டவுளின் தேச மான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படு கின்றன. வன மரங்களை வெட்டி வீழ்த்தினாலோ, பொது இடங்களில் குப்பைகள், கோழிக் கழிவு களைக் கொட்டினாலோ குற்ற நடவடிக்கைகள் பாயும். கடுமையான தண்டனையை எதிர் கொள்ள நேரிடும் என்பதால் கேரளா குப்பையற்ற மாநிலமாகவும், சுற்றுலாவாசி களின் சொர்க்கமாகவுமிருக்கிறது.

அதேசமயம், அங்கு சேர்கிற மருத்துவக் கழிவுகள், கோழிக் கழிவுகள், இறைச்சிகளின் கழிவுகள் போன்றவற்றை இரவோடு இர வாக போக்கு லாரிகளில் ஏற்றி, அண்டை மாநிலமான தமிழகத் தின் செங்கோட்டை எல்லை, களியக்காவிளை, குமரி கடந்து நெல்லை மாவட்ட எல்லைகளின் ஒதுக்குப்புறங்களில் கொட்டிவிட்டு சிட்டாய்ப் பறந்துவிடுகின்றன.

இப்படி கடாசப்படும் கழிவு கள்... நெல்லை, செங்கோட்டை எல்லைப் பகுதிகளின் சாலை யோரங்களில் மலைபோன்று குவிந்துகிடப்பதால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொதுமக்க ளுக்கு இடையூறாக இருப்பதோடு, அந்தப் பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்கும் சவாலாக இருக்கிறது. இதுபோன்று எல்லைப்புற மாவட்டங்கள் குப்பை மேடாக மாறுவதைத் தடுக்கவேண்டும் என்று அவ்வப்போது சமூகநல ஆர்வலர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கும், அரசுக் கும் முறையாகத் தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை. சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நிலையில் கேரளாவின் மருத்துவமனைக் கழிவுகள் நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லிப் பகுதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கொண்டாநகரம் பழவூர் பகுதியில் கொட்டப் பட்டு மலைபோல் கிடந்தது அந்தப் பகுதியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

தகவலறிந்த லிபழவூர் வி.ஏ.வான செய்யது அலி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்ய, இன்ஸ்பெக்டர் சோனமுத்து கொட்டப் பட்ட கழிவுகள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவுசெய்திருக்கிறார். மேலும், மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர், ஆர்.டி.ஓ. கண்ணா கருப்பையா, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மருத்துவக் கழிவுகளை ஆய்வு செய்யும் நுண்ணறிவு நிபுணர்கள் உள்ளிட் டோர் அவற்றை ஆய்வு செய்திருக்கின்றனர். வித்தியாசமாகத் தென்பட்ட அந்த மருத்துவக் கழிவுகள் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன.

Advertisment

ss

மேலும், அந்தக் கழிவுகளை பாதுகாப்பான உபகரணங்களோடு ஆய்வு செய்த மருத்துவக் குழுவினரிடம் அதிலிருந்து முக்கியமான ஆவணத் தடயங்கள் சிக்கியுள்ளன.

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த மருத்துவக் கழிவுகளுடன் சேர்ந்து, புற்று நோயாளிகளின் பெயர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட புற்றுநோயின் வீரியத் தன்மை, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் கேஸ் ஷீட்கள், மண்டல புற்றுநோய் மையத்தின் அடையாளத்துடன் கூடிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தவிர, இந்த நோயாளிகள் பற்றிய குறிப்புகளும் கடந்த மாதம் 18-ஆம் தேதியிட்ட சென்ட்ரல் ஒப்புதல் ஆவணமும் கிடைத்துள்ளது.

Advertisment

இதுகண்டு அதிர்ந்த அதிகாரிகள், ஆய்வாளர்கள், திருவனந்தபுரம் புற்றுநோய் மண்டல ஆய்வகத்திலிருந்து கழிவுகளோடு கொண்டுவந்து ஆவணங்களோடு வீசப் பட்டுள்ளதா என சந்தேகப்படுகின்றனர்.

இதனால் பரபரப்பான நெல்லை மாவட்டக் கலெக்டரான கார்த்திகேயன் மருத்துவக் கழிவுகள் தொடர்பான புகாரின்படி, பி.என்.எஸ். சட்டப்பிரிவு 271, 272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்களின் மருத்துவக் கழிவுகளை கேரள மருத்துவமனைகள் நேரடியாக டிஸ்போஸ் செய்து விடமாட்டார்களாம். அவற்றை அப்புறப்படுத்த அதற்கென வசதிகளை உடையவர்களிடம் காண்ட்ராக்ட் விடப்படுவதுண்டாம். இதற்கு நல்ல தொகையும் தரப்படுவதுண்டு.

Advertisment

எனவே மருத்துவக் கழிவுகளை வெளிமாநில எல்லையில் கொட்டுவதற்காக இந்தக் காண்ட்ராக் டர்களின் டார்கெட்டே தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிமங்களைக் கொண்டுசெல்கிற லாரிகள்தானாம்.

கேரளாவில் கனிமங்களை இறக்கிய லாரிகள் அங்கிருந்து லோடு இல்லாமல் காலியாகத் திரும்புவது வாடிக்கை. அதுபோன்ற லாரிகளில் டபுள்ரேட் வாடகையில் இந்த மருத்துவக் கழிவுகள் டன் கணக்கில் ஏற்றப்பட்டு, தனது இருப்பிடம் திரும்புகிற லாரிகள் இரவோடிரவாக தமிழகத்தின் எல்லையோரத்தில் கொட்டிவிட்டு மறைந்து விடுகின்றனவாம்.

ஆனால் இதுபோன்ற லாரிகள் எல்லைப்புறச் சோதனைச்சாவடிகளில் கனமான ஸ்வீட்பாக்ஸ் களைத் தள்ளிவிடுவதால் தடுக்க வேண்டிய அந்த சாவடிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் இதுபோன்ற அத்துமீறல்கள் சகஜமாகிவிட்டது.

என்றுமில்லாமல் தற்போது பழவூர் பகுதியில் கொட்டப்பட்டது கேன்சர் நோய் சிகிச்சை கழிவுகள், சிரிஞ்ச்கள், துடைக்கப்பட்ட காயக் கழிவுகளின் துண்டு பீஸ்கள் என்று தெரியவருகிறது.

இதுபோன்ற கேன்சர் நோய் சிகிச்சைக் கழிவுகளை பாதுகாப்பாக எரித்துவிடவேண்டும். தவிர நீரோட்டம், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இவை கொட்டப்பட்டால் அதன் வைரஸ்கள் நீரோடு நீராகக் கலந்து நோய்த்தொற்றுப் பரவலை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அபாயகரமான இந்தக் கேன்சர் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமல் இருப்பதால் மிரண்டுபோய்க் கிடக்கிறது ஏரியா.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்