Advertisment

பள்ளிச் சிறுவர்களை சீரழிக்கும் கஞ்சா போதை! -பெற்றோர்கள் ஜாக்கிரதை!

ss

டந்த சில வருடங் களாக மது போதையைக் கடந்து மாற்றுப் போதையில் தள்ளாடத் தொடங்கியிருக் கிறது தமிழகம். இதில் சிக்கி யிருப்பவர்கள் 14 வயது முதல் 20 வயதிற்குட்பட்ட மாணவர் களே அதிகம் என்பதே வேதனையானது.

Advertisment

ss

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்குள் கஞ்சா போதைக்கு அடிமையாகி 3 இளைஞர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த கஞ்சா போதை இளைஞர்களிடம் சிக்கி ஏமாந்த நிலையில் சில பள்ளி மாணவிகளும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பல கிராமங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக கஞ்சா போதைக்கு அடிமையாகி தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் அதிகமான விபத்துகளிலும் சிக்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவன் பைக்கில் சென்று தவறிவிழ, அவன் விழுந்த

டந்த சில வருடங் களாக மது போதையைக் கடந்து மாற்றுப் போதையில் தள்ளாடத் தொடங்கியிருக் கிறது தமிழகம். இதில் சிக்கி யிருப்பவர்கள் 14 வயது முதல் 20 வயதிற்குட்பட்ட மாணவர் களே அதிகம் என்பதே வேதனையானது.

Advertisment

ss

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்குள் கஞ்சா போதைக்கு அடிமையாகி 3 இளைஞர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த கஞ்சா போதை இளைஞர்களிடம் சிக்கி ஏமாந்த நிலையில் சில பள்ளி மாணவிகளும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பல கிராமங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக கஞ்சா போதைக்கு அடிமையாகி தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் அதிகமான விபத்துகளிலும் சிக்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவன் பைக்கில் சென்று தவறிவிழ, அவன் விழுந்த இடத்தில் கஞ்சா பொட்டலம் கிடந்தது. அதை மற்றொரு மாணவன் எடுத்துச்செல்கிறான். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கஞ்சா கும்பலிடம் சிக்கிய சில மாணவர்களை, சில நாட்கள் கஞ்சா போதை ஏற்றி அடிமையாக்கி, மோட்டார் சைக்கிள்கள் திருடவும், திருடிய பைக்கில் கஞ்சா கடத்தவும் பயன்படுத்திக் கொண்டது ஒரு கும்பல்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரயிலடி, பேராவூரணி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை, திருவப்பூர், திருக்கோகர்ணம், அறந்தாங்கியில் பல இடங்களில் இருந்தும் விற்பனைக்காக மாவட்டம் முழுவதும் பரவுகிறது கஞ்சா. அரிமளம் அருகே ஒரு குடும்பத்திலுள்ள ஆண், பெண், மகன்கள் அனைவருமே டன் கணக்கில் கஞ்சா கடத்திவந்து மாநிலம் முழுவதும் அனுப்பிவைக்கின்றனர். பல முறை சிக்கினாலும் சில மாதங்களில் வெளியேவந்து மீண்டும் அதே தொழிலை செய்துவருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கியில் பொது வெளியிலேயே ஒருவர் கஞ்சா இலைகளை கசக்கி சிகரெட்டில் வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

ssஇப்படி குக்கிராமங்கள் வரை வேகமாகப் பரவிவரும் கஞ்சா கலாச்சாரத்தால் மாணவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி தேவையானவர்களுக்கு சிகிச்சையளித் தால் மட்டுமே சிறார் குற்றங்களைத் தவிர்க்கமுடியும். இல்லையென்றால் சிறார் குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதுகுறித்து சி.பி.எம். மா.செ தோழர் கவிவர்மன் நம்மிடம், “"மது போதையைவிட மாற்றுப் போதை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. திருவிழாக்களில்கூட இது போன்ற சிறுவர்கள், இளைஞர்களால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எதற்காக சண்டை போடுகிறோம் என்பதைக்கூட அவர்களால் உணரமுடியாமல் மழுங்கடிக்கப் பட்டுள்ளனர். யாரோ ஒருசில போதைப் பொருள் வியாபாரிகளின் லாபத்துக்காக, கிராமத்து மாணவர்கள் பலிகடா ஆகின்றனர். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்தும், அவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ முடியாமல் வேதனையோடு தவிக்கிறார்கள். இந்த மாணவர்களை அடையாளம் கண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளுக்கு நாள் இளைஞர்களை இழப்போம்''’என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், “"ஆரம்பத்தில் ஒரு சாகச மனப்பான்மை அல்லது செய்துதான் பார்ப் போமே... இதில் என்ன தான் இருக்கு என்பது மாதிரிதான் இந்த பொருட்கள் பயன் பாடு அவங்க ளுக்கு அறிமுக மாகுகிறது. சிலர், அதைத் தொடர்ந்து பயன் படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற் பட்டு அடிமையாகிவிடுகிறார்கள். இந்த நிலையில் இருப்பவர்கள், அடுத்த நிலைக்குப் போவதைத் தடுக்கவேண்டும் சரியான சிகிச்சைகளையும் மனநல ஆலோசனையையும் பெற வேண்டும்.

ss

போதைப் பொருளைப் பயன்படுத்தாதபோது, கோபம், எரிச்சல், தூக்க மின்மை, பதற்றம், கைகால் நடுக்கம், அதிகப்படி யான மன உளைச்சல் ஏற்படும். பாடங்களில் கவனம் செல்லாது. தனிமையை விரும்புவார்கள். வகுப்பில் கவனம் செல்லாது. சில நேரங்களில் வகுப்பில் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். சரியாக சாப்பிடமாட்டார்கள். பொதுவாக மற்ற மாணவர்களுடன் கலந்து பேசி விளையாடுவதில் தயக்கம் இருக்கும். கற்றலில் பின்தங்கியிருப்பார்கள், குறிப்பாக நன்றாக படித்துக்கொண்டிருந்தவர்கள் படிப்பில் நாட்டம் குறைந்து கற்றலில் தேக்க நிலை ஏற்படலாம். ஆசிரியர்கள் மேற்கண்ட அறிகுறி களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அவர்களை எளிதில் வெளியே கொண்டுவரலாம். அடுத்தடுத்த நிலைக்கு போனால் ஆபத்துகளை சந்திக்க நேரிடும்''’என்கிறார்.

ss

nkn180622
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe