண்டு மென்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில்... மாணவ சமுதாயத்தினர் போதை யின் பக்கம் திரும்பாமல் தடுப்பதற்கு தமிழக அரசு இதுவிஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.